யாருக்குப் பித்தம்?

சுவர்க்கத்துக்கு கீழே ஆறுகளை ஓடச் செய்ய அல்லாஹ்வால் முடியாதா? 

மனிதர்களே கடலுக்குள் கண்ணாடி மாளிகைகள் அமைத்து. கடலில் உள்ள உயிரினங்களை பார்த்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் உள்ளவர்கள் நாம்.
அல்லாஹ்வால்  சுவர்க்கத்துக்கு கீழே ஆறுகளை ஓடச் செய்ய  முடியும் என்பதை  நம்ப மறுப்பது ஏன்?https://mdfazlulilahi.blogspot.com/2020/06/blog-post_7.html
--------------------------------------------------
குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை வெளியிடும்போதும் கேள்வி கேட்டவர்களுக்கு பதில் அளிக்கும் போதும் நான் அரபி கல்லுாரியில் படித்தவன் அல்ல என்பதை பகிரங்கப்படுத்தியே வந்துள்ளேன்.

2:41 வசனத்திற்கு நாம் அளித்த விளக்கத்தை ஒட்டி
[04/06, 7:45 am]  Assalamu Alaikum  
ஜீ 
ஒரு சிறிய சந்தேகம் 
அரபி மொழி மற்றும் தர்ஜமா சம்பந்தமாக தாங்கள் தரும் பதிவுகள் அருமையாக உள்ளது.
தாங்களே எழுதுவது தானா?
இப்படி கேள்வி கேப்பதற்கு தவறாக எண்ண வேண்டாம்.
ஏனென்றால்
அரபி மொழியில் அதிகமான ஈடுபாடு வெளிப்படுகிறது
[04/06, 7:46 am]  ஜசாகல்லாஹ்
அல்லாஹ் அருள்புரிவானாக

இந்த மாதிரி ஆதரவாகவும் மூஸா நபி காலம் பற்றி உனக்குத் தெரியுமா? இப்படி எதிராகவும் சகோதரர்கள் கருத்துக்களை பதிந்துள்ளார்கள்.  நான் எழுதியதற்கு மாற்றமாக 33 தப்ஸீர்களில் முபஸ்ஸிரீன்கள் எழுதி உள்ளதாக ஒரு சகோதரர்  சொன்னார்.

முபஸ்ஸிரீன்கள் என்பவர்கள் மனிதர்கள் தான். நான் மேற்கோள் காட்டியவை எதுவும் மனித கருத்துக்கள் அல்ல. மனிதர்களைப் படைத்த அல்லாஹ் குர்ஆனில் கூறி உள்ளதைத்தான விளக்கமாக தந்துள்ளேன்.

அந்த சகோதரர் கூறிய 33 பேரில் அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்ப்பை படியுங்கள் என்றும் எனக்கு அறிவுரை கூறி இருந்தார். அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழி பெயர்ப்பு மட்டுமல்ல எல்லாருடைய மொழி பெயர்ப்புகளையும் படித்துள்ளேன்.

அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழி பெயர்ப்பில் சொர்க்கத்தின் கீழ் ஆறுகள் ஓடும் என்று வரும் வசனங்களில் எல்லாம்   “தஹ்திஹா”  என்ற குர்ஆனில் உள்ள வார்த்தைக்கு அதன் கீழ் என்பதை மொழி பெயர்க்காமலேயே  விட்டுள்ளார்கள்.

அப்துல் ஹமீது பாகவி போன்றவர்கள் மூத்தவர்கள் முதலாமவர்கள் ஸலபுகள் (முன்னோர்கள்) என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. “தஹ்திஹா”  என்பதற்கு மொழி பெயர்க்காமல் விட்டது ஏனோ தெரியவில்லை. காரணங்கள் மனதில் தோன்றினாலும் அவர்கள் சொல்லாத நிலையில் அதைக் குறைாயகக் கூற முடியாது. அவர்கள் சென்று விட்ட சமுதாயம்.

சொர்க்கத்தின் கீழ் ஆறுகள் ஓடும் என்பது அல்லாஹ்வின் வல்லமையை  பேராற்றலை அறிவிக்கக் கூடிய வார்த்தையாகும்.

நுாறு ஆண்டுகள் ஆகப் போகின்ற நிலையில் பாகவி தர்ஜமாவுக்கு சான்று வழங்கிய கல்லுாரிகள் ஏராளம். அரபிக் கல்லுாரியில் பயின்ற  ஆயிரமாயிரம் அல்லாமாக்கள் அப்துல் ஹமீது பாகவி  மொழி பெயர்ப்பைப் பார்த்துதான் ஜும்ஆக்களில் பேசி இருக்கிறார்கள். பாராட்டி இருக்கிறார்கள். யாருமே அல்லாஹ்வின் வல்லமையை பறைசாற்றக் கூடிய “தஹ்திஹா”  சம்பந்தமாக கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

அப்துல் ஹமீது பாகவி தர்ஜமா துறையில் தன்னிகரில்லா தியாகி. அவரது மொழி பெயர்ப்பைப் பார்த்துதான் அதன் பிறகு வந்த பெரும்பாலான தர்ஜமாக்கள் காப்பி பேஸ்ட் பண்ணி சில வார்த்தை முன் பின் அமைத்து  மாற்றங்களுடன் வந்துள்ளன என்பது எனது நிலைப்பாடு.


சிலர் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக  பீ.ஜே.யின் மொழி பெயர்ப்பை மட்டும்  காப்பி பேஸ்ட் என்று என்னிடம் வாதம் வைத்து தவறு இருக்கிறது என்றார்கள். அது பொய்யான வாதம்.

காப்பி பேஸ்ட் என்று சொல்லி விட்டு அதில் தவறு இருக்கிறது என்று சொன்னால் அந்த தவறு யாருடையது?  என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை.

“தஹ்திஹா”வுக்கு அப்துல் ஹமீது பாகவி மாதிரி தான் பலரும் மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள். அவர்களில்   கடையநல்லுார்  K.S.  ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களும் ஒருவர்.  2006, 2013 ஆகிய காலங்களில்  நெட்டில் உள்ள அவரது மொழி பெயர்ப்பும் மேற்கண்டவாறு உள்ளது என்று எழுதினேன்.

அது பற்றி அவரிடம் போனில் சொன்னபோது கீழே என்று இல்லையா? இதுவரை யாரும் சுட்டிக் காட்டவில்லையே என்றார். தவறை சுட்டிக் காட்டி நெட்டில் அவர் பெயரைப் போட்டதால் அவர் கோபப்படவில்லை. சிரித்து நன்றி தெரிவித்தார்.

ஒரு சுன்னத் ஜமாஅத்  நிறுவனத்திற்கு இது போன்றவற்றை சுட்டிக் காட்டிக் காட்டி எழுதினேன்.  வஞ்சகம் இல்லாமல் வசை பாடி விட்டார்கள்.

“தஹ்திஹா”  என்பதற்கு  மொழி பெயர்க்காமல் விட்ட பாகவி அவர்கள். அடுத்து வரும்  அன்ஹார் என்பதற்கும் வித்தியாசமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

அன்ஹார்  என்று வரக் கூடிய   2:25,  2:266.  3:15,  3:136. 3:195. 3:198. 4:13.  4:57 , 4:122. 5:12. 5:85. 5:119. 9:72.  9:89. 10:9.  13:35. 14:23. 16:31. 18:31. 20:76 ,22:14. 22:23. 25:10. 29:58. 39:20. 47:12. 48:5. 48:17. 57:12. 58:22. 61:12. 64:9. 65:11.66:8. 85:11.98:8. இத்தனை  இடங்களிலும்  நீரருவிகள் என்றே அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள்.

நஹ்ர் என்றால் (ஒருமை )ஆறு  என்று பொருள்.

அன்ஹார் என்றால் (பன்மை)  ஆறுகள்  என்பது பொருள் என்றே நாம் அறிந்துள்ளோம்.

“தஹ்திஹா”  என்பதற்கு அதனடியில், அதன் கீழ், அவற்றின் கீழே, தாழாலே  இப்படி பலரும் பல விதமாக மொழி பெயர்த்தாலும் பொருள் ஒன்றுதான்.

அதுபோல் அன்ஹார் என்பதற்கு  ஆறுகள்,    நதிகள் என்று 2 விதமாக மொழி பெயர்த்தாலும் பொருள் ஒன்றுதான்.

நீரருவிகள், நீர் வீழ்ச்சி  நீரூற்று, நீரோடைகள் என்று மொழி பெயர்த்துள்ளது சரியா?  இவை வெவ்வேறு பொருள் தரக்கூடியவை. அன்ஹார் என்பதற்கு பாகவி அவர்கள்  நீரருவிகள் என்று  மொழி பெயர்த்துள்ளது  பொருத்தமாக இல்லை.


2:25,  3:195 ஆகிய இரண்டு இடங்களில் பஷாரத் பப்ளிகேஷன் பாகவியை காபி பேஸ்ட் செய்துள்ளது.
“தஹ்திஹா”வுக்கு மொழி பெயர்க்காமலும்  அன்ஹார்  என்பதற்கு   நீரருவிகள்  என்றும்   மொழி  பெயர்த்துள்ளது.


2:266 ல் உள்ள அன்ஹார க்கு   பஷாரத் நீரோடை  என்று ஒருமையாகவும்   ஜான்  நீரோடைகள் என்று  பன்மையாகவும்  தமிழாக்கம் தந்துள்ளார்கள். 


3:136.  3:198. 4:13.  4:57. 4:122. 5:12. 5:85. 9:72. 10:9.  13:35. 14:23. 18:31. 20:76  22:14. 22:23 25:10. 29:58. 57:12. ஆகிய வசனங்களில் உள்ள அன்ஹார்க்கு  பஷாரத் நீரருவிகள் என்றும் மற்ற இடங்களில் ஆறுகள் என்றும் தமிழாக்கம் தந்துள்ளார்கள்.  



அல்-மதீனா அல்-முனவ்வரா வெளியீட்டில் 2:266  13:35. 47:12.  ஆகிய வசனங்களில் உள்ள அன்ஹார்க்கு நீரருவிகள் என்றும் மற்ற இடங்களில்  ஆறுகள்  என்றும் தமிழாக்கம் தந்துள்ளார்கள்.  

அப்துல் ஹமீது பாகவி அவர்களின் கொள்ளுப் பேரர் உமர் ஷரீப் காஸிமி அவர்கள். 3:198. 5:12. ஆகிய வசனங்களில் உள்ள “தஹ்திஹா”  வுக்கு அவர் வெளியிட்டுள்ள சொல்லுக்கு சொல்லில் அவற்றின்      கீழே    3:198.      அதன்    கீழே 5:12. என மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

ஆனால் வசன நடையில்  நதிகள் ஓடும் என்று மட்டுமே இடம் பெறச் செய்துள்ளார்.  அவற்றின்      கீழே  என்பது இல்லை.  இணைப்பில் உள்ள JPG பைலை பார்க்கவும்.

உமர் ஷரீப் காஸிமி  அவர்களைப் பொறுத்தவரை சுவர்க்கத்தின் கீழ் ஆறுகள் ஓடும் என்ற கருத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை. அவரது அந்தக் கருத்தை 48:5.ல் காணலாம்.


48:5.ல்  “தஹ்திஹா” தனி வார்த்தைக்கு அவற்றின் கீழ் என தமிழாக்கம் செய்து விட்டு வசனத்தில் (..... கட்டிடங்களைச் சுற்றி) நதிகள் ஓடும் என அடைப்புக் குறிக்குள் அவரது கருத்தை குறிப்பிட்டுள்ளார்.


25:10. 39:20.  ஆகியவற்றில்   உமர் ஷரீப் காஸிமி  அவரது கருத்தை தெளிவாகச் சொல்லி விட்டார்.  “மின் தஹ்திஹா” என்ற  தனி வார்த்தைக்கே அவற்றைச் சுற்றி என்று தமிழாக்கம் செய்து வசனங்களிலும் அவற்றைச் சுற்றி நதிகள் ஓடும் என்று எழுதி விட்டார்.

2:266  ல் உள்ள “தஹ்திஹா”வுக்கு    IFT  அதனுாடே என மொழி பெயர்த்துள்ளார்கள்

ஒரு மனிதன் என் அடுக்கு மாடிகளின் கீழ் ஆறுகள் ஓடுகிறது என்றால் அந்த மாளிகையை சுற்றி என்று பொருள் கொள்ளலாம். மனிதன் கட்டிடங்களுக்கு கீழே எவ்வித தாங்கலும் இன்றி ஆறுகளை ஓடச் செய்ய சக்தி பெற்றவன் இல்லை. 

அந்த  மனிதர்களே கடலுக்குள் கண்ணாடி மாளிகைகள் அமைத்து. கடலில் உள்ள உயிரினங்களை பார்த்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தனது  அர்ஷ் - சிம்மாசனத்தை தண்ணீரின் மீது அமைத்து இருந்தவன். (அல்குர்ஆன் 11:7, புகாரி 7411) 

அல்லாஹ் ஆகுக என்றால் ஆகப் போகிற சொர்க்கத்தின் கீழ் ஆறுகள் ஓடும் என்று நம்புவதே சரி. ஆகவே  சொர்க்கத்தின் கீழ் ஆறுகள் ஓடும் என்று  நேரடி மொழி பெயர்ப்பு செய்வதே சரி.


98:8 ல்  IFT தமிழாக்கத்தில்  அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும் என்பது இல்லை.  இங்கே  விடுபட்டுள்ளது என்றே நல் எண்ணம் வைப்போம்.  


குர்ஆனின் மற்ற  இடங்களில் “தஹ்திஹா” அவற்றின் கீழே என்று வந்தது   6:6  ல்   தஹ்திஹிம்   என்றும்   7:43.  10:9. 18:31. ல்   தஹ்திஹிமுல்  என்றும்  வந்துள்ளது.  இந்த இடங்களில் அவர்களுக்கு கீழே  என்று மொழி பெயர்க்க வேண்டும்.  




18:31ல்   ஜான்,  (IFT) ஆகியோர் அவற்றின் கீழே என்றும்.  
7:43ல் பஷாரத்  அவர்களு (டைய மாளிகைகளு) க்கு கீழே என்று இரு பொருள் படவும். 
பாகவி, அவர் (கள் பாதங்களுக்கு அருகில் என்று இரு பொருள் படவும்  

அவர்களுக்கிடையே (7:4310:9)  என்று றஹ்மத்தும் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.

6:6 7:43. 10:9.  ஆகிய  3 இடங்களில் அவர்களுக்குக் கீழ் என  சரியாக மொழி பெயர்ப்புச் செய்த பீ.ஜே. அவர்கள்  18:31ல் மட்டும்  அவற்றின் கீழ்ப்பகுதியில் என தவறாக மொழி பெயர்த்து இருந்தார்கள். வாட்ஸப்பில் சுட்டிக் காட்டினோம். 


ஹிமுல் என்பதற்கு அவர்களின் கீழ் என்பதே சரி என்று ஒப்புக் கொண்டு Onlinepj.in ல் திருத்தி விட்டதாகவும் பதில் தந்தார்கள்.

அல்லாஹ்வின் ஸிபாத் -பண்புகளில் குதர்க்கம் செய்கிறார்கள் என்று நம்மை விமர்சிப்பவரால் அல்லாஹ்வால்  சுவர்க்கத்துக்கு கீழே ஆறுகளை ஓடச் செய்ய  முடியும் என்பதை  ஜீரணிக்க முடியவில்லை. 

பீ.ஜே. மொழி பெயர்ப்புகளில் பல வார்த்தைகளை மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார் என்று குற்றச்சாட்டுக் கூறியவர்கள் கவனத்திற்கு எத்தனையோ பதில்களை அளித்து விட்டேன். 

அரபு மொழி நடையில் அலங்காரச் சொற்கள்,  அழுத்தம் கொடுக்கும் சொற்கள் போன்றவை தமிழ் மொழிக்கு ஏற்ப மொழி பெயர்க்காமல்  விடுவது இஸ்லாமிய கொள்கையை, அல்லாஹ்வின்  வல்லமையை பாதிக்காது. இப்படி விடுவது பீ.ஜே.  தர்ஜமாவில் மட்டுமல்ல எல்லா தர்ஜமாக்களிலும் இப்படித்தான் உள்ளது என்பதை நிரூபித்து விட்டேன்.

2:41. வசனத்தின் இறுதியில் உள்ள   வஇய்யாய   என்பதற்கு   என்னையே  என்பது அர்த்தம். அடுத்து வரும் Fபத்தகூனி என்பதற்கு  என்னை அஞ்சுங்கள் என்று அர்த்தம். னுானுக்கு அடுத்து ய மறைந்திருக்கிறது. அரபு கல்லுாரியில் நன்றாகப் படித்தவர்கள் அறிவார்கள் புரிவார்கள்.

இதன்படி தமிழில் என்னையே என்னை அஞ்சுங்கள் என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும். இரண்டு முறை என்னை என்னை  என்ற வார்த்தை மூலத்தில் இருந்தும் எல்லாரும் தமிழ் நடைக்கு தக்கவாறு ஒரு முறை தான் பயன்படுத்தி உள்ளார்கள். இரு முறை கூறல்  அரபு மொழியில் கவர்ச்சியானது, அலங்காரமானது. தமிழில்?

இதுவரை வந்துள்ள தமிழ் மொழி பெயர்ப்புகளில் சிறந்தது என்று விளம்பரம் செய்தவர்களில் நண்பர் புலவன் இனாயதுல்லாஹ்வும் ஒருவர். நிர்வாகப் பிரச்சனையில் அதை புறக்கணித்துள்ளார். அவரது பள்ளியில் படிக்கும் தர்ஜமாவில்  உள்ள தமிழ் படித்துக் காட்டியவருக்கும் தெரியாது. கேட்டவர்களுக்கும் தெரியாது.  நான்  சுட்டிக் காட்டிய நிகழ்ச்சிகளில் ஒன்று பித்தம் செய்து  என்பது.

படித்தவர் துணை இமாம்.  பித்தம் செய்து என்று படித்தீர்களே என்ன அர்த்தம் என்றேன். தர்ஜமாவில் உள்ளதைப் படித்தேன் என்றார். எடுத்துப் பார்த்தேன்  சித்தம் செய்து என்று இருந்தது. சித்தம் செய்து என்று தானே இருக்கிறது என்றேன்.  படித்த துணை இமாமுக்கு சித்தம்  என்றால் என்ன என்று தெரியவில்லை. அவருக்கு தெரிந்தது  பித்தம் தான் அதனால்  பித்தம்  செய்து என்றே படித்து வந்துள்ளார்.

ஆகவே தவறு எங்கு இருந்தாலும் தாட்சண்யம் இன்றி சுட்டிக் காட்டுவோம். தவறியவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்க மாட்டோம்.

நீரருவிகள் (நீர் வீழ்ச்சிகள்) என்பது வேறு   நீரூற்று என்பது வேறு நீரோடைகள் என்பது  வேறு என்று ஆறுகள் என்பது வேறு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வைப்போம் இன்ஷாஅல்லாஹ்.








Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு