அலாவுதீனும் அற்புத விளக்கமும்.

உண்மையான மனம் திறந்த மடல் 2.

அரங்கத்தில் த.ஜ.வின் துணைத் தலைவர் என்று கூறிக் கொண்டு அந்தரங்கத்தில் அறங்காவலராக பதிவு செய்துள்ள பீ.ஜைனுல்ஆப்தீன் உலவி அவர்களே!

சென்னையில் ஏ.எஸ். அலாவுதீன் தாக்கப்பட்டதாக பரப்பப்பட்ட செய்தியை உண்மைபடுத்த வேண்டும் என்ற நோக்கில் உள்ளீர்கள். எனவே நீங்கள் அபகரித்துள்ள வார இதழை அலாவுதீன் சிறப்பு இதழாக வெளியிட்டுள்ளீர்கள். 

அதில் உள்ளவற்றை உங்களைப் பற்றி தெரியாதவர்கள் நம்பலாம். உங்களைப் பற்றி தெரிந்தவர்கள் நம்புவார்களா? அலாவுதீன் சிறப்பு இதழில் உள்ளவைகள் யாவும் பொய்களே என்பதுதான் உங்களைப் பற்றி தெரிந்தவர்கள் நிலை. அதில் உள்ளவற்றை நம்ப வேண்டும் என்றால் உங்களுக்கு பிடித்தமான சத்தியத்தை  நீங்கள் செய்ய வேண்டும்.

நம்பவும் முடிந்ததில்லை. மறுக்கவும் முடிந்ததில்லை.

1997 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் தொடராக கொலைகள் நடைபெற்றது. அந்த நேரத்தில் இளைஞர்களை தூண்டி விட்டு ஜிஹாது பற்றியும் காவல்துறை அதிகாரிகளை இழிவு படுத்தியும் மேடைகளில் தீவிரமாக பேசி வந்த ஷம்சுல்லுஹா கைது செய்யப்பட்டார். 

அப்பொழுது 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் காசிப் பாண்டியன் என்று நீங்கள் ஆசிரியராக வேலை செய்த உணர்வு வார இதழின் முதல் பக்கம் தலைப்பாக எழுதி இருந்தீர்கள். அந்த நல்ல அதிகாரி மீது எமக்கு இருந்த நம்பிக்கையால் எம்மால் நம்பவும் முடிந்ததில்லை. அப்பொழுது உங்களை உண்மையாளராக கருதியதால் மறுக்கவும் முடிந்ததில்லை.

இன்ஸ் பெக்டர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டரா?

2001 டிசம்பரில் உங்களுடன் லுஹாவுக்கு மோதல் ஏற்பட்டது. 2002 ஜனவரியில்; துபை வந்த லுஹா உங்களைப் பற்றி பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அதில் ஒன்று பி.ஜே. இன்ஸ்பெக்டர் காசிப் பாண்டியன் பற்றி இல்லாததை எழுதி விட்டார். இன்ஸ்பெக்டர் காசிப் பாண்டியன் என்னிடம் எந்த லஞ்சமும் கேட்கவில்லை. லஞ்சம் கேட்டார் என்று பொய்யை எழுதி விட்டார் என்றார். இன்ஸ்பெக்டர் காசிப் பாண்டியன் எந்த அளவுக்கு நன்றிக்குரிய நல்ல அதிகாரி என்பதை 16-12-1997லேயே லுஹாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

லஞ்சம் கேட்டார் என்று வஞ்சகம் இல்லாமல் பொய்ச் செய்தி.

கோட்டூர் ரபீக்கால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்ற காலத்தில் எவ்வளவு பாதுகாப்பு தந்தார். மேடையில் பேசி முடித்ததும் கார் வரை வந்து உங்களை அனுப்பிவிட்டுத்தான் திடலை விட்டு போவார். அப்படிப்பட்ட நன்றிக்குரிய நல்ல அதிகாரியை. லஞ்சம் கேட்டார் என்று வஞ்சகம் இல்லாமல் பொய்ச் செய்தி எழுதிய நன்றி கெட்ட ஆள்  நீங்கள் 

அப்படிப்பட்ட நீங்கள்  இப்பொழுது ஆணையாளர் பாலசுப்ரமணியம் பற்றி எழுதியுள்ளதை எப்படி நம்ப முடியும். இன்ஸ்பெக்டர் காசிப் பாண்டியன் லுஹாவிடம் லஞ்சம் கேட்டார் என்று முபாஹலா பண்ணுவீர்களா? இன்ஸ்பெக்டர் காசிப் பாண்டியன் லஞ்சம் கேட்டார் என்று பி.ஜே. பொய்யை எழுதி விட்டார் என நான் சொல்லவில்லை என்று லுஹாதான் முபாஹலா பண்ணுவாரா?

பத்திரிக்கைகள் பற்றிய அடிப்படை அறிவு.

பாளையங்கோட்டையில் நடந்த கொலைவெறி தாக்குதல் சம்பந்தமாக பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை தொகுத்து இது காவல்துறை கொடுத்திருந்தால் உண்மையானதாக இருந்திருந்தால் ஒரே மாதிரியாக இருக்கும், முரண்பாடுகள் உள்ளதால் நாடகம் என வாதித்துள்ளீர்கள். பத்திரிக்கைகள் பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்கள் இப்படி எழுதமாட்டார்கள். பத்திரிக்கைகளில் வரும் எந்தச் செய்தியாக இருந்தாலும் யார் கொடுத்த செய்தியாக இருந்தாலும் எல்லா பத்திரிக்கைகளிலும் ஒரே மாதிரியாக வராது.

நாகர்கோயிலைச் சார்ந்த டி.ஜே. ஜெயினுலாப்தீன்.

நீங்கள் கோட்டூர் ரபீக் குரூப்பால் வெட்டப்பட்டீர்கள். அந்தச் செய்தியை 8-7-1991 தினத்தந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகளில் 2 பேர் கூட்டத்தில் புகுந்து நாகர்கோயிலைச் சார்ந்த டி.ஜே. ஜெயினுலாப்தீனை அரிவாளால் மாறி மாறி வெட்டினார்கள். 

தடுத்த சம்சுல்குதாவுக்கும் வெட்டு விழுந்தது. ஜெயினுலாப்தீன் அல்ஜன்னத், அல்மஜனத் ஆகிய பத்திரிக்கைகளின் ஆசிரியர் ஆவார் என்று செய்தி வந்தது. அதேச் செய்தியை 10-8-1991 தினகரன் பத்திரிக்கையில் 2 பேர் அரிவாளுடன் சென்று ஜெயினுலாப்தீன் சம்சுல்-குதா ஆகியோரை வெட்டியதாக தெரிகிறது. படுகாயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர் என்று வந்தது.

நீங்கள் வெட்டுப்பட்டதாக கூறுவது நாடகம் என்று கூற முடியுமா?

உங்களுக்கு நாகர்கோயிலா? 3 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்தார்களா? கூட்டத்தில் நுழைந்தார்களா? உங்களை வெட்டும்போது லுஹா தடுத்தாரா? அரிவாளை கண்ட உடன் தலை சுற்று வந்து மயங்கி உட்கார்ந்தாரா? அல்மஜனத் என்ற பத்திரிக்கை எங்கு உள்ளது? 2 பேருமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தீர்கள்? இந்த முரண்பாடுகளை வைத்து இதை பொய் என்றும் உங்கள் சத்திய நேசன் என்ற மொட்டைக் கடிதத்தில் கேட்டிருந்த மாதிரி நீங்கள் வெட்டுப்பட்டதாக கூறுவது நாடகம் என்றும் கூற முடியுமா?

எது முரண்பாடு? எது பொய்?

எனவே பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த வித்தியாசமான செய்திகளை வைத்து பொய் என்றும் முரண்பாடுகள் என்றும் கூற முடியாது. பொதுவான பத்திரிக்கைகளில் ஒரு பத்திரிக்கையிலேயே 2 விதமான செய்திகள் வந்தாலும் முரண்பாடு என கூற முடியாது. 

எது முரண்பாடு? எது பொய்? ஓரு அமைப்பு சார்பான பொறுப்பாளர்களின் அறிக்கைகளில் அதன் பத்திரிக்கையில் ஒரு நிகழ்வு பற்றி வித்தியாசமான செய்திகள் வந்தால் அவைதான் முரண்பாடுகள் அந்த முரண்பாடுகள்தான் அந்த செய்தி பொய் என்பதற்கான ஆதாரங்கள். இந்த மாதிரியான முரண்பாடுகளும் பொய்களும் அலாவுதீன் சிறப்பிதழிலும் உங்களது அற்புத விளக்கங்களிலும் நிறையவே உள்ளது.

பொய்களை பரப்புவதில் போட்டி.

துபை ஜே.டி. சார்பில் ஒரு இலவச சி.டி. வெளியிட்டுள்ளார்கள் பார்த்தீர்களா? என்றார் நண்பர் மைதீன். தவ்ஹீது அமைப்பு என்று சொல்லிக் கொள்கிறார்களே! ஏதோ மார்க்க சம்பந்தப்பட்ட முக்கியமான மஸாயில் விஷயமாக இருக்கும். ஒரு காலத்திலும் இலவச சி.டி. வெளியிடாதவர்கள் மக்களுக்கு எளிதாக மார்க்க விளக்கம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக வெளியிட்டிருப்பார்கள் என்று நல் எண்ணம் வைத்தோம்.

வாங்கிப் பார்த்தால் பனைக்குளம் சாகுல் என்பவரை தலைவராககக் கொண்ட துபை ஜே.டி. பொய்களை பரப்புவதில் அவர்களது தலைமையுடன் போட்டி போட்டு சி.டி. வெளியிட்டுள்ளதை அறிய முடிந்தது.

திணறிய ஜே.டி. நிறுத்திய சி.டி.

அவர்கள் போட்டி போட்டது என்னவோ இல்லாததை சொல்லத்தான். ஆனால் அந்த சி.டி.யோ உங்கள் இருவரையும் அடையாளம் காட்டி விட்டது. சி.டி.யை பார்த்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஜே.டி. அந்த சி.டி.யை நிறுத்தி விட்டது. கேட்டால் தலைமையில் இருந்து நிறுத்த சொல்லி விட்டதாக கூறுகிறார்கள்.

இதை உறுதி செய்ய பேட்மாநகரம் பாரூக் அவர்களிடம் சி.டி.யை நிறுத்தி விட்ட எந்த விபரமும் கூறாமல் அலாவுதீன் தாக்கப்பட்டது சம்பந்தமாக ஜே.டி.யில் இலவச சி.டி. வெளியிட்டுள்ளார்கள் வாங்கி வாருங்கள் என்றோம். அவர் கேட்டதற்கும் தலைமையில் இருந்து நிறுத்த சொல்லி விட்டதாக கூறி உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அலாவுதீன் சம்பந்தமாக முதலில் பரப்பிய பொய்ச் செய்தி.

முக்கிய அறிவிப்பு மூலம் பொய்ச் செய்தி பரப்பி ருசி கண்டீர்கள். அந்த ருசியில்; அலாவுதீன் சம்பந்தமாகவும் பொய்ச் செய்தி பரப்புகிறீர்கள். அலாவுதீன் சம்பந்தமாக முதலில் பரப்பிய பொய்ச் செய்தி.

உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்ற 40 பேர் கொண்ட கும்பல் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில் உணர்வு அலுவலகத்துக்குள் அத்து மீறி நுழைந்தார்கள். அங்கிருந்த அலாவுதீனை தாக்கினார்கள் என்பதாகும். பிறகு தாக்குதல் ரோட்டில் நடந்தது என முரண்பட்டீர்கள். உணர்வு அலுவலகத்துக்குள் புகுந்து தாக்கினார்கள் என்று ஏன் பரப்பினீர்கள்?

நீங்கள் கொடுத்த செய்தியை விண் டி.வி.யில் வாசித்துள்ளார்கள்.

உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்ற 40 பேர் கொண்ட கும்பல் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில் உணர்வு அலுவலகத்துக்குள் அத்து மீறி நுழைந்தது. அங்கிருந்த அலாவுதீன் தாக்கப்பட்டார் என்று விண் டி.வி.யில் செய்தி வாசித்தார்கள்.

விண் டி.வி.யில் நீங்கள் நிகழ்ச்சி நடத்துவதால் அந்த நட்பின் அடிப்படையில் நீங்கள் கொடுத்த செய்தியை அவர்கள் வாசித்துள்ளார்கள். எனவே அவர்களை குறை சொல்ல முடியாது.

உங்களைப் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இதை நம்பவில்லை.

இதே வார்த்தையை எங்களால் ஹரமைன் என்றழைக்கப்பட்ட டி.என்.டி.ஜே. தலைவர் ஸைபுல்லா ஹாஜா அவர்களும் இந்த பொய்யை விண் டி.வி.யில் பேட்டியாக கூறுகிறார். எனவே நீங்கள் கொடுத்ததைத்தான் விண் டி.வி.யில் வாசித்துள்ளார்கள். அது அவர்கள் சேகரித்த உண்மைச் செய்தி அல்ல என்பதற்கு முதல் ஆதாரம்.

திருச்சியில் அழுது புகழ் பெற்ற பாக்கரும் திருச்சியில் விட்ட குறைகளை விண் டி.வி.யில் பேட்டி அளித்து நிவர்த்தி செய்கிறார். இந்த நாடகத்தை டி.வி.யில் பார்த்த த.மு.மு.க. தொண்டர்கள் கூட சற்று அசந்துதான் போனார்கள். ஆனால் உங்களைப் பற்றி தெரிந்தவர்கள் யாரும் இதை நம்பவில்லை.

உணர்வு ஊழியரே வெளியில் வீசியதையும் மறைத்து.

நீங்கள் போட்ட நாடகத்தை அடையாளம் காட்டிடும் ஜே.டி. சி.டி.யில் விண் டி.வி. செய்தியையும் முதலில் காட்டுகிறார்கள். அடுத்து த.த.ஜ. மாநில துணைப் பொதுச்செயலாளர் சித்தீக்கிடம் ஜே.டி. செயலாளர் அதிரை ஜமால் டெலிபோன் மூலம் பேட்டி காணுவது இடம் பெற்றுள்ளது.

இந்த பேட்டி விண் டி.வி.யில் கொடுக்கப்பட்ட செய்திகள் பொய் என்பதை நிரூபிக்கிறது. த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்டுக்கு சொந்தமான கீழ் தளத்தில் இருந்த மக்கள் உரிமை பண்டல் மீது உணர்வு பண்டலை வைத்தார்கள். திட்டமிட்டபடி சண்டை இழுக்க வேண்டும் என்ற நோக்கில் உணர்வு பண்டலை தவ்பீக் என்ற உணர்வு ஊழியரே வெளியில் வீசினார்.

இவற்றை மறைத்து நீங்கள் எழுதியுள்ள மாதிரி ”உணர்வு பண்டல் வந்த உடன் மேலே மாடிக்கு கொண்டு போறதுக்கு தூக்கி இருக்கிறாங்க அப்ப உணர்வு பத்திரிக்கையை எடுத்து ரோட்டில் விசிறி எறிஞ்சிட்டாங்க என்கிறார்.

சித்தீக் வாயில் வார்த்தை வரவில்லை.

சித்தீக்கிடம் பேட்டி காணும் ஜே.டி. செயலாளர் தூக்கி போட்டது மாநில நிர்வாகிகளா? என்று கேட்கிறார். தூக்கி போட்டது த.மு.மு.க.வினர்தான் என்றால் உடனே பெயர் சொல்லி இருப்பார். தூக்கி போட்டது உணர்வு ஊழியரே என்பதால் சித்தீக் வாயில் வார்த்தை வரவில்லை.

தூக்கி போட்டது மாநில நிர்வாகிகளா? என்று திரும்பவும் கேட்கிறார் ஜே.டி. செயலாளர். பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்ன மாதிரி, மாநில நிர்வாகிகளின் ஒப்புதலின் பெயரில் என்று கூறிவிட்டு யாரெல்லாம் நின்றார்கள் என்ற பட்டியலை கூறுகிறார். இரண்டாவது தடவையாக கேட்டும் யார் தூக்கி போட்டார்கள் என்பதை சித்தீக் சொல்லவில்லை.

அல்லாஹ் உடைய அச்சமோ நியாய உணர்வோ இருந்தால்.

பசங்க மேலே இருந்த ஏ.எஸ்.அலாவூதீன் இடம் போய் அண்ணே கீழே இந்த மாதிரி நடக்கிறது என்று சொன்ன உடன் ஏ.எஸ்.அலாவூதீன் கேமராவுடன் கீழே வந்து போட்டோ எடுத்திருக்கிறார்.

உடனே ஹைதரும் ஜைனுல் ஆபிதீனும் கேமராவை புடுங்கு என்று குரல் கொடுத்தார்கள் என்கிறார். உணர்வு அலுவலகம் 2 வது மாடியில் உள்ளதை அனைவரும் அறிவார்கள். விண் டி.வி. செய்தி வாசிப்பாளரும் ஸைபுல்லாவும் உணர்வு அலுவலகத்தில் புகுந்து தாக்கினார்கள் என்கிறார்கள். 

சித்தீக்கோ கீழே ரோட்டில் நடந்தது என்கிறார். நீங்கள் அபகரித்த உணர்விலும் கீழே நடந்தது என்றுதான் எழுதி உள்ளீர்கள். உணர்வு அலுவலகம் தாக்கப்பட்டது என முதல் பக்க தலைப்புச் செய்தியாகவும் முதல் எழுத்தாகவும் கொட்டை எழுத்தில் போட்டுள்ளீர்கள்.

உணர்வு அலுவலகம் தாக்கப்பட்டது பற்றிய எந்த விபரமும் உட் செய்திகளில் இல்லை. இதுதான் முரண்பாடு. உங்களுடன் இருப்பவர்கள் உங்களை ஆதரிப்பவர்கள் யாருக்காவது அல்லாஹ் உடைய அச்சமோ நியாய உணர்வோ இருந்தால் இந்த முரண்பாடுகள் பற்றி சிந்தித்து தெளிவு பெறுவார்கள்.

நீங்கள்தான் சதி திட்டம் போட்டுள்ளீர்கள்.

உங்களுக்குள்ளே உள்ள இந்த முரண்பாடுகளால் உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்ற 40 பேர் கொண்ட கும்பல் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில் உணர்வு அலுவலகத்துக்குள் அத்து மீறி நுழைந்தது என்று விண் டி.வி. மூலம் நீங்கள் முதன் முதலில் பரப்பிய செய்தியும் பொய் என்பது தெளிவாகி விட்டது.

அது மட்டுமல்ல நீங்கள்தான் சதி திட்டம் போட்டு ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை (குர்ஆன் ஹதீஸுக்கு மாறு செய்து) பொய்களை பரப்ப வேண்டும் என்ற உறுதியுடன் இருந்துள்ளீர்கள் என்பதற்கும் இது மிகப் பெரிய ஆதாரமாகும்.

உங்கள் தரப்பில் உண்மை இல்லை.

பத்து 40 பேர் கொண்ட கும்பல் என ஸைபுல்லாவும் 30 பேர் கொண்ட கும்பல் என அலாவுதீன் சிறப்பிதழின் முதல் பக்கத்திலும் அதே இதழின் 5ஆம் பக்கம் அலாவுதீன் பேட்டியில் 30, 40 பேர் எனவும் எழுதி முரண்பட்டுள்ளீர்கள்.

இந்த முரண்பாடுகளும் உங்கள் கூற்றுப்படி உங்கள் தரப்பில் உண்மை இல்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. முதலில் 40 பேர் கொண்ட கும்பல் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில் உணர்வு அலுவலகத்துக்குள் அத்து மீறி நுழைந்தது. அங்கிருந்த அலாவுதீன் தாக்கப்பட்டார் என்ற பொய்யை பரப்பினீர்கள். பிறகு கேமராவை எடுத்து வந்து ரோட்டில் படம் பிடித்தபோது மண்ணில் சுருண்டார் என்று எழுதினீர்கள்.

எதிர் பார்த்து காத்து இருந்துள்ளார் அலாவுதீன்.

யாராக இருந்தாலும் அவர்களிடம் தகராறு நடக்கிறது என்ற தகவல் சொல்லப்பட்டால் அதிர்ச்சியில் என்ன என்று பார்க்கத்தான் வேகமாக வருவார்கள். சமாதான முயற்சியில்தான் ஈடுபடுவார்கள். செய்தியை கேட்ட உடன் அவர்கள் கேமரா மேனாக இருந்தாலும் கேமராவை தூக்கிக் கொண்டு வர மாட்டார்கள். எந்தவித பேச்சு வார்த்தையிலும் ஈடுபடாமல் அலாவுதீன் வரும்பொழுதே கேமராவுடன் வந்துள்ளார். இதுவே திட்டமிட்ட சதி என்பதற்கும். ஏற்கனவே நீங்கள் போட்டிருந்த சதி திட்டப்படி எதிர் பார்த்து கேமராவுடன் காத்து இருந்துள்ளார் அலாவுதீன் என்பதற்கும் ஆதாரமாகும்.

கேட்பவர்கள் பொய் என்று விளங்கி விடுவார்கள்.

தொடரும் சித்தீக் பேட்டியில் அலாவுதீனுக்கு அடின்னா கொஞ்ச நஞ்ச அடி இல்லே. ஒரு அடியில் மயங்கி விழுந்து விட்டார். 30 , 40 பேர் சேர்ந்து மிதி மிதி என மிதித்து இருக்கிறார்கள் மர்ம ஸ்தானத்தில். அவர் விரை வீங்கி இருக்கிறது. 

இப்படி உதார் விடும் சித்தீக்குக்கு தான் சொல்வது பொய் என்று கேட்பவர்கள் விளங்கி விடுவார்கள் என்ற எண்ணம் வந்ததோ என்னவோ "உண்மையா பொய் கிடையாது" என்று அவரே முந்திக் கொள்கிறார். "கழுத்துலே ஒரு ரூபாய் சைஸுக்கு தோல் இல்லை. ரத்தம் வடியுது என்றும் கூறுகிறார்.

கேப்பையில் நெய் வடிகிறது என்பதை நம்பக் கூடியவர்கள்.

இந்த பொய்கள்தான் தமிழகம் முழுவதுமுள்ள உங்கள் தனிப் பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரையாக இருந்தது. எவ்வளவு பெரிய பலசாலியானவராக இருந்தாலும் விரையில் ஒருவர் மிதித்தாலே பிழைப்பது கடினம். ஒரு அடியில் மயங்கி விழுந்து விடும் அளவுக்கு மிக பலஹீனமாக உள்ளவர் 40 பேர் மர்ம ஸ்தானத்தில் மிதித்ததை தாங்கி உள்ளார் என்று சொல்வதை கேப்பையில் நெய் வடிகிறது என்பதை நம்பக் கூடியவர்கள் நம்பலாம்.

டி.வி.யை பார்த்தவர்கள் ஏமாந்து இருக்கலாம்.

அலாவுதீனின் தோற்றம் இயல்பாகவே பார்க்க பலஹீனமானவர் போலவே இருப்பார். பார்க்க பலஹீனமானவர் போல இருந்தாலும் எவ்வளவு கடுமையானவர் எவ்வளவு கொடுமையானவர் எவ்வளவு மோசமான வார்த்தைகளை பேசக் கூடியவர் என்பதை திருச்சி கூட்டத்தில் அவர் கூறிய வார்த்தைகள், நரம்பு புடைக்க கத்தியது.

சாதாரணமாக கூற வெட்கப்படும் கெட்ட வார்த்தையை சபையில் திரும்பத் திரும்ப கூறியது. இவற்றின் மூலம் திருச்சி கூட்டத்தில் இவர் யார் எப்படிப்பட்டவர் என்பதை நிரூபித்து விட்டார். அவரது பலஹீனமான தோற்றத்துடன் பாதிக்கப்பட்டவர் போல் நடித்ததால் டி.வி.யில் மட்டும் பார்த்தவர்கள் ஏமாந்து இருக்கலாம்.

சாட்சியாக உள்ள டி.வி. காட்சிகள்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின் டி.வி.க்கு பேட்டி கொடுத்தது போன்ற பொருள் மயக்கம் ஏற்படும்படியாக நீங்கள் அபகரித்த உணர்வில் எழுதியுள்ளீர்கள்; ஆஸ்பத்திரிக்கு வரும்போதுதான் உங்கள் வேண்டுகோளுக்காக விண் டி.வி.யினர் பேட்டி எடுத்துள்ளார்கள் என்பதை டி.வி.யில் காட்டிய சுற்றுப்புற காட்சிகள் சாட்சி அளிக்கின்றன.

மண்ணில் சுருண்டார் என நீங்கள் எழுதி உள்ளீர்கள். உங்களுக்கு முரணாக அதே பத்திரிக்கையில் கீழ் தளத்தில் இருந்தேன் பிறகு மயக்கமுற்றேன் என்கிறார் அலாவுதீன். அதற்கு முரணாக ஒரு அடியில் மயங்கி விழுந்து விட்டார் என்கிறார் சித்தீக். எப்படியோ மயங்கினார் என்று விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு விதமாக மயக்க பொய் சொல்லி உள்ளதால்தான் இந்த முரண்பாடுகள். மயக்கம் ஒரு நாடகம் என்பதற்கும் இந்த முரண்பாடுகளும் அந்த டி.வி. காட்சிகளும் சாட்சியாக உள்ளன

உங்கள் தரப்புதான் நாடகம் நடத்தி உள்ளது.

5 ஆம் பக்கத்தில் நீங்கள் வெளியிட்டுள்ள அலாவுதீனின் பேட்டி போட்டோ எடுக்காதே என்று நடந்த தள்ளுமுள்ளுதான் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. அத்துடன் அலாவுதீனுக்கு அடின்னா கொஞ்ச நஞ்ச அடி இல்லே என்ற சித்தீக்கின் கூற்றையும் அடிதடியில் இறங்கினர் என்று நீங்கள் 4 ஆம் பக்கம் எழுதி உள்ளதையும் அலாவுதீனின் அந்த பேட்டி பொய் என நிரூபித்துள்ளது.

அலாவுதீன் பேட்டியில் திட்டமிட்ட பல பொய்கள் சொல்லி இருந்தாலும் அடித்தார்கள் என்ற பொய்யை அவர் சொல்லவில்லை. இந்த முரண்பாடும் உங்கள் தரப்புதான் நாடகம் நடத்தி உள்ளது என்பதற்கு ஆதாரமாகும்.

உங்கள் தரப்புதான் பொய்யானது என நிரூபிக்கிறது.

மிதி மிதி என மிதித்தது மர்ம ஸ்தானத்தில் மிதித்தது என்பதெல்லாம் உண்மையாக இருந்தால் அவர் டி.வி. பேட்டியில் கூறி இருப்பார். அப்பொழுது அவரால் கூற முடிந்த பொய் கழுத்தை நெறித்து கொல்ல வந்தான் என்பதுதான். அதிலும் தடுத்ததில்தான் நகக் காயம் ஏற்பட்டது என்கிறார்.

நீங்கள் போட்ட சதி திட்டப்படி கேமரா எடுக்காதே என தடுத்ததில்தான் நகக் காயம் ஏற்பட்டுள்ளது. தடுத்ததில்தான் என்ற வார்த்தை டி.வி. பேட்டியில் இடம் பெற்றுள்ளது. பத்திரிக்கையில் இந்த வார்த்தையை நீங்கள் தவிர்த்துள்ளீர்கள். இந்த பேட்டி ”கழுத்துலே ஒரு ரூபாய் சைஸுக்கு தோல் இல்லை. ரத்தம் வடியுது” என்று பேசப்பட்ட உங்கள் தனிப்பள்ளி ஜும்ஆ உரைகளுடனும் சித்தீக்கின் பேட்டியுடனும் முரண்பட்டு உங்கள் தரப்புதான் பொய்களை பரப்புகிறது என நிரூபிக்கிறது.

11 வயது பையனை யாரும் ஆள் என கூற மாட்டார்கள்.

கோட்டூர் ரபீக் உணர்வு ஆபீஸுக்கு வந்திருக்கிறார். அவருடன் ஒரே ஒரு ஆள் மட்டும் கூட வந்திருக்கிறார் எக்ஸ்ட்ரா.. 2 பேரும் மாடிக்கு போனதும் பயந்து கொண்டு போலீஸில் புகார் செய்து விட்டனர் என்கிறார் சித்தீக். ஒரே ஒரு ஆள் மட்டும் என்ற அழுத்தம் கொடுக்கும் இந்த வார்த்தையும் பயந்து கொண்டு போலீஸில் புகார் செய்து விட்டனர் என்ற வார்த்தையும் பல உண்மைகளை கூறுகிறது. 4 வித வாகனங்களில் 20 பேர் வந்தனர் என்று வாகன நம்பர்களுடன் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை உண்மைபடுத்தும் விதமாகவே இந்தக் கூற்று உள்ளது. த.த.ஜ. மாநில துணைபொதுச் செயலாளர் சித்தீக்கின் தகவலிலே ஒரே ஒரு ஆள் என கூறி இருக்க 11 வயது மகன் என எழுதி உங்களுக்குள்ளே முரண்படுகிறீர்கள். 11 வயது பையனை யாரும் ஆள் என கூற மாட்டார்கள்.

கோட்டூர் ரபீக் இப்பொழுதும் சந்தேகப்படும்படியான ஆள்தானா?

போலீஸில் கொடுக்கப்பட்டுள்ள புகார்படி விசாரிக்க வந்த உதவி ஆணையாளர்; விசாரித்து விட்டு சாரி சார் தப்பான தகவலில் வந்து விட்டோம் என்று மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றதாக கூறுகிறார் சித்தீக். மன்னிப்பு கேட்கும் மனப்பான்மை உடைய அந்த அதிகாரியை கண்டித்துதான் ஆர்ப்பாட்டமும் செய்துள்ளீர்கள். இது முரண்பாடு. வந்த அதிகாரி சந்தேகப்படும்படியாக யாரும் வந்தார்களா? என்று கேட்டார். கோட்டூர் ரபீக்தான் உள்ளார் என்று சொன்னோம் என்று எல்லாரும் ஒரே மாதிரி கூறுகிறீர்கள். கேள்வி சந்தேகப்படும்படியாக யாரும் வந்தார்களா? என்பதுதான் யாரும் இல்லை என்று சொல்லாமல் கோட்டூர் ரபீக்தான் உள்ளார் என்று ஏன் கூற வேண்டும்? உங்கள் பார்வையிலேயே கோட்டூர் ரபீக் இப்பொழுதும் சந்தேகப்படும்படியான ஆள்தானா?

உங்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் இருந்துள்ளது.

சுமார் 30 காவலர்கள் புடை சூழு வந்ததாக பேட்டி அளித்துள்ள அலாவுதீன் ஆணையாளர் தன்னுடன் வந்தவர்களை விட்டு விட்டு, தான் மட்டும் சென்று விட்டார் என்று கூறி உள்ளார். நீங்களும் உதவி ஆணையாளர் தன்னுடன் வந்தவர்களை விட்டு விட்டு தான் மட்டும் சென்று விட்டார் என்றே எழுதி உள்ளீர்கள். சித்தீக்கோ நாலே நாலு காவலர்களை மட்டும் நிறுத்தி விட்டு சென்றார் என்கிறார். உங்களுக்குள்ளே உள்ள இந்த முரண்பாடு ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை பொய்களை பரப்புங்கள் என்ற உறுதியுடன் இருந்துள்ளீர்கள் என்பதற்கு ஆதாரமாகிறது. வந்த அதிகாரிக்கு சந்தேகம் நீங்கி விட்டது என்றால் தன்னுடன் வந்த ஆய்வாளர்கள் மற்றும் 30 காவலர்களை பாதுகாப்புக்கு என ஏன் வெளியில் நிறுத்தி விட்டுச் செல்ல வேண்டும்? இதுவே உங்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாகும்.

அப்பப்பா எத்தனை முரண்பாடுகள்.

பசங்க மேலே இருந்த ஏ.எஸ்.அலாவூதீன் இடம் வந்து சொன்னார்கள் என்று சித்தீக் சொல்கிறார். உணர்வு ஊழியர் ஹபீப் வந்து என்னிடம் சொன்னார் என அலாவுதீன் சொல்கிறார். பத்திரிக்கைகளை ஆட்டோவில் கொண்டு வந்த நபர் மேல் தளத்திற்கு வந்து கூறினார்.

அதற்குப் பிறகுதான் ஹபீப் கீழே போனார் செய்தியை கேள்விப்பட்ட அலாவுதீன் கேமராவுடன் போனார் என நீங்கள் எழுதி உள்ளீர்கள். அப்பப்பா எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளும் ஒரே அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது. செய்தி உண்மையாக இருந்தால் பசங்க, வந்த நபர் என்று கூறி முரண்பட்டு இருக்க மாட்டீர்கள். பெயரை தெளிவாக எழுதி இருப்பீர்கள்.

யார் அந்த பார்வையாளன்.

த.மு.மு.க. தலைமையகத்தை தாக்க நீங்கள் செய்த சதி இறையருளால் முறியடிக்கப்பட்டது என்ற செய்தி உண்மையானது. அதனால்தான் அது பற்றிய விபரங்களை அதன் தலைவர் ஜவாஹிருல்லாஹ் பொறுப்பெடுத்து அவர் பெயரால் அது பற்றிய உண்மைகளை அறிக்கையாக வெளியிட்டதோடு மக்கள் உரிமையிலும் அவர் பெயராலேயே வெளியிட்டுள்ளார். நீங்கள் செய்தது சதி செயல் என்பதாலும் உணர்வு அலுவலகம் தாக்கப்பட்டது அலாவுதீன் தாக்கப்பட்டார் போன்ற செய்திகள் பொய்யானது என்பதாலும் அது பற்றிய பொய்ச் செய்திகளை எழுதி விட்டு அந்த செய்திகளுக்கு பொறுப்பாளனாக பார்வையாளன் என்ற நிழற் பெயரை பயன்படுத்தி நழுவி உள்ளீர்கள். யார் அந்த பார்வையாளன். இதுவும் உங்கள் தரப்பில் உண்மை இல்லை என்பதற்குரிய ஆதாரமாகும்.

உணர்வு ஊழியர் தவ்பீக் ரோட்டில் வீசினார்.

அஹ்லே ஹதீஸ் பள்ளியில் தொழுதுவிட்டு வந்த தொழுகையாளிகள் சாட்சி என போட்டுள்ளீர்கள். ஹாஜிகள் என்பது போல தொழுகையாளிகள் என்ற வார்த்தையை போட்டு உங்கள் நாடகத்தை உண்மைப்படுத்த பார்க்கிறீர்கள். தொழுதுவிட்டு வந்த தொழுகையாளிகள் பேப்பர்கள் சிதறிக் கிடந்தன என்பதற்குத்தான் சாட்சிகளே தவிர உணர்வு ஊழியர் தவ்பீக் தூக்கிப் போட்டதை அவர்கள் பார்க்கவில்லை. உங்கள் திட்டப்படி உணர்வு பத்திரிக்கைகளை உணர்வு ஊழியர் தவ்பீக் ரோட்டில் வீசினார் என்பதை மறுத்து முபாஹலா பண்ணுவீர்களா? நீங்கள் விட்ட சவால்படி நீங்கள் சொன்ன 38 சாட்சிகளுடன் ஒரே மேடைக்கு வருவீர்களா?

நீங்கள் உணர்ந்து திருந்திய மாதிரி தெரியவில்லை.

உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் அவர்களை இழிவுபடுத்தி எழுதுவதும் பிறரை தூண்டி விட்டு இழிவாக பேசவும் எழுதவும் வைப்பது உங்கள் குணமாக உள்ளது. இது லுஹா உங்களைப் பற்றி நமக்கு அடையாளம் காட்டியவைகளில் ஒன்று. மஸ்ஜிதுர்றஹ்மான் பொதுக்குழு எனும் பெயரால் ஒரு பொய்க்குழுவைக் கூட்டி சம்பந்தமில்லாமல் என்னை அத்வானி, உமாபாரதி என விமர்சிக்க வைத்தீர்கள். 

அதே வார்ததையை சம்பந்தத்தோடு ஹாமித் பக்ரி விஷயத்தில் உங்களைப் பற்றி எழுதும் நிலை எனக்கு ஏற்பட்டது. நீங்கள் பிறரை விமர்சிக்கும்போது இழிவான வார்த்தைகள் அவர்கள் மனதை எந்த அளவு பாதித்து இருக்கும் என்பதை நீங்கள் அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதற்காகவே நீங்களும் உங்கள் அணியினரும் பயன்படுத்திய கடுமையான வார்ததைகளையே பதிலுக்கு நாமும் பயன்படுத்தினோம் என்பதை முந்தைய மடலில் சுட்டிக் காட்டி இருந்தேன். நீங்கள் உணர்ந்து திருந்திய மாதிரி தெரியவில்லை.

உங்களைப் பற்றி உங்கள் வாயாலேயே.

ஹைதர்அலியை அத்வானியுடன் ஒப்பிட்டு ஒருவர் கூறினார் என்று எழுதி உங்கள் இச்சையை தீர்த்து உள்ளீர்கள். த.மு.மு.க.வின் மக்கள் உரிமையை நக்கல் எருமை என எழுதி உள்ளீர்கள். இதே வார்த்தையை திருப்பி எழுத அவர்களிடம் பேனா இல்லையா? இதிலிருந்து உங்கள் தரம் எது மாதிரி ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள். இதன் வெளிப்பாடுதான் உங்களைப் பற்றி உங்கள் வாயாலேயே அபுஜஹ்லைவிட மோசமானவன் என சொல்ல வைத்துள்ளது. எனவே திருந்துங்கள்.

மருத்துவ சான்றிதழை அப்படியே பிரசுரிக்க வேண்டும்.

வயிறு, மர்ம ஸ்தானம் மற்றும் கழுத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன என எழுதி உள்ளீர்கள். உடல் நிலை பாதிப்பை சம்பந்தப்பட்டவர் வட்டாரச் செய்தியாக எழுதக் கூடாது. மருத்துவ சான்றைத்தான் வெளியிட வேண்டும். இதிலாவது நீங்கள் உண்மையாளர் என்றால் அடுத்த இதழில் மருத்துவ சான்றிதழை அப்படியே பிரசுரிக்க வேண்டும். இல்லை எனில் மருத்துவ சான்றிதழ் அலாவுதீனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உள்ளதால் இப்படி எழுதி உள்ளீர்கள் என்பது உண்மையாகி விடும். பலமான பாதிப்புக்கு உள்ளானார் என்று நீங்கள் பரப்பியதை நீங்களே பொய்ப்படுத்தும் விதமாக அவரை மேடைகளில் பேச அனுப்பியுள்ளீர்கள். 8 ஆம் தேதிய அதிரை கூட்டத்தில் அவர் பேசியதை கேட்டவர்கள் கடுமையான பாதிப்பு என்றார்கள் இப்படி பேசுகிறாரே என்று வியந்துள்ளார்கள். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ச் ஆனதும் ஓய்வு எடுக்காமல் எப்படி கூட்டங்களில் பேசுகிறார்? வெளியூர் பிரயாணம் செய்கிறார். நாடகம் அம்பலமாகி விட்டது.

போலீஸ் ஸ்டேஷனா? போஸ்ட் ஆபீஸா?

போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை இடுவோம் என்று பாக்கர் டி.வி. யில் மிரட்டினார். போலீஸ் அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை இட்டால் முட்டிக்கு முட்டி தட்டிப்புடுவோம் என எச்சரித்தனர். உடனே பயந்துபோன டி.என்.டி.ஜே. பாக்கரை அதிகாரிகளிடம் மன்னிப்புக் கேட்க வைத்தது. பிறகு எங்கள் போராட்டத்தை போஸ்ட் ஆபீஸ் முன் நடத்துகிறோம் என போய் விட்டார்கள். இதை சென்னை மாநகர் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

கோட்டூர் ரபீக்கை விடுதலை செய்யும்படி போராட்டம் நடத்த மாட்டோம்.

கோட்டூர் ரபீக்கை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக முனிஸிபாலிட்டி முன் போராட்டம் என்றார்கள். பிறகு டி.என்.டி.ஜே. மாநில தலைமையினர் ரகசியமாக அதிகாரிகளிடம் பேசி நாங்கள் கோட்டூர் ரபீக்கை விடுதலை செய்யும்படி போராட்டம் நடத்த மாட்டோம் என கூறி உள்ளனர். நீங்கள் லுஹாவையும் சுலைமானையும் பிடித்து விடாதீர்கள். அவர் எங்கள் மத குருமார்கள். நோன்பு வருவதால் மத குரு என்ற அடிப்படையில் அவர்கள் மீது இரக்கம் காட்டி இருவரை மட்டும் பிடிக்காதீர்கள் என்று கெஞ்சினர். அதிகாரிகளும் நோன்பு மத குரு என கூறியதால் சரி என மனம் இறங்கி விட்டு விட்டனர்.

நோன்புக்குப் பிறகு பிடிக்கப்படலாம்.

இனி யாரையும் கைது செய்தால் ஒட்டு மொத்தமாக திரண்டு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை இடுவோம் என 08-10-2004 வெள்ளிக்கிழமையன்று மஸ்ஜிதுர்றஹ்மான் பள்ளியில் லுஹா பேசினார். அதற்கு முந்தைய வாரம் அதே பள்ளியில் சுலைமான் வெறி உணர்வைத் தூண்டி கடுமையாக பேசினார். இதை உள்ளூர் போலீஸ் மேல் மட்ட அதிகாரிகளின் காதில் போட்டு வைத்துள்ளது. எனவே இப்போதைக்கு லுஹா, சுலைமான் ஆகியவர்களை விட்டு வைக்கப்பட்டாலும் மற்ற அக்கியூஸ்ட்டுகள் பிடிபட்டபின் அவர்கள் வாக்கு மூலத்தைப் பொறுத்து நோன்புக்குப் பிறகு பிடிக்கப்படலாம் என்று நெல்லை மாநகர் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. வட்டாரச் செய்தி என்றால் இதுதான் வட்டாரச் செய்திகள். நோயாளி என கூறிக் கொண்டு மருத்துவ சான்றிதழை கொடுக்காமல் வட்டாரச் செய்திகளை சான்றாக கூறுவது அறிவுடையவர்கள் செயல் இல்லை.

வாத ரீதியாக திசை திருப்பல்.

பாளையங் கோட்டையில் த.மு.மு.க. நெல்லை மாவட்ட தலைவர் பாளை ரபீக்கை கொலை செய்ய திட்டமிட்டபடி கொலை வெறி தாக்குதல் நடை பெற்றது. லாவகமாக நாற்காலியால் தடுத்து அல்லாஹ்வின் அருளால் அவர் தப்பி விடுகிறார். அந்த கொலை வெறி தாக்குதலை தடுக்க முயன்ற அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இந்துச் சகோதரர்கள் தாக்குதலுக்குள்ளாகி வெட்டப்படுகிறார்கள். திசை மாறி நடந்து விட்ட தாக்குதலை பயன்படுத்தி வழக்கை திசை திருப்ப முயன்று வருகிறீர்கள். எவ்வளவு கடுமையான பிரச்சனைகளாக இருந்தாலும் வாதத் திறமையால் திசை திருப்புவதில் வல்லவரான நீங்கள் இதையும் வாத ரீதியாக திசை திருப்ப முயன்றுள்ளீர்கள்.

அண்ணே மறந்து விட்டதா நாகூர் ஆலிம் ஜார்ஜ்.

கோட்டூர் ரபீக் உடைய ஆட்கள் என்று காவல்துறை தெளிவாக கூறி இருக்க ரபீக் 10 நாட்களாக சென்னையில் இருந்தார். சென்னையில் இருந்த அவர் எப்படி ஈடுபட்டடிருக்க முடியும் என்று வார்த்தை விளையாட்டால் வாதம் வைத்துள்ளீர்கள். தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் மீது நடந்து விட்ட தாக்குதலை பயன்படுத்தி வெட்டப்பட்ட பெயிண்டர்கள் எங்களிடமும் பணி செய்தவர்கள்தான் அவர்களை எங்கள் ஆட்கள் எப்படி வெட்டி இருக்க முடியும் என்ற வாதமும் வைத்து திசை திருப்பியுள்ளீர்கள். 

அண்ணே மறந்து விட்டதா நாகூர் ஆலிம் ஜார்ஜ் என்று எழுதினீர்களே! அவருக்கு அளிக்கப்பட்ட பத்வாப்படி அவரை கொல்ல போனவர்கள் தடுக்க முயன்ற அவரது மனைவியை கொன்றது எப்படி? அப்படித்தான் இதுவும் நடந்துள்ளது. இதை உங்களை அறிந்தவர்கள் புரிந்துதான் உள்ளார்கள். எனவே உங்கள் விளக்கமெல்லாம் நீங்கள் உருவாக்கியுள்ள தவ்ஹீது இயக்கத்தில்தான் எடுபடும்.

ஸ்டென்தை அல்லாஹ்விடம் காட்டவா?

நீங்கள் உருவாக்கிய தவ்ஹீது அமைப்பு எப்படி இருக்கும். மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத்தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி நோக்கத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியை செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன். இது தாங்களாகவே அடையாளம் காட்டியதுதான். 

நீங்கள் உருவாக்குகிற தவ்ஹீது அமைப்பு நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தானே இருக்கும். அரசியல் அமைப்புகள்தான் தங்கள் வலிமையை அரசாங்கத்திடம் காட்ட உறுப்பினர்களை சேர்க்கிறார்கள். அல்லாஹ்விடம் நன்மையை எதிர் பார்த்து செயல்படும் அமைப்பில் ஏன் உறுப்பினர்கள்; சேர்க்க வேண்டும்? நமது ஸ்டென்தை அல்லாஹ்விடம் காட்டவா? என்று ஜாக்கில் இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்தீர்கள்.

இப்பொழுது உங்கள் புதிய தவ்ஹீது? அமைப்பின் துவக்கமே உறுப்பினர் படிவத்துடன் பவனி வருகிறது. உங்கள் தூண்டுதலின் பெயரில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸ் பிடித்தால் 18,20 வயது பாலகர்களை போலீஸ் பிடித்து விட்டது என்கிறீர்கள். 18,20 வயதினர் உங்கள் பார்வையில் பாலகர்கள் என்றால் அவர்களை அல்லாஹ்வுடைய பள்ளியில் செயற்குழு உறுப்பினர்களாகவும் பொதுக்குழு உறுப்பினர்களாகவும் ஆக்கியது ஏன்? 18,20 வயதினரின் அறியாத் தன்மையை பயன் படுத்தி பள்ளிவாசல்களில் மெம்பர் பதவி கொடுத்து உங்கள் கோஷ;டிக்கு ஆள் சேர்;த்துள்ளீர்கள். இது போன்ற உங்கள் செயல்கள் மூலம்தான் பதவி நோக்கத்தையும் பணம் திரட்டும் குறிக்கோளையும் கொண்டவர்களை நீங்கள் கண்டுள்ளீர்கள்.

2 பேருக்கு பகுந்து கொடுத்துள்ளீர்கள்.

எல்லா அமைப்புகளிலுமே பொதுவாக பொதுச் செயலாளர் என ஒருவர்தான் இருப்பார். துணைச் செயலாளர்கள் இருப்பார்கள். அதிக பட்சமாக இணைப் பொதுச் செயலாளர் இருப்பார். நீங்கள் சொன்ன பதவி நோக்கத்தைக் கொண்டவர்கள் உங்களுடன் இருப்பதால்தான் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை பதவியாக ஆக்கி 2 பேருக்கு பகுந்து கொடுத்துள்ளீர்கள். பதவி நோக்கத்தைக் கொண்டுள்ளவர்கள்தான் உங்களுடன் இருப்பார்கள் என்பதற்கு இது மிகப் பெரிய ஆதாரமாகும்.

இப்படி ஒரு ஹதீஸ் இருப்பது தெரியாதா?

ஒரு உயிரை அநியாயமாக கொன்றால் நிரந்தர நரகம். எனவே அந்த காரியத்தை நாம் செய்வோமா என்ற வாதத்தை வைத்து நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் மக்களை திசை திருப்பி வருகிறீர்கள். இந்த வாதத்தை வைப்பவர்களிடம் இது மாதிரியான செயல்கள் நாங்கள் செய்யவில்லை என்று முபாஹலா பண்ணத் தயாரா? என்றால் கடந்த காலத்தில் அறியாமல் செய்து விட்டோம் என்றுதான் சொல்லி விட்டார்களே என்கிறார்கள். அப்டியானால் அரபிக் கல்லூரிகளில் பயின்ற போதும் பயிற்றுவித்த போதும் இப்படி ஒரு ஹதீஸ் இருப்பது தெரியாதா? தெரியாமல்தான் கடந்த காலங்களில் செய்தார்களா? என்று கேட்டால் பதில் இல்லை.

ஏர்வாடி காசிம்.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிட பணிகள் துவங்குவதற்கு முன்; திருக்குர்ஆன் மாநாட்டையொட்டி மஸ்ஜிதுர்றஹ்மான் இடத்தில் தற்காலிக கழிப்பறைகளும்; ஒழுச் செய்வதற்கான தற்காலிக பைப்களும் செட் செய்யப்பட்டிருந்தது. மஸ்ஜிதுர்றஹ்மானின் அந்த இடத்தில் 1995 ஜனவரி 21 ஆம் தேதி மதியம் ஏர்வாடி காசிமை சந்தித்து பேசுகிறீர்கள். 

அப்பொழுது போகிற இடமெல்லாம் உங்களை கடுமையாக விமர்சித்து பேசி வந்த பெங்களூர் ஸைபுத்தீன் ரஷாதி என்று அறியப்பட்ட பெரியகுளம் ஸைபுத்தீன் ரஷாதிக்கு பத்வா கொடுத்து விடுகிறீர்கள். திருச்சி கூட்டத்தில் தவ்ஹீது ஜமாஅத்தின் தியாகியாக நீங்கள் சித்தரித்துக் காட்டிய அந்த வியாபாரியும் உங்களுடன் இருக்கிறார். கழிப்பறைகளுக்கும்; ஒழுச் செய்வதற்குமாக மக்கள் வந்து போய்க் கொண்டிருக்கவே அந்த வியாபாரி வைத்திருந்த காரில் பரணி ஹோட்டலுக்கு ஏர்வாடி காசிமை அழைத்துச் சென்று விடுகிறீர்கள்.

தேவைப்பட்டால்அடுத்த மடலில் நினைவூட்டுவோம்.

அங்கும் நீங்கள் அளித்துள்ள பத்வா பற்றிய விளக்கங்களை தொடர்ந்து பேசி விட்டு பத்வா பணிகளில் ஈடுபடுபவர்கள் வீடியோ பதியும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று அனுப்பி விடுகிறீர்கள். முந்தைய கடிதங்களிலெல்லாம் உங்கள் பத்வாக்களுக்கு அஞ்ச மாட்டேன் என்று எழுதியதை புரியாத பலர் இப்பொழுது புரிந்து வருகிறார்கள். பெங்களூர் ஸைபுத்தீன் ரஷாதிக்கு கொடுக்கப்பட்ட பத்வா பற்றி ஏர்வாடி காசிம் போலீஸில் வாக்கு மூலம் கொடுத்தார். அந்த வாக்கு மூலத்தை எந்த மாதிரியான வாதத்தைக் கொண்டு த.மு.மு.க. தலைமையினரையும் போலீஸ் அதிகாரிகளையும் திசை திருப்பி அதிலிருந்து விடுபட்டீர்;கள் என்பதை தேவைப்பட்டால் அடுத்த மடலில் நினைவூட்டுவோம்.

உங்களை காப்பாற்றி விடுவது மார்க்கத்துக்கு செய்யும் சேவை என கருதி செயல்பட்டார்கள்.

சமுதாய பாதுகாப்புக்கு ஜனநாயக வழியில் போராடுவோம் என வந்தீர்கள். அதிகமான அறிவு உடைய நீங்கள் அப்பொழுது மார்க்க அறிஞராக மட்டும் அறியப்பட்டுள்ளீர்கள். பிறகுதான் உங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டிலிருந்து விடுபட ஜனநாயக வழி என வந்துள்ளீர்கள் என்பதை உணர்ந்தார்கள். 

நீங்கள் கடந்த காலங்களில் செய்தவைகள் உங்களை அறியாமல் செய்து விட்ட தவறுகள் என்று நம்பினார்கள். எனவே நீங்கள் ஹிக்மத் என்று கூறிக் கொண்டு நடத்திய ஸ்டண்ட்டுகளுக்கெல்லாம் துணை நின்றார்கள். உங்களை காப்பாற்றி விடுவது மார்க்கத்துக்கு செய்யும் சேவை என கருதி செயல்பட்டார்கள். லட்சம் லட்சமாக கொட்டினாலும் விடுவிக்கப்பட முடியாத வழக்குகளிலிருந்து அரசியல் அனுபவத்தைக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் உங்களை காப்பாற்றி விட்டார்கள்.

அழித்து விடுவதுதையே முதல் குறிக்கோலாகக் கொண்டு நன்றி செலுத்தி வருகிறீர்கள்.

அதனால்தான், நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி நோக்கத்தையும், பணம் திரட்டும் குறிக்கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியை செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன். உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவங்கப்பட்ட த.மு.மு.கவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை. மறுமைக்கான பணியைக் கூட சில பேர் இவ்வுலக ஆதாயத்துக்காக ஆக்கி விட்ட நிலையில் இவ்வுலகிற்காக மட்டுமே உரிய பணிகளை கூட இவர்கள் மறுமைக்காக ஆக்கி கொண்டதை நான் பார்க்கிறேன் என்று உங்களை காப்பாற்றி விட்டவர்கள் பற்றி நற்சான்று வழங்கினீர்கள். 

இப்பொழுது அவர்களை அழித்து விடுவதுதையே உங்களது முதல் குறிக்கோலாகக் கொண்டு நன்றி செலுத்தி வருகிறீர்கள். அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அலாவுதீன் தாக்கப்பட்ட நாடகமும் பாளையங்கோட்டை சம்பவங்களும் எனவே திருந்துங்கள். எங்கே இருந்தால் திருந்துவீர்களோ அங்கே போய்தான் திருந்துவீர்கள் என்றால் இறை நாட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. அதற்காக துணைக்கு ஆள் சேர்க்காதீர்கள். வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.