2:43 தொழுகை, நோன்பு என தமிழில் தந்தவர்கள் ஸகாத் தமிழில் தராதது ஏன்?
Zஸகாத் என்பதற்கு நேரடி தமிழாக்கம் என்ன? திரு குர்ஆன் தமிழாக்கங்கள் பெரும்பாலும் அரபு மொழி கலந்தே இருக்கின்றன. “காபிர்”கள், “ஈமான்” கொண்டவர்கள், “மலக்”குகள், “ஸஜ்தா” செய்யுங்கள், “ஆயத்”துகள் இப்படி பழ“மைனி” மாதிரி அரபும் தமிழும் கலந்து உள்ளன. அதனால் முஸ்லிம் அல்லாதவர்கள் படித்தறிய முடிவதில்லை. என்ற விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனக்காரர்களிடம் இந்த 2:43 வசனம் முதலிடம் வகிக்கிறது.
https://mdfazlulilahi.blogspot.com/2020/06/243.html
காரணம் இதில் இடம் பெற்றுள்ள ஜகாத், ருகூஃ என்ற வார்த்தைகள்.
ஈமான் - நம்பிக்கை
மலக் - வானவர்
ஸஜ்தா - பணியுதல்
காபிர் - நிராகரிப்பாளர்
என்றெல்லாம் தமிழாக்கம் செய்தவர்கள். ஸலாத் என்பதற்கு தொழுகை என்றும் ஸவ்ம் என்பதற்கு நோன்பு என்றும் தமிழாக்கம் தந்தவர்கள் கூட ஜகாத், 'ருகூஃ' ஆகியவற்றுக்கு மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பதே அவர்கள் ஆதங்கம். 2:34. வசனத்திற்கு நாம் எழுதியுள்ளதில் இதற்கான விளக்கமும் சிறிது உண்டு.
ஈமான் - நம்பிக்கை, மலக் - வானவர், ஸஜ்தா - பணியுதல், காபிர் - நிராகரிப்பாளர் இவை எல்லாம் நேரடி பொருள் தான். காரணம் இறை நம்பிக்கை, வானவர், பணியுதல், நிராகரிப்பாளர் போன்ற சொற்கள் மாறுபட்ட கொள்கை உடைய பிற மத தமிழ் மக்களின் பேச்சு வழக்கிலும் செயல்பாடுகளிலும் உள்ளவைதான்.
இறைவனைப் பற்றி நம்பிக்கையும் வணங்கும் முறையும் தவறாக இருந்தாலும். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மக்களிடம் கடவுளை வணங்கும் வழக்கம் இருந்தது. அதற்கு அவர்கள் தொழுகை என்றார்கள்.
இதுபற்றி தொழுகையா? பூஜையா? பள்ளியா? கோவிலா? என்ற தலைப்பில் ஏற்கனவே விளக்கி விட்டோம்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_22.html
அதுபோல் உண்ணா விரதம் இருக்கும் வழக்கமும் இருந்தது, இருக்கிறது. அதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழில் நோன்பு என்றார்கள். இதுபற்றியும் முஸ்லிம்கள் தான் பூர்வீகத் தமிழர்கள் என்பதற்கு நோன்பு ஆதாரகமாக உள்ளதா என்ற தலைப்பில் விளக்கி விட்டோம்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_24.html
ஸலாத் என்பதற்கு தொழுகை என்பது நேரடி பொருள் கிடையாது. அதற்கு நேரடி பொருள் பிரார்த்தனை என்பதாகும்.
ஸவ்ம் என்பதற்கு நோன்பு என்பது நேரடி பொருள் அல்ல. அதற்கு நேரடியான பொருள் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் என்றே வரும்.
இயக்கங்களும் தப்லீக் ஜமாஅத்தினரும் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கு தZஸ்கிய்யா என்பார்கள். இதன் பொருள் துாய்மைப்படுத்துதல் என்பதாகும். இது Zஸகாத் என்ற வார்த்தையில் இருந்து உள்ளதுதான்.
சிலர் Zஸகாத் என்பதற்கு மார்க்க வரி, ஏழை வரி, அபிவிருத்தி என்று பொருள் என்கிறார்கள். அவை தவறானவை.
Zஸகாத் என்பதற்கு நேரடி தமிழாக்கம் என்ன?
وَ يُزَكِّيْهِمْؕ
وَأَقِيمُوا - வஅஃகீமூ

நபி(ஸல்) அவர்கள் புதிய வார்த்தைகளைக் கண்டு பிடித்து வணக்கங்களுக்குப்
பெயர் சூட்டவில்லை. அரபுகளின் நடைமுறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு
செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டிக் கொண்டார்கள்.
அது போல்தான் நமது முன்னோர்களும் தமிழ் மக்களிடம் இருந்த தமிழ் சொற்களில் பொருத்தமானவற்றைத் தேர்வு செய்து தொழுகை, நோன்பு என பயன்படுத்திக் கொண்டார்கள்.
இறை நம்பிக்கை, தெய்வத்தை தொழுவது. கடவுளுக்காக நோன்பு வைப்பது போன்ற வணக்க முறைகள் தமிழ் மக்களிடம் இருந்தது. அதனால் அதற்கு தமிழில் பெயர்கள் இருந்தன. ஸகாத், ஹஜ் போன்ற வணக்க முறைகள் அவர்களிடம் இல்லை. அதனால் பழைய தமிழில் அதற்குரிய வார்த்தைகள் இல்லை.
எனவே “Zஸகாத்” என்பதற்கு அதே அரபு வாசகத்தையே இடம் பெறச் செய்துள்ளார்கள். அரபிகளிடம் ஏதாவது ஒரு உதவி கேட்கும் அரபிகள். அவர் கேட்கும் உதவியை சொல்லி விட்டு. அZஸ்ஸகாதக் என்பார்கள். அதாவது உன்னை துாய்மைப்படுத்த என்பார்கள்.
இயக்கங்களும் தப்லீக் ஜமாஅத்தினரும் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கு தZஸ்கிய்யா என்பார்கள். இதன் பொருள் துாய்மைப்படுத்துதல் என்பதாகும். இது Zஸகாத் என்ற வார்த்தையில் இருந்து உள்ளதுதான்.
சிலர் Zஸகாத் என்பதற்கு மார்க்க வரி, ஏழை வரி, அபிவிருத்தி என்று பொருள் என்கிறார்கள். அவை தவறானவை.
Zஸகாத் என்பதற்கு நேரடி தமிழாக்கம் என்ன?
وَ يُزَكِّيْهِمْؕ
வயுZஸக்கீஹிம் - அவர்களைத்
தூய்மைப்படுத்துவார். 2:129, 3:164, 62:2.
وَلَا يُزَکِّيْهِمْ
வலா யுZஸக்கீஹிம் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். 2:174. 3:77.
Zஸகாத் என்றால் தூய்மைப்படுத்தல் என்பதற்கு இன்னும் பலமான ஆதாரம். வதுZஸக்கீஹிம் பிஹா
وَتُزَكِّيْهِمْ بِهَا
“(நபியே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம்
அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக!” 9:103.
இது அன்றைய அரசர் (ஆட்சியாளர்) முஹம்மது நபி(ஸல்) அவர்கள் Zஸகாத்தை எடுப்பது சம்பந்தமான வசனத்தில் உள்ள வாசகம் ஆகும்.
ஆகவே Zஸகாத் என்பதற்கு பரிசுத்தம், புனிதம், துாய்மை என்பதே நேரடி பொருளாகும் என்பதை குர்ஆனிலிருந்தே தந்து விட்டோம்.
இனி 2:43 வார்த்தைக்கு வார்த்தை காண்போம்.
وَأَقِيمُوا - வஅஃகீமூ
நிலை நாட்டுங்கள் - நிலை நிறுத்துங்கள்
الصَّلَاةَ - அஸ்ஸலாத
தொழுகையை
وَآتُوا - வஆதுா
கொடுங்கள்
ا الزَّكَاةَ - அZ]ஸ்ஸகாத
Zஸகாத்தை
وَارْكَعُوا - வர்கஃஊ
பணியுங்கள் - குனியுங்கள் - ருகூஃ செய்யுங்கள்
பணியுங்கள் - குனியுங்கள் - ருகூஃ செய்யுங்கள்
مَعَ -மஃஅ
உடன் - சேர்ந்து - இணைந்து
உடன் - சேர்ந்து - இணைந்து
الرَّاكِعِينَ - அர்ராக்கிஃயீ(ன)ன்
பணிபவர்கள் - குனிபவர்கள் - ருகூஃ செய்வோர்
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
பணிபவர்கள் - குனிபவர்கள் - ருகூஃ செய்வோர்
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
வஅஃகீமூஸ்ஸலாத வஆதுா Zஸ்ஸகாத வர்கஃஊ மஃஅர்ராக்கிஃயீ(ன)ன்
மொழிப் பெயர்ப்புகள்:
தொழுகையை முறைப்படிக்
கடைப்பிடித்து ஒழுகுங்கள்; ஸகாத்தைக் கணக்கிட்டுச்
செலுத்தி விடுங்கள்; தலை குனிந்து (என்னை)
வணங்கு(ம் முஸ்லி)ம் சமுதாயத்தினரோடு சேர்ந்து நீங்களும் குனியுங்கள். - (அதிரை ஜமீல்)
தொழுகையை
நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்! (PJதொண்டி)
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்;
ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (டாக்டர். முஹம்மது ஜான்)
தொழுகையைக் கடைப் பிடியுங்கள், ஜகாத்தைக் கொடுங்கள், ருகூஃ செய்வோரோடு நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
மேலும், நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் நீங்கள் கொடுங்கள்; (ருக்வு) செய்து குனிபவர்களுடன் நீங்களும் (ருக்வு செய்து) குனியுங்கள். (அல்-மதீனா அல்-முனவ்வரா)
நீங்கள்
தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில்
ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள்.
(அப்துல் ஹமீது பாகவி)
தொழுகையை
நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; இன்னும் என் முன்னிலையில்
தலைசாய்ப்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் தலை சாயுங்கள். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் IFT)
மேலும், நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் நீங்கள் கொடுங்கள்; (ருக்வு) செய்து குனிபவர்களுடன் நீங்களும் (ருக்வு செய்து) குனியுங்கள். (அல்-மதீனா அல்-முனவ்வரா)
Comments