2:48.தர்ஜமா பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் நிலை எது?
மொழி பெயர்ப்பு துறையில் ஈடுபாடு இல்லாதவர்கள் நிலை எது?
ஒரு வசனத்தைப் பற்றி எழுதும் போது அது போன்ற வசனங்கள் எங்கு எங்கு உள்ளன என்று சுட்டிக் காட்டி எழுதினால் தான் தப்ஸீர். உங்கள் எழுத்து அந்த மாதிரி இல்லை என்ற விமர்சனம் உள்ளது.
நாம் தப்ஸீர் எழுதுவதாக சொல்லவில்லை. வார்த்தைக்கு வார்த்தையுடன் படிப்பவர்கள் ஒப்பீடு செய்து பார்ப்பதற்காக நம்மிடம் உள்ள 15 வித மொழி பெயர்ப்புகளை இடம் பெறச் செய்து வருகிறோம்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/06/248.html
மேலும் எல்லோரும் எழுதியதையே எழுதுவதை விட எழுதப்படாததை, மக்களுக்கு புரிய வைக்கப்படாததை புரிய வைப்பதே சிறந்தது. என்ற அடிப்படையில் எழுதி வருகிறோம். அந்த அடிப்படையில் வாவு பற்றி 2:38. 2:5. ஆகிய வசனங்களின் வார்த்தைக்கு வார்த்தையில் விளக்கம் எழுதி இருந்தோம்.

“வா”வுக்கு 1.இன்னம், 2.இன்னும், 3.மேலும், 4.பின்னர், 5.பின்பு, 6.அன்றி . இந்த
ஆறில் ஒன்றை மொழி பெயர்த்தே ஆக வேண்டும் என்பதே மொழி பெயர்ப்பு துறையில்
ஈடுபாடு இல்லாதவர்கள் நிலையாக உள்ளது.
தர்ஜமா
பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் நிலை அதுவல்ல என்பதற்கு ஒவ்வொருவரது தர்ஜமாக்களும்
சான்றாக உள்ளன.
இந்த (2:48) வசனத்திலும் நான்கு இடங்களில் வாவு இடம் பெற்றுள்ளன. அந்த
நான்கிலும் சொல்லுக்கு சொல்லாக மொழி பெயர்த்த உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள்
وَاتَّقُوْا - வத்தஃகூ -
இன்னும்அஞ்சுங்கள் )
இன்னும்அஞ்சுங்கள் )
وَلَا يُقْبَلُ - வலாயுஃக்பலு -
இன்னும் ஏற்கப்படாது
وَلَا يُؤْخَذُ -வலாயுஃவ்ஃக(ரு)து
இன்னும் வாங்கப்படாது
وَلَا هُمْ يُنصَرُونَ - வலாஹும் யுன்ஸரூ(ன)ன்.
இன்னும் வாங்கப்படாது
وَلَا هُمْ يُنصَرُونَ - வலாஹும் யுன்ஸரூ(ன)ன்.
இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
இவ்வாறு தனித் தனியாக மொழி பெயர்ப்பு செய்யும் போது வாவுக்கு இன்னும் என்று நான்கு இடங்களிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். இதை இணைப்பில் காண்கிறீர்கள்.
வசன நடை என வரும்போது நான்கு இடங்களிலும் வாவுக்கு இன்னும் என்றோ இன்னம் என்றோ மொழி
பெயர்க்கவில்லை. இதையும் இணைப்பில் காண்கிறீர்கள்.
(இ) என்றால் இன்னும் என்ற விளக்கம் அவரே வெளியிட்டுள்ளது இணைப்பில் உள்ளது.
و வாவு இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்று. ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை, பெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில் ம் என்ற பொருள் தரும். ஒரு வசனத்தின் இடையில் வரும்போது இன்னும் மேலும் போன்ற பொருள் தரும்.
ஒரு வசனத்தின் துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போது பொருள் தராது. ஒரு வசனத்தின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முன்பு எழுதிய இவற்றை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
இனி வார்த்தைக்கு வார்த்தை தமிழ் மொழியாக்கம்
وَاتَّقُوْا - வத்தஃகூ
அஞ்சுங்கள் - அஞ்சிக் கொள்ளுங்கள் - பயந்து கொள்ளுங்கள் (இந்த வார்த்தைகளிலேயே நீங்கள் என்பதும் அடங்கி இருக்கிறது)
يَوْمًا - யவ்மன்
நாளை - நாள் - ஒரு நாளை
(அரபு மொழியில் யவ்ம் (நாள்) என்றாலே ஒரு நாளைத்தான் குறிக்கும். வாஹித் யவ்ம் என்று சொல்லும் வழக்கு அரபு மொழியில் இல்லை. வாஹித் என்றால் ஒன்று என்று எல்லாரும் அறிந்தது தான்)
(அரபு மொழியில் யவ்ம் (நாள்) என்றாலே ஒரு நாளைத்தான் குறிக்கும். வாஹித் யவ்ம் என்று சொல்லும் வழக்கு அரபு மொழியில் இல்லை. வாஹித் என்றால் ஒன்று என்று எல்லாரும் அறிந்தது தான்)
لَا تَجْزِي - லாதஜ்Zஸீ
பயனளிக்காது - பலனளிக்காது - உதவாது - பயன்படாது
பயனளிக்காது - பலனளிக்காது - உதவாது - பயன்படாது
نَفْسٌ - நFப்ஸுன்
ஒருவர் - ஓர் ஆன்மா (ஆத்மா)
ஒருவர் - ஓர் ஆன்மா (ஆத்மா)
عَن نَّفْسٍ - ஃஅன்நFப்ஸின்
இன்னொருவருக்கு - மற்றவருக்கு - ஓர் ஆன்மா(ஆத்மா)வுக்கு
இன்னொருவருக்கு - மற்றவருக்கு -
شَيْئًا - ஷய்ஃஅ
ஏதாவது - எதனையாவது - ஏதேனும் - எதையேனும்
ஏதாவது - எதனையாவது - ஏதேனும் - எதையேனும்
وَلَا يُقْبَلُ - வலாயுஃக்பலு
ஏற்கப்படாது - ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
ஏற்கப்படாது - ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
مِنْهَا - மின்ஹா
அதனிடமிருந்து - அதற்காக - அதிலிருந்து
அதனிடமிருந்து - அதற்காக - அதிலிருந்து
شَفَاعَةٌ - ஷபாஅதுன்
பரிந்துரை - சிபாரிசு
பரிந்துரை - சிபாரிசு
وَلَا يُؤْخَذُ -வலாயுஃவ்ஃக(ரு)து
பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது - எடுக்கப்பட மாட்டாது - வாங்கப்படாது
مِنْهَا - மின்ஹா
அதனிடமிருந்து - அதற்காக - அதிலிருந்து
பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது - எடுக்கப்பட மாட்டாது - வாங்கப்படாது
مِنْهَا - மின்ஹா
அதனிடமிருந்து - அதற்காக - அதிலிருந்து
عَدْلٌ - ஃஅத்லுன்
ஈடு - பதிலீடு - பரிகாரம் - பிணை
ஈடு - பதிலீடு - பரிகாரம் - பிணை
وَلَا هُمْ يُنصَرُونَ - வலாஹும் யுன்ஸரூ(ன)ன்.
அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள் -
அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள் -
وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ
வத்தஃகூ யவ்மன் லாதஜ்Zஸீ நFப்ஸுன் ஃஅன்நFப்ஸின் ஷய்ஃஅ வலாயுஃக்பலு மின்ஹா ஷபாஅதுன் வலாயுஃவ்ஃக(ரு)து மின்ஹா ஃஅத்லுன் வலாஹும் யுன்ஸரூ(ன)ன்.
மொழிப்பெயர்ப்புகள் :
ஒருவர் மற்றவர்க்குக் கிஞ்சிற்றும் உதவ முடியாத (அந்த
மறுமை) நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்! (அந்நாளில் குற்றவாளிகளுக்காக) எவ்விதப்
பரிந்துரையும் எந்த ஈட்டுப் பொருளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் கிஞ்சிற்றும்
உதவி செய்யப்பட மாட்டார்கள். -(அதிரை ஜமீல்)
இன்னும், ஒருவர் மற்றவருக்கு பயனளிக்க முடியாத நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் அவர்கள் உதவி செய்யப்படவும்மாட்டார்கள் - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த)
ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது,
அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். -( ஜான் டிரஸ்ட்)
நீங்கள்
ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும்
யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும்
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட
மாட்டாது. அன்றி, அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
- ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
மேலும்
ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரும் மற்றவர்க்கு எதையும் கொடுத்து
உதவ முடியாது. எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது.
எவரிடமிருந்தும் மீட்புப் பணம் பெறப்பட்டு, எவரும் விடுதலை செய்யப்படவும் மாட்டார்கள்.
(குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது. - இஸ்லாமிய
நிறுவனம் டிரஸ்ட் (IFT)
மேலும்,
நீங்கள் ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவுக்கு
எவ்விதப் பயனுமளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதனிடமிருந்து
யாதொரு ஈட்டையும் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது; அவர்கள் (மற்றவர்களால்) உதவியும் செய்யப்படமாட்டார்கள். - (அல்-மதீனா அல்-முனவ்வரா)
Comments