இப்படிப்பட்டவர்கள் தான் நீங்கள் பாசமும் நேசமும் வைத்துள்ள தலைவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?


தலைவர் தானாகவா வந்தார்? திரைமறைவில் நடந்தது என்ன?.  தலைவா தலை வா என கத்தியவர்கள் அரங்கத்தைப் பார்த்தார்கள். அந்தரங்கத்தில் நடந்தது என்ன?
தேர்த் தள் திருவிழாக்களை விஞ்சிய தேர்தல் திருவிழா தமிழக அளவில் முடிந்து விட்டது. இதே மாதிரி தேர்த்தல் திருவிழா பரபரப்பின் போது ஒரு கட்சியின் நகரச் செயலாளராக இருந்த முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டார். சில நாட்களில் அவர் இருந்த முஸ்லிம் அல்லாத கட்சியின் மாநில தலைவர் தேர்தல் பிரச்சார பயணமாக அந்த மாவட்டத்திற்கு வந்தார். அருகில் உள்ள சிமெண்ட் பேக்டரி ஓனரின் கெஸ்ட் ஹவுஸில் தங்கினார்
மறைந்த நகரச் செயலாளரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி அளிக்க இன்று மதியம் தலைவர் வருகிறார். இப்படி கார்களிலும் வேன்களிலும் டிரக்கர்களிலும் ஒலி பெருக்கிகள் நகர் முழுவதும் அலறின. அது அந்த அளவுக்கு ஆட்டோக்கள் இல்லாத காலம். மதியம் தலைவர் வருகிறார் என்றதும் மதிய உணவு கூட உண்ணாமல் தொண்டர்கள் பசி பட்டினியுடன் மறைந்த நகரச் செயலாளரின் வீடு முன்பும் தெருவிலும் குவிந்து விட்டனர்.

நகர நிர்வாகிகளும் தோழமை கட்சியினரும் அல்லாஹ்வின் அருளுக்குரியவர் கொடுத்த பிரியாணியில் உருண்டு பிரண்டு கொண்டிருந்தார்கள்

பொறுப்பு நகரச் செயலாளர் வரும்போதே மப்பில் இருந்தார். நிற்க முடியாமல் கையில் கிடைத்ததை பிடித்துக் கொண்டு நின்றார். அவரும் முஸ்லிம் தான். தலைவர் எப்பொழுது வருவார் என்று கேட்டால் வருவார் என்று மட்டுமே பதிலாக சொல்ல முடிந்தது. அந்த  நிலையில் அவர் மப்பில் இருந்தார்.

5 மணி அளவில் தோழமை கட்சியினர் மறைந்த நகரச் செயலாளர் வீட்டு வாசலுக்கு வந்தார்கள். சிறிது நேரத்தில் தலைவர் வந்து இறங்கினார். காலமெல்லாம் தலைவரை உயிருக்கு மேலாய் நேசித்த தொண்டன் தலைவரை நெருங்க முடியவில்லை

போலீஸும் கட்சியின் தனிப்படையும் தொண்டனின் தொண்டை வரை பெரிய கம்புகளை கொண்டு தடுத்தது. தலைவா தலைவா என சத்தம் விண்ணைப் பிளந்தது.

தோழமை ஏற்படும் காலம் வரை தலைவரை தோலுரித்த கூட்டணி கட்சியினர் தலைவர் அருகில் நிற்கிறார்கள்காலமெல்லாம் உயிருக்கு உயிராய் நேசித்த சொந்த கட்சி  தொண்டனோ தொலை துாரத்தில் தலைவா தலைவா என கத்திக் கொண்டு நிற்கிறான்.. தலைவர் வீட்டுக்குள் நுழைந்தார்

தலைநகரில் தொழில் அதிபராக இருந்த நகரின் பெரும் பணக்கார பிரமுகர் பெயரில் தீன் என்றுள்ள ஒருவர் தலைவரின் காலில் விழுந்தார்

பிறகு ஒரு பெண் வந்தார் கையில் இருந்த பணக்கட்டை எடுத்து தலைவர் அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அதை வாங்கிய பெண் திரும்பப் போனார். தலைவர் சாதாரண ஆளா? அந்தப் பெண் போக முடியாதவாறு இடது கையால் பெண்ணின் மணிக்கட்டை பிடித்துக் கொண்டார்

பல கோணங்களில் போட்டோக்கள் எடுக்கப்பட்டன. கேமரா மேன்கள் தலையை ஆட்டியதும் கையை விட்டார் தலைவர். ஆறுதல் வார்த்தைகள் எதுவும் கூறவில்லை.

மறுநாள் பத்திரிக்கைகளில் இறந்த நகரச் செயலாளர் மனைவிக்கு தலைவர் இரண்டாயிரம் ரூபாய் நிதி கொடுத்து ஆறுதல் கூறியபொழுது எடுத்த படம் என செய்தி வந்தது

அந்தப் பெண் யார் என்று தெரியாத எதிர் கட்சியினர். இத்தா இருக்கும் பெண்ணிடம் எப்படி அந்நிய ஆண் நிதி கொடுக்கலாம். அதுவும் காபிரான தலைவர் என்று எதிர் விமர்சனங்கள் செய்தார்கள்.  இல்லாத இத்தா சடங்குகள் விஷயத்தில் மாற்று கருத்து உள்ளது என்பது தனி விஷயம்.

அது அவரது மனைவி அல்ல அது மறைந்த நகர செயலாளர் தாயார் தான் என்று யாருக்கு தெரியும்? அது மட்டுமா? தலைவர் தானாகவா வந்தார்? திரைமறைவில் நடந்தது என்ன?.  தலைவா தலை வா என கத்தியவர்கள் அரங்கத்தைப் பார்த்தார்கள். அந்தரங்கத்தில் நடந்தது என்ன?


போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரிடம் தலைவரை மறைந்த நகரச் செயலாளர் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு ஆகும் செலவுகளையும் நிபந்தனைகளையும் அறிந்த கூட்டணி கட்சி வேட்பாளர் மறுத்து விட்டார்.

அந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர் உட்பட 3 வேட்பாளர்களுக்கு பெருந்தொகை செலவு செய்த அல்லாஹ்வின் அருளுக்குரியவரை அணுகினார்கள் அவரும் மறுத்து விட்டார்.

பிறகு கட்சிக்காரரான தலைநகரில் தொழில் அதிபராக இருந்த நகரின் பெரும் பணக்கார பிரமுகர் நிபந்தனைகளையும் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார்.  

1. தலைவரின் காலில் பிரபலமானவர் விழ வேண்டும் என்ற நிபந்தனைப்படி அவரே தலைவரின் காலில் விழ ஒப்புக் கொண்டார். (அதன் படி காலில் விழுந்தவர். பொது மக்கள் முன்னிலையில் விழாமல் தலைவர் வீட்டுக்குள் நுழைந்த பின் விழுந்தார் என்பதால் தலைவர் வருத்தம் அடைந்தார்) .

2. தலைவர் வந்து போக எனில் பத்தாயிரம் ரூபாய். அங்கு சிறிது நேரம் இறந்தவர் பற்றி இரங்கல்  பேச வேண்டும் எனில்  ஐம்பதாயிரம் ரூபாய் என்றார்கள். வந்து போனால் போதும் என்று பத்தாயிரத்துக்கு ஒப்புக் கொண்டார். 

3. செயலாளர் குடும்பத்திற்கு கொடுக்கப்பட இருக்கும் நிதி இரண்டாயிரம் ரூபாயும் தர வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டார்.

பெயரில் தீன் உள்ளவர் கொடுத்த பணத்தை தீன் இல்லாத காபிரான தலைவர் கொடுத்தாக விளம்பரம் ஆனது. இப்படிப்பட்டவர்கள் தான் நீங்கள் நேசிக்கும் முஸ்லிம் அல்லாத தலைவர்கள் நிலை என்பது உங்களுக்குத் தெரியுமா? 33 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.

ஊர் பெயர் தெளிவாகப் போட்டால் இதில் சம்பந்தப்பட்டுள்ள அத்தனை குடும்பத்தவர்களின் வாரிசுகள் மனம் வருந்துவார்கள் என்பதால்  சம்பவத்தை மட்டும் எழுதி உள்ளோம்.

எந்தக் கட்சி அது?  தலைவர் யார்? என்று எழுதினால் அந்தக் கட்சியில் உள்ளவர்கள் மனம் நொந்து போவார்களே தவிர, மனம் திருந்த வாய்ப்பு இருக்காது. இந்த வரலாற்று நிகழ்ச்சியை மனதில் கொண்டு திருந்துங்கள். 

எந்த அமைப்பில் இருந்தாலும் அந்தக் கட்சி மூலம் உங்களால் சமுதாயத்திற்கு எதுவும் செய்ய முடியுமா? என்ன நன்மை செய்ய முடியும் என்று பாருங்கள். 

நம் சமுதாயத்தைக் கொண்டு கட்சிக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பார்க்காதீர்கள்.

யாரை நீங்கள் நேசித்தீர்களோ   மறுமையில் அவருடனேயே இருப்பீர்கள்!


தனது உயிரை விட முஹம்மது நபி(ஸல்) அவர்களை அதிகமாக நேசிக்காத வரை ஒருவர்,  பூரணமான ஈமான் கொண்டவராக ஆக மாட்டார்

உங்களில் எவரும், தங்களது பெற்றோர், மக்கள், இதர உற்றார் உறவினர்களை விட முஹம்மது நபி(ஸல்) அவர்களை அதிகமாக நேசிக்காத வரை, நீங்கள் உண்மையான விசுவாசிகளாக ஆகிவிட முடியாது.

இவை நாம் சொன்னவை அல்ல நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னவை.

நீங்கள் வரும்பும் காபிரான தலைவர்கள் மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தையும் நேசத்தையும் விட கூடுதலாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மீது உங்கள் பாசமும் நேசமும் இருக்கின்றதா? என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

மறுமையில் நீங்கள் யாருடன் இருக்கும் நிலையில் உள்ளீர்கள் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

ஒரு கூட்டத்தினரைக் காணாமல் ஆக்க தேர்தல் களப் பணியில் இறங்கி நாம் காணாமல் போய் விடக் கூடாது என்று ஊருக்கு உபதேசித்து ஈமானை காணாமல் போக விட்டவர்கள் போல் நாம் ஆகி விடக் கூடாது.

நம் அனைவரையும் அல்லாஹ் முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வானாக ஆமீன். மறுமையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் இருக்கக் கூடியவர்காளக நம்மை ஆக்கி வைப்பானாக ஆமீன்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.