ஆன்மீகத் தலைவர் சிறந்தவரா அரசியல் தலைவர்கள் சிறந்தவர்களா? தவ்ஹீதுவாதிகள் நேசிப்பது யாரை?



யாருக்கு மரணம் எப்பொழுது வரும் எந்த ரூபத்தில் வரும் என்று யாரும் சொல்ல முடியாது. அதற்கு இப்போதைய இலங்கை சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டு.  பீ.ஜே. மீதுள்ள குற்றம் குறைகளை வெளிப்படுத்தியவர்கள் என்று கூறப்படும் என் போன்றவர்களும் இயல்பாகவே அவரை நஞ்சாக வெறுக்கக் கூடிய எதிரிகளும் அவரை எதிர்த்து ஒரே மேடையில் முனாழரா, முஜாதலா செய்த மாற்று கருத்து உடையவ மவுலவிகளும் மாங்கா மடையர்களையும் கூ முட்டைகளையும் கொண்ட அறிஞர் குழுவும்  சரி. அவரது பேச்சில் ஈர்ப்பு - ஸிஹ்ர் இருக்கிறது என்பதை மறுக்க மாட்டார்கள்,  மறுக்க முடியாது. அப்படிப்பட்ட சிறந்த பேச்சாளர். எந்த ஆய்வில் ஈடுபட்டாலும் ஆணி வேறு அக்கு வேறாக பிரித்து விளக்கக் கூடிய  பேரறிஞர் பீ.ஜே.

1980களில் அவர் எந்த ஊருக்குப் பேசப் போனாலும் முதலில் அந்த ஊரில் மிகவும் பிரபலமான ஆலிம்களிடமுள்ள குறைகளை விமர்சித்துப் பேசுவார். அந்த பிரபலமான பெரிய பெரிய ஆலிம்களின் குடும்பத்து இளைஞர்கள் உட்பட அந்த ஆலிம்களின் பக்தர்களாக பரம சீடர்களாக இருந்த இளைஞர்களெல்லாம் சரிதானே என்று தலையை ஆட்டி ஆட்டி உரையை ரசிப்பார்கள்.

அடுத்து அந்த ஊரில் பிரபலமான தர்கா பற்றி பேசுவார். மேலப்பாளையம் என்றால் பஷீர் அப்பா, ரிபாஈ, கல்வத்து நாயகம் தர்காக்கள் பற்றி பேசுவார். தர்(ரு) பார்(ரு) காஹு எல்லாம் பார்ஸி வார்த்தைகள். பாரஸீக மொழியில் காஹ் என்றால் இடம். பார் என்றால் அரண்மனை. தர் என்றால் கண்ணியமான என்று அர்த்தம்

தர்பார் என்றால் கண்ணியமான அரண்மனை. 
தர்காஹ் என்றால் கண்ணியமான இடம் என்று அர்த்தம். 
தர்காஹ் என்பதில் உள்ள ஹ் மருவி தர்கா என்றாகி விட்டது.

தர்காஹ்கள் என்பது பாரசீக (ஈரானிய) ஷியாக்கள் உருவாக்கியது. தர்கா என்பது ஷியாக்களின் கொள்கையிலிருந்து வந்தது. அதனால் தான் தர்கா என்ற பாரஸீக சொல்லே இன்றும் நிலைத்து நிற்கிறது. இப்படி முதலிலேயே அது சுன்னத் ஜமாஅத் கொள்கை இல்லை என்று தர்காஹ்கள் வாசலை அடைத்து விடுவார். 

பிறகு மாவட்ட அளவில் பிரபலமான பொட்டல்புதுார், மாநில அளவில் நாகூர், உலக அளவில் முகைதீன் ஆண்டகை என ஒவ்வொரு அவ்லியாக்கள் வரலாறு என்ற பெயரால் உள்ள கட்டுக்  கதைகளை விமர்சித்துப் பேசுவார்.

இப்படியே நான்கு இமாம்களிடமும் ஹதீஸ் தொகுப்பாளர்களிடமும் ஸஹாபாக்களிடமும் நடந்து விட்ட தவறுகள் என்று பட்டியலிடுவார். அப்படியே ரசித்து ருசித்து கேட்பார்கள். இறுதி துாதர் முஹம்மது(ஸல்) அவர்களிடம் நடந்து விட்ட தவறுகள் என்று பட்டியலிடுவார், ஆஹா என்ன பிரமாதமான ஆய்வு என்று லயித்து இருப்பார்கள்.

இப்படியாக பீ.ஜே. பேசி முடித்து விட்டால் தவ்ஹீதுவாதிகளிடமிருந்து எந்த எதிர்ப்பும் விமர்சனமும் வராது. சூப்பர் பேச்சு என்று சர்ட்பிகேட்டும் கொடுத்து நாக்கை சப்பிக் கொண்டிருப்பார்கள். 

சம கால அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி பேசினால் எதிர்ப்புகள் வர ஆரமப்பித்து விடும். சொதப்பி விட்டார் என்பார்கள். மு.லீக் பற்றி பேச ஆரம்பித்ததும் டீ சப்ளை செய்து கொண்டிருக்கும் மு.லீக் அடிமட்ட தொண்டர் தலையில் அடித்து சைகை செய்து தேவையா என்று கேட்பார். இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வருவது நல்லது. 
1988ல் JAQH இன் முதல் மாநில மாநாடு குமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள மாலிக் தீனார் பள்ளிவாசல் திடலில் நடந்தது .அந்த மாநாட்டில் தான் கடையநல்லுார் ஸைபுல்லா ஹாஜாவை ஆசிரியராகக் கொண்ட அல்ஜன்னத் மாத இதழ் வெளியிடப்பட்டது. 

இந்த மாநாட்டிற்கு இ.யூ.மு.லீக்கின் அன்றைய அகில இந்திய தலைவர் இப்றாஹீம் சுலைமான் சேட், அப்துல் லத்தீப் ஆகியோர் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார்கள். ஜ.உ.ச. கொடுத்த நெருக்கடியால் மாநில தலைமை எதிர்ப்பு தெரிவித்தது. இப்றாஹீம் சுலைமான் சேட், அப்துல் லத்தீப் வரவில்லை.

வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார்கள். அப்பொழுது கோவை மாவட்ட தலைவராக இருந்த மரியாதைக்குரிய பிலால் ஹாஜியார் அவர்கள் மேடையில் வந்து அமர்ந்தார்கள். பொதுவாக பீ.ஜே. சூடாகி விட்டால்தால் அவரது பேச்சில் அனல் பறக்கும். தனிமனித வழிபாடு என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சின் ஆடியோ. மாநாட்டுக்குப் பிறகு மில்லத்களுக்கு சாட்டை அடி என்ற உட் தலைப்புடன் வினியோகிக்கப்பட்டது.

அந்த அளவுக்கு மில்லத்களை விமர்சித்துப் பேசினார். தாய்ச்சபையை விட எங்களுக்கு எங்கள் தாய் மார்க்கம் தான் பெரிது..  தந்தை ஆதம்(அலை) தந்த தந்தை மார்க்கம் இஸ்லாம் தான் பெரிது என காரசாரமாகவும் உக்கிரமாகவும் பேசினார். மேடையில் இருந்த மரியாதைக்குரிய பிலால் ஹாஜியார் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

27-4-1991ல் மண்டல் கமிஷன் (யாருக்காக) என்ற தலைப்பில் பீ.ஜே. பேசினார். வி.பி.சிங் பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசிய நேரம். BJP வளர வி.பி.சிங் செய்த பங்களிப்புகள் என்று துவங்கி ஒரு அரசியல் கட்சி தலைவர்களையும் பாக்கி விடாமல் தோலுரித்துக் காட்டிப் பேசினார்

அப்பொழுதெல்லாம் மேலப்பாளையத்தில் தவ்ஹீது கூட்டம் என்றால் கடையநல்லுார், காயல்பட்டிணம், கன்னியாகுமரி, நாகர்கோயில், வேர்க்கிளம்பி,  என்று ஒவ்வொரு ஊரிலிருந்தும் வேன்களில் வரச் செய்வோம்.

.தி.மு.. பற்றி பேசும்போது கேட்டுக் கொண்டிருந்த கன்னியாகுமரி அ.தி.மு.. பொறுப்பில் இருந்த உசேன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பொறுப்பில் இல்லாத அடிமட்டங்கள் வந்து ஆடினார்கள்

யார் இவருக்கு இந்த தலைப்பு கொடுத்தா என்றார்கள். பிறகு முஸ்லிம்களின் நண்பன் என்று நேசித்த தலைவர் பற்றி பேச ஆரம்பித்ததும் ஒரு மூத்தவர் வந்து மணி ஒன்னு ஆகி விட்டது நிறுத்துங்கள் என்றார்.  

அந்தக் காலத்தில் 10 மணிக்கு முடிக்க வேண்டும் என்ற சட்டம் கிடையாது. மண்டபம் என்றால் விடிய விடிய பேசுவார். போதும் முடியுங்கள் என்று ரஹ்மதுல்லாஹ் இம்தாதி சத்தத்திற்காக 3 மணிக்கு முடிக்கப்படும்.

ஆலிம்கள், அவ்லியாக்கள், இமாம்கள், ஸஹாபாக்கள், ஏன் முஹம்மது(ஸல்) அவர்களிடம் நிகழ்ந்து விட்ட தவறுகள் என்று கூட பீ.ஜே. பேசும்போது ரசித்து ருசித்து கேட்ட பெரியவர்கள்.  தாங்கள் பாசம் வைத்து நேசிக்கும் தலைவரை விமர்சித்ததும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். 

இப்படிப்பட்டவர்களில் சிலர் தான் பிற்காலத்தில் (2015களில்) TNTJ மாநாட்டு மேடைகளில் மூத்த தவ்ஹீதுவாதி என்று கவுரவிக்கப்பட்டார்கள்.

நேற்றைய சம கால நிகழ்ச்சியில் பணத்துக்காகவும் பதவிக்காவும்தான் இன்றைய தவ்ஹீது ஜமாஅத்தினர் என்போர் இருக்கிறார்கள் என்று பீ.ஜே. பேசிய பேச்சில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.  

ஆன்மீகத் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை விட இன்றைய அரசியல் தலைவர்கள் மீது பாசமும் நேசமும் வைத்துள்ள தவ்ஹீதுவாதிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு முஸ்லிமும் இலங்கை நிகழ்வை எண்ணிப் பாருங்கள்.

நிச்சம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய். மறுமையில் நீ யாருடன் இருக்க விரும்புகிறாய்?. எங்கே இருக்க விரும்புகிறாய்? நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடனேயே மறுமையில் இருப்பாய். இதை உணர்ந்து மனம் திருந்து. உனது நேசமும் பாசமும் முஹம்மது நபியைவிட இன்றைய அரசியல் கட்சி மீதும் அதன் தலைவர்கள் மீதும் இருக்கின்றதா? அப்படியானால் நீ அந்தக் காபிரான தலைவர்களுடன் இருக்க துணிந்து விட்டாயா?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு