மிஃராஜ் விண் வெளிப் பயணம் இலக்கியமா? இயல்பானதா? நம்பும்படி உள்ளதா? விண்ணில் செல்ல மனித உடல் ஒத்து வருமா? தாங்குமா?
திரு
துாதர் முஹம்மது(ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் சம்பந்தமான ஒரு பகுதியை திரு குர்ஆன் 17:1 ஆவது வசனம் கூறுகிறது. ஒரு இரவில் பூமியிலிருந்து புறப்பட்டு ஏழு வானங்களைக்
கடந்து சென்றார்கள். ஏழு வானங்களிலும்
உள்ள எல்லாவற்றையும் பார்த்து விட்டு அதே இரவில் திரும்பி வந்தார்கள். இதை மற்ற குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.
இவற்றில் எதுவுமே
மனிதர்களுக்குச் சாத்தியமாகாது என்பது உண்மை.. இந்தப் பயணத்தை திரு நபி (ஸல்) அவர்கள் சுயமாக மேற்கொண்டார்களா என்றால் இல்லை. சுயமாக சென்றார்கள் என்றால் நிச்சயமாக இது சாத்தியமில்லை தான். இந்தப் பயணம் படைத்த இறைவன் அல்லாஹ்வால்
நிகழ்த்தப்பட்டதாகும். எதை நாடுகிறானோ அதைச் செய்ய வல்லவன் தான் அல்லாஹ். இப்படி ஈமான் கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு இதில் சந்தேகம்
கிடையாது
இது
சாத்தியமா? அறிவு ஏற்றுக் கொள்கிற
மாதிரி இருக்கிறதா? அறிவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத இதை முஸ்லிம்கள் எப்படி ஈமான் – நம்பிக்கை கொண்டுள்ளார்கள்? https://mdfazlulilahi.blogspot.com/2019/04/blog-post_4.html
செய்வாய்க்கு அனுப்பப்பட்ட ராகெட்ட- விண்கலம் கூட செய்வாயை சென்றடைய பல ஆண்டுகள்
ஆகி உள்ளன. செய்வாய் மாதிரி கோல்களை எல்லாம் கடந்து ஏழு வானங்களையும்
கடந்து போனார்கள்.. அது மட்டுமல்ல போய் விட்டு வந்ததார்கள்.. அதுவும் ஒரே இரவில். இது ஒரு இரவில் நடக்கின்ற காரியமா?
அப்படியானால் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்திருக்க வேண்டும்?
அவ்வளவு வேகத்தில் பயணம் செய்வதை
மனிதனின் உடல் தாங்குமா? அறிவுக்கு ஏற்றுக் கொள்ளவில்லையே என்பது
ஏக இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் என்னும் நம்பிக்கை கொள்ளாதவர்களின் சந்தேகங்களாக
உள்ளன.
.அதனால் இலக்கியங்களாக உள்ள புராணக் கதைகள் மாதிரி இது இருக்குமோ? இதையும் திரு நபி சரித்திரம், சீறாப் புராணம் என்ற பெயரில் எழுதி உள்ளதைத்தானே
முஸ்லிம் அல்லாதவர்கள் பார்த்துள்ளோம். ஆகவே இது யதார்த்தமானதல்ல - இயல்பானதல்ல. இலக்கியம் தான் கற்பனைதான் என்கிறார்கள் ஈமான் - நம்பிக்கை
இல்லாத பிற மக்கள். அவர்களுக்கு ஈமானுள்ளவர்களின் பதில்.
முஹம்மது
நபி(ஸல்) அவர்களின் விண்ணுலகப்
பயணத்திற்கு பயன்பட்ட வாகனத்தின் பெயர் புராக் என்பதாகும். புராக் என்றால் மின்னல் என்று அர்த்தம். மின்னல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு வாகனம்தான் புராக்.
மின்னல் வேகம் எவ்வளவு? மின்னல் வேகமும் லைட்டுடைய ஒளி
(விளக்கு - வெளிச்ச) வேகமும் ஒன்று தான். விளக்கு ஒளி வேகம் என்பது ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் ஆகும்.
உலகத்தில் மனிதன் கண்டு பிடித்த வேகத்தில் மிக அதிகமான வேகத்தில் செல்லக் கூடியது வெளிச்சம்தான். அதை மிஞ்சக் கூடிய வேகம் கிடையாது. கண்ணை மூடி திறப்பதற்குள் ஒரு நொடியில் மூன்று லட்சம் கிலோ மீட்டர் போய் விடும்.
சூரியனிலிருந்து
வரும் வெளிச்சம் ஒரு செகண்டில் மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் தான்
வருகின்றது. அதனால்தான் சூரியனிலிருந்து வரும் வெளிச்சத்தின் மூலம் உடனுக்குடன் பார்க்க
முடிகிறது. செயல்பட முடிகிறது.
சூரியனிலிருந்து வரும் வெளிச்சம் இந்த வேகத்தில் வராவிட்டால் உலகத்தில்
உள்ள மற்ற வேகத்தின்படி வந்தால். சூரியனின் வெளிச்சம் பூமிக்கு
வந்து சேர பல லட்ச வருஷங்கள் ஆகி விடும்.
எனவே
ஒரு செகண்டுக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் என்றால் ஒரு
நிமிஷத்திற்கு எத்தனை லட்சம் கிலோ மீட்டர்? என்று கணக்கு பாருங்கள். அவ்வளவு வேகமான வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்' (அது ஒரு காலை கிழக்கில் உதிக்கும்
திசையில் வைத்தால் இன்னொரு காலை மேற்கில் மறையும் திசையில் வைக்கும்).
ஓர் எட்டு என்பது காலடியைக் கூறவில்லை. அதன் பறக்கும்
சக்தியைத்தான் கூறுகிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு அடியை எடுத்து வைக்கும்
என்றால் ஒளிவேகத்தில் பயணம் என்று பொருள். வேகமாகச் செல்லும் வாகனம் என்றாலும் அந்த வேகத்தில் மனிதன் பயணித்தால் இதயம்
வெடித்துச் சிதறிவிடுமே என்ற சந்தேகம் ஈமான் இல்லாதவர்களிடம் உள்ளது.
இவ்வளவு வேகமான மின்னல் வேக வாகனத்தில் அழைத்துச்
சென்ற தேவ துாதர் (வானவர்) ஒளியால்
ஆனவர் என்பதால் அவர் ஒளிவேகத்தில் அதையும் மிஞ்சும் வேகத்தில் செல்ல முடியும்.
ஆனால் முஹம்மது என்ற மனித உடல் உடையவருக்கு இது இயலுமா? செல்வதற்கு மனிதனின் உடல் ஒத்து வருமா? தாங்குமா? என்பதே அவர்கள் கேள்வி.
இந்த கேள்விகளுக்கு
மிஃராஜ் சம்பந்தமாக புகாரியில் உள்ள 349, 3887 ஹதீஸ்களில்
பதில் விளக்கம் உள்ளது. நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது
அவர்களுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி நபி(ஸல்)
அவர்களுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான்
எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து
நபி(ஸல்) அவர்களுடைய நெஞ்சில் கொட்டினார்கள். இந்த ஹதீஸை அறிவுக்கு பொருந்தவில்லை என்று சொன்ன
முஸ்லிம்(?)களும் இருக்கிறார்கள்.
ராட்டிணம் சுற்றி ஏறும் போது உடலில் ஏற்படும் நிகழ்வுகள் பற்றி அறியாத காலத்தில். வானத்தில்
ஏறுபவன் -வின்வெளியில் பயணம் செய்பவனின் இருதயம் இறுக்கமடைந்து விடும் இறுகிச் சுருங்கி நெருக்கடியானதாக ஆகி விடும் என்று அல்குர்ஆன் 6:125 வசனம் கூறி உள்ளது.
எனவே விண்வெளி பயணத்திற்கு ஏற்றவாறு நபி(ஸல்) அவர்களுடைய இருதயமும்
உடலும் சரி செய்யப்பட்டது என்பதற்குரிய ஆதாரம்தான் அந்த ஹதீஸ்களில் உள்ளன என்பது
ஈமானுள்ள முஸ்லிம்களின் நிலையாகும்.
அல்லாஹ் நினைத்தால் இருதயம் வெடித்துச் சிதறாத வண்ணம் அழைத்துச்
செல்ல முடியும். இருந்தாலும் ஈமான் கொள்ளாத மனிதர்கள் நம்புவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு
வின்வெளிப் பயணத்துக்கு அழைத்துச் செல்லும்போது திரு நபி (ஸல்) அவர்களின் இதயத்தைப்
பிளந்து சில மாற்றங்களை தேவ துாதர்களளான வானவர்கள் மூலம் அல்லாஹ் செய்தான்.
Comments