த.மு.மு.க.வின் அரசியல் பிரிவாக மு.லீக் என முடிவு செய்யப்பட்டதா?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலும் போச்சு கேள்விபட்டிருப்பீர்கள். டீ குடித்துக் கொண்டு பேசியவன் பேச்சு விடிஞ்சாலும் போச்சு கேள்விபட்டிருக்கிறீர்களா? 2006 சட்டமன்ற தேர்தலின் போது நடந்தது என்ன என்பது பற்றி 2006 லேயே மக்கள் மன்றத்தில் வைத்து விட்டோம். அதை மீண்டும் வெளியிட வேண்டிய சூழலை சில சகோதரர்கள் ஏற்படுத்தினார்கள் அதனால் அதன் ஒரு பகுதியை சமீபத்தில் வெளியிட்டோம். த . மு . மு . க . வின் அரசியல் விங் மு . லீக் என முடிவு செய்யப்பட்ட மற்றும் வெளியிடப்படாத செய்தியை வெளியிட வேண்டிய கால கட்டம் உருவாகி விட்டது. நான் எழுதுவதை பொய் என்று மறுப்பவர்கள் சத்தியம் செய்து மறுக்கட்டும். இப்படித்தான் எல்லாரும் சொல்வார்கள். நான் அப்படி சொல்ல மாட்டேன். பொய் சொன்னால் அல்லாஹ்விடமிருந்து என்ன உண்டகுமோ அது உண்டாகட்டும் என்று கூறியே மறுக்க வேண்டும் என்பேன். இதுதான் என் நிலைப்பாடு என்பதை நினைவுபடுத்திக் கொண்டு விஷயத்திற்கு வருகிறேன். த . மு . மு . க . வின் அரசியல் விங்காக மு . லீக்கை பயன்படுத்துவோம் என்று பேசி முடித்துள்ளோம் . மு . லீக்கை மேலும் வளர்க்க நீங்கள்தான் பொருத்தமான ஆள் . https