பின்னத்தூர் பின்னனி
உணர்வு வார இதழ் ஆசிரியருக்கு கணக்கப்பட்டு ஹஜ்ஜி முஹம்மது எழுதுவது
அஸ்ஸலாமு அலைக்கம் (வரஹ்)
உணர்வின் 20-26 ஆகஸ்ட் இதழை மிகவும் தாமதமாக பார்க்க நேரிட்டது. பின்னத்தூர் பின்னனி என்ற தொகுப்பில்: 'பின்னத்தூர் பின்னணியை ஆராய நமது செய்தியாளரை அனுப்பினோம். அவர் சம்மந்தப்பட்ட எல்லா தரப்பினரையும் சந்தித்து திரட்டிய தகவல்களைத் தருகிறோம்' என்று குறிப்பிட்டு ஒரு தலைபட்சமாக எழுதியுள்ளீர்கள்.
அச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டவன் முழுக்க முழுக்க நான்தான். என் புகைப்படத்தைப் போட்ட நீங்கள் என்னைச் சந்தித்தீர்களா? அல்லது கள்ளத்தொடர்பு என்ற வார்த்தையில் அலாதியான இன்பம் கொண்டு கட்டுரையில் பல இடங்களில் குறிப்பிடப்படும் அத்தொடர்பிற்கு உரித்தான அப்பெண்மணியை சந்தீத்தீர்;களா? அல்லது எனது சொந்த ஊரான கணக்கரப்பட்டு கிராமம் சென்று எனக்கும் உங்களால் அப்பாவி என்று கூறப்பட்ட என் முதல் மனைவிக்குமிடையே என்னென்ன பிரச்சனைகள் இருந்தன? நீங்கள் மிக விரும்பி குறிப்பிடும் அந்த கள்ளத்தொடர்புக்கு காரணம் என்ன? என்பதை பற்றி விசாரித்தீர்களா? அதையெல்லாம் செய்யாமல் உண்மையை அறியும் உணர்வே இல்லாமல் த.மு,மு,க. இயக்கத்தை கேவலப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்பதுபோல் இலட்ச ரூபாய் பற்றியே பேட்டி எடுத்துள்ளீர்கள்.
நீங்கள் உண்மை அறிய விரும்பி இருந்தால் என்ன செய்ய வேண்டும். பணம் கொடுத்தவன் நான். வாங்கியவர் சித்திக்பாஷh. பயந்தோ அல்லது லஞ்சமாகவோ கொடுத்ததாக நான் தான் சொல்லவேண்டும். சித்திக்பாஷh என்னிடம் லஞ்சமாக பணம் பெற்றார் என்று சொன்னவர்களிடம் அதற்குண்டன ஆதாரத்தைக் கேட்டிருக்க வேண்டும். ஒரு பெரும் தொகையை கடனாக கொடுக்கும் அளவிற்கு எனக்கும் சித்திக் பாஷhவிற்கும் இடையே நீண்ட கால நட்பு இருந்ததா? இல்லையா? என்று விசாரித்து இருக்க வேண்டும்.
நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டிருந்தால் சில் உண்மைகள் தெரிந்திருக்கும்.
1. சித்திக்பாஷhவிற்கு நான் கடனாக பணம் கொடுத்தபோது அருகே இருந்தவர் என் முதல் மனைவியின் தம்பி. லஞ்சம் கொடுப்பவன் அல்லது வாங்குபவன் சாட்சியை வைத்துக் கொண்டு அதுவும் யாருக்கு எதிராக செயல்பட போகிறார்களோ அந்த மனைவியின் தம்பியை வைத்துக் கொண்டு பணப்பட்டுவாடா செய்வார்களா?
2. நான் விரும்பம் பெண்ணைத் திருமணம் செய்ய நான் ஏன் லஞ்சம் தரவேண்டும்.
3. நீங்கள் ஆத்திரக்கண் கொண்டு பாராமல் உண்மையை அறிய வேண்டும் என்ற உன்னத நோக்கோடு விசாரித்திருந்தால் 16-06-2004-ல் சித்திக்பாஷh என்னிடம் வாங்கிய பணத்தை நான் இரண்டாவது திருமணம் முடித்த 29-07-2004 தேதிக்கு முன்னால் 25-07-2004 அன்று செட்டில் செய்து விட்டார் என்பது தெரிந்திருக்கும். அந்தப்பணத்திற்கும் எனது இரண்டாவது திருமணத்திற்க்கும் எவ்வித சம்மந்தமில்லை என்பது புரிந்திருக்கும்.
இந்த உண்மை நிலைகளை அறிய மனம் விரும்பாமல் த.மு.மு.க.வினரை கொச்சைப்படுத்தி எழுதியுள்ளதின் மூலம் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டுள்ளீர்கள். என்ன அது? த.மு.மு.க.வை விமர்சித்து மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரின் பின்னணியில் த.த.ஜ இருக்கிறது என்பதுதான். அவ்வாறு இல்லையென்றால் ஒரு மாபெரும் இயக்கத்தை விமர்சித்து மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டுவதினால் பின்னத்தூர் மக்களுக்கு என்ன லாபம்? அல்லது எனது முதல் மனைவிக்குத்தான் என்ன லாபம்? த.மு.மு.க.வை இழிவுப்படுத்துவதும், அதனை ஒழிக்க நினைப்பதும் தானே உங்கள் கொள்கை!
எனது பிரச்சனை ஊரில் பேசப்பட்டபோது கடலூரில் நடந்த த.த.ஜ. கூட்டத்திற்கு பின்னத்தூர் கிளையின் நிர்வாகிகள் வந்தார்களா? இல்லையா? கூட்டம் முடிந்தபின் த.த.ஜ.வின் முக்கிய பிரமுகரிடம் இது பற்றி ஆலோசித்தார்களா? இல்லையா? இரவு ஊருக்குள் நுழையும்போது த.மு.மு.க. ஒழிக என்று கோஷம் போட்டார்களா? இல்லையா? கார் எடுத்துக் கொண்டு மாவட்டம் முழுவதும் சென்று போஸ்டர் ஒட்டியது த.த.ஜ-வின் பின்னத்தூர் கிளையின் தலைவரும் மற்ற நிர்வாகிகளும் தான் என்பது பின்னத்தூர் வாசிகளுக்கு நன்கு தெரியும்.
சரி அது இருக்கட்டும். நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் எனக்கு பல் சந்தேகங்கள்.
அதில் முதல் தவணையாக ஒரு கேள்வி கேட்கிறேன்.
கேள்வி எண்.1 ஒரு முஸ்லீம் வாலிபன் அவனது மனைவியின் உடல் நலக்குறைவின் காரணமாக அவளிடம் தாம்பத்ய உறவு கூடாது என மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர். அவன் வாலிப கோளாரினால் தனது எதிர்வீட்டில் வசிக்கும் 16 வயது ஏழைப் பெண்ணிடம் தவறான தொடர்பு கொள்கிறான். இந்த தொடர்பும் 6 ஆண்டுக்கு மேலாக நீடிக்கிறது. அது தவறு அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சிக்கொள் என்று உண்மையான தவ்ஹித்வாதிகள் சொல்ல அவன் தன்னால் சீரழிக்கப்பட்ட அந்த அப்பாவி ஏழைப் பெண்ணை சட்டப்படி மனைவியாக்க முயற்சிக்கிறான். எதிப்பு தெரிவிக்கும் முதல் மனைவிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தனது சொத்தின் ஒரு பகுதியை தனது 5 வயது மகனின் பெயரில் தனது மனைவியை கார்டியனாக (ஹிப்பா) எனும் செட்டில்மென்ட் செய்தபின் தனது மனைவி குடியிருக்க அவனது சொந்த ஊரில் ஒரு இலட்ச ரூபாய் போக்கியத்திற்கு வீடு பிடித்து தந்தான்.
இரு வாரங்களுக்கு பின் தன்னால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்ணை மணந்து கொள்கிறான் இந்த திருமணம் குர்ஆன் ஹதீஸ்க்கு ஏற்புடையதா? இல்லையா? தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதியோ? அல்லது வேறு யாருடைய அனுமதியோ அவன் பெற வேண்டுமா? முதல் மனைவிக்கு இஸ்லாமிய சட்டத்தில் விதித்துள்ள கடமைகளை நிறைவேற்றும் ஒருவன் இரண்டாவது மனைவியை வைத்து குடும்பம் நடத்த சக்தி இருந்தால் அதற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா?
இக்கேள்விக்கு நீங்கள் உங்களது உணர்வு இதழ் வாயிலாக பதில் தருவதின் மூலம் த.மு.மு.க.வை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டருக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நிருபியுங்கள்.
மற்ற கேள்விகள் அடுத்த தவணையில்.
நன்றி! வஸ்ஸலாம்
அன்புடன்
ஹஜ்ஜி முஹம்மது
நகல்கள்:
1.பேராசிரியர், ஆ.ர். ஜவாஹிருல்லா, ஆ.டீ.யு.இ ஆ.Phடைஇ
மாநிலத்தலைவர், த.மு.மு.க.
2. அனைத்து இஸ்லாமிய நாளிதழ்.

Comments