சின்னம் ஒரு சின்னப் பிரச்சனையா? சின்ன விஷயமா?

வக்பு வாரிய தலைவர் பொறுப்பையும் திரும்ப கொடுத்து தெருவில் நிற்பது நியாயம்தானா?

16-04-2009 அன்று துபை எம்.எம்.கே. நிகழ்ச்சியில் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி ஆற்றிய உரை.

''இதுகாலம் வரையில் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகள் ஒரு ஸீட் வழங்குவதும் இரட்டை இலை அல்லது உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதும்தானே வழக்கமாக இருக்கிறது?''

மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்றுதானே கோர்ட் தீர்ப்பு உள்ளது.

1906 ஆண்டு துவங்கப்பட்ட கட்சி இ.யூ.முஸ்லிம் லீக். 100 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க கட்சியே தனி சின்னத்தில் போட்டியிடவில்லை.

அப்துஸ்ஸமது ஸாஹிப், அப்துல் லத்தீப் ஸாஹிப், காதர் மைதீன் ஸாஹிப் என முஸ்லிக் லீக்கின் தலைவர்களாக இருந்த எல்லா ஸாஹிப்களும் இரட்டை இலை, உதய சூரியன் என பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டி இட்டுதான் பாராளுமன்றத்துக்கும் சட்ட மன்றத்துக்கும் போயிருக்கிறார்கள்.

அப்படி இருக்க துவங்கி 6 மாதம் கூட் ஆகாத த.மு.மு.க.வின் மனித நேய மக்கள் கட்சி சின்னம் என்ற ஒரு சின்ன பிரச்சனைக்காக கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது நியாயம்தானா?

12 சட்டமன்ற சீட் வாய்ப்புகளை நழுவவிட்டது நியாயம்தானா?

ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிப்போம் என்றீர்கள் அ.தி.மு.க. 2 எம்.பி. சீட் தருவேன் என்றதே. சட்ட மன்ற அளவிலே இது 12 சீட் அல்லவா. 1977இல் இருந்து முஸ்லிம் லீக்குக்கு 2 சட்டமன்ற சீட்கள்தானே கிடைத்து வருகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சட்ட மன்ற தேர்தலில் 12 சட்டமன்ற தொகுதிகளை கேட்கலாமே. சின்னம் என்ற சின்னப் பிரச்சனைக்காக 12 சட்டமன்ற சீட் வாய்ப்புகளை நழுவவிட்டது நியாயம்தானா?

கொறடா அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்றால் நமது செல்வாக்கை பயன்படுத்தி கட்சி தலைவர்களிடம் சொல்லி நேரம் பெறலாமே. எந்த வழியிலாவது ஒரு முறை சென்று விட்டு பேச முடியவில்லை என்பதை மக்கள் மன்றத்தில் வைத்து விட்டு திருமாவளவன் போல் இடைத் தேர்தலுக்கு வழி வகுத்து இருக்கலாமே.


''ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும்இ சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்'' என குலாம் நபி ஆசாத் கூறியதை எடுத்துரைத்த பின்னரும் இந்த வாய்ப்புகளையும் நழுவவிட்டது நியாயம்தானா?

சின்னம் என்ற ஒரு சின்னப் பிரச்சனைக்காக இத்தனை வாய்ப்புகளையும் நழுவ விட்டு இருந்த வக்பு வாரிய தலைவர் பொறுப்பையும் திரும்ப கொடுத்து தெருவில் நிற்பது நியாயம்தானா? இதுவே அமீரகம் வந்த பின் 24 மணி நேரத்துக்குள் அரபக வாழ் தமிழ் மக்களிடமிருந்து வந்த கேள்விகள்.

நாட்டிலே எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ பதவிகளும் காத்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறி தள்ளி விட்டு ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பில் ஒருவர் உறுப்பினாராக இருக்கிறார் என்றால் என்ன காரணம். லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்ன முஸ்லிம் நாம். எனவே நாம் தலைவராக ஏற்கக் கூடியவரும் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா சொன்ன முஸ்லிமாக இருக்க வேண்டும். இந்த உயரிய எண்ணத்திலும் ஆயத்து ஹதீஸ்களின்படியும்தான் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பில் போய் உறுப்பினாராக இருக்கிறார்.

அந்த முஸ்லிம் அமைப்பின் தலைவர் வேறு ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டி இடுவதாக இருந்தால் அவர் செய்ய வேண்டிய முதல் பணியே அவரது தரத்தை தாழ்த்துவதுதான். முஸ்லிம் அமைப்பின் தலைவராக இருப்பவர் சின்னம் தரும் கட்சியில் சாதாரண உறுப்பினராக ஆக வேண்டும். இது தரம் தாழ்ந்த செயலா இல்லையா? இது சின்ன விஷயமா?

இரட்டை இலையில் நிற்பதாக இருந்தால் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்னவர் காஞ்சித் தலைவனின் புகழ்பாடி புரட்சித் தலைவர் வழி நடப்போம் என்றும், அல்லாஹு அக்பர் என்றவர் அண்ணா நாமம் வாழ்க என்றும், இஸ்லாமிய(யிஸம்)கொள்கை ஓங்குக என்றவர் அண்ணாயிஸம் ஓங்குக என்றும், எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) என்றவர் எங்கள் தலைவர் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்றுள்ள அ.தி.மு.க. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். சின்னப் பிரச்சனையா?இது சின்ன விஷயமா?

உதய சூரியன் சின்னத்தில் நிற்பதாக இருந்தால் வங்கக் கடலோரம் துகில் கொள்ளும் அண்ணாவை தொழுதிடுவோம். கலைஞர் இல்லம் இருக்கும் கேபாபலாபுரத்தை நோக்கி வணங்கிடுவோம் என்றுள்ள தி.மு.க. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். இது சின்னப் பிரச்சனையா? இது சின்ன விஷயமா?

உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று தீர்ப்பு பெற்றது எப்படி?


மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று ஹை கோர்ட் தீர்ப்புதான் உள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போன வழக்கு நிலுவையில்தான் உள்ளது. மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று ஹை கோர்ட் தீர்ப்பு பெற்றது எப்படி?

தமிழகத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் என்பது சமுதாய தொண்டு நிறுவனம்தான். தமிழகத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி அல்ல. காதர் மைதீன் இ.யூ.முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சிக்கு தலைவர் அல்ல. இ.யூ.முஸ்லிம் லீக் என்ற சமுதாய தொண்டு நிறுவனத்தின் தலைவர்தான்.

மு.கருணாநிதியை தலைவராகக் கொண்ட தி.மு.க. என்ற அரசியல் கட்சிதான் காதர் மைதீன் உறுப்பினராக இருக்கும் அரசில் கட்சி. இவ்வாறு கூறிதான் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று கோர்ட் தீர்ப்பு வாங்கி உள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் என்ற புகழ் கூறி உரையை துவங்க வேண்டிய காதர் மைதீன் கோபலாபுரத்திலிருக்கும் கலைஞர் புகழ் பாடி பாராளுமன்ற உரையை துவங்கினார். இதை சி.எம்.என். சலீம் வெளியிட்ட காதர் மைதீன் பாராளுமன்ற உரை சி.டி.யில் பார்க்கலாம்.

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற அரசியல் அமைப்பாக முஸ்லிம் சமுதாய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். இந்த நோக்கில்தான் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் ரத்த வியர்வையில் துவங்கப்பட்டது த.மு.மு.க.வின் மனித நேய மக்கள் கட்சி. தேர்தல் ஆணைய அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. இரட்டை இலையிலோ கருணாநிதியின் எச்சி இலையிலோ நின்றிருந்தால் ஜவாஹிருல்லாஹ்வும் ஹைதர் அலியும் எம்.பி. ஆகி விடலாம் சமுதாயம் எம்பியாக முடியாது. எனவே சின்னம் ஒரு சின்னப் பிரச்சனையா? சின்ன விஷயமா? சிந்தித்து முடிவு செய்யுங்கள்.


fromAஇது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?
////
இரட்டை இலையில் நிற்பதாக இருந்தால் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்னவர் காஞ்சித் தலைவனின் புகழ்பாடி புரட்சித் தலைவர் வழி நடப்போம் என்றும், அல்லாஹு அக்பர் என்றவர் அண்ணா நாமம் வாழ்க என்றும், இஸ்லாமிய(யிஸம்)கொள்கை ஓங்குக என்றவர் அண்ணாயிஸம் ஓங்குக என்றும், எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) என்றவர் எங்கள் தலைவர் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்றுள்ள அ.தி.மு.க. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். சின்னப் பிரச்சனையா?இது சின்ன விஷயமா? //////
தாங்கள் சொல்வது சரி தான். இன்னொன்று தெரியுமா ? தனி சின்னத்தில் போட்டியிட்டாலும் முஸ்லீம் அமைப்பின் சார்பாக வென்றாலும் பாராளுமன்றத்தில் எம்.பி யாக பதவியேற்கும் போது அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு நடப்பேன் என்று தான் பைஅத் (உறுதிமொழி) கொடுக்க முடியுமே தவிர குரான் - ஹதீஸ் படி நடப்பேன் என கூற முடியாது? இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

!fromAsu நியாயமான நச் கேள்வி

From: TAJUDEEN
Date: 2009/4/18
Subject: Re: {TMB - 2869} Re: தனி சின்னத்தில் போட்டி
To: tamilmuslimbrothers@googlegroups.com



அம்பேத்கர் ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு நடப்பேன் என்று தான் பைஅத் (உறுதிமொழி) கொடுக்க முடியுமே தவிர குரான் - ஹதீஸ் படி நடப்பேன் என கூற முடியாது? இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

என்று கேட்டுள்ள பைவ் ரோஸ் கான் ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு உட்பட்டுதான் இந்திய அரசிடம் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு வேலைக்கு வந்துள்ளார். இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

எனவே அவரது கேள்வி நியாயமான நச் கேள்வி! யாக ஆக வேண்டுமானால் ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு உட்பட்டு இந்திய அரசிடம் எடுத்த பாஸ்போர்ட்டை கிளித்து எறிய வேண்டும் செய்வாரா?

இப்படி பேசுபவர்கள் நடத்தும் பத்திரிக்கை சம்பந்தமான வழக்குகளை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட கோர்ட்டுகளில்தான் வழக்கு தொடர வேண்டும் என்று எழுதுகிறார்கள். அங்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலா தீர்ப்பு வழங்குகிறார்கள். பைவ் ரோஸ் கான் குறிப்பிட்டுள்ள ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு உட்பட்டுதான் தீர்ப்பு வழங்குகிறார்கள். இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

ம.ம.க.வினர் பாராளுமன்றம் சென்றால் அல்லாஹ்வின் பெயரால் உறுதி மொழி எடுப்பார்கள். நாத்திகர்களை பின்பற்றி உளப்பூர்வமாக என்றோ மனசாட்சிப்படி என்றோ உறுதி மொழி கொடுக்க மாட்டார்கள். இதுவே குர்ஆன் ஹதீஸ்களை நிலை நாட்டுவதற்கான முதல் பணியாகும்.

Regards,
A.Tajudeen
--
Thanks & Regards,
A.TAJUDEEN
00971502077067

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.