ரேஷன் கடையில் நின்றிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர்.


வாட்ஸப் செய்தி [12/09, 1:35 pm] Tmmkமைதீன்பாய்: ரேஷன் கடையை ஆய்வு செய்த தமுமுக & மனிதநேய மக்கள் கட்சியினர்

மேலப்பாளையம் தமுமுக &மனிதநேய மக்கள் கட்சி பகுதி தலைவர் தேயிலை மைதீன் அவர்கள் தலைமையில் மேலப்பாளையம் பகுதி செயலாளர் அ.காஜா, 38 வது வார்டு செயலாளர் ராகத் செய்யது அலி ஆகியோர் சென்று ரேஷன் கடையில் நின்றிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர். https://mdfazlulilahi.blogspot.com/2019/09/blog-post_12.html






மேற்படி குறைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் பிரச்சனை தீர்வு காணவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்க முடிவு.



 அனுப்புனர்
                     அ.காஜா,          
மேலப்பாளையம் பகுதி செயலாளர்.
 மனிதநேய மக்கள் கட்சி.


 பெறுநர்
                உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
       திருநெல்வேலி. 

பொருள்:           
மேலப்பாளையத்தில் கீழ்கண்ட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க கோரிக்கை

1. ரேஷன் கடை எண் 27 BB008 Pn உச்சி லெப்பை தெரு , நெல்லை கூட்டுறவு பேரங்காடி, வார்டு 36 ,38


 2.ரேஷன் கடை எண் BA011, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், அண்ணா வீதி.

 ஐயா/ அம்மா
        மேலப்பாளையத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பாமாயில் மாதந்தோறும் முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒரு மாதம் பாமாயில் வழங்கினால் அடுத்த மாதம் அந்த குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுவதில்லை. உச்சி லெப்பை தெரு ரேஷன் கடையில் மொத்தம் 937 குடும்ப அட்டைகள் உள்ளன. 

மாதம்தோறும் 737 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பாமாயில்  கொடுக்கிறார்கள் . அண்ணா வீதி  ரேஷன் கடையில் 1035 குடும்ப அட்டைகள் உள்ளன. பாமாயில் 785 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள் .


இதனால் ஒரு மாதம் பாமாயில் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் தாங்கள் பாமாயில் வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் அதிகாலை 4.30 மணிக்கு ஆண்களும், பெண்களும், முதியோர்களும் ரேஷன் கடை முன் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். 

மேற்படி ரேஷன் கடையில் பாமாயில் சரியாக கொடுக்காததால் குடும்ப அட்டைதாரர்கள் பெரும் மன சங்கடத்திற்கும் , மன உளச்சலுக்கும் ஆளாகிறார்கள் .

எனவே தாங்கள் மேற்படி ரேஷன் கடைகளுக்கு முழுமையாக பாமாயில் வழங்க தாங்கள் உத்தரவு பிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

இப்படிக்கு,

அ.காஜா ,
மனிதநேய மக்கள் கட்சி
மேலப்பாளையம் பகுதி செயலாளர்.

[12/09, 1:58 pm] Tmmkமைதீன்பாய்: மேலப்பாளையத்தில் ரேஷன் கடைகளில் பாமாயில் வாங்குவதற்காக அதிகாலை  4.30 மணிக்கு ரேஷன் கடையில் வரிசையில் காத்து கிடக்கும் ஆண்களும், பெண்களும், முதியவர்களும்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாமாயில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு