அல்லாஹ்வின் திருப்பெயரால்..

பேரன்பிற்குரிய சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நான் அறிந்த வரையில் நீங்கள் இளம் வயதிலேயே நல்ல மார்க்கம் ஞானம் உள்ளவர். நல்ல தாயி, நல்ல சமுதாயப் பற்றுள்ளவர். சமீபத்தில் தமுமுகவில் இருந்து சகோ. பி.ஜெ. அவர்கள் விலகிய பின்னர், நடக்கும் சம்பவங்களும், அதற்கு உங்கள் போன்றவர்கள் சகோ. பி.ஜெ. அவர்களின் சமுதாயத்தை அழிக்கும் தீவிரவாதத்துக்கு துணை போவதும் எந்த வகையில் நியாயம்?

சகோதரர் பி.ஜெ. அவர்கள் தானாகவே விரும்பி தமுமுக-வில் இருந்து விலகியுள்ளார்? பின்னர் தமுமுக தன்னை விலக்கி விட்டதாக கூறுகிறாரே ஏன்? அத்துடன் தமுமுக நிர்வாகிகளின் ஒருவரான பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை விசுகிறாரே ஏன்?. அவரது நடவடிக்கைகளுக்கு நீங்களும் துணை போகின்றீர்கள் இது நியாயமா? இந்தக்காலக்கட்டத்தில் தமுமுக-வின் செயல்பாடுகள் சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா? தமுமுக என்ற பேரியக்கம் அவசியத்திலும் அவசியம் என்பது அனைவருக்கும், ஏன் பி.ஜெக்கும் நன்றாகத் தெரிந்திருந்தும், தமுமுகவை அழித்தே தீருவேன் என்றும், தமுமுகவைப் பாடையில் ஏற்றுவேன் என்றும், தமுமுகவை அழிப்பதில் அபுஜகலை விட மோசமாகச் செயல்படுவேன் என்றும் பேசிக்கொண்டும், சுளுளு சைவிட மிக மோசமாக செயல்பட்டு வருகின்றாரே பி.ஜெ ஏன்? தமுமுகவை அழிப்பதில் பி.ஜெ.க்கு எங்கிருந்து நிர்பந்தம் வந்தது? இவை எதையும் யோசிக்காமல் ஏன் அவருக்கு துணை போகின்றீர்கள்?
தமுமுக தலைவர் பேர. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மீது குற்றம் இருப்பின், பொதுக்குழுவையோ அல்லது நிர்வாகக் குழுவையோக் கூட்டி விவாதித்துத் தக்க பரிகாரம் கண்டிருக்க வேண்டுமே பி.ஜெ.? அவருக்கு சமுதாய அக்கறை இருந்தால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால், பி.ஜெ. நல்ல முடிவு கண்டு சமுதாய ஒற்றுமையை காப்பாற்றியிருக்க வேண்டும், அல்லது உங்கள் போன்றவர்கள் இதுவிசயத்தில் ஒற்றுமை உண்டு பண்ண பாடுபட்டிருக்க, வேண்டும். இவை எதையுமே செய்யாமல் சகோ. பி.ஜெ. அவர்களுக்கு துணை போவது நன்றாகவா உள்ளது.
சமீபத்தில் வெளியான உங்கள் சீ.டிக்காளன 'உண்மையை மட்டுமே பேசுவோம்' என்ற சீடியில் உங்கள் பேச்சை கேட்கும் போது உண்மையிலேயே அனைவரும் வேதனைப்படத்தான் செய்வார்கள். ஏனெனில் அந்த சீடிக்களில் பொய்யையும், குதர்கத்தையும்மே பேசுகின்றீர்கள். உங்கள் பேச்சின் ஆரம்பத்தில் மிகவும் நியாயமாகவே ஆரம்பித்தீர்கள். பின்னர் போக, போக பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களை கிண்டல் செய்வதும், ஏளனம் செய்வதும்மாகவே உள்ளது. ஒரு இயக்கத்தின் செயல்பாடுகளையோ, அமைப்பின் நிர்வாகிகளையோ விமர்சிப்பதில் தவறு ஒன்றும் இல்லை! ஆனால் விமர்சிப்பவர் அந்த அமைப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் வேறு ஒரு அமைப்பின் பொருப்பில் இருந்து கொண்டு தமுமுகாவையோ அதன் நிர்வாகிகளையோ, விமர்சிக்க உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
பேரா. ஜவாஹிருல்லாஹ் கடந்த சில வருடங்களாக உணர்வு ஒற்றுமை இரண்டுக்கும் ஆசிரியராக பொருப்பேற்று அதைச் செவ்வனே நடத்தி வந்துள்ளார். அவர் கல்விப் பணி ஆற்றிக் கொண்டும், உணர்வு, ஒற்றுமை இரண்டிற்கும் வேண்டிய ஆக்கங்களைத் தயாரிப்பதில் எவ்வளவு கஷ;டப்பட்டு இருப்பார், என்பதை எங்கள் போன்றவர் நன்றாக அறிவோம். அவரது உணர்வை மதிக்காமல் எவ்வித INFORMATION--ம் கூறாமல் அப்பொருப்புக்களை சகோ. பி.ஜெ. தானாகவே எடுத்துக் கொண்டதால் உண்டான ஆதங்கத்தை வேறு யாரிடம் பகிர்ந்துக் கொள்வார்? அவர் என்ன கருத்தில் கூறினார் என்பதைக் கூடப்புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்கின்றீர்களே, இதைக்கூடச் சரிவர புரிந்து கொள்ள இயலாத நீங்கள் எப்படித்தான் மௌலவி பட்டம் பெற்றீர்களோ? எப்படித்தான் தவ்ஹீது மதரஸாவில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றீர்களோ? தெரியவில்லை.
உங்களுக்கு சம்பளம் தரும் முதலாளி பி.ஜெ. யாக இருக்கும் பட்சத்தில் பி.ஜெ. வைப் பாராட்டுங்கள், பொன்னாடை போர்த்துங்கள், கட்அவுட் வையுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் தமுமுகவையோ, அதன் நிர்வாகிகளையோ விமர்சிக்க நீங்கள் யார்?
குழம்பிய குட்டையில் மீன் பிடித்தவரை போதும், இனியும் சமுதாயத்தைக் கூறு போடத் துணை போகக் கூடாது என்பது தான் எம் போன்ற நடுநிலையாளர்களின் விருப்பம்.
தமுமுக என்ற பேரியக்கத்திற்கும், பி.ஜெ. என்ற தனிமனிதனுக்கும் நடக்கும் இந்த போராட்டத்தில் பி.ஜெ. உண்மையாளராக இருந்தால், நம்பிக்கைகுரியவராக இருந்தால், நேர்மையாளராக இருந்தால், வாக்கு சுத்தம் செயல் சுத்தம் உள்ளவராக இருந்தால் பி.ஜெ.பின்னால் தானே பொரும்பாளான தமுமுக நிர்வாகிகள் சென்றிருப்பார்கள்? பி.ஜெ. பின்னால் தானே பொரும்பாளான தமுமுக அனுதாபிகள் சென்றிருப்பார்கள். தனி மனிதனின் சுய நலனுக்காக ஒற்றுமையாக இருந்த சமுதாயத்தைக் கூறுபோட உங்களைப் போன்றவர்கள் துணை போகின்றீர்களே, நாளையை சமுதாயம் உங்களை பற்றி என்ன நினைக்கும்?
மேலும் தவ்ஹீது என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பேசி மெஸ்மெரிஸம் செய்து பாமரமக்களைக், குழப்பிவருகின்றீர்கள், கடந்த 5 மாதங்களாக எத்தனைத் தவ்ஹீது பிரச்சாரக் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளீர்கள், எத்தனை ஆயிரம் மாற்றுமதச் சகோதரர்களை இஸ்லாத்தினை ஏற்கச் செய்துள்ளீர்கள்? விளக்கம் தர இயலுமா? உங்களால் இயலாது. ஏனெனில் உங்களது நோக்கம் செயல் எல்லாம் தமுமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. இந்த ஒரே காரணத்துக்காக ஊர் ஊராக, தெருத் தெருவாக, ஓரங்க நாடகம் நடத்தி வருகின்றீர்கள். பி.ஜெக்கும், பி.ஜெயின் தொண்டர்களுக்கும், தவ்ஹீதுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் உங்கள் வார்த்தைக்ள வேறு, அதற்கு நேர் எதிரான கொள்கை கொண்டவர்கள் நீங்கள், நீங்கள் தவ்ஹீது பிரச்சாரம் செய்யும் அணுகு முறைகளை நாங்களும் நன்கு அpறவோம்!
சென்ற 2002 ஆண்டு சகோ. ஸைபுல்லா ஹாஜா அவர்கள் ரியாத் வந்த போது அவரது தவ்ஹீது கொள்கையின் தரத்தைப் பரிசோதித்த SHEIK ABU MUHANNATH, MANAGER CALL & GUIDANCE, NEW SENAYAH, RIYADH. அவர்களிடம் பட்ட அவமானங்கள் எங்களுக்கும் தெரியும். அதே சந்தர்பத்தில் என் மகள் திருமணத்தை முழு நபிவழி திருமணமாக காயல்பட்டினத்தில் நடத்த எண்ணி சகோ. சைபுல்லா ஹாஜா அவர்களின் வருகையைக் கேட்டேன் அவரும் வருவதாக வாக்களித்தார். அதன் பின்னர் மூன்று முறை போனிலும் ஈ-மெயிலிலும் தொடர்பு கொண்டோம். ரியாத் மத்திய மண்டல தமுமுக மூலமாக. பின்னர் தேதி முடிவான பின்னர் சைபுல்லா அவர்கள் வசம் INVITATION PRINT பண்ண வேண்டும், உங்களது பெயரை INVITATION-ல் போடலாமா? என்று கேட்டபோது, அவர் குறிப்பிட்ட தேதியில் தன்னால் வர இயலாது என்றும், தன் சார்பாகச் சகோ. எம்.ஐ. சுலைமான் வருவார் என்றும் எனவே எம்.ஐ. சுலைமான் பெயரை INVITATION-ல் போட்டுக் கொள்ளும்படியும் உறுதியளித்ததால், நானும் அவர் பேச்சை நம்பி எனது மகள் திருமணத்திற்காக அடிக்கப்பட்ட INVITATION CARD-ல் எம்.ஐ. சுலைமான் பெயரை PRINT பண்ணி இருவருக்கும் அனுப்பியும் வைத்தேன். பின்னர் திருமணத்திற்கு 4 நாட்கள் முன்னர் நான் இந்தியா வந்தவுடன் சம்பந்தப்பட்ட இருவரிடமும் பேசிய போது, இருவருமே தங்களால் வர இயலாது என்றும் வேறு ஏற்பாடு செய்து கொள்ளும் படியும் எனக்கு அனுமதியளித்தார்கள்(?) இது எந்த வகையில் தவ்ஹீது? புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய எனக்கும், என் இந்துமத உறவினர்கட்கும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து அவர்களையும் இஸ்லாத்திற்கு அழைக்க வேண்டியது உங்களின் கடைமையில்லையா? பின்னர் யாருக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கிறீர்கள்? நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய என்ன எதிர்பார்கிறீர்கள்? அலங்காரமான மேடையும் கண் சிமிட்டும், மின் விளக்குகளும் இருந்தால்தான் இஸ்லாமிப் பிரச்சாரம் செய்வீர்களா? இஸ்லாத்திற்காக உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்பவர்கள் போல் நாடகம் நடத்துகின்றீர்;களே இது ஏன்?
உறுதியளிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வர இயலாது எனில் அதைக் கூட முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்ற பொருப்புக் கூட இல்லாத நீங்கள் தவ்ஹீது பிரச்சாரகர்கள்? மக்கள் அனைவரும் உங்களை நம்ப வேண்டும் என்று கட்டளையிடுகின்றீர்களே இது எவ்வகைத் தவ்ஹீது, உங்களின் சுய நலனுக்காக, வார்த்தை ஜாலங்களால் அல்குர்ஆனையும் நபிவழியையும், புறந்தள்ளிவிட்டு, பாமரமக்களை ஏமாற்றும் நாடகம் அதிக நாட்கள் நீடிக்காது. மறுமைக்கு பயந்து கொள்ளுங்கள்.
வளர்ந்து வரும் ஒரு இயக்கத்தை அழிக்க வேண்டும் என விரும்பினால், அதற்கான காரணங்களை கடந்த காலங்களில் நிகழ்காலத்தில், அந்த இயக்கத்தால் சமுதாயத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை அவமானங்களை, துன்பங்களை கூறி மக்களை ஒன்று திரட்ட வேண்டும். உங்களாலும், பி.ஜெ. வாலும் தமுமுகாவினால் சமுதாயத்திற்கு இன்னல் உண்டு என்று நிரூபிக்க இயலாது. ஏனெனில் தன் செயலால் மாற்றுமதத்தவரிடமும் நல்ல மதிப்பையே பெற்று வருகின்றது தமுமுக.
எனவே தமுமுக என்ற பேரியகத்தை அழிக்க எண்ணியவர்கள், அதற்காக துணை போனவர்கள், துணை போய்க் கொண்டு இருப்பவர்கள் தான் அழிவார்கள். அத்தகையோர்தான் இம்மையில் சமுதாயதின் முன்பும், மறுமையில் அல்லாஹ்வின் முன்பும் குற்றவாளியாக நிறுத்தப்படுவார்கள்.
இன்ஷhஅல்லாஹ்
ABIRAMAM ABDULLAH
ROYAL SAUDI NAVAL FORCES
POST BOX# 02,
RIYADH: 11342
K.S.A.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.