வாள் போர் புரிய வானவர்களை அனுப்பிய அல்லாஹ் வாக்களிக்கவும் வானவர்களை அனுப்புவான்.

மனித நேய கட்சி துவங்கப்பட்ட உடன் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ம.ம.க.வின் இன்றைய தேர்தல் நிலைப்பாடு பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் சந்தித்த பிரதானமான முதல் போர். இஸ்லாம் கண்ட முதல் பிரதான போர் எனப்படும் பத்ருப் போர் பற்றி அனைவரும் அறிவோம். இந்தப் போரில் ம.ம.க.வினருக்கு அதிக படிப்பினை இருக்கிறது. அல் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர். இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான். நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் 3:13)

313 பேர்களைக் கொண்ட இஸ்லாமிய படை 1000பேர்களைக் கொண்ட பெரும் படையை எதிர்க்க வேண்டி இருந்தது. இந்த பத்ருப் போருக்கு ஸஹாபாக்கள் விரும்பிச் சென்றார்களா? இந்தப் போரை ஸஹாபாக்கள் விரும்பினார்களா? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

.(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள். (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான். (அல்குர்ஆன் 8:7)

ஸஹாபாக்கள் ஆயுதம் ஏந்தி போர் புரிவதை விரும்பி இருக்கவில்லை என்பதையும் அல்லாஹ்தான் அவன் கட்டளைப்படி போர் புரிய வைத்தான் என்பதை மேற்கண்ட வசனம் மூலம் அறிகிறோம்.

ஸஹாபாக்களே பலப் பரீட்சையை விரும்பவில்லை விரும்பி இருக்கவில்லை எனும்போது நாம் தனித்து நின்று தேர்தலில் பலப் பரீட்சை பார்ப்பதை விரும்பி இருப்போமா? நம்மில் ஒருவராவது விரும்பி இருப்பார்களா? நிச்சயமாக யாருமே விரும்பி இருக்க மாட்டோம்.

முதலிலேயே தனித்து போட்டி நமது பலத்தை நிருபிக்க பலப் பரீட்சை பார்க்கும் போட்டி என்றால் யாருமே களத்துக்கு வர தயாராக ஆகி இருக்க மாட்டோம். ஆளுங்கட்சியுடன் கூட்டணி. பெரிய கட்சிகளுடன் கூட்டணி. என்ற எண்ணம்தான் தேர்தல் களத்துக்கு வேகத்துடன் வர வைத்தது.

அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டத்தை எளிதில் மடக்கும் நோக்குடன் மதீனாவை விட்டு வெளியேற வைத்து ஸஹாபாக்களை போர் களத்து வர வைத்தவன் அல்லாஹ். அந்த அல்லாஹ்வின் கட்டளைபடிதான் இதுவும் நடக்கிறது.

(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள் ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:42)

(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான் நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். 8:43

''நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; 8:12


நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான் இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.8:44

''பத்று'' போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். 3:123

நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது ''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்'' என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.8:9

(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர் ''உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று.3:124

குர்ஆனில் பத்ரு போர் சம்பந்தமாக உள்ள ஒவ்வொரு வசனத்தையும் மீண்டும் மீண்டும் படியுங்கள். அதற்குரிய அழுத்தத்துடன் படியுங்கள். வாள் போர் புரிய வானவர்களை அனுப்பிய அல்லாஹ் வாக்களிக்கவும் வானவர்களை அனுப்புவான் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படும். அல்லாஹ்வின் மீது இந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் வெற்றி நிச்சயம்.

10.4.09 அன்று திருநெல்வேலி டவுண் ஜும்ஆ பள்ளியில் ஆற்றப்பட்ட ஜும்ஆ உரையின் சுருக்கம்.

Comments

பி.ஜே செய்த அதே தவறை ம.ம.க வும் செய்வது இந்த ஜீம்ஆ உரையில் இருந்து தெறிகின்றது.

வாணவர்களை அல்லாஹ் அனுப்புவதற்கு தமுமுக ஒன்றும் "இஸ்லாம்" என்ற அமைப்பும் அல்ல அதன் தலைவர்கள் இறைத்தூதர்களும் அல்ல. எதை எதோடு ஒப்பிடனும் என்ற அறிவு கூட் அந்த இமாமுக்கு இல்லாமல் போனது கவலை அளிக்க கூடிய விசயம்.

இது போன்ற பிரச்சாரங்கள் எரிச்சலை தான் கிளப்பும். மக்களிடம் எடுபடக்கூடிய வகையில் பிரச்சாரங்கள் செய்தால் எடுபடும். முஸ்லிம்களிடம் மட்டும்தான் சென்றடைய வேண்டும் என்றால் நமக்குள் 48 பிரிவுகள் உள்ளன. அதில் ஒரு பிரிவினர் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்.

தங்கள் பதிவில் இது போன்ற எரிச்சலூட்டக்கூடிய ஒப்பீடுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் தமுமுக என்பது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் அல்ல இன்றும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட பல காரியங்களையும் தமுமுக வினர் செய்து கொண்டுதான் உள்ளர்கள். முஸ்லிம்களை தாக்குவது உட்பட. அதனால் இஸ்லாத்தோடும் வாணவர்களோடும் ஒப்பிடுவதை தவிர்க்கவும் அப்படி யாராவது ஒப்பிட்டால் அது வண்மையாக கண்டிக்க தக்கது. வேண்டுமானால் அந்த இமாம் பணத்திற்காக பேசியிருக்கலாம்.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.