முஸ்லிம்களை அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஈமான் கொண்டுள்ளவர்கள் என்று சொல்வது சரியா?

அறிஞர் அண்ணாவுக்கு அல் பாத்திஹாவா?  இவர் எம்.ஜி.ஆருக்கு ஈமான் கொண்டவர். இவர் கருணாநிதிக்கு  ஈமான் கொண்டவர். இப்படி பெரும்பாலான முஸ்லிம்கள் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுக்கள் கூறி வருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு இன்று நேற்றல்ல நீண்ட நெடுங்காலமாக உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளது. தேர்தல் என வந்து விட்டால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் வெறி பிடித்து ஆடும்.

அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மது(ஸல்) அவர்களை இறைவனின் துாதராகவும் நம்புவதையே ஈமான்நம்பிக்கை என்கிறோம்
இந்த மாதிரியான  ஈமானை - நம்பிக்கையை எந்த முஸ்லிமும் எந்த அரசியல் கட்சி மீதும் கட்சி தலைவர்கள் மீதும் கொண்டிருக்கவில்லை. யாரும் கட்சித் தலைவரை கடவுளாகவும் தலைவரின் வாரிசுகளை கடவுளின் துாதராகவும் ஏற்றிருக்கவில்லை – ஈமான் கொண்டிருக்கவி்ல்லை.

மந்திரி பதவியில் இருக்கும் வரை உடன் இருந்து பார்த்தால் வணங்கச் சொல்கிறது என்பார்கள். பதவி பறிக்கப்பட்டால் பார்த்தால் கூப்பிடச் சொல்கிறது என்பார்கள். அவர்கள் தலைவர்கள் இருந்த இடத்தை கஃபாவுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். விலகியதும் கக்கூஸ் கூடாரம் என்பார்கள். இது மேல் மட்டத்தவர்கள் நிலை. காரணம் அவர்கள் தலைவர்கள் மீதும் தலைவரின் வாரிசுகள் மீதும் நம்பிக்கை கொண்டு உடன் இருக்கவில்லை. அவர்களது ஆதாயத்திற்காக மட்டுமே இருந்தார்கள், இருக்கிறார்கள்.

ஆனால் அடிமட்டத் தொண்டர்கள் நிலை அப்படி அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள் தலைவர்கள் மீதும் தலைவர் பிள்ளைகள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். 

அதுமட்டுமல்ல உளப்பூர்வமாக பாசமும் நேசமும் கொண்டிருக்கிறார்கள். நன்றாக விளங்க வேண்டும் அடிமட்டத் தொண்டர்கள் என்றால் அப்பாவிகள்  தான் இந்த மாதிரி சினேகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணாதீர்கள். 

ஏழு ஆண்டுகள் அரபி கலாசாலையில் பயின்று பட்டம் பெற்ற ஆலிம்கள் உட்பட இந்த மாதிரி நேசம் கொண்டிருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணா சமாதியில் பாத்திஹா ஓதிய ஆலிம்கள் பற்றி நாம் கேள்வி பட்டிருக்கிறோம். MGR  இறந்ததும் கத்தம் பாத்திஹா ஓதிய ஸனது பெற்ற ஆலிம்களை கண்ணால் பார்த்து இருக்கிறோம். 

அந்த அளவுக்கு உளப்பூர்வமாக பாசமும் நேசமும் அடிமட்டத் தொண்டர்கள் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களது ஈமானின் நிலை பற்றி கூறி காபிர் பத்வா கொடுக்கும் இவர்களது ஈமானின் நிலை பற்றி நாம் பத்வா கொடுக்க மாட்டோம். 

நிச்சயமாக ஈமான் - நம்பிக்கை கொண்ட முஃமின்களுக்கு தங்கள் உயிர்களை விட இந்த நபி (முஹம்மத் (ஸல்) அவர்கள்) தான் முன்னுரிமை பெற்றவர், மேலானவர், பிரதானமானவர்  அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.  ன்ற அல்லாஹ்வின் கூற்றுப்படியும்  (அல்குர்ஆன் 33 : 6) 


உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனை வரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார் என்ற நபி (ஸல்) அவர்கள் தீர்ப்புப் படியும்  (அறிவிப்பவர் :  அனஸ் (ரலி)  முஸ்லிம்)  சிந்தியுங்கள்.


நாம் யார் நமது ஈமானின் நிலை என்ன? நமது உளப்பூர்வமாக பாசமும் நேசமும் நபியை விடவா முஸ்லிம் அல்லாத அரசியல் கட்சி தலைவர்கள் மீதும் அவர்களது பிள்ளைகள் மீதும் உள்ளது? இப்படி ஒவ்வொருவரும் ”உன் நப்ஸை கேள்” என்ற நபி மொழிப்படி  தங்கள் நப்ஸை கேட்க வேண்டும். கேட்டு சிந்தித்து அவரவர்கள் ஈமானை அவரவர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் உள்ளம் உங்களுக்கு தீர்ப்பு சொல்லும். நீங்கள் நபியை விட முஸ்லிம் அல்லாத அரசியல் கட்சி தலைவர்களையும் அவர்களது பிள்ளைகளையும் நேசிக்கின்றீர்களா? இல்லையா என்று.

நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! வாசி, இன்று உனக்கு எதிராக உன்னுடைய நப்ஸே ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்”  

உன்னைப் பற்றி கணக்கெடுக்க, உனது கணக்கைப் பார்க்க பரிசீலிக்க நீயே போதுமானவன்.  என்று மறுமையில் கூறப்படும் முன் 17:14.  இம்மையிலேயே பரிசீலித்து சரி செய்து கொள்ளுங்கள். 
--------------------------------------------------------
குஜராத்தில் ரயில் எரிப்பு சம்பவம் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான்  என்று பள்ளிவாசலில் மைக் போட்டு சொன்னவன் மீதும் அவனை ஆதரித்து நின்றவர்கள் மீதும்  யா அல்லாஹ் உன் சாபத்தை  இறக்கி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி  அவர்களைக் கொண்டே அவர்களை இழிவுபடுத்தி அழித்து  கொண்டிருக்கிறாய். 

யா அல்லாஹ் அவர்களை விட்டு விடாதே மேலும் மேலும் அவர்கள் மீது  உன் சாபத்தை இறக்கி அவர்களைக் கொண்டே அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.  

யா அல்லாஹ் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடத்திய இந்துத்துவா அமைப்பினர் மீது உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 

மாட்டுக்கறி பெயரால் கொலை செய்த இந்துத்துவா அமைப்பினர் மீதும் அதற்கு துணை நின்றவர்கள் மீதும் அவர்களை அரசியல் ஆதாயத்திற்காக அந்த அமைப்பினரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன் 

முஸ்லிம்களுக்கு எதிராக எல்லா அமைப்புகளிலும் ஊடுறுவி உள்ள அத்தனை தீய சக்திகள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு