கண் முன்னே நடக்கும் ரேஷன் கடை கொடுமைகளும் கண் காணா காஷ்மீர் காணொளிகளும்.



இன்று காலை ஒரு சகோதரர் பெங்களூரிலிருந்து காஷ்மீர் கள நிலவரம் காணொளி நெஞ்சை பிளக்கிறது என்று வாட்சப் மெஸேஜ் அனுப்பி இருந்தார். அவர் துபையிலிருந்த பழைய நண்பர். அவருக்கு போன் போட்டு 1995, 96களில் காஷ்மீர் சம்பந்தமான வீடியோக்கள் தந்திருக்கிறேன் பார்த்து இருக்கிறீர்களா? ஞாபகம் இருக்கின்றதா? என்று கேட்டேன். பார்த்து இருக்கிறேன் ஞாபகம் இருக்கின்றது என்று சொன்னார்.

அது 1990 லிருந்து 96 வரையில் காஷ்மீரில் இருந்த கவர்னர்கள் ஆட்சியில் நடந்த கொடுமைகள் பற்றிய வீடியோ தொகுப்பு. புல்டோசரில் முஸ்லிம்கள் பிணங்களாக அள்ளி வரப்பட்டு ஒரே குழியில் போட்ட காட்சிகளை அதில் கண்டோம்.

சுனாமியை விஞ்சிய கொடூர காட்சிகள் அவை. கொடுமை செய்த கவர்னர்கள்  எல்லாருமே  காங்ரஸ் கட்சியின் கவர்னர்கள் தான். ஜக் மோகன் என்ற காங்ரஸ் கயவன் கவர்னராக இருந்தபொழுதுதான் கொடுமைகள் தலைவிரித்து ஆடத் துவங்கியது.

காஷ்மீர் பற்றி நேரில் பேச வந்த சகோதரர்களிடமும் இந்த வீடியோ பற்றி கேட்டேன். பிறகு, காஷ்மீர் பிரதமராக இருந்த  ஷேக் அப்துல்லாஹ்வை 18 ஆண்டுகளாக ஜெயிலில் வைத்தது யார்? என்று கேட்டேன்

அப்படியா 18 வருடம் ஜெயிலில் இருந்தாரா?  தெரியாதே என்றார்கள். காங்ரஸ் ஆட்சிதான் காஷ்மீர் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாஹ்வை 18 ஆண்டுகளாக கொடைக்கானல் சிறையில் வைத்தது என்றேன்.


1984ஆம் ஆண்டு கொடைக்கானல் சென்ற அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட MGR  அந்த சிறையைப் பற்றிய விபரம் தெரிந்தார். உடனே அதை காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாஹ் நினைவு மாளிகை என்று அறிவித்தார். இந்த எம்.ஜி.ஆரைத்தான் முஸ்லிம் விரோதி என்று நம் மனதில் பதிய வைத்தார்கள் என்றேன்.


காஷ்மீர் ஒரு நாடு என்ற அந்தஸ்த்துடன் இருந்த பிரதமர் என்ற பதவியை  நீக்கி முதல்வர் என்று மாநில அந்தஸ்த்தாக கீழே இறக்கியது யார்? என்று கேட்டேன். காங்ரஸ் ஆட்சிதான் என்று சிலர் ஒப்புக் கொண்டார்கள். சிலர் தெரியாது என்றார்கள். பிறகு 370 என்பது ஒப்பந்தம் என்றார்கள்.


ஹைதராபாத் நிஜாம் போன்ற பெரிய முஸ்லிம் மன்னர்களிடம் மற்ற மன்னர்களிடமும் தாங்கள் ஆளும் பகுதியை இந்தியாவுடன் இணைத்தால் மானியம் தருவோம் என்று வாக்குறுதி அளித்து ஒப்பந்தம் போட்டுத்தானே இணைத்தார்கள். அந்த மன்னர் மானியத்தை காங்ரஸ் ஒழித்தது ஒப்பந்த மீறல் இல்லையா? என்றேன்.


மன்னர் மானியம் ஒழிப்பு என்று 1969ல் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது காங்ரஸ் அரசு. பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது. ராஜ்யசபாவில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. ஆம் தி.மு..வும் சேர்ந்து ஆதரித்த மன்னர் மானிய ஒழிப்பு ஒரு ஓட்டில் தோற்றதற்கு காரணமும் தி.மு.. உறுப்பினர்தான்.  


இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட SSR தான் ஆதரித்து ஓட்டுப் போடாமல் கக்கூஸுக்க போனது போல் இருந்து கொண்டார். அதனால் 1969ல் மன்னர் மானிய ஒழிப்பு S.S. ராஜேந்திரன் அவர்களால் தோற்றது.


1971ல் மீண்டும் அசுர பலத்தில் ஆட்சிக்கு வந்த காங்ரஸ் அரசு மன்னர் மானியத்தை ஒழித்தது. ஹைதராபாத் நிஜாம் போன்ற பெரிய மன்னர்களின் குடும்பத்தாரில் பெரும்பாலோர் தெருவுக்கு வந்தார்கள். இதையெல்லாம் கேட்டவர்கள் சொன்னது. 90 சதவீதத்துக்கு மேல் காங்ரஸ் அந்தரங்கமாக செய்து முடித்து விட்டான் என்றார்கள்.

சரி யாரும் எந்தக் கட்சியிலும் இருந்து விட்டு போங்கள். உங்களால் நீங்கள் இருக்கும் கட்சி மூலம் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா? என்று பாருங்கள்.


விடியற்காலை 4.45 மணி அளவில் பஜ்ருக்கு போகும் வழியில் எழுபது வயதை தாண்டிய ஆண்களும் பெண்களும் வரிசையாக நின்றார்கள். என்ன? என்று கேட்டேன். ரேஷன் கடை  கியூ என்றார்கள்

ரேஷன் கடை எத்தனை மணிக்கு திறப்பார்கள் என்று கேட்டேன். காலை 9 மணிக்கு என்றார்கள். அதற்கா இப்பொழுதே நிற்கிறீர்கள் என்று கேட்டேன். காலை 3 மணியிலிருந்தே நிற்கிறோம் என்றார்கள். ஏன் அப்படி என்றேன்.

900 கூப்பன் உள்ள ரேஷன் கடை 200 கூப்பனுக்குத்தான் எண்ணெய் தருவார்கள். அதனால்தான் எங்க மருமகள்கள் எங்களை காலையிலேயே போகச் சொல்லி விடுவார்கள். இப்படித்தான் சீனி போன்றவையும். வாங்கவில்லையே என்றாலும். முடிந்து விட்டது என்று விரட்டி விடுவார்கள்.

அவர்கள் இஷ்டத்திற்கு திறப்பார்கள். மதியம் உச்சி வெயிலிலும் மழையிலும் பணியிலும் தான் காத்து கிடக்கிறோம். கேட்பார் யாரும் இல்லை என்றார்கள்

ஒரு நாள் மதியம் 12.45க்கு ஒரு ரேஷன் கடையை கடந்து சென்றேன். கடைசி ஆள் யார் என்று கேட்டார்கள். நான்தான் என்று 60 வயது வாலிபர் சொன்னார்

என்ன டோக்கனா? என்று கேட்டேன். இல்லை, எல்லா இடத்திலும் முதல் ஆள் யார்? என்று கேட்பார்கள். இங்கே கடைசி ஆள் என்று கேட்பதன் நோக்கம் இவருக்கு பின் யார் வந்தாலும் கிடையாது என்பதே.


கண்கொள்ளாக் காட்சியான இந்தக் கொடுமைகளை தாய்ச்சபை, தந்தை சபை., உலமா சபை என எல்லா சபையினரும் பார்த்து கொண்டுதான் போகிறார்கள், வருகிறார்கள்

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என பல பிரமுகர்களை கண்டு சொன்னேன். எங்களுக்கு ஒழுங்காக தந்து விடுகிறார்கள் என்று சொல்லி முடித்து விட்டார்கள்.

வாய்க்கால் பாலத்துக்காக கால்வாயில் இறங்கி போராடிய போட்டோவில் உள்ளவர்களைப் பார்த்து சொன்னேன். அது அவ்வளவுதான் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கும் ஒழுங்காக கொடுத்து விடுகிறார்கள் போலும்.

ம.ம.க. செயலாளர் ஆட்டோ காஜாவை பள்ளியில் பார்த்த இடத்தில் சொன்னேன். இரவு 3 மணிக்கு நிற்பதை போட்டோ எடுத்து தாருங்கள் என்றார். எதற்கு இரவு 3 மணிக்கு வந்து போட்டோ எடுக்கணும். தெருவில் வந்து கேளுங்கள் என்றேன். 

தெருவில் நின்ற கரை வேட்டிக்காரிடம் கேட்டார். இவர்களிடம் எல்லாம் கேட்காதீர்கள். இவர்கள் பின் வழியாக வாங்குவார்கள் என்று சொல்லி விட்டு, வீட்டு திண்ணையில் நின்ற பெண்களிடம் கேட்டேன். அவர்கள் ஒழுங்காக ரேஷன் கிடைப்பதில்லை என்பதோடு நான் சொன்னதை உண்மைப்படுத்தினார்கள்.

2 நாளில் இது சம்பந்தமாக மனு போடுகிறேன் என்றார். அவர் சொன்ன 2 நாளில் அவர் தாயார் இறந்து விட்டார். அதனால் அவரிடம் அந்த 2ஆம் நாளில் கேட்க முடிந்ததில்லை.  

கண் காணா காஷ்மீர் காணொளிகளைப் பார்த்து போரடிக் கொண்டிருப்பவர்களே! கண் முன்னே நடக்கும் ரேஷன் கடை கொடுமைகளுக்கு எதிராக போராட மாட்டீர்களா?




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு