தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்

தேர்தல் செய்திகள்
http://election.dinamalar.com/news/1543/மனிதநேய-மக்கள்-கட்சி-தலைமையில்-4வது-அணி!-:-தி.மு.��.html
மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் 4வது அணி! : தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்
சென்னை : லோக்சபா தேர்தல் களத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இதில், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல் வேறு சமூக அமைப் புக்கள் இணைந் துள்ளன. இந்தக் கூட்டணி, தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., வுக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள், தே.மு.தி.க., என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது, மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து, நான்காவது அணியாக களம் இறங்குகின்றன. தமிழக முஸ்லிம்களை ஒன்று திரட்டி, அவர்களை சமூக, பொருளாதார நிலையில் முன்னேற்ற, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டது. கடந்த தேர்தல்களின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு இக்கட்சி மாறி மாறி தார்மீக ஆதரவு அளித்து, அக்கட்சிகளை வெற்றியடையச் செய்து வந்தது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளிடம், தங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கான சலுகைகளைப் பெறுவதற்காக, கடந்த பிப்ரவரியில் தாம்பரத்தில் நடந்த மாபெரும் மாநாட்டில் த.மு.மு.க., என்ற அமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பாக மாறியது. மனிதநேய மக்கள் கட்சி கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் கணிசமாக ஓட்டுக் களை கொண்டுள் ளது. அதிக அளவில் முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ள தஞ்சாவூர், திருச்சி, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மத்திய சென்னை ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக இக்கட்சி உள்ளது. லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ள முதலில், தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கூடுதல் தொகுதிகள், தனிச் சின்னம் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது. தி.மு.க., இக்கோரிக்கையை நிராகரித்தது. அ.தி.மு.க.,வும் ஒத்து வராததால், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்தது. தற்போது, தமிழகத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது.

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு எட்டப்பட்டது. அடுத்ததாக, கொங்கு வேளாளர் பேரவை உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நெல்லை தொகுதி சமத் துவ மக்கள் கட்சிக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகத்திற்கும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ள மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறையில் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும், மத்திய சென்னையில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஹைதர்அலியும், ராமநாதபுரத்தில், அந்த மாவட்டச் செயலர் கலிமுல்லாகானும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக லோக்சபாத் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க.,வுக்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில தொகுதிகளில் நான்காவது அணியால் அ.தி.மு.க., விற்கும் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.


வாசகர் கருத்து
It will be a powerful party in Tamilnadu. DMK & ADMK will loose their vots. MMK alliance has got a chance to win in many places.
by M Azaghu Rasa,India
Posted on ஏப்ரல் 12,2009,04:48 IST

திராவிட இயக்கங்களுக்கு பல்லக்கு தூக்கி, அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்து அழகு பார்த்த முஸ்லிம் சமுதாயத்திற்கு, உபகாரமாக திராவிட இயக்கங்கள் செய்திட்ட பணிகளை விட தந்திட்ட வேதனைகளே அதிகம். இவற்றையெல்லாம் களைந்திட தமிழக அரசியல் வானில் புதியதொரு விடியலாக, உருவாகியிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி-யின் வலுவான தொண்டர் கட்டமைப்பை, உளவுத்துறை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் உணர மறுத்தது தி.மு.க தலைமையிலான அணிக்கு மிகுந்த சறுக்கலை ஏற்படுத்தும், இதை முதல்வர் மிக தாமதமாக உணர்வார். 'ஒரு தொகுதியிலும் நிற்க மாட்டோம், உதயசூரியன் சின்னத்திலும் நிற்க மாட்டோம் ' - என்று உரத்து சொன்ன மனிதநேய மக்கள் கட்சி-யின் நிர்வாகிகளை பாராட்டுகின்றேன். அன்புடன் சவுதி அரேபியா
by Mr பரங்கிப்பேட்டை ஹம்துன் அப்பாஸ்,Saudi Arabia

Comments

Unknown said…
மனித நேய மக்கள் கட்சி என்பது எந்த வித அரசியல் மாற்றத்தை தரமுடியாது காரணம் எப்படி ஆர்.எஸ்.எஸ் இந்து சமுதாயத்தின் மொத்த பிரதிநிதியாக இருக்க முடியாதோ அதைபோல் இந்த மம கட்சி ஒன்றும் மொத்த இஸ்லாமிய சமுதாயத்தில் பிரதிநிதியாக இருக்க முடியாது. காரணம் இன்றைய கால கட்டத்தில் பல இளைஞர்களை தமுமுக என்ற போர்வையில் தீவரவாத சிந்தனைகளை ஊட்டி அப்பாவி இளைஞர்களை சிறைக்கு தள்ளியது, இன்று வரை பல இளைஞர்கள் இவர்கள் கொம்பு சீவி விட்டதன் காரணத்தால் சிறையில் தன் வாழ் நாட்களை கழித்து வருகிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் மதம் அல்லது சாதியின் பெயரால் எந்த நேரத்திலும் பிரிவினை அல்லது அதற்கு துணை போக கூடாது. ஆனால் தமுமுக என்ற பெயரில் சமுதாயத்திற்குள் பல பிரிவினைகளை உண்டாக்கி என்று ஒன்றாக இருந்த சமுதாய மக்கள் விரோதம் பாராட்டி வருகிறார்கள் இதுதான் இவர்கள் முஸ்லிம் முன்னேற்றம் என்ற வார்த்தை ஜலத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் குழப்பத்தை தோற்றுவித்தார்கள். கோவை குண்டு வெடிப்பை காரணம் காட்டி பல ஊர்களலும், வெளிநாடுகளிலும் பல கோடி பணம் சேகரித்து, அந்த பணத்தை அவர்களின் சொந்த வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்களே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த தொகை போய் சேரவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தமுமுக வை தடை செய்ய வேண்டும் என்ற வாதம் வரபெற்று திமுக அரசுக்கு பரிசீலனையில் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மம கட்சிக்கு 20 தொகுதிகளில் கணிசமாக ஒட்டுக்களை கொண்டுள்ளது என்றால் எந்த கணிப்பில் இப்படி ஒட்டுகள் இருக்கிறது என்று நாம் முடிவுக்கு வரமுடியும், இஸ்லாம் பேசும் மக்களிடையே இவர்களுக்கு ஒன்றும் செல்வாக்கு இல்லை அப்படி இருக்கும் இவர்கள் எப்படி மற்ற சமுதாய மக்களடம் ஒட்டுகளை பெற முடியும். எப்படியும் இந்த தேர்தலில் அவர்களன் உண்மை நிலை மக்களுக்கும், நாட்டுக்கும் தெரியவரும் பொறுத்து இருந்து பார்போம். மொத்தத்தில் இந்த தமுமுக, மம கட்சி ஒன்றும் முஸ்லிம் சமுதாயத்தின் குரல் அல்ல என்பது தான் என்போன்ற எந்த அரசியல் சார்பு அற்றவரின் கருத்து. இதுவே அனைவர்களின் உள்உணர்வாக இருக்கும்.

by M Abu Jabbar,India
Unknown said…
சமுதாய கவலை கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு விதிகளை கீழே பாருங்கள். இப்போது சொல்லுங்கள் யாருயெல்லாம் சமுதாய பெயரில் பதவிக்கு அழைகிறார்கள் என்று. மம கட்சி தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட பொது செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் எங்கே? தமுமுக விதிகளை மதிப்பதற்காகவே தான் தனியாக அரசியலுக்கு என்று தனீ நிர்வாகம் நாம் அறிவித்தோம் ஆனால் இப்போது பொது செயலாளர் முதல் அனைவர்களையும் ஒரம் கட்டிவிட்டு தமுமுக நிர்வாகிகள் ஏன் தேர்தலுக்கு செல்ல வேண்டும். நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்கள் சகோதரரே?

விதி : 2 கொள்கை மற்றும் நோக்கம்

பிரிவு 3: (அ) நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்பு கூட்டுறவு சங்க அமைப்புகள் ஆகிய எந்தத் தேர்தல்களிலும் கழகம் போட்டியிடாது.

*அமைப்பின் கொள்கைக்கு எதிராக அமைப்பின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் போட்டியிடுவது எப்படி? விளக்குவார்களா?
விதி : 25 தேர்தல்

பிரிவு : 6 கழகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பவர்கள், அரசியல் கட்சி எதிலும் பொறுப்பு ஏற்றால் கழகத்தில் அவர் வகிக்கும் பொறுப்பு தானாக ரத்தாகிவிடும். தலைமை நிர்வாகக் குழுவினால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கும் இது பெருந்தும்.

மேற்கண்ட விதியின்படி, அரசியல் கட்சியான ம.ம.க. வில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் சகோதரர் ஜவாகிருல்லாஹ், மற்றும் சகோதரர் ஹைதர் அலி ஆகிய இருவரின் பதவிகளும் தானாகவே த.மு.மு.க.வில் காலாவதியாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?

நம்மிடையே வெட்டி விவாதம் செய்து நம்மிடையே குழப்பமும் தனிப்பட்ட முறையில் விரோதமும் பாராட்டி திரிவது என்னுடைய நோக்கமல்ல, உங்களை போன்று சமுதாயத்திற்கு எதுவும் நல்ல நன்மை கிடைக்க வேண்டும் என்பதால் தான் என்னுடைய ஆதங்கதை கொட்டி தீர்கிறேன். உங்களையோ அல்லது வேறு யாரையும் தனியாக தாக்க வேண்டும் என்ற நோக்கமல்ல எனக்கு

பதவி ஆசையில்லை என்றால் ஏன் வாரிய பதவியை வாங்கி அதில் பலன் அடைய வேண்டும்? அரசு காரில் வரும் போது ஏன் இந்த பந்தாவான நடவடிகை, கடந்த இருவாரங்களுக்கு முன் நடத்த உண்மை சம்பவத்தை உங்கள் தெரிவிக்கிறேன். வாரிய தலைவர் பதவியில் இருந்த தமுமுக பொது செயலாளர் அரசு கொடுத்த சிகப்பு லைட் காருடன் மண்ணடியில் தமுமுக அலுவலகத்திற்கு வரும் சமயத்தில் நம்மை போன்ற இளைஞர்கள் வழியில் நின்று பேசிக் கொண்டு இருக்கும் போது இவர் கார் வரவே இளைஞர்கள் வழி மறித்தார்கள் என்று தன் பதவியை தவறாக பயன்படுத்தி போலீஸ் வரை சென்றவர் தான் எந்த தமுமுக பொது செயலாளர். அவர் வரும் சமயத்தில் பாதுகாப்பு இல்லை என்ற பிரமையை உண்டு செய்து பதவியில் இருக்கும் கடைசி நாள் வரை பாதுகாப்புக்கு என்று சில போலீஸ் காரர்கள் தமுமுக அலுவலகம் போவதற்கு முன் நின்று கொண்டு இருந்தார்கள் இன்று பதவி இல்லை பாதுகாப்பு போலீஸ் இல்லை ஆனால் இளைஞர் மண்ணடியில் தான் உள்ளார்கள். பாருங்கள் நம் இளைஞர்களையே போலீஸ் மூலம் அலைகிழிக்க வைத்தவர் தான் இவர்.

பதவிக்கு அலையவில்லை என்றால் ஏன் திமுக கொடுத்த சீட்டை வாங்கி தேர்தல் வெள்ளோட்டமாக நின்று பார்த்து இருக்கலாமே?

மம கட்சி மாநில நிர்வாகிகளை ஏன் தேர்தலில் நிறுத்தவில்லை. வேலு\ர் தொகுதியை கேட்டு திரிந்தவர் தான் தமுமுக தலைவர், கிடைக்கவில்லை என்பதால் தான் அங்கும் இங்கும் அலைத்தார்கள். வெட்கமில்லாமல் பிபிசி பேட்டியில் திமுக, அதிமுகவிடம் கூட்டணிபேசுகிறோம் என்று பிசிசி பேட்டி எடுத்தவரிடமே தலைகுனிந்து நின்றார்கள். ஜெ-யிடம் தொகுதி கேட்டு சென்ற போது வாரிய பதவியை விட்டு வாங்கங்கள் என்ற உடன் பொது செயலாளர் வெளiநாட்டுக்கு ஒடிவிட்டார். திமுகவிடம் எங்களiடம் இத்தனை கோடி உள்ளது தேர்தலுக்க செலவு செய்ய என்று காட்டியது எப்படி? இது உண்மையாக இருந்தால் இவர்களுக்கு இத்தனை கோடி எங்கிருந்து வந்தது.

மொத்தத்தில் மம கட்சியின் மாநில நிர்வாகிகள் எங்கே? அவர்கள் வேறு கட்சியோ அல்லது கழகமோ தொடங்கிவிட்டார்களா?
நியாயமாக அவர்களை தான் தேர்தல் நிறுத்தி அரசியல் செய்ய வேண்டும். தமுமுக மாநில நிர்வாகிகள் அவர்களுக்கு ஆலோசனையும், தேர்தல் வேலையும் செய்து வெற்றி பெற துணை செய்ய வேண்டும் அதை விட்டு விட்டு தமுமுக விதிகளுக்க மாறாக அவர்களே பதவி ஆசையுடன் அலைவது நம் சமுதாயத்திற்கு தெரியாமல் இல்லை. என்னை போன்ற அல்லது உங்களை போன்றவர்கள் தான் நம்முடைய உழைப்பையு பொருளாதரத்தையும் கொடுத்து நம்மை நாம் சிறுமை படுத்து கொள்கிறோம். சிந்திப்போம் சகோதரர் அவர்களே இவர்களுக்கு கொடி பிடித்தது போதும் நம் வேலையை பார்த்து நம் குடும்ப சுமையை சுமப்போம். இவர்கள் பதவிக்கு அடித்து கொள்வதற்கு நாம் ஏன் சண்டை போட்டு கொள்ள வேண்டும்.

இவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் மம கட்சி தொடங்கிய போது அறிவித்த மம கட்சியின் பொது செயலாளர் சமதை தேர்தலில் நிறுத்தட்டும் நாம் அவர்களுக்கு துணை நிற்போம். தமுமுக தலைவர் பொது செயலாளர் அல்லது மாவட்ட தலைவர் செயலாளர் தேர்தலில் நின்றால் நிச்சயம் இவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டவர்களே சமுதாய கவலை இவர்களுக்கு இல்லை.

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.