இஸ்லாத்தில் அரசியல்-2

ரோமப் பேரரசு என்பது கிறிஸ்தவர்களின் அரசாங்கம்.

திருமறை குர்ஆன் 30ஆவது அத்தியாயத்தின் பெயர் அர்ரூம். அதாவது ரோமப் பேரரசு என்றே அந்த அத்தியாயத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ரோம் என்பது கிறிஸ்தவர்களால் ஆளப்பட்ட நாடு. ரோமப் பேரரசு என்பது கிறிஸ்தவர்களின் அரசாங்கம். கிறிஸ்தவ அரசாங்கத்தின் பெயரிலேயேதான் திருமறை குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது. இது அரசியலா இல்லையா?அந்த அத்தியாயத்தில் என்ன சொல்லப்படுகிறது

ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில் ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் அல்லாஹ்வின் உதவியினால் வெற்றியடைவார்கள்.

சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான் (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்) அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான்.

இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும் அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். 30:2-6


கிறிஸ்தவர்களின் அரசாங்கமான ரோமப் பேரரசு விரைவில் வெற்றி பெறும்.
அதாவது கிறிஸ்தவர்கள் விரைவில் வெற்றி பெறுவார்கள். அதையும் அல்லாஹ் எப்படி சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வின் உதவியினால் கிறிஸ்தவர்கள் வெற்றியடைவார்கள் என்று. அது மட்டுமா இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும் அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான் என்றும் கிறிஸ்தவர்கள் அரசாங்கம் பெற இருக்கும் வெற்றி பற்றி உறுதி அளிக்கிறான். இது அரசியலா இல்லையா?

இதைத்தான் அல்லாஹு அக்பர் என்று கைகளை கட்டிக் கொண்டு தொழுகையில் இமாம் மிஹ்ராபில் நின்று படித்து(ஓதி)க் காட்டுகிறார். மொழி தெரியாதவர்கள் இது ஒரு வேத வசனம் என்ற நிலையில் மட்டுமே படிப்பார்கள் செவிமடுப்பார்கள்.

அரபிகள் மற்றும் அரபி மொழி தெரிந்தவர்கள் இது அரசியல் சம்பந்தமானது என்று புரிந்து நிற்பார்களா இல்லையா? இஸ்லாத்தில் அரசியல் ஹராம் என்றால் அல்லாஹு அக்பர் என்று கைகளை (தக்பீர்) கட்டிக் கொண்டு தொழுகையில் நின்று இமாமோ நாமோ இதை படிக்க (ஓத) முடியுமா?

மேலும் கிறிஸ்தவர்கள் வெற்றி பெறும் அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் சொல்லிக் காட்டுகிறான் ஏன்?


இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இரு வல்லரசுகளில் ஒன்று பாரசீகம். மற்றொன்று ரோம்.

பாரசீக சாம்ராஜயத்தினர் நெருப்பை வணங்கக் கூடிய முஷ;ரிக்களாக இருந்தார்கள். ரோம் சாம்ராஜயத்தினரோ வேதம் உடைய கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். இந்த இரு வல்லரசு நாடுகளும் மோதிக் கொண்டன. அந்த மோதலில் கிறிஸ்தவர்களின் ரோமபுரி சாம்ராஜயம் தோல்வியடைந்து விட்டது.

இதை மக்காவில் உள்ள இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் எதிரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். முஸ்லிம்களைப் போலவே தங்களிடம் வேதம் இருக்கிறது என்று கூறிக் கொள்ளும் கிறிஸ்தவர்களின் ரோமபுரி சாம்ராஜயம் வீழ்ந்து விட்டது. நம்மைப் போல் பல தெய்வ கொள்கை உடைய பாரசீக சாம்ராஜ்யம் வெற்றி பெற்று விட்டது. எனவே முஸ்லிம்களை நாம் வெற்றி பெறுவோம் என்று பேசிக் கொண்டனர்.

அப்போதுதான் வேதக்காரர்களான கிறிஸ்தவர்களின் ரோமபுரி பேரரசு மிகச் சில ஆண்டுகளிலேயே மீண்டும் வெற்றி பெறும் என்ற இந்த வசனங்கள் அருளப்பட்டன.
இந்த வசனங்கள் என்றும் பொருந்தும்.

அரசியலில் முஃமின்கள் வருந்தும் வண்ணம் பின்னடைவோ தோல்வியோ ஏற்பட்டால் முஸ்லிம்களின் எதிரிகள் கொண்டாடி மகிழலாம். முனாபிக்குகளும் எழுச்சியுடன் முஸ்லிம்களின் எதிரிகளுடன் கை கோர்த்து கொண்டாடலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. மிகச் சில ஆண்டுகளிலேயே அல்லாஹ்வின் உதவியினால் முஃமின்கள் வெற்றியடைவார்கள் அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று இறுதி நாள் வரை நற்செய்தி கூறி முஃமின்களுக்கு தெம்பூட்டிக் கொண்டிருக்கிறது சூரா அர்ரூம். அதாவது ரோமப் பேரரசு என்ற அந்த அத்தியாயம்.

தொடரும் இன்ஷhஅல்லாஹ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு