ஆலி ஜனாப் தயாநிதி மாறன் ஸாஹிப் பற்றி திரு மகாத் திரு காதர் மொகிதீன் அய்யா அவர்கள்


முஸ்லிமுக்குத்தான் வாக்குபோட வேண்டும் என்று எந்த பைத்தியக்காரனாவது நினைத்தால் அவனுக்கு நான் சொல்கிறேன் ஆலி ஜனாப் தயாநிதி மாறன் ஸாஹிப் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று உயர் திரு காதர் மொகிதீன் அய்யா அவர்கள் பேசி உள்ளார்கள். அது பலராலும் பல வகையில் எதிர்த்து விமர்சிக்கப்படுகிறது. ஆதரித்தும் பேசப்படுகிறது. எதிர்த்து விமர்சிக்கும் அணியில் நாம்  இல்லை.

அல்லாமாக்களுக்கு எல்லாம் அல்லாமா கருணாநிதி என்று உயர் திரு காதர் மொகிதீன் அய்யா அவர்கள் கூறியபொழுது எத்தனையோ பேர் கொந்தளித்தார்கள்.   நாம் கொந்தளித்து விமர்சிக்கவில்லை. காரணம்?
1980களில் நாம் ஆலிம்கள் என்று கூறுபவர்களுக்கு பிரைவேட் விஸா -ஆஸாத் எனப்படும் பீதி விஸா எடுத்தோம். அவர்களை அரபிகளிடம் ஆலிம் என்று அறிமுகம் செய்து வேலை கேட்டோம். ஷு ஆலிம்? என்ன ஆலிம்? எதில் ஆலிம்? என்று கேட்டார்கள் அரபிகள்.

ஹாபிலுல் குர்ஆன், 7 ஆண்டுகள் அரபி மதரஸாவில் ஓதியவர். இமாமத் செய்வார் என்றோம். அப்ப முதவ்வா என்று சொல்லு. முல்லா என்று சொல்லு. ஆலிம் என்று சொல்லாதே என்றார்கள். நாம் முகம் செத்து நின்றோம்.

7 ஆண்டுகள் ஓதி ஆலிம் பட்டம் பெற்றவர் சர்ட்டிபிகேட்டில் அரபிக் காலேஜ் என இங்கிலீஷில் இருக்கும் அரபி  மதரஸா என்று அரபியில்  இருக்கும். பள்ளி கூடத்திற்குத்தான் அரபியில் மதரஸா என்பார்கள். சிலர் சர்ட்டிபிகேட்டில்  ஜாம்ஆ என்று அரபியில் போட்டு விட்டு காலேஜ் என இங்கிலீஷில் இருக்கும்.

கலாச்சாரப் பள்ளியில் செயல்பட்ட பிர்தவ்ஸிய்யா கூட ஜாமிஅதுல் பிர்தவ்ஸிய்யா என்றுதான் அன்று விளம்பரம் செய்தார்கள்.

குல்லிய்யா என்றால் கல்லுாரி. ஜாம்ஆ என்றால் யுனிவர்சிட்டி என இந்த வேறுபாடுகளை அரபிகள் சொல்லித்தான் அறிந்தோம். அன்றைய அறிஞர்களுக்கும் அரபி மதரஸாக்களுக்கும் கடிதம் எழுதி ஜாமிஆ, குல்லியா, மதரஸா என அரபியில் போட்டு விட்டு அதற்கு முரணான ஆங்கில வார்த்தை சர்ட்பிகேட்களில் உள்ளதை எழுதி திருத்த வைத்தோம்.

பல நாட்டு அரபிகளிடம் பழகும் போது. எங்கெல்லாம் ஆட்சியாளர்களுக்கு மலிக் என்று சொல்லப்படுகிறதோ அந்த நாட்டு அரபிகள் இந்திய மலிக் மொரார்தேசாய் என்பார்கள்

அதே மாதிரி ஆட்சியாளர்களுக்கு ஷெய்கு, சுல்தான், ரைஸ் என்று எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அந்த நாட்டு அரபிகள் இந்திய பிரதமர்களை ஷெய்கா இந்திரா காந்தி என்றும் அமீரா இந்திரா காந்தி என்றும் சுல்தான் ராஜீவ் என்றும் ரைஸ் மன்மோகன் என்றும் குறிப்பிட கேட்டு இருக்கிறோம்.

அதனால், அல்லாமாக்களுக்கு எல்லாம் அல்லாமா கருணாநிதி என்று திரு மகாத் திரு காதர் மொகிதீன் அய்யா அவர்கள் கூறியபொழுது கொந்தளிக்கவில்லை. அறிஞர் அண்ணா என்பதை அரபியில் ஆலிம் அண்ணா என்றுதான் மொழி பெயர்க்க முடியும்.
குர்ஆனை திரு குர்ஆன் என்றும் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களை திரு துாதர் என்றும் குறிப்பிடுவார்கள். இது தமிழ் வழக்கம். ஜனாப் என்றால் திரு என்று கூறுவது போன்றதாகும் என்று விளக்கமும் கூறுவார்கள்.

அப்படி விளக்கம் கூறுபவர்கள் பெயருக்கு முன் திரு, திருமதி, செல்வி என்ற தமிழ் வழக்கத்தைப் போட்டால் நான் என்ன காபிரா என்று கோபப்படுவார்கள். இதுதான் பெரும்பாலான முஸ்லிம்களின் அறிவு நிலையாக உள்ளது.

உருது மொழியில் ஜனாப் ஜி’,  ‘பாய் சாப்’,  ‘ஜி சாப் இதே போல் மரியாதையாக அழைக்கும் போது அல்லது அதற்கு ஆம்என கூறுவதற்கு ஜிஎனும் வார்த்தை உருது மொழியில் வழக்கத்தில் இருந்து வருகின்றது. பேச்சு வழக்கில் சில வித்தியாசங்களைக் கொன்டுள்ள ஹிந்தி, உருது, மொழிகளிலிருந்தும் பாரசீக மொழியிலிருந்தும் வந்த சொற்களாகவே ஜனாப் எனும் வார்த்தை உள்ளது.

ஒரு காலத்தில் பெயருக்கு முன் மதிப்புத் தரும் முறையில் மரியாதைக்காக  சமூகம் என்று எழுதுவது தமிழர் பண்பாடாக இருந்தது. பிறகு திருவாளர் என்று ஆனது. அது சுருங்கி திரு என்றானது.  கூடுதலாக கண்ணியப்படுத்த, மதிப்புக் கொடுக்க உயர் திரு என்று விரிந்துள்ளது. சிலர் திரு மகாத் திரு என்றும் கண்ணியப்படுத்தப்படுகிறார்கள்.

மதிப்புத் தரும் முறையில் இஸ்லாமியர் ஒருவரின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை ஜனாப். மதிப்பு தரும் முறையில் திருமணமான இஸ்லாமிய பெண்களுக்கு முன்னால் இடப்படும் அடை ஜனாபா.

ஆண்களைஜனாப்என்றழைப்பதில் மொழி ரீதியான ஏதும் சிக்கல்கள் இல்லாவிட்டாலும், பெண்களை ஜனாபாஎன அழைப்பதில் மிகப் பெரிய சிக்கல்கள் இருப்பது அரபு தெரிந்த நாகரீகமான உலகத்தில் வாழும் பலருக்குத் தெரியாது.

ஜனாபா’ (ஜனாபத்) என்பது ஓர் அரபுப் பதமாகும். அதனை தமிழ் மொழியில் பெருந்தொடக்கு-சிறு தொடக்கு உடையவர் எனும் பதத்தைத் தருகின்றது. எனவே ஜனாபா என்று ஒரு பெண்ணை அழைக்கும் போது அவளது பெயருக்கு முன்னால் பெருந்தொடக்கு அல்லது சிறு தொடக்கு உடையவள் எனும் வார்த்தையை உபயோகித்தே அழைத்து வருகின்றோம்.


ஜனாப் ஓர் மந்திர வார்த்தை என்பது போலவும் சமூகத்தில் கருதப்படுகின்றது. இவ்வாறு ஆலி ஜனாப் தயாநிதி மாறன் ஸாஹிப் என்று கூறிய திரு மகாத் திரு காதர் மொகிதீன் அய்யாவுக்கு ஆதரவாக அறிந்து புரிந்து செயல்பட விளக்க பதிவுகள் நிறைய  உள்ளன. வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்.

இது போல் மார்க்க விஷயத்திலும் அறிந்து புரிந்து விளங்கி செயல்பட வேண்டுகிறோம்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.