இதுதான் சிறைவாசிகள் விடுதலை பற்றிய நிலை


கோவை போன்ற வழக்குகளில் உள்ள சிறைவாசிகள் விடுதலைக்கு தடையாக யார் போட்ட சட்டங்கள் உள்ளன?  யாருடைய செயல்பாடுகளெல்லாம் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு தடையாகவும் இடையூறாகவும் உள்ளன. 

இந்த உண்மைகளை சமுதாயத்துக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதே நல்லவர்களின் எண்ணங்களாக உள்ளன. இடை இடையே வேறு விமர்சனங்கள் வந்து விடுவதால் அதை தொடர முடியவில்லை.

கடந்த ஆண்டு 2018ல் அதாவது ஓராண்டுக்கு முன்பாகவே 2019  எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மீரான் போன்ற முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை. நமது பொதுச்செயலாளருக்கு  போன் போட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி. இப்படியாக ஒரு இயக்கத்தாரின் ஊடகத்துறை சார்பாக செய்திகளை பரப்பி பெருமையடித்தனர். 


அதே இயக்கத்தாரின் ஊடகத்துறை  இந்த வாரம், 2020  எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்வது சம்பந்தமாக நிபுணர்களிடம் கலந்து ஆலோசனை செய்வதாக முதல்வர் நேரில் கூறினார் என்று செய்தி வெளியிட்டு  பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு போன் போட்டு விடுதலை என்று உறுதியாகச் சொன்ன முதல்வர்தான் இந்த ஆண்டு நிபுணர்களிடம் கலந்து ஆலோசனை செய்வதாக நேரில் கூறி உள்ளார். இதில் யாரையும் குறை சொல்ல மாட்டோம். இதுதான் நிலை.

அடுத்த வெளியீடு
சல்லாபிகளுடன் சல்லாபமாக இருந்தவர்கள் இருப்பவர்கள் யார்?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு