அரசு ஆஸ்பத்திரியும் வரட்டு கவுரவங்களும்
ஒரு காலத்தில் அரசு ஆஸ்பத்திரி என்றால் ஒழுங்கான மருத்துவம் இருக்காது, கவனிப்பு இருக்காது, சுத்தம் இருக்காது என்று இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. அரசு ஊழியர்கள் சுத்தம் செய்பவர்களாக இருந்தபொழுது அசுத்ததத்தின் உறைவிடங்களாக அரசு ஆஸ்பத்திரிகள் இருந்தன. சுத்தம் செய்ப தனியாருக்கு ஒப்பந்தம் - காண்ட்ராக்ட் விட்ட பிறகு அரசு ஆஸ்பத்திரிகள் நல்ல சுத்தமாக உள்ளன. கொலை, வெட்டுக் குத்து, அடிதடி செய்து விட்டு வரும் அவசர பகுதிகள் மட்டும் தான் நிறந்தர நாற்றத்தின் தங்குமிடமாக உள்ளது.
பிரசவம், ஹார்ட் மற்றும் நெஞ்சகம் போன்ற
முக்கிய பிரிவுகள்
நன்றாக செயல்பட்டு வருகின்றன. நான் என்ன போக்கு அற்றவனா? என்று வரட்டு கவுரவம் பார்ப்பவர்களால்
தான் தனியார் ஆஸ்பத்திரிகள் நல்ல வருமானத்துடன் இயங்குகின்றன.
ஒரு பிரசவத்திற்கு 25 ஆயிரம் முதல் 50
ஆயிரங்கள் வரை வாங்கும் தனியார் ஆஸ்பத்திரிகள். பிரசவத்திற்கு முன் பின் டெஸ்ட்டுகள் என்ற பெயரால் லட்சங்களை கறந்து
விடுகிறார்கள். அதுதானே அவர்கள் லட்சியம்.
பாளையங்கோட்டை ஹைக்கிரவுண்ட்
(மேட்டுத் திடல்) ஆஸ்பத்திரி் என்றால்
குமட்டல் வந்தது ஒரு காலம். எங்கள் வீட்டு உழவர் அண்ணன் சண்முகவேல் அவர்களுக்கு
ஹார்ட் அட்டாக் வந்தபொழுது ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரி போனதாகவும். நல்ல கவனிப்பு
நல்ல குணம் என்றார்.
14-09-2019 அன்று ஹைக்கிரவுண்ட்
நெஞ்சகப் பிரிவில் உள்ள ஒருவரை பார்க்க சென்றேன். அப்பொழுது தான் அரசு ஆஸ்பத்திரியின்
முன்னேற்றத்தைக் கண்டு வியந்தேன். ஹார்ட் அட்டாக்குக்கு வெளியில் 17 ஆயிரம்
கேட்கும ஊசி இலவசம். 50 ஆயிரங்கள் வரை செலவாகும் பிரசவம் இலவசம்.
நெஞ்சகப் பிரிவில் தனியார் ஆஸ்பத்திரிகளில்
எங்குமே கிடைக்காத கூட்டு மருத்துகள் கிடைக்கின்றன. முழு நோய் நிவாரணம்
அளிக்கிறது. மருத்து காப்பீடு ஹராம் என்று பெரும்பாலானவர்கள் கூறும் தவறான பத்வாவை
நம்பி அப்பாவி முஸ்லிம்கள் பாதிப்பு அடைகிறார்கள். மருத்து காப்பீடு ஹராம் அல்ல.
ஆகவே மருத்துவ காப்பீடு எடுங்கள். வரட்டு கவுரவம் பார்க்காமல் அரசு ஆஸ்பத்திரிகளை
பயன்படுத்துங்கள்.
கடையநல்லுார் ஜலீல் மதனி மாமனார் மந்திரி மஜீது முயற்சியால் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட காமராஜ் அவர்களால் 1958ல் துவங்கப்பட்டது இந்த மருத்துவமனை.
1964ல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்தது. இந்தியாவில் அதிக நிலப்பரப்பில் அமைந்துள்ள மருத்துவமனைகளுள் நம் நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனையும் ஒன்று.
வரவிருக்கும் வசதிகள்:
நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனையின் கிழக்குப் பகுதியில் 150 கோடியில் அமைந்து வரும் இந்த
சூப்பர்ஸ் பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன மருத்துவத் துறைகள்
ஏற்படுத்தப்பட உள்ளன.
1.ஏழு மாடியில் மூன்று பகுதிக் கட்டிடங்களுடன் இந்த மருத்துவமனை பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
2. ஏழு அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள் உட்பட 330 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை அமைகிறது.
3.பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் உள்ளடங்கிய 450 மருத்துவ பணியாளர்கள் சேவை செய்ய உள்ளனர்.
4.சிறிதும் பெரிதுமாக 13 துறைகளில்
அதிநவீன சிகிச்சை பெறும் வசதிகள் இடம்பெறுகிறது.
5. இதன் மூலம் பல நோய்களுக்கு நாம் சென்னை,மதுரைக்கு செல்லும் நிலை தவிர்க்கப்படும்.
விரைவில்
செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த மருத்துவமனையால் நம் நெல்லை தென் தமிழகத்தின்
மருத்துவ தலைநகரமாக மாறும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.அமைந்து வரும் இந்த
சூப்பர்ஸ் பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன மருத்துவத் துறைகள்
ஏற்படுத்தப்பட உள்ளன.
Comments