சிங்கங்கள் யார். அசிங்கங்கள் யார்.


தமிழ் முரசு இது தி.மு.க.வின் தினகரன் குரூப் பத்திரிக்கை. அதில் ம.ம.க. பற்றி வந்துள்ள செய்தியை பாருங்கள்.

ஒரு ஐ.டி.யிலிருந்து வந்தததை எனக்கு அனுப்பி இருந்தீர்கள். பிறரை விமர்சிப்பவர் தன்னைப் பற்றிய விமர்சனத்தையும் சந்திக்க திராணி வேண்டும். யோக்கியதையும் வேண்டும். இந்த ஐ.டிக்கு சொந்தக்காரர்களுக்கு அந்த திராணியும் இல்லை. யோக்கியதையும் இல்லை.

பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் கொறடா அனுமதியளிக்கும்போதுதான் நான் பேச முடியும். என்று மு.லீக் தலைவர் காதர் மைதீன் கூறியதையே கேள்வியும் நீயே பதிலும் நீயே என்ற தலைப்பில் அவர்கள் கேள்விக்கு பதிலாக அனுப்பினேன். இதற்கு அவர்களால் முறையாக பதில் சொல்ல முடியவில்லை.

முஸ்லிம் சமுதாயத்தின் பெயரால் சீட்டு வாங்கி விட்டு பிற கட்சிகளின் அடிமையாக இருக்கக் கூடாது என்பதால்தான் ம.ம.க. அவர்களை விட்டும் தனித்து நிற்கிறது.

பதவி கிடைத்தால் போதும் என்றிருந்தால் உதய சூரியனில் நின்றிருக்கலாம். வக்பு வாரியத்தை தக்க வைத்திருக்கலாம். உலமாக்கள் வாரியத்தையும் பெற்றிருக்கலாம். எம்.பி.யாகவும் ஆகி இருக்கலாம்.

இப்பொழுது சொல்லுங்கள் இனமானமிக்க சமுதாய சிங்கங்கள் யார். அசிங்கங்கள் யார்.
தன்மானத் தலைமை எது? பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் தலைமை எது?

10 லட்சமா? 7 லட்சமா?
http://fazlulilahi.blogspot.com/2006/07/10-7.html

Comments

ஃபஸ்லுல் இலாஹி மனிதநேய மக்கள் கட்சிக்கு தவறான வழிகாட்டுகிறார். இந்த பயணம் இது விபத்தில் முடியும்.
ஃபஸ்லுல் இலாஹிக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள முரண்பாடு, தனிப்பட்ட பகையே. அவ்வாறே, அவருக்கும் மவ்லவி‌ பி.ஜெவுக்கும் உள்ள முரண்பாடும் தனிப்பட்ட பகை தான். இவற்றில் எதுவும் கொள்கை ரீதியான முரண்பாடு இல்லை. அவை கொள்கை ரீதியான முரண்பாடு தான் என்றால், முஸ்லிமல்லாத தலைவர்களுக்கெல்லாம் தன் இல்ல திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய இவர் பி.ஜெவுக்கு ஏன் திருமண அழைப்பிதழ் அனுப்பவில்லை? தன் தனிப்பட்ட பகையை சமுதாயப் பிரச்சினையாக இவர் வெளிப்படுத்துகிறார். இதுவா ஏகத்துவ எழுச்சி? இதுவா நபிவழி?
Unknown said…
சாரியாக சொன்னீர்கள் பஸ்லுல் இலாஹி நபி வழி என்று அதிகம் பேசுகிறார் ஆனால் அவர் வாழ் நாளiல் நபிவழியை பின்பற்றவில்லை என்பதே உண்மை பைசல் உணவகத்தில் துபையில் வேலை செய்யும் போது ஒவ்வொரு தேவையாற்ற செய்தி தகவல்களை அவர் போட்டோ காப்பி எடுத்து மக்களுக்கு பரப்பும் இவர் இன்று இணையத்தில் ஒவ்வொரு இயக்கம், கழகம், அமைப்பு, ஜமாத் என்று தாக்கி வருகிறார். இதுவா நபி வழி, இவரின் நடவடிகையை நன்கு உணர்ந்தவர்கள் தமுமுக தலைமை நிலைய நிர்வாகிகள், சட்டமன்ற தேர்தலில் இவர் முஸ்லிம் லீக் பக்கம் இருந்து கொண்டு பாளையகோட்டையில் தேர்தலில் நிற்கிறேன் என்றார் இவரின் கல்வி மற்றும் நடவடிகையை பார்த்து என்னவோ முஸ்லிம் லீக் கழற்றி விட்டது. அத்துடன் தமுமுகவிற்கு வந்த ஒட்டிக் கொண்டார். இப்போது தமுமுக மனித நேய மக்கள் கட்சி என்று அரசியல் பிரிவு தொடங்கியதால், பதவி கிடைக்கும் என்று தாஜா செய்து வருகிறார். மார்க்க அறிஞர் பி.ஜே. மற்றும் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் போன்றவர்களை விமர்சனம் செய்து வருகிறார். நாளை ம.ம.கட்சியிடம் தேர்தலில் நிற்கிறேன் என்று விண்ணப்பம் கொடுப்பார் இவரின் வாழ்க்கை (என்னை பற்றி படித்து பாருங்கள் எங்குகெல்லாம் சுற்றி வந்துள்ளார் என்று உங்களுக்கு புரியும்) சரித்திரத்தை விளங்கிய மமக நிச்சியம் இவரை ஏற்று கொள்ளாது. அப்போது பாருங்கள் இந்த பஸ்லுல் இலாஹியின் நடவடிகை எப்படி இருக்கிறது என்று, ஏகத்துவம் அல்லது நபி வழி என்று சொல்லி தன் சுயநலத்தை கருத்தில் கொண்டு தமுமுக, மமக வை விமர்சனம் செய்வார் நோட்டீஸ் அடித்து ஊர் எல்லாம் பரப்புவார். பஸ்லுல் இலாஹி இனியாவது இது போன்ற அவதூறுகளை விட்டு விட்டு மறுமைக்கு கொஞ்சம் வேலை செய்யுங்கள்.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு