TNTJக்கும் இலங்கையில் நடந்த தீவிரவாத சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மையா?
ஸஹ்ரான்
கடந்த காலங்களில் TNTJன் கீழ் இருந்து
செயல்பட்டார் என்பது பொய்யா? மதுரை சத்தாம் உசேன் மீதும் அவரது கைக் குழந்தை மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்களே அவர்கள் ஸஹ்ரானின் ஆட்களா? வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது விட்டு வந்த கம்பம் ஜபருல்லாஹ் அவர்களை கொலை செய்ய முயற்சி செய்தார்களே அவர்கள் ஸஹ்ரானின் NTJக்காரர்களா? வேலுார் இபுறாஹீமை கொலை செய்ய முயற்சி செய்தார்களே அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களா?
தலைப்பில்
உள்ள முதல் கேள்விக்கு சம்பந்தம் இல்லை என்ற ஒரே வார்த்தையில் பதில் கூறி இருந்தால் TNTJயினர் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.
ஆனால், TNTJக்கும் சம்பவம் செய்தவர்களுக்கும் கடந்த
காலத்தில் தொடர்பே இருக்கவில்லை. அவர்களை யார் என்றே தெரியாது
என்ற பொய்களுடன் தீவிர வாதத்தை துடைத்தெறிய
TNTJ பெரும் பங்காற்றி வருகிறது.
கடந்த
40 ஆண்டுகளாக(?) தீவிரவாதத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது போன்ற
பொய்களையும் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம்
அவர்களைக் கொண்டு சொல்லி உள்ளார்கள். அதனால்தான் சந்கேம் வருகின்றது. வந்த சந்தேகம் வலுக்கின்றது.
ஆதாரத்தை
விளக்க உதாரணம் கூறலாம். உதாரணங்கள்
ஆதாரமாகாது என்பது தவ்ஹீது நிலைப்பாடு. இவர்கள்
கூறி உள்ள காந்திகள், கழகங்கள் உதாரணம் இவர்களுக்கு பாதகமானதே.
இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி என எத்தனை காந்திகள் இருந்தாலும் மகாத்மா (மோகன்லால் கரம் சந்த்) காந்தியை முன்னிறுத்தி வந்த பெயர்கள் தான். அவர்களது பெயர்களுடனுள்ள காந்தி என்பதன் மூல அர்த்தம் மகாத்மா காந்தி
கொள்கை என்பதுதான்.
அது
மாதிரிதான் திராவிட மூலம் தி.க. ஆயிரம் திக. ஆனாலும் மூலம் பெரியார். கழக மூலம் தி.மு.கழகம்.
பெயர்களால் வெவ்வேறாகவும் எதிரிகளாவும் இருந்தாலும் அடிப்படையும் மூல அண்ணாவும் ஒன்றுதான்.
ஸஹ்ரான் கடந்த காலங்களில் TNTJன் கீழ் இருந்து செயல்பட்டார். பிறகுதான் தேசிய தவ்ஹீது ஜமாஅத் துவங்கினார். இவரின் மூலம் தவ்ஹீது ஜமாஅத் என்பதுதான்.
அது
மட்டுமன்றி, கோவை குண்டு வெடிப்பின் போது நடிகர் ரஜனிகாந்த் போன்றவர்கள்
டி.வி.யில் தோன்றி முஸ்லிம்கள் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று பல முறை
கூறினார்கள்.
அதே நேரத்தில் கோவை போன்ற குண்டு வெடிப்புகளுக்கும்
தீவிரவாதத்துக்கும் மூலகாரணமான இந்த 40 ஆண்டு(?) கால தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த
மவுலவிகளும் பிரச்சாரகர்களும் பிறர் இளைஞர்கள் மீது பழி போட்டு ஆள் காட்டி வேலை செய்து
தங்களைக் காத்துக் கொண்டார்கள்.
அது
மாதிரி தான் இன்று இலங்கையில் சம்பவம் செய்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று இலங்கையில் உள்ள மற்ற மதத்தினர் அனைவரும் கூறி
வருகிறார்கள். முஸ்லிம்கள் பற்றி நற்சான்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் செய்தவர்கள் நேஷனல் தவ்ஹீது ஜமாஅத்தினர் தான் என்பது போன்று தவ்ஹீது ஜமாஅத் என்ற பெயரால் உள்ள மற்ற அமைப்பினர் அவசர அவசரமாக கூறி வருகிறார்கள்.
இலங்கை தவ்ஹீது
மவுலவிகளும் தவ்ஹீது பிரச்சாரகர்களும் ஆட்காட்டி வேலை செய்து வருகிறார்கள். நவ்பர் மவ்லவியை கண்காணி்க்க வேண்டும்
என்று கம்ளைண்ட்டும் கொடுத்து உள்ளார்கள். ஆக 1990களில் இன்று TNTJயில் உள்ள மவுலவிகள் காட்டிய வழியில்
ஆட்காட்டி வேலையை இலங்கையில் உள்ள தவ்ஹீது மவுலவிகள் செய்து வருகிறார்கள்.
தேசிய
தவ்ஹீது ஜமாஅத்து இலங்கையிலேயே இல்லாத அமைப்பு அறியப்படாத அமைப்பு எங்களுக்கே குண்டு
வெடிப்புக்கு பிறகுதான் தெரியும் என்றும் கூறி உள்ளது TNTJ.
ஸஹ்ரான் தலைமையில் உருவான
காத்தான்குடி தௌஹீத் ஜமாஅத்தின் பெயர் மாற்றம் என்ற தலைப்பில்
29-08- 2010ல் பெரிய அறிக்கை வெளியானது அதில், கொள்கையளவில் உடன்பாடு காணப்பட்டுள்ளதால் TNTJ யின் இலங்கைக் கிளையான SLTJயின் காத்தான்குடிக் கிளையாக எமது அமைப்பு தொடர்ந்தும்
செயற்பட தீர்மானித்துள்ளோம். ஆதலால் காத்தான்குடி தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில்
இயங்கி வந்த நாம் SLTJ-KATTANKUDY BRANCH ஆக, அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கத்தில் அதில் மனித சுய, விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப கூட்டல், குறைத்தல், விட்டுக்கொடுத்தல்
போன்ற மார்க்கமுறைகேடுகளைத்தவிர்த்து உள்ளதை உள்ளபடி பிரச்சாரம் செய்யவுள்ளோம்
என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மௌலவி எம்.சீ.எம்.
ஸஹ்ரான் (மஸ்ஊதி) பிரச்சாரகர், SLTJ-KATTANKUDY BRANCH
இந்த உண்மையை TNTJ மறைத்ததன் நோக்கம் என்ன?
TNTJவைச் சார்ந்த அப்துல் ரஹீம் என்பவர் கூறி உள்ள கூற்றில் அவரும் அவருடன் இருந்த அப்துல்றஹ்மான்,
செங்கோட்டை பைசல் உண்மையாளர்கள் என்றால் அல்லாஹ்வின் அருள் அவர்கள் மீதும் TNTJ மீதும் இறங்கும். பொய்யாக இருந்தால் யார் துஆக் கேட்டாலும் கேட்கா விட்டாலும் அல்லாஹ்வின் விதிப்படி பொய்யர்கள் மீது இறங்க வேண்டியது இறங்கி அல்லாஹ்வின் பிடி
இறுகும்.
அவரது கூற்றான 40 ஆண்டு கால
தீவிரவாத எதிர்ப்பு விஷயத்தில் அவர் உண்மையாளர் என்றால் மதுரை சத்தாம் உசேன் மீதும் அவரது கைக் குழந்தை மீதும் கொலை வெறி
தாக்குதல் நடத்தினார்களே அவர்கள் ஸஹ்ரானின் ஆட்கள் என்கிறாரா?
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது விட்டு வந்த கம்பம் ஜபருல்லாஹ் அவர்களை கொலை செய்ய முயற்சி செய்தார்களே அவர்கள், பெயரில் ஒற்றுமை உடைய ஸஹ்ரானின் NTJக்காரர்கள் என்று கூறுகிறதா
TNTJ?
மேலப்பாளையத்தில் வைத்து வேலுார் இபுறாஹீமை
கொலை செய்ய வந்தார்களே அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள்
என்கிறார்களா TNTJயினர்?
ஸஹ்ரானுக்கும் TNTJக்கும் இருந்த தொடர்பு பற்றி ஒன்றை மட்டும் வெளியிட்டிருக்கிறோம். இன்னும் நிறைய இருக்கிறது.
இந்திய ரணுவம் என்ன செய்யும்? நுாலாம் பூச்சிக்கு சமம் என்று பேசியவர்கள் TNTJயிலுள்ள மவுலவிகள். அவர்கள் என்ன ஆயத்களை ஆதாரமாகக் காட்டி தவறான விளக்கம் கொடுத்து ஜிஹாது என்று பேசினார்களோ அதே மாதிரிதான் ஸஹ்ரானும் பேசினார். அவற்றை TNTJயினர் யூடியூப்களில் போட்டு இருந்தார்கள். இப்பொழுது நீக்கி விட்டார்கள்.
உண்மைகளை சொல்லுங்கள் அல்லாஹ் காப்பாற்றுவான். பொதுக்குழுவில் பிஜேவை நீக்கும்
போது ஜமாஅத்திற்கு
எதிராக செயல்பட்டதால் தான் நீக்கம் என்று
சொல்லி ஏமாற்றினீர்கள். பிறகு விபச்சாரத்துக்காக நீக்கினோம் என்று சொல்லி வருகிறீர்கள்
அந்த பொய்கள் மாதிரி ஸஹ்ரான் விஷயத்தில் சொன்னால் வசமாக மாட்டிக் கொள்வீர்கள்.
25 கோடிக்கு
மேல் ததஜ மோசடி செய்துள்ளது என்பதற்கு ஆதாரம் ததஜ காட்டிய கணக்கே ஆதாரமாக உள்ளது
என்பதுதான்
குற்றச்சாட்டு. ஆகவே பொதுக்குழுவில் காட்டிய கணக்கு
பொய் என்றால் TNTJயினரான எங்கள் மீது அல்லாஹ்வின் சாபம்
இறங்கட்டும் என்றுதான் சாபம் கேட்டு இருக்க வேண்டும். ஆனால் இ பாரூக் அவர்களோ மோசடி குற்றச்சாட்டு விஷயத்தில் வார்த்தை
விளையாட்டால் அல்லாஹ்வின் சாபம் கேட்டு
ஏமாற்றினார்.
அந்த மாதிரி ஸஹ்ரான் விஷயத்தில்
ஏமாற்றினால் TNTJயில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் வசமாக மாட்டிக் கொள்வார்கள்.
காரணம் ஸஹ்ரான் இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
மாலத்தீவில் இருந்தார். தென்னிந்தியா வந்தார். தென்னிந்தியாவில் மண்ணடியில் தங்கி இருந்தார் என்றெல்லாம் செய்திகள் உள்ளன. இது நான் இட்டுக்கட்டியது என்று எண்ணுபவர்கள் எனக்கு எதிராக எப்படி வேண்டுமானாலும் துஆச் செய்யலாம்.
கடந்த காலத்தில் ஸஹ்ரானுடன் TNTJக்கு தொடர்பே இருக்கவில்லை. அவரை யார் என்றே தெரியாது என்று TNTJ தொடர்ந்து பொய் சொன்னால், தென்னிந்தியா வந்த ஸஹ்ரான் எங்கே தங்கி இருந்தார் என்ற விசாரணையில் பாதிக்கபப்படப் போவது TNTJ தொண்டர்களே.
Comments