91 95669 06909 லாபியை புரிந்து கொள்வோம்...!! மத்திய கிழக்கு நாடுகளில் சக்தி வாய்ந்த நாடு சவூதி அரேபியா, மற்றொரு சக்தி வாய்ந்த நாடு ஈரான். சவூதி அரேபியா சன்னி முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட நாடு, ஈரான் ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட நாடு. இந்த இரண்டு நாடுகளும் கொள்கையில் எதிர் எதிர் திசைகளில் இருக்கிறது. மத்திய கிழக்கில் சன்னி முஸ்லிம்களுக்கு எதிராக எந்த பிரச்சினை என்றாலும் ஷியா முஸ்லிம்கள் தான் காரணம் என்றும், ஈரான் தான் காரணம் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடும், சமூக வலைத்தளங்களில் நம்முடைய சகோதரர்களும் ஷியாக்கள் தான் காரணம் என்றும் செய்தி வெளியிடுவார்கள். இதையெல்லாம் நாம் அனைவரும் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மக்காவில் ஏற்பட்ட நெரிசலின் காரணத்தால் 700 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் உயிரிழந்த சம்பவத்திற்கும் ஷியாக்கள் தான் காரணம் என்றும், பின்னணியில் ஈரான் இருப்பதாக எப்போதும் போல் சர்வதேச ஊடகங்களும், சமூக வலைத்தளங்களில் நம் சகோதரர்களும் செய்தி வெளியிட்டுள்ளனர். சன்னி முஸ்லிம்களுக்கு எதிராக எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு ஷியாக்கள் தான் காரணம் என்பதை நினை...