2:46 அல்லாஹ்வை பார்க்க முடியாதா?

அல்லாஹ்வின் காலில் விழ  யாரால் முடியாது?
2:46ல் முலாகத், ... இலைஹி ராஜிஊன் என்று பாமரர்களும் பொருள் அறியாமல் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை உள்ளது. வார்த்தைக்கு வார்த்தையில் அதன் பொருள் அறிந்த பின். இனி பயன்படுத்தும் போது தானாக அதன் பொருள் ஞாபகத்துக்கு வந்து விடும்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/246.html


இந்த  வசனத்தில்   “யழுன்னுான    அன்னஹும்   முலாஃகூ    ரப்பிஹிம்”  தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம்  என்றும், அவர்கள் நம்புவார்கள் என்று உள்ளது.


இதற்கு விளக்கமாக, ஏக  இறைவன் அல்லாஹ்வை மறுமையில் (கண்ணால்) பார்க்க முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஹதீஸ்கள் புகாரி 554, 573, 806, 4581, 4851, 6574,7434, 7435, 7436, 7438, 7440 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. 


இந்த நபிமொழிகள்  2:46 வசனம்  மாதிரியான 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, ஆகிய வசனங்கள் கூறும் மறுமையில் அல்லாஹ்வை  காண முடியும் என்பதற்கு விளக்கமாக உள்ளன.


வானவர்கள் அணி அணியாக (அணி வகுத்து) நிற்க (அதாவது வானவர்கள் புடைசூழமறுமை நாளில் மக்களை விசாரிக்க) ஏக இறைவன் அல்லாஹ் வருவான் (89:22)



கெண்டைக்கால் திறக்கப்பட்டு  ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது. (68:42) 

மறுமையில் அல்லாஹ்வின் காலில் உண்மை முஸ்லிம்கள் விழுந்து  பணிவார்கள் அல்லாஹ்விடம் யாரெல்லாம்  முனாபிக்களோ அவர்களால் முடியாது என்ற இந்த 68:42  வசனத்திற்கு விளக்கமாக கீழ் காணும் ஹதீஸ் உள்ளது.


நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். 

முகஸ்துதிக்காவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். (இவர்கள் தான் அல்லாஹ்விடம் முனாபிக்குகள்)

அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும். (புகாரி 4919) 

இந்த நிகழ்ச்சிகளும் அல்லாஹ்வை காண்போம் என்பதற்கான ஆதாரமாகும்.

மறுமையில் தீர்ப்பளிக்கப்பட்ட பின் ஒவ்வொருவரும் யாரை வணங்கினீர்களோ அவர்களுடன் செல்லுங்கள் என்று உத்தரவிடப்படும். அவர்களுடன் சென்று நரகத்தில் விழுவார்கள். 

அல்லாஹ்வை மட்டும் வணங்கிய மக்கள் மட்டும் தாங்கள் வணங்கிய அல்லாஹ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும்போது அவர்களிடம் இறைவன் வருவான் (புகாரி 7440, 806)

மறுமையில் அல்லாஹ் சிலரைத் தனக்கு நெருக்கமாக அழைத்து இரகசியமாக உரையாடுவான். அவர் செய்த ஒவ்வொரு பாவத்தையும் சுட்டிக்காட்டி இதைச் செய்தாயா என்று கேட்பான். அவர்கள் ஆம் என்பார்கள். இப்படி எல்லா பாவத்தையும் அவர்கள் ஒப்புக் கொண்டபின் உலகில் உனது பாவங்களை நான் மறைத்தது போல் இங்கும் மறைத்து மன்னித்து விட்டேன் என இறைவன் கூறுவான் (புகாரி 4685)


மூமின்கள் அல்லாஹ்வின் வலது கைப்புறத்தில் இருப்பார்கள் (முஸ்லிம் 3731) இவை எல்லாமே அல்லாஹ்வை பார்க்க முடியும் என்பதற்குரிய ஆதாரங்களாகும். இவ்வளவு ஆயத்களும் ஹதீஸ்களும் ஆதாரமாக இருக்கவேஃ மறுமையில் அல்லாஹ்வை காண முடியும் என்பதை நம்பாதவர்கள், காண முடியாது என வாதம் வைப்பவர்கள் வழி கேடர்களே!

இனி வார்த்தைக்கு வார்த்தை 

الَّذِينَ- அல்லதீ(ரீ)ன 
அவர்கள்  எவர்கள்- சிலர்


يَظُنُّونَ -யழுன்னுான  
நம்புவார்கள். - கருதுவார்கள் - கருத்தில் கொள்வார்கள் -எண்ணுவார்கள்.- நினைப்பார்கள்  
أَنَّهُمஅன்னஹும் 
அவர்கள்தாம் - திட்டமாக அவர்கள் 
مُلَاقُو முலாஃகூ 
சந்திப்பவர்கள் (நடைமுறையில் முலாகத் என்போமே அது இந்த வார்த்தைதான்) 
رَبِّهِمْ - ரப்பிஹிம்  
தமது (தங்கள்)  இறைவன்
 وَاَنَّهُمْவஅன்னஹும்
அவர்கள்தாம் - திட்டமாக அவர்கள் 
إِلَيْهِஇலைஹி 
அவனிடம் 
رَاجِعُونَராஜிஃஊ(ன) ன்

திரும்புகிறவர்கள் - திரும்பிச் செல்பவர்கள் - மீள்பவர்கள்
الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ

அல்லதீ(ரீ)  யழுன்னுான  அன்னஹும்  முலாஃகூ  ரப்பிஹிம் வஅன்னஹும்  இலைஹி  ராஜிஃஊ() ன் 
தமிழாக்கங்கள்


(உள்ளச்சமுடைய) அவர்கள், "திடமாகத் தங்கள் இறைவனைச் சந்திப்போம்; அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவர். - (அதிரை ஜமீல்)


(பணிவுடையோர் யாரெனில்) தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம்488 என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் அவர்கள் நம்புவார்கள். (P.J.தொண்டி) 

(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக    (தாம்)    தங்கள்  இறைவனைச்  சந்திப்போம்;  நிச்சயமாக அவனிடமே  தாம் திரும்பச் செல்வோம் என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார், டாக்டர். முஹம்மது ஜான்)


(உள்ளச்சமுடைய) அவர்களோ தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்போமென்றும், அவனிடமே நிச்சயமாக செல்வோமென்றும் உறுதியாக நம்புவார்கள்.  - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்

அவர்கள் எத்தகையோர் எனில் இறுதியில் தங்கள் இறைவனைச் சந்திப்பவர்களாய் இருக்கின்றோம் என்றும், அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.  -(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)



(உள்ளச்சம் கொண்ட) அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் இரட்சகனை நிச்சயமாக தாங்கள் சந்திக்கக் கூடியவர்கள், என்றும் தாங்கள் அவன்பாலே திரும்பிச் செல்லக்கூடியவர்களென்றும் உறுதியாக நம்புகின்றனர். (அல்-மதீனா அல்-முனவ்வரா)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு