2:40. வாவு பற்றி வாதம் வைத்தவர்களின் மேலான கவனத்திற்கு
அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவானாக ஆமீன். வாவுக்கு கண்டிப்பாக இன்னம், அன்றி, மேலும் போன்று தமிழாக்கம் செய்தே ஆக வேண்டும்.
எல்லா மொழி பெயர்ப்புகளிலும் அப்படித்தான் உள்ளது.
யாருமே வாவுக்கு இன்னம், அன்றி, மேலும் போன்று தமிழாக்கம் செய்யாமல் விட்டதில்லை.
இப்படியாக என்னிடம் வாதம் வைத்து. பீ.ஜே.யின் மொழி பெயர்ப்பை குறை கூறி கொச்சைப்படுத்திவர்களின் மேலான கவனத்திற்கு.
https://mdfazlulilahi.blogspot.com/2020/06/240.html

ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி, A. முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி (ஸலாமத் பதிப்பகம்), அதிரை ஜமீல்(இணையத்தில் இறைமறை) போன்றவர்கள் 2:40ல் 2 வாவுக்கும் நீங்கள் சொன்னது போல் மொழி பெயர்க்கவில்லை. உங்கள் கூற்றுக்கு மாற்றமாகவே மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.
ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி கொள்ளு பேரர் உமர் ஷரீப் காஸிமி அவர்கள் வெளியிட்டுள்ள குர்ஆன் தமிழாக்கத்தில். முதலில் சொல்லுக்கு சொல்லாக - தனித் தனி வார்த்தையாக மொழி பெயர்க்கிறார். அதில் 2 இடங்களில் இன்னும் என்பதை குறிக்கும் (இ) யை இடம் பெறச் செய்துள்ளார்.
ஆனால் வசனம் ( வசன நடை - வசன முறை) என்று வரும்பொழுது உங்கள் கூற்றுக்கு மாற்றமாகவே இன்னும் என்பதை தவிர்த்தே மொழி பெயர்ப்பு செய்துள்ளார். இணைப்பில் உள்ள பைலை பார்த்துக் கொள்ளுங்கள்.
டாக்டர். முஹம்மது ஜான், திரீயெம் பிரிண்டர்ஸ், மலிவு பதிப்பு, றஹ்மத் அறக்கட்டளை. K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, மதீனா அல்-முனவ்வரா, தாருஸ்ஸலாம், ரியாத், ஆகிய ஏழு பதிப்புகள் முதலில் உள்ள வாவுக்கு உங்கள் கூற்றுக்கு மாற்றமாகவே மொழி பெயர்ப்பு செய்யாமல் விட்டுள்ளார்கள்.
யாருமே வாவுக்கு இன்னம், அன்றி, மேலும் போன்று தமிழாக்கம் செய்யாமல் விட்டதில்லை என்ற உங்கள் கூற்று தவறானது என்பதை மீண்டும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போல்தான தஃகீத் சொற்களுக்கும் யாருமே மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்று அடித்துச் சொன்னீர்கள். பகராவிலிருந்து 77 வசனங்கள். பரவலாக குறிப்பிட்ட 18 வசனங்கள். ஆக 95 வசனங்களை 05-02-2020 அன்று எடுத்துக் காட்டி பதிவு போட்டேன்.
அந்த 95 வசனங்களில் தஃகீத் சொற்களில் இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) மட்டும் மொழி பெயர்க்காமல் விட்ட தஃகீத் சொற்கள் 154.
(95 ல் 154லா? என்று எதிர் கேள்வி வைத்து விடாதீர்கள். ஒரு சில வசனங்களில் 9 , 7, 6, 5, 4. 3, 2 என தஃகீத் சொற்கள் இருக்கும்)
இதில் ஏழு மொழி பெயர்ப்புகளை எழுத்தாகவும் 7 ஏழு மொழி பெயர்ப்புகளை பைலாகவும் தந்துள்ளோம்.
ஆனால் வசனம் ( வசன நடை - வசன முறை) என்று வரும்பொழுது உங்கள் கூற்றுக்கு மாற்றமாகவே இன்னும் என்பதை தவிர்த்தே மொழி பெயர்ப்பு செய்துள்ளார். இணைப்பில் உள்ள பைலை பார்த்துக் கொள்ளுங்கள்.
டாக்டர். முஹம்மது ஜான், திரீயெம் பிரிண்டர்ஸ், மலிவு பதிப்பு, றஹ்மத் அறக்கட்டளை. K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, மதீனா அல்-முனவ்வரா, தாருஸ்ஸலாம், ரியாத்,
யாருமே வாவுக்கு இன்னம், அன்றி, மேலும் போன்று தமிழாக்கம் செய்யாமல் விட்டதில்லை என்ற உங்கள் கூற்று தவறானது என்பதை மீண்டும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போல்தான தஃகீத் சொற்களுக்கும் யாருமே மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்று அடித்துச் சொன்னீர்கள். பகராவிலிருந்து 77 வசனங்கள். பரவலாக குறிப்பிட்ட 18 வசனங்கள். ஆக 95 வசனங்களை 05-02-2020 அன்று எடுத்துக் காட்டி பதிவு போட்டேன்.
அந்த 95 வசனங்களில் தஃகீத் சொற்களில் இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) மட்டும் மொழி பெயர்க்காமல் விட்ட தஃகீத் சொற்கள் 154.
(95 ல் 154லா? என்று எதிர் கேள்வி வைத்து விடாதீர்கள். ஒரு சில வசனங்களில் 9 , 7, 6, 5, 4. 3, 2 என தஃகீத் சொற்கள் இருக்கும்)
அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மொழி பெயர்க்காமல் விட்ட தஃகீத் சொற்கள் 94. .
ஜான் டிரஸ்ட் மொழி பெயர்க்காமல் விட்ட தஃகீத் சொற்கள் 92,
பஷாரத் பப்ளிஷர்ஸ் மொழி பெயர்க்காமல் விட்ட தஃகீத் சொற்கள் 81,
மலிவு பதிப்பு மொழி பெயர்க்காமல் விட்ட தஃகீத் சொற்கள் 64
திரீயெம் பிரிண்டர்ஸ் மொழி பெயர்க்காமல் விட்ட தஃகீத் சொற்கள் 70
இவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டிய பிறகும் நீங்கள் கூறியது தவறானது. மற்ற மொழி பெயர்ப்புகளை பார்க்காமல் கூறி விட்டோம் என்று உண்மையைச் சொல்ல உங்களில் யாருக்கும் மனம் வரவில்லை. அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவானாக ஆமீன். இதில் ஏழு மொழி பெயர்ப்புகளை எழுத்தாகவும் 7 ஏழு மொழி பெயர்ப்புகளை பைலாகவும் தந்துள்ளோம்.
இனி வார்த்தைக்கு வார்த்தை
يٰبَنِىْٓ - யா பனீ
يٰبَنِىْٓ - யா பனீ
மக்களே! - சந்ததிகளே - சந்ததியினரே - வழித் தோன்றல்களே
اِسْرَآءِيْلَ - இஸ்ராஃயீல
இஸ்ராயீலின்
يَا بَنِي إِسْرَائِيلَ - யா பனீ இஸ்ராஃயீல
இஸ்ராயீலின் மக்களே!
இஸ்ராயீலின் மக்களே!
اذْكُرُوا - உர்குரூ
எண்ணிப்பாருங்கள்! - நினைவு கூருங்கள் - நினைவில் கொள்ளுங்கள்- நினைத்துப் பாருங்கள்-
نِعْمَتِ - நிஃம(தி)த்
அருட்கொடை - அருள்
அருட்கொடை - அருள்
يَ - ய
என்னுடைய - என்
என்னுடைய - என்
الَّتِي -அல்லதீ
அப்படிபட்ட - எது - எப்படிப்பட்ட
அப்படிபட்ட - எது - எப்படிப்பட்ட
أَنْعَمْتُ - அன் ஃஅம்து
நான் அளித்தேன் - வழங்கினேன் - அருள் புரிந்தேன்
நான் அளித்தேன் -
عَلَيْكُمْ - ஃஅலைக்கும்
உங்களுக்கு -உங்கள் மீது
وَاَوْفُوْا - வஅவ்Fபூ
உங்களுக்கு -உங்கள் மீது
وَاَوْفُوْا - வஅவ்Fபூ
நிறைவேற்றுங்கள் - செலுத்துங்கள்
بِعَهْدِي - பிஃஅஹ்தீய்
என் உடன்படிக்கையை (வாக்குறுதியை- வாக்கை)
أُوفِ - வூFபி
நான் நிறைவேற்றுவேன்
நான் நிறைவேற்றுவேன்
بِعَهْدِ - பிஃஅஹ்தி
உடன்படிக்கை (வாக்குறுதி- வாக்கு)
உடன்படிக்கை (வாக்குறுதி- வாக்கு)
كُمْ - கும்
உங்கள்
بِعَهْدِكُمْۚ - பிஃஅஹ்தி கும்
وَإِيَّايَ - வஃஇய்யாய
உங்கள்
بِعَهْدِكُمْۚ - பிஃஅஹ்தி கும்
وَإِيَّايَ - வஃஇய்யாய
என்னையே - எனக்கு மட்டுமே - எனக்கே -
فَارْهَبُونِ - Fபர்ஹபூ(னி)ன்
அஞ்சுங்கள் - பயப்படுங்கள்
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ
அஞ்சுங்கள் - பயப்படுங்கள்
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ
யா பனீ இஸ்ராஃயீலர்குரூ நிஃமதி யல்லதீ அன் ஃஅம்து ஃஅலைக்கும்
வஅவ்Fபூ பிஃஅஹ்தீய் வூFபி பிஃஅஹ்திகும் வஃஇய்யாய Fபர்ஹபூ(னி)ன்
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு வழங்கிய என்னுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் எனக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்களுக்கு வாக்களித்ததை நிறைவேற்றுவேன். நீங்கள் அஞ்ச வேண்டியது எனக்கு மட்டுமே. (அதிரை ஜமீல்)
இஸ்ராயீலின்
மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையை எண்ணிப்பாருங்கள்! என் உடன்படிக்கையை
நிறைவேற்றுங்கள்! உங்கள் உடன்படிக்கையை நான் நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள்! (PJதொண்டி)
இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய
அருட்கொடையை நினைவு கூருங்கள், நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன், மேலும், நீங்கள் என்னையே அஞ்சுங்கள். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
இஸ்ராயீலின் சந்ததியனரே! நான் உங்களுக்கு அளித்த
என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை
நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள்
(வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக. (டாக்டர். முஹம்மது ஜான்
இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அளித்திருந்த என்னுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள். நானும் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள். (ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
இஸ்ராயீலின்
வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடைகளை நீங்கள் நினைவுகூருங்கள்;
மேலும், எனக்கு நீங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! (அவ்விதமாயின்) உங்களுக்குத்
தந்த வாக்குறுதியை நானும் நிறைவேற்றுவேன். மேலும், எனக்கு மட்டுமே நீங்கள் அஞ்சுங்கள்! ( இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
இஸ்ராயீலின்
மக்களே! நான் உங்களுக்கு அளித்திருந்த என்னுடைய அருட்கொடையை நீங்கள் நினைவு கூறுங்கள்.
என் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றுங்கள்; (அப்பொழுது) உங்களுடைய வாக்குறுதியை நான்
நிறைவேற்றுவேன்; மேலும் என்னையே நீங்கள் அஞ்சுங்கள். (அல்-மதீனா
அல்-முனவ்வரா)
Comments