பிறருக்காக தேர்தல் வேலை செய்யலாம் அவர் மட்டும் போட்டி இடக் கூடாது என்ற நிலைபாடா?

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பா? என்பது பற்றிய விபரத்தை காணும் முன் இன்றைய வரலாறாக ஆகி விட்ட நேற்றைய செய்திகளை நினைவு கூறுவது அவசியமாக இருக்கிறது. எனவே அதனை முதலில் பார்ப்போம்.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து ஜவாஹிருல்லாஹ் அவர்களுடையது மட்டுமல்ல. சகோதரர் சம்சுல்லுஹா, பி.ஜே. ஆகியவர்களுடைய கொள்கையும் இதுவாகத்தான் இருந்தது.

1988இல் துபை வந்திருந்த அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கள் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் சார்பில் பாளையில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். இது பற்றி சகோதரர் சம்சுல்லுஹா அவர்கள் மூலம் பி.ஜே.யிடம் கலந்த போது ஹராம் என்று கூறி விட்டார்கள்.

ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு, ஓட்டுப் போடுவது ஹராம் என்ற கொள்கை பி.ஜே.யின் அண்ணன் பி.எஸ். அலாவுதீன் உட்பட எஸ்.ஐ.எம்.(சிம்)முடன் தொடர்புடைய எல்லா மவுலவிகளிடமும் இருந்தது.

1995.
ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என அருட்செல்வன் என்ற புனைப் பெயரில் ஜவாஹிருல்லாஹ் எழுதினார்.

1996.
அந்த ஜவாஹிருல்லாஹ் த.மு.மு.க துணைத் தலைவராக இருக்க பி.ஜே. த.மு.மு.க அமைப்பாளராக இருந்தார். சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது தேர்தலை கண்டு கொள்ளாத நிலைப்பாடு எடுத்தது த.மு.மு.க.

பி.ஜே.யின் கொள்கைப்படி ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு ஓட்டுப் போடுவது ஹராம் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் எடுத்த முடிவுதான் அது.
ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு ஓட்டுப் போடுவது ஹராம் என்று சொன்னால் த.மு.மு.க.வில் உள்ள தவ்ஹீதுவாதிகள் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். மற்ற சகோதரர்கள் ஜீரணிக்கவே மாட்டார்கள். அதனால் தேர்தலை கண்டு கொள்ளாத நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

எனவேதான் அரசியல்வாதியான த.மு.மு.க நிறுவன தலைவர் குணங்குடி ஹனீபா விலகினார். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைவராக ஆனார்கள்.

1998.

ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைவராக ஆன பிறகு வந்தது பாராளுமன்ற தேர்தல். அப்போது பி.ஜெ.யின் யோசனைப்படி தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாடு எடுத்தது த.மு.மு.க. அதுவும் பி.ஜே.யின் கொள்கைப்படி ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு ஓட்டுப் போடுவது ஹராம் என்பதை ஒட்டிய முடிவுதான். ஏனைய த.மு.மு.க. நிர்வாகிகளிடமும் மக்களிடமும் பி.ஜே. கூறிய காரணங்கள் வேறு விதமானது என்பது தனி விஷயம்.

1998பிப்ரவரி 14இல் நடந்த கோவை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை வாபஸ் பெற வைத்தது. ஓட்டுப் போடும்படி சொல்லவும் வைத்தது. ஓட்டுப் போடுவது ஹராம் என்ற கொள்கையில் இருந்த சகோதரர் சம்சுல்லுஹா நெல்லை தொகுதியில் நடிகர் சரத்குமாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று த.மு.மு.க. சார்பில் அறிக்கை வெளியிட்டார்.

த.மு.மு.க.வின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத லுஹா எப்படி த.மு.மு.க. சார்பில் அறிக்கை வெளியிடலாம் என்ற கேள்வி வந்தது. ஆளுங்கட்சியான தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள் என அறிக்கை விட வேண்டி நிர்ப்பந்தம் லுஹாவுக்கு வந்ததை பதிலாகக் கூறினார்.

த.மு.மு.க.வை கண்டதிலிருந்து எந்தக் கட்சியுடனும் சேர மாட்டோம். மு.லீக் மாதிரி பிறர் மீது சவாரி செய்ய மாட்டோம். சொந்தக்காலில் நிற்போம். பிறர் மேடை மீது ஏற மாட்டோம். பிறருக்கு மேடை போட்டுக் கொடுக்கவும் மாட்டோம் என்று வீர வசனம் பேசி வந்தவர் பி.ஜெ.

அந்த பி.ஜெ. 1998 பிப்ரவரி 14 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தனி மேடை போட முடியாத நிலைக்கு ஆளானார். எனவே புதிய தமிழகம் கிருஷ;ணசாமி மீது ஏறி சவாரி செய்ய முடிவு செய்தார். அப்பொழுது கிருஷ;ணசாமியின் கையை தூக்கிப் பிடித்துக் கொண்டு தொப்புல் கொடி உறவு என்ற கோஷம் வைத்தார். கிருஷ;ணசாமியின் தயவில் தனி மேடை போட வழி கண்டார்.

1999.
த.மு.மு.க. துவங்கப்பட்ட 1995 ஆகஸ்ட்டிலிருந்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், மாநாடு, டிசம்பர் 6 போராட்டம் என ஜெயலலிதா ஆட்சியில் பிரச்சனையின்றி நடத்தியது.

1996இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தீவிரவாத முத்திரை குத்தி த.மு.மு.க. வின் மாநிலம் தழுவிய பேரணி மாநாடுகளையும் நடத்த விடாமல் தடை போட்டு வந்தார். முன்னெச்சரிக்கை கைதுகளையும் செய்து வந்தார். அந்தக் கருணாநிதி ஆட்சி 1999 வாழ்வுரிமை மாநாட்டையும் நடத்த விடாமல் தடை போட திட்டமிட்டது.

சொந்தக்காலில் நிற்போம். பிறர் மேடை மீது ஏற மாட்டோம். பிறருக்கு மேடை போட்டுக் கொடுக்கவும் மாட்டோம் என்ற பி.ஜெ.யின் சிம்மக் குரல் கம்மல் குரலாக ஆனது. சாதாரண மேடையையே பிறருக்கு போட்டு கொடுக்க மாட்டோம் என்ற பி.ஜெ. மாநாட்டு மேடையை பங்கு போட்டு ஜெ. உட்பட அனைத்து அரசியல் கழிசடைகளையும் ஏற வைத்தார். மொத்தத்தில் அரசியல்வாதிகள் தயவில் அந்த மாநாடு நடந்தது.

2000
மாநாடு நடத்த உதவியாக இருந்த ஜெ. தலைமையிலான கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கி பிரச்சாரம் செய்தது பி.ஜெ.யை அமைப்பாளராக கொண்டிருந்த த.மு.மு.க. தங்கள் வாழ்நாளில் ஓட்டுப் போடப் போகும் முதல் தேர்தல் இது என தேர்தல் பிரச்சாரத்தில் கூறி பெருமை பட்டார் பி.ஜே.

2001
மனம் திறந்த மடல் மூலம் த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை பி.ஜெ. ராஜினாமா செய்த பிறகு சட்டமன்ற தேர்தல் வந்தது. வெளிப்படையாக ஒதுங்கி இருந்தாலும் த.மு.மு.க. தலைமையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பி.ஜெ. தொகுதிக்கு ஒரு நிலைப்பாடு என்ற புரட்சியான? புதுமையான நிலைப்பாட்டை எடுக்க வைத்தார். இந்த நிலைப்பாட்டை விளக்க அவரே மீண்டும் தேர்தல் பிரச்சார களத்துக்கு வந்தார்.

2004
பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தலில் களம் இறங்கி பிரச்சாரம் செய்தால் ஈமான் போய் விடும். எனவே நமது ஆதரவு யாருக்கு என சொன்னால் போதும் என்று கூறிய அண்ணன் பி.ஜெ.யும் அவரது தம்பிகளும் தேர்தல் களத்தை விட்டு ஒதுங்கினர். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உட்பட த.மு.மு.க. தலைவர்கள் அனைவரும் தேர்தலில் களம் இறங்கி வேலை செய்தனர். இத்துடன்

2006
ஜெ.க்கு ஜே போட போன பி.ஜெ. தேர்தலில் களம் இறங்கி பிரச்சாரம் செய்தால் ஈமான் போய் விடும் என்ற கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு தேர்தலில் களம் இறங்கினார்.

1995க்குப் பிறகு 2006 வரையில் உள்ளாட்சி தேர்தல்களையும் சேர்த்து 10 தடவை தேர்தல்கள் வந்துள்ளன. அத்தனை தேர்தல்களிலும் ஜவாஹிருல்லாஹ்வின் பங்களிப்பு இருந்துள்ளது. இத்தனை தேர்தல்களிலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பதை அருட்செல்வன் என்ற புனைப் பெயரில் எழுதியவர் ஜவாஹிருல்லாஹ்தான் என்ற செய்தி வெளிப்படுத்தப்படவில்லை. ஒரு சிலருக்கு தெரிந்திருந்தாலும் அது பரப்பப்படவில்லை.

இப்பொழுது ஜவாஹிருல்லாஹ் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றதும். அருட்செல்வன் என்பது ஜவாஹிருல்லாஹ்தான் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. பரபரப்பாக பரப்பப்படுகிறது. ஈமெயில்கள் பறக்கின்றன. ஊருக்கு ஊர் நோட்டீஸ்கள் போட்டோக் காப்பிகள் என கை மாறுகிறது.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று எழுதியவர் பிறருக்காக தேர்தல் வேலை செய்யலாம் அவர் மட்டும் போட்டி இடக் கூடாது என்ற நிலைபாடா? இது எல்லோரையும் நோக்கி கேட்கப்படும் கேள்வி.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடயவர்கள் இதைப் பரப்புகிறார்கள் என்றால் அது அவர்களது கொள்கை ரீதியானது. அதை நாம் குறை கூற முடியாது. அந்த கொள்கை தவறு என்பது தனி விஷயம்.

பிள்ளையார் சிலை ஊர்வலத்தை மாலை போட்டு வரவேற்ற காயல்மஹ்பூபுக்கு பாளைத் தொகுதியை கொடுங்கள் என்று லத்தீப் ஸாஹிபிடம் கோரிக்கை வைத்த பி.ஜெ. அணியினர் இந்த நோட்டீஸை இப்பொழுது பரப்புவதன் நோக்கம் கொள்கை ரீதியானதா? குரோத ரீதியானதா?

எது எப்படியோ ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று எழுதியவர் தேர்தலில் போட்டி இடுகிறார். அந்தக் கொள்கையில் இருந்த சம்சுல்லுஹா, பி.ஜே. போன்ற மவுலவிகள் தேர்தல் கள பிரச்சாரகர்களாக ஆகி இருக்கிறார்கள். வரக் கூடிய தேர்தலில் பி.ஜெ, லுஹா போன்றவர்கள் போட்டி இடுவார்கள். அவர்களின் இந்த செயல்பாடுகள் மூலம் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவறானது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற இந்த வாதம் வைக்கக் கூடியவர்களில் அதிகமானவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக முதலில் கூறக் கூடிய குர்ஆன் வசனம் 12:40என்பதாகும் .

இப்படி குறிப்பிட்டு விட்டு 12:40இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. 12:40இல் உள்ள இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்று மட்டுமே சொல்வார்கள்.

இது 12:40யின் முழு வசனம் இல்லை. 12:40ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது. இந்த வசனம் பற்றிய விளக்கத்தை அடுத்த வெளியீட்டில் காண்போம். இன்ஷhஅல்லாஹ்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.