குணங்குடி ஹனீபா அத்தா அளித்த அறிவுரையை ஏற்று படிப்பினைகள் பற்றி அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்.
கருணாநிதி
காப்பாற்றவில்லையா? கருணாநிதியால் காப்பாற்ற முடியவில்லையா?
அத்தா
என்று அன்போடு அழைக்கப்படும் த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி R.M. ஹனீபா அவர்கள் 06.09.2019 அன்று காலை
நெல்லை வந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு 12 மணி நேரம் அவருடன் தொடராக இருக்கும்
வாய்ப்பு கிடைத்தது.
நெடுங்காலமாக போனில் பல முறை வலியுறுத்தியதை இந்த முறை நேரில் அதிகமதிகம் வலியுறுத்தினார். அது என்ன வலியுறுத்தல் தெரியுமா?
நெடுங்காலமாக போனில் பல முறை வலியுறுத்தியதை இந்த முறை நேரில் அதிகமதிகம் வலியுறுத்தினார். அது என்ன வலியுறுத்தல் தெரியுமா?
பீ.ஜே.யைப்
பற்றி எழுதுவதை விடுங்கள் என்று யாரும் உங்களிடம்
சொன்னது இல்லையா? பேச்சு வார்த்தை நடத்தியது இல்லையா? மிரட்டியது இல்லையா? என்று கேட்டார்.
கம்பம் ஜபருல்லா்ஹ், வேலுார் இப்றாஹீம் ஆகியோர் மீது கூலிப்படைகளை ஏவி விட்டு நடத்திய கொலை வெறி தாக்குதலை தவிர நேரடி மிரட்டல் எதுவும் இல்லை என்றேன்.
கம்பம் ஜபருல்லா்ஹ், வேலுார் இப்றாஹீம் ஆகியோர் மீது கூலிப்படைகளை ஏவி விட்டு நடத்திய கொலை வெறி தாக்குதலை தவிர நேரடி மிரட்டல் எதுவும் இல்லை என்றேன்.
சும்ம
எப்ப பார்த்தாலும் பீ.ஜே. PJன்னு எழுதிக் கொண்டு இருக்கிறீர்களே! அதை விட மாட்டீர்களா?
நீங்க என்ன எழுதினாலும் அவர் உங்களைப் பற்றி பேசுகிறாரா? எழுதுகிறாரா? பத்து பதினைந்து
வருஷமா அவர் பற்றி எழுதியதைத்தானே திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள். ஆகவே அவரைப் பற்றி
எழுதுவதை விடுங்கள்.
சமுதாயத்திற்கு
தேவையான பயனுள்ள எத்தனையோ அனுபவங்கள் உங்களிடம் உள்ளது. அதை எழுதுங்கள். 20 வருஷம்
25 வருஷம் என்று இளமையை சிறையில் கழித்தவர்களை பார்க்கிறீர்கள்.
நான் 13 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிக் காற்றை சுவாசித்தேன். 13 ஆண்டுகள் சிறையில்தான் இருந்தேன். ஆகவே வருங்காலத்தில் இது போன்ற பாதிப்புகளை சமுதாயம் அடையக் கூடாது என்ற வகையில் படிப்பினைகளை எழுதுங்கள். பயனுள்ள வழி காட்டுதலை எழுதுங்கள் என்றார்கள்.

ஆகவே
குணங்குடி ஹனீபா அத்தா அளித்த அறிவுரைப்படி படிப்பினைகள் பற்றி அவரிடமிருந்தே எழுத
ஆரம்பிக்கிறேன். 06.09.2019 அன்று அவருடன் சென்று சந்தித்த எல்லா சந்திப்புகளிலுமே அவர் ஒரு
கருத்தைக் கூற அதற்கு மாற்றமாக உரிமையுடன் நான் ஒன்றைக் கூற என பல படிப்பினைகள் பயனுள்ள
வழி காட்டுதல்கள் என்று இருக்கத்தான் செய்தன.
அவற்றில் ஒன்று.
ஒரு சபையில் பேசிய குணங்குடி ஹனீபா
அத்தா அவர்கள் தன் மீது போலீஸ் பொய் கேஸ் போட்டு அநியாயமாக 13 ஆண்டுகள் சிறையில் வாழவும்
மனம் வாடவும் வைத்து விட்டதாகக் கூறினார்கள்.
அப்பொழுது உரிமையுடன் குறுக்கிட்ட நான், மீசைக்கார குணங்குடி ஹனீபாவாக இருந்த நீங்கள் சிறை செல்ல நீங்கள்தான் காரணம் என்று கூறினேன்.
அப்பொழுது உரிமையுடன் குறுக்கிட்ட நான், மீசைக்கார குணங்குடி ஹனீபாவாக இருந்த நீங்கள் சிறை செல்ல நீங்கள்தான் காரணம் என்று கூறினேன்.
எப்படி
என்று கேட்டார்கள். பழனி பாபா இறந்த பிறகு ஜிஹாத் கமிட்டி தலைவராக இருந்த மீசைக்கார
குணங்குடி ஹனீபாவாகிய நீங்கள் பழனி பாபா ஸ்டைலில் பேசினீர்கள். அதில் ஒன்று.
3 தொடர் ரயில் குண்டு வெடிப்புகளில் குண்டு வைத்தவர் யார் என்று எனக்குத் தெரியும். பழனி பாபா கனவில் வந்து சொன்னார் என்றீர்கள். இது போன்ற பேச்சுக்கள்தான் மீசைக்கார குணங்குடி ஹனீபா சிறை செல்ல காரணம் என்றேன்.

அப்படி
பேசவில்லை என்றார்.
நான் பத்திரிக்கையில் பார்த்து இருக்கிறேன் என்றேன்.
முன்பு மறைந்த ஒரு தலைவர் RSS அலுவலக குண்டு வெடிப்பில் குண்டு வைத்தவர் யார் என்று எனக்குத் தெரியும். அல்லாஹ் கனவில் வந்து சொன்னான் என்றார். அந்த பாணியில் உங்கள் பேச்சு இருந்தது என்றேன்.

இல்லை
என்று மறுத்த அத்தா குணங்குடி ஹனீபா அவர்கள், எல்லாரும் பாதுகாப்புக்கு கையில் கத்தி
வைத்துக் கொள்ளுங்கள் என்று MGR சொல்லி உள்ளார். ஆகவே கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூட்டத்தில் கூடி இருந்தவர்களுக்கு கத்தி வினியோகித்தேன் என்றார். இது சரியா? என்று கேட்டேன்.
பா.ம.க.
மாநில பொருளாளராக இருந்தபொழுது குறைந்தது மாதம் இரண்டு முறை கருணாநிதியை சந்திக்கக்
கூடியவராக இருந்தவர் குணங்குடி ஹனீபா.
கருணாநிதிக்கு அவ்வளவு நெருக்கமாக இருந்த குணங்குடி ஹனீபா மீது ரயில் குண்டு வெடிப்பு வழக்கு கருணாநிதி முதல்வராக இருந்தபொழுதுதான் போடப்பட்டது. கருணாநிதி காப்பாற்றவில்லையா? கருணாநிதியால் காப்பாற்ற முடியவில்லையா?

1998
கோவை குண்டு வெடிப்பை ஒட்டி தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஜிஹாது கமிட்டியும் ஒன்று.
ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டால் அதன் அனைத்து நிர்வாகிகளும் கைது செய்யப்படுவார்கள்.
ஒரு நாட்டின் ஆட்சித் தலைவரை கொல்லுவோம் என்று ஒரு அமைப்பில் உள்ளவர் பேசி. அதை கண்டு கொள்ளாமல் அமைப்பு இருந்தால். அந்த அமைப்பு தடை செய்யப்படும். கூண்டோடு எல்லாரும் மாவட்டம் உள்பட கூண்டுக்குள் போக வேண்டும். இதுதான் உலக நடைமுறையாக உள்ளது.

ஜிஹாது
கமிட்டி பெரிய அமைப்பாக இல்லாததால் ஒரு சிலருடன் கைது நின்றது. ரயில் குண்டு வெடிப்பு
நடந்தது. 1997ல். ஜிஹாது கமிட்டிக்கு தடை 1998 கோவை குண்டு வெடிப்பை ஒட்டித்தான். இதன்
பிறகுதான் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா சேர்க்கப்பட்டார்.
இதற்கு
சிலர் போலீஸ் அதிகாரிகள் காரணம் என்பார்கள். ஜிஹாது என்ற பெயர் காரணத்துக்காகவே தடை
செய்ய வேண்டும் என்று கருணாநிதி சொன்னார் என்று சிலர் சொல்வார்கள். எது எப்படியோ குணங்குடி
ஹனீபா 120 பி.யாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது தான் மற்ற ஏழு பேரும் விடுதலையாக முடிந்தது.
குணங்குடி ஹனீபா மூலம் மற்றவர்களை அல்லாஹ் காப்பாற்றி இருக்கிறான். இல்லை
எனில் சேரன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேதம். 18 பேர் பலி. 50க்கும்
மேற்பட்டோர் காயம் என்ற வழக்கின் தீர்ப்பு வேறுவிதமாக இருந்திருக்கும்.
குணங்குடி
ஹனீபா அத்தாவிடமிருந்து
நாம் பெறும்
படிப்பினை கத்தியை
தீட்டச் சொல்லாதே புத்தியை
தீட்டச் சொல் என்பதே.
Comments