சமுதாயத்திற்கு கேடு விளைவித்த கூட்டம் கூண்டோடு அழிய வேண்டுமா? மேலும் வளர வேண்டுமா?


இவர்கள் சமுதாய துரோகிகளா இல்லையா?  இவர்கள் காவிகளைவிட கேடுகெட்ட கயவர்களா? இல்லையா? இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக இருப்போம்இஸ்லாமிய இளைஞர்களின் குரல் நியாயமாக இருக்கிறது அணுகுமுறை சரியா என்பதைப் பார்க்க வேண்டும் என்று கருணாநிதியை....
கோவை வழக்கை நடத்தி வரும் சி.டி.எம். சார்பில் 2005 ஆம் ஆண்டு, கோட்டை தங்கப்பா என்றும் தங்கப்பா ஹாஜியார் என்றும் அழைக்கப்படும் முஹம்மது சுபைர், மறைந்த காயல் எஸ்.கே. ஆகியவர்கள் துபை வந்தார்கள்

அப்பொழுது இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன். அவர், இன்னும் விடுதலையாகவில்லையா? என்று 2005லேயே ஆச்சரியப்பட்டுக் கேட்டார். உடனே மத்திய மாநில அமைச்சர்களுக்கு போன் போட்டார். அவர்கள் பிஸியாக இருந்ததால் உதவியாளர்கள் போனை எடுத்தார்கள்.


நாளை வாருங்கள் விடுதலை விஷயமாக அமைச்சர்களிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்றார். நாங்கள் சென்றதோ நன்கொடை கேட்டு. அவரோ விடுதலைக்கே வழி வகுக்கிறேன் என்றார். நம்பிக்கையுடன் மறுநாள் சென்றோம்

முதல் நாள் ஆர்வமுடன் சந்தித்துப் பேசிய  தொழில் அதிபர் மறுநாள் அவரது உதவியாளரிடம் நன்கொடையை மட்டும் கொடுக்கச் சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.


உதவியாளரிடம் கேட்டதற்கு இதில் தலையிடாதீர்கள் என்று பல தரப்பிலும் சொல்லி விட்டார்கள் என்றார். முஸ்லிம் தொழில் அதிபர்கள் என்றால் சாதராணமானவர்கள் அல்ல. 

அன்றைய இந்தி திரைப்பட கதாநாயகன் வட நாட்டு MGR தர்மேந்திரா,  பம்பாய் ஆதம் சேனா தலைவர் மஸ்தான் அவர்கள் காலில்விழுந்து கிடந்ததையும். அது தினசரி பத்திரிக்கைகளில் வந்ததையும் எமர்ஜென்ஸி காலத்தவர்கள் மறந்து இருக்க மாட்டார்கள்.


அந்த மாதிரியான இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபரால் கூட இவர்கள் விடுதலைக்கு வழி காண முடியவில்லையே ஏன்? தி.மு.க, அ.தி.மு.க, முஸ்லிம்கள் பதில் சொல்லவில்லை.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகளையும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இப்தார் நடத்தியவர்களே

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக இருப்போம். இஸ்லாமிய இளைஞர்களின் குரல் நியாயமாக இருக்கிறது அணுகுமுறை சரியா என்பதைப் பார்க்க வேண்டும். என்று கருணாநிதியை பேச வைத்த முஸ்லிம்களே நீங்களாவத பதில் சொல்லவீர்களா?


போராட்டங்கள் தேவையற்றது. நாங்கள் பேச்சு வார்த்தைகள் மூலமே காரியங்களை சாதித்து விடுவோம் என்று சொன்ன முஸ்லிம் அமைப்புகளே நீங்களாவது பதில் சொல்வீர்களா?

சிறைவாசிகளை விடுதலை செய்யச் சொல்லி நடக்கும் போராட்டங்கள் என்பது இயக்கங்கள் எங்கள் பலத்தைப் பார் என்று காட்டுவதற்கும் வசூல் பண்ணுவதற்கும் என்ற நிலையில்தான் உள்ளது.

தமிழகம் தழுவிய ஒரு போராட்டத்துக்கு குறைந்தது ஒரு கோடி என வைத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு கல்வி நிறுவனங்கள் துவங்கி இருந்தால் சமுதாயம் பயன் பெற்று இருக்கும். 

இப்படியாக கணக்கு சொன்ன கணக்கு மேதைகளே! கல்வித் தந்தைகளே! நீங்களாவது பதில் சொல்வீர்களா? முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு எது தடையாக உள்ளது?

இன்னவன் சமுதாய துரோகி என்று யார் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. இது எந்த தனி மனிதனுக்கும் எதிரானது அல்ல. கொள்கையே இல்லாமல் ஜிஹாது பெயரில் இளைஞர்களை தூண்டி விட்டவர்கள் சமுதாய துரோகிகளா இல்லையா?  

கூட இருந்து எல்லாம் செய்து விட்டு உளவுத்துறையினர் அறிவித்த காசுக்காக காட்டிக் கொடுத்தவன் கயவனா இல்லையா?  

சம்பந்தமில்லாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்குகளில் மாட்டி விட்டு உளவுத்துறையினரிடம் காசு வாங்கி வளமாகி விட்டவர்கள் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களா? லஃனத்துக்கு உரியவர்களா?

பொய் சாட்சியம் சொல்லி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உள்ளே தள்ளி சமுதாயத்திற்கு கேடு விளைவித்த கூட்டம் கூண்டோடு அழிய வேண்டுமா? மேலும் வளர வேண்டுமா?

நடுநிலையாளர்கள், நியாயவான்கள், உண்மையாளர்கள் உண்மையான சமுதாய போராளிகள் மேற்கண்டவர்களுக்கு எதிராக இறைவனிடம் இருகரம் ஏந்துவார்கள்.

ததஜ மேலப்பாளையம் சைன் அபு உமர் ஆகியோர் விருப்பப்படி கீழ் காணும் துஆச் செய்து கொள்கிறேன். 

கொள்கையே இல்லாமல் ஜிஹாது பெயரில் இளைஞர்களை தூண்டி விட்டவர்கள் மீதும் உளவுத்துறையினர் அறிவித்த காசுக்காக காட்டிக் கொடுத்து உளவுத்துறையினரிடம் காசு வாங்கி வளமாகி விட்ட கயவர்கள் மீதும் சம்பந்தமில்லாத அப்பாவி முஸ்லிம்களை பொய் வழக்குகளில் மாட்டி விட் அயோக்கியர்கள் மீதும். பொய் சாட்சியம் சொல்லி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உள்ளே தள்ளி சமுதாயத்திற்கு கேடு விளைவித்த ஒவ்வொரு பாவிகள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். போன்ற

மேலப்பாளையம் சைன் போன்ற TNTJயினர் இந்த துஆவை செய்யத் தயங்குவது ஏனோ?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு