நபியை குறை கூறி எதிரியிடம் போய் ஸஹாபி பேசினாரா? ஏன்?


'இந்த மனிதர் (முஹம்மத் - ஸல்),  எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார் 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் (முஹம்மத் - ஸல் அவர்களை)பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)' என்று ஸஹாபியே எதிரியிடம் போய் நபியை குறை கூறிப் பேசினாரா? ஏன்? இந்த சம்பவம் புகாரியில் 2510, 3031, 3032 ஆகியவற்றில் சுருக்கமாக உள்ளது.


புகாரியில் உள்ள  இந்த ஹதீஸ்களில்  விரிவான  விபரம் உடையது  4037வது ஹதீஸ். அதன் அரபி மூலத்தை 1995ஆம் ஆண்டு  அதிகமாக காப்பி எடுத்து வினியோகித்தோம். அப்பொழுது சிந்தனை வேறு விதமாக இருந்தது. இதை ஆதாரமாக வைத்து ஜிஹாதை துாண்டடிப் பேசச் செய்தது.  இஸ்லாமிய இளைஞர்கள் சிறை செல்ல காரணமாக இருந்தது. 


சிந்தித்து செயல்படக் கூடிய அறிவுள்ள மக்களுக்கு  இந்த ஹதீஸில் படிப்பினைகளும் வழி காட்டுதல்களும் உள்ளன. ஆகவே இந்த ஹதீஸின் தமிழாக்கத்தை இங்கே பதிவு செய்கிறோம். முழுமையாகப் படித்து சிந்தித்து செயல்படக் கூடிய அறிவுள்ள மக்கள் பயன்பெறுவார்கள்.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்களிலும் RSS ஊடுருவி உள்ளார்கள். ▪அங்கேயே இருந்துகொண்டு முஸ்லிம்களிடையே பிளவு படுத்துவதையும் சரியாக செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் இணையதளமான சோசியல் மீடியாக்களையும் விட்டு வைக்கவில்லை. என்று நடிகர்  சொன்னதை பரப்பி மகிழ்கின்றவர்கள் நபிகள் சொன்னதை பரப்பாமல் இருப்பது ஏனோ?

எதிரணியில் ஊடுறுவி நபியையே குறை கூறிப் பேசி எதிரியை வீழ்த்த நபி(ஸல்) அவர்களே அணுமதித்து இருக்கும்போது, முஸ்லிம்களை குறை கூறிப் பேசுவதுபோல் எதிரணியில் ஊடுறுவி இருந்துகொண்டு அவர்களிடையே பிளவு படுத்துவதை சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு ஏன் ஏற்படுவதில்லை?  இந்தக் கேள்வியுடன் கீழ் காணும்  வரலாற்றைப் பாருங்கள். 

'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொலை செய்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். 

உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்' என்றார்கள். 

உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இந்த மனிதர் (முஹம்மத் - ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்' என்று (நபி - ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறினார். பிறகு, 'உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்' என்றும் கூறினார்கள். 

அதற்கு, கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்' என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)' என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறினார்.

பிறகு, நீ எங்களுக்கு ஒரு வஸக்கு... அல்லது இரண்டு வஸக்கு... (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்' என்று கூறினார்கள்.

அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், 'சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'நீ எதை விரும்புகிறாய் (கேள்)?' என்று கூறினர். 

கஅப் இப்னு அஷ்ரஃப், 'உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக வையுங்கள்என்று கூறினான். 

'எங்கள் பெண் மக்களை எப்படி உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)' என்று கூறினார்கள்

(அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, 'இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! 

எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்' என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். 

(பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா(ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். - அபூ நாயிலா(ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் - அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். 

பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், 'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறுயாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்' என்று பதிலளித்தான்.

அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்' என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை' என்று கூறினார்கள்'

மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)' என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். 

'(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)' என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்' என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர். 

(
இந்த ஹதீஸில் இடையிடையே காணப்படும் வாசக மாற்றங்கள் தொடர்பாக அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் கீழே இடம் பெறுகின்றன...)

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) பல முறை இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள். ஆயினும், அப்போது அவர்கள் 'ஒரு வஸக்கு, இரண்டு வஸக்கு (அளவை)' சம்பந்தமாகக் கூறவில்லை. அன்னாரிடம் நான், 'இந்த அறிவிப்பில் ஒரு வஸக்கு, இரண்டு வஸக்கு சம்பந்தமாக (ஏதேனும்) இடம் பெற்றுள்ளதா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'அதில் ஒரு வஸக்கு, இரண்டு வஸக்கு பற்றி இடம் பெற்றுள்ளது என எண்ணுகிறேன்' என்று பதிலளித்தார்கள்.

-(
அறிவிப்பாளர் சுஃப்யான் - ரஹ் கூறுகிறார்கள்:)
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், 'குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை கேட்கிறேன்' என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், 'அவன் என் சகோதரர் முஹம்மது இப்னு மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூ நாயிலாகவும் தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவே செய்வான்' என பதிலளித்ததாகவும் இடம் பெற்றுள்ளது.

முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) தம்முடன் இருந்த இரண்டு மனிதர்களடன் (கஅப் இப்னு அஷ்ரபின் வீட்டுக்கு) உள்ளே நுழைந்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவராக சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், 'அம்ர் இப்னு தீனார்(ரஹ்), அந்த இரண்டு மனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட்டாரா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான்(ரஹ்), 'அவர்களில் சிலரின் பெயரை மட்டும் அம்ர் குறிப்பிட்டார். 'இரண்டு மனிதர்கள் தம்முடனிருக்க முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) வந்தார்கள்' என்றே அம்ர் அறிவித்தார்' என்று பதிலளித்தார்கள்.

அம்ர் அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், '(முஹம்மத் இப்னு மஸ்லமாவுடன் வந்தவர்கள்) அபூ அப்ஸ் இப்னு ஜப்ர்(ரலி), ஹாரிஸ் இப்னு அவ்ஸ்(ரலி), அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) ஆகியோர் தாம்' என்று கூறினர்.

அம்ர் இப்னு தீனார்(ரஹ்), 'தம்முடன் இருவரிருக்க முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) வந்தார்கள்' என்று அறிவித்தார்கள்.

-
அறிவிப்பாளர் அம்ர்(ரஹ்) ஒரு முறை, '(முஹம்மத் இப்னு மஸ்லமா - ரலி- அவர்கள் தம் சகாக்களை நோக்கி) 'பிறகு அவனுடைய தலையை உங்களையும் நான் நுகரச் செய்வேன்' என்று கூறினார்கள்' என்று அறிவித்தார்கள்.

-
அம்ர்(ரஹ்) அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில், 'என்னிடம் அரபுப் பெண்களிலேயே நறுமணம்மிக்கவளும், அரபுகளிலேயே முழுமையானவளும் இருக்கிறாள்' என்று கஅப் இப்னு அஷ்ரஃப் கூறினான் எனக் காணப்படுகிறது.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு