சமாயினா, லெப்பை என்ற பெயர்கள் எப்படி வந்தது?



அல் குர்ஆனின் 2;285 வசனத்தில் முஃமின்கள் எனப்படும் இறை நம்பிக்கையாளர்களான விசுவாசிகளிடம் மார்க்கத்தைச்  சொன்னால் சமிஃனா வஅதஃனா என்பார்கள். அதாவது  செவியுற்றோம் கட்டுப்பட்டோம், செவிமடுத்தோம் வழிப்பட்டோம். அடிபணிந்தோம் கீழ் படிந்தோம் என்ற பொருள் தரும் சமிஃனா வஅதஃனா என்பார்கள்

இந்த விளக்கத்தை கேட்ட நாளில் இருந்து. இந்த குடும்பத்தின் முன்னோரிடம் மார்க்கம் சொல்லப்பட்டால் சமிஃனா வஅதஃனா  என்று சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அதில் இருந்து சமிஃனா, சமிஃனா என்று அழைக்கப்பட்டு சமாயினாவாக ஆகி இப்பொழுது சமாயான என்று மருவி நிற்கிறதுhttps://mdfazlulilahi.blogspot.com/2019/09/blog-post.html



லெப்பை என்ற பெயர் எப்படி வந்தது?

லெப்பை என்று போட்டால் பிற்பட்டவர் பட்டியலில் வேலை கிடைக்கும் என்பதை மட்டும் எல்லாரும் விளங்கி வைத்துள்ளோம். லெப்பை என்ற பெயர் எப்படி வந்தது என்பது தெரியாது.

இஸ்லாத்தை ஏற்றுள்ள இந்தியர்கள் யாரும் அரபு நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. எல்லாருமே பிறப்பால் இந்தியவர்கள். இஸ்லாம் நபிகள்)ஸல்) காலத்திலேயே அரபகத்திலிருந்து இந்தியா வந்தடைந்து விட்டது. 

வியாபாரத்துக்கு வந்த ஸஹாபாக்கள் மூலம் இந்தியா வந்தடைந்தது. வியாபாரிகளாக வந்த ஸஹாபாக்களிடம் இருந்த ஒழுக்கம் நேர்மை நன்னடத்தை தான் இந்தியர்கள் இஸ்லாத்தை ஏற்கவும் இஸ்லாம் பரவவும் முஸ்லிம்கள் பெருகவும் காரணமாக இருந்தது.

அழைத்தால் நஅம், ஹாழிரீன், பழ்ழல், பத்தல் என்று பதில் கூறும் வழக்கம் இன்றைய அரபிகளிடம் உள்ளது. அன்றைய அரபிகளிடம் ஒருவரின் அழைப்பைக் கேட்ட இன்னொருவர் அவருக்கு பதில் சொல்ல லெப்பைகஎன்று பதில் சொல்லும் வழக்கம் இருந்தது.

"மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அழைப்பு விடுப்பீராக என்று நபி இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை இட்டான். 22:27. 

அதன்படி இபுறாஹீம் நபி (அலை) அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று செல்லும் ஹாஜிகள் என்ன -பதில் சொல்லி செல்கிறார்கள்?

லெப்பைக்க அல்லாஹும்ம லெப்பைக்க. வந்து விட்டேன் அல்லாஹ்வே உன் அழைப்பை ஏற்று விட்டேன்.

இதில் உள்ள லெப்பைக்க என்ற வார்த்தைதான் அன்றைய அரபிகளிடம் இருந்தது. இதை இந்தியாவுக்கு வந்த ஸஹாபாக்களிடம் பார்த்தார்கள். ஒருவரை அழைத்தால் லெப்பைக்க வந்து விட்டேன், உன் அழைப்பை ஏற்று விட்டேன் என்று பதில் கூறுவதை பார்த்தார்கள். 

அதனால்   இஸ்லாத்தை ஏற்றவர்களை லெப்பைக்க ஆகி விட்டார். அதாவது முஸ்லிம் ஆகி விட்டார் என்பதை லெப்பைக்க ஆகி விட்டார் என்றார்கள்.

அதுதான் க்க மருவி லெப்பை என ஆகி நிற்கிறது. ஓதி கொடுக்கும் உஸ்தாதுகளை பல ஊர்களில் லெவ்வை லெவ்வே என்று மரியாதைக் குறைவாக அழைப்பார்கள். மேலப்பாளையம் போன்ற ஊர்களில் ங்கோ சேர்த்து லெப்பைங்கோ என்று கூடுதல் மரியாதையுடன்  அழைப்பார்கள்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு