மீண்டும் கர்பலாவா?

உண்மையான மனம் திறந்த மடல் - 1
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
த.த.ஜ.வின் துணைத் தலைவராக அரங்கத்தில் காட்டிக் கொண்டு அந்தரங்கத்தில் அறங்காவலராக பதிவு செய்துள்ள பீ.ஜைனுல்ஆப்தீன் உலவி அவர்களே! நீங்கள் பல்வேறு ஜமாஅத்களிலிருந்து பிரிந்து வந்திருக்கிறீர்கள். அதையெல்லாம் உங்களை நேசித்தவர்கள் வரவேற்றும் பிரிவினையை உண்டாக்கும் உங்கள் செயலை வெறுத்தவர்கள் எதிர்த்தும் இருக்கிறார்கள். நீங்கள் த.மு.மு.க.விலிருந்து வெளியேறிய பின் ஆங்காங்கு நடந்து வந்த விரும்பத்தகாத சம்பவங்களையும் 28.09.2004 அன்று சென்னையில் நடந்த சம்பவத்தையும் 3.10.2004 அன்று பாளையங்கோட்டையில் நடந்த கொலை முயற்சியையும் நாம் அறிந்த வரை உங்கள் ஆதரவாளர்களைத் தவிர யாருமே ஆதரிக்கவில்லை. எல்லாருமே மனம் நொந்து வெட்கித் தலை குனிந்தார்கள்.
அலுவலகத்தில் தனி ஜும்ஆ
நீங்கள் த.மு.மு.க.வில் இருந்தவரை சென்னையில் தனி ஜும்ஆ நடத்தவில்லை. எல்லாருமே சென்னையில் இருக்கிற பள்ளிகளில்தான் தொழுதார்கள். த.மு.மு.க.விலிருந்து விலகி புதிய அமைப்பு துவங்கியதும் பள்ளிவாசல்களை புறக்கணித்து உங்கள் அலுவலகத்தில் தனி ஜும்ஆ நடத்த ஆரம்பித்தீர்கள். சுபுஹு தவிர 4 நேரத் தொழுகைக்கும் ஜமாஅத் நடத்த ஆரம்பித்தீர்கள். பள்ளிக்குச் செல்ல முடியாத நிர்ப்பந்தங்களைக் கூறி அலுவலகங்களிலும் வீடுகளிலும் தொழுவது மனித இயல்பு. இவ்வளவு காலமாக யாருமே பள்ளிவாசல்களை புறக்கணித்து அலுவலகங்களில் ஜும்ஆ நடத்தியது இல்லை.
மக்களை உங்களின் பக்கம் ஈர்க்கத்தான் தனி ஜும்ஆ.
நீங்கள் தவ்ஹீது பள்ளி என்று கூறும் ஒவ்வொரு பள்ளி ஜமாஅத்தாரும் உங்களை ஜும்ஆ உரை ஆற்ற வாருங்கள் என்று பள்ளிக்கு அழைத்து கெஞ்சிய போதெல்லாம் போகாத நீங்கள் அலுவலக ஜும்ஆ உரையில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். இதற்கு நீங்கள் அளித்துள்ள விளக்கம் மண்ணடியில் தவ்ஹீது அடிப்படையிலான அஹ்லே ஹதீஸ் பள்ளி த.மு.மு.க. அலுவலக அருகில் உள்ளது. அந்த பள்ளிக்கு த.மு.மு.க. அலுவலகம் வழியாகத்தான் போக வர முடியும். த.மு.மு.க.வினரும் அங்குதான் வருவார்கள். 2 பிரிவாக ஆகி விட்டவர்கள் ஒரே பள்ளிக்கு தொழச் சென்றால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள தவிர்க்கவே இந்த அலுவலக ஜும்ஆ என்று கூறி உள்ளீர்கள். இது உண்மை அல்ல. நீங்கள் ஜும்ஆ நடத்துவதன் நோக்கம். அதன் மூலம் மக்களை உங்களின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.
த.மு.முக. பில்டிங்.
உங்கள் விளக்கப்படி அல்லாஹ்வை தொழ வாரம் ஒரு முறை சென்றாலே பிரச்சனை வரும் என்பதால்தான் அலுவலக ஜும்ஆ நடத்துவது உண்மையானால் தினமும் இயங்கும் உணர்வு அலுவலகத்தை த.மு.மு.க. பில்டிங்கை விட்டு மாற்றி செல்லாதது ஏன்? அங்கேயே வைத்துள்ளது ஏன்? கீழ் தளத்தில் த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்ட்டும் முதல் மாடியில் த.மு.மு.க.வின் தலைமை அலுவலகமும் 2 வது மாடியில் த.மு.மு.க.வின் முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்கு சொந்தமான உணர்வு, ஒற்றுமை ஆகிய இதழ்களின் அலுவலகமும் 3 வது மாடியில் த.மு.மு.க. தலைமையகத்திற்கு வெளியூர்களிலிருந்து வருபவர்கள் தங்குவதற்கான அறையும் பாத் ரூம்களும் உள்ளது.
பத்திரிக்கையை மட்டும் தனி அலுவலகத்திற்கு கொண்டு செல்லாதது ஏன்?
அந்த பில்டிங்கின் மாடிப்பபடிகளில் ஒருவர் மட்டும்தான் இயல்பாக செல்ல முடியும். ஏதிராக யார் வந்தாலும் ஒருவரை ஒருவர் முந்துவதாக இருந்தாலும் சற்று உடலை திருப்பினால்தான் ஒருவரை ஒருவர் இடிக்காமல் செல்ல முடியும். அப்படிப்பட்ட சிக்கலான இடத்தில் இருப்பது ஏன்? தனி அமைப்பும் தனி அலுவலகமும் தனி ஜும்ஆவும் கண்ட தாங்கள், கைப்பற்றியுள்ள பத்திரிக்கையை மட்டும் தனி அலுவலகத்திற்கு கொண்டு செல்லாதது ஏன்? பிரச்சனைகள் பண்ணி வம்பிழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இருந்துள்ளீர்கள் அதுதான் உண்மை.
உங்களிடம் இந்த விட்டுக் கொடுத்தலை எதிர் பார்க்க முடியுமா?
ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி போன்ற த.மு.மு.க. தலைமையினரை மக்கள் மார்க்க அறிஞர்களாக பார்க்கவில்லை. உங்களைத்தான் மார்க்க அறிஞராக நம்புகிறார்கள். ஒற்றுமையையும் விட்டுக் கொடுத்தலின் சிறப்புகளையும் பற்றி பேசச் சொன்னால் உங்களைவிட திறமையாக பேசக் கூடியவர்கள் நாம் அறிந்தவரை உலகில் யாரும் இல்லை. அப்படிப்பட்ட நீங்கள் விட்டுக் கொடுத்து பிரச்சனை வராமல் இருக்க த.மு.மு.க.வின் அந்த கட்டிடத்தை காலி செய்து விட்டு உங்கள் புதிய அமைப்பின் இடத்திற்கு போய் இருக்க வேண்டும். இது விட்டுக் கொடுத்தல் இல்லை அவர்களது உரிமை என்பது தனி விஷயம். உரிமை இல்லாத உணர்வு வார இதழையே கையகப்படுத்தி விட்ட உங்களிடம் இந்த விட்டுக் கொடுத்தலை எதிர் பார்க்க முடியுமா? உங்களிடம் இந்த விட்டுக் கொடுத்தலை எதிர் பார்ப்பது தவறுதான்.
த.மு.மு.க.வுக்கு சொந்தமான இடம்.
த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு சொந்தமான கீழ் தளம் இஸ்லாமிய லைப்ரரியாகவும் இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் நலப்பணி அரங்கமாகவும் இயங்கி வருகிறது. அந்த இடத்தில்தான் நீங்கள் ரமழான் சிறப்புரைகளையும் வாராந்திர உரைகளையும் வழங்கி வந்தீர்கள். உங்கள் வாராந்திர நிகழ்ச்சி நடைபெறும் இடம் முஸ்லிம் டிரஸ்ட் என்று விளம்பரம் செய்து வந்த நீங்கள் த.மு.மு.க.விலிருந்து வெளியேறியதும் முஸ்லிம் டிரஸ்ட் என்ற வார்த்தையை விளம்பரத்திலிருந்து நீக்கினீர்கள். 7. வட மரைக்காயர் தெரு என்று மட்டும் போட்டீர்கள். பிறகு உங்கள் வாராந்திர பிரச்சார நிகழ்ச்சியின் இடத்தையும் மாற்றிக் கொண்டீர்கள். காரணம் இது த.மு.மு.க.வுக்கு சொந்தமான இடம் என்பதால், அந்த இடத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய மாட்டேன் என போய் விட்டீர்கள். த.மு.மு.க.வினர் யாரும் அந்த இடத்தில் நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை.

நீங்கள் இஸ்லாமிய பிரச்சாரமே செய்ய மாட்டேன் என்று புறக்கணித்து சென்று விட்ட த.மு.மு.க.வுக்கு சொந்தமான அந்த இடத்தில்தான் உணர்வு பண்டல்களை போட்டு கட்டுவேன் என்றால் என்ன அர்த்தம்? எப்படியாவது பிரச்சனை பண்ணி நீங்கள் எதிரியாக கருதும் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலியை பலி இட வேண்டும் என்பதுதானே. நீங்கள்தான் வீண் வம்பை விலைக்கு வாங்குகிறீர்கள்.
மார்க்க அறிஞர் செய்யக் கூடிய செயலா?
நீங்கள்தான் பிரச்சனைகளை உண்டு பண்ணி வம்பு வளர்த்து வருகிறீர்கள் என்பதற்கு நிறை ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டைத்தான் சுட்டிக் காட்டி உள்ளேன். உங்கள் புதிய அமைப்பை பதிவதற்கு விண்ணப்பித்துள்ள படிவத்திலும் இந்த வம்புத்தனத்தைக் காட்டி உள்ளீர்கள். முகவரி என்ற இடத்தில் எல்லாருமே குடி இருக்கும் வீட்டு முகவரியைத்தான் குறிப்பிடுவார்கள். அந்த படிவத்தில் உங்களைத் தவிர மற்ற 6 நிர்வாகிகளும் முகவரி என்ற இடத்தில் அவர்கள் குடி இருக்கும் வீட்டு முகவரியைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள். நீங்கள் மட்டும் 7. வட மரைக்காயர் தெரு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். த.மு.மு.க. அலுவலகம் இருக்கும் அந்த கட்டிடத்திலா நீங்கள் குடி இருக்கிறீர்கள்? இதுதான் ஒன்றுபடுவது எப்படி என்று பிரச்சாரம் செய்யும் மார்க்க அறிஞர் செய்யக் கூடிய செயலா?
நாவு கூசாமல் கூறினீர்கள்.
த.மு.மு.க.வில் நீங்கள் போட்ட திட்டம் நிறைவேறாததால் அதிலிருந்து வெளியேறினீர்கள். உங்கள் சுய நலத்திற்காக உணர்வு வார இதழை கைப்பற்றினீர்கள். அதற்கு தவ்ஹீது சாயம் பூசி குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரத்திற்காக கைப்பற்றியது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி எழுதி வருகிறீர்கள். உணர்வு வார இதழ் துவங்கும்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணர்வில் குர்ஆன் ஹதீஸ் எழுதக் கூடாது. உணர்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வரக் கூடாது என்று ஜவாஹிருல்லாஹ்வோ ஹைதர்அலியோ மற்ற த.மு.மு.க. நிர்வாகிகளோ சொல்லவில்லை. தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையால் விலகியதாக கூறி விளம்பரம் தேடி வரும் நீங்கள்தான் உணர்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வராது. உணர்வில் குர்ஆன் ஹதீஸ் வராது. உணர்வில் குர்ஆன் ஹதீஸ் எழுத மாட்டேன் என்று நாவு கூசாமல் கூறினீர்கள்.
இதையும் நாம் நிரூபிப்போம்.
இதனால்தான் ரபீக் அஹ்மது போன்ற ஜாக் பிரமுகர்கள் த.மு.மு.க.வை விட்டு வெளியேறினார்கள். உணர்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வராது. உணர்வில் குர்ஆன் ஹதீஸ் வராது. உணர்வில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எழுத மாட்டேன் என்று நீங்கள் கூறியதை கண்டித்து வெளியேறியவர்களை நீங்கள் ஏளனமும் செய்தீர்கள். நீங்கள் விட்ட சவால்படி ஒரே மேடைக்கு வந்தால் நீங்கள் கொண்டு வரும் சாட்சிகளையும் சாட்சியங்களையும் கொண்டே இதையும் நாம் நிரூபிப்போம். இன்ஷh அல்லாஹ்.
வித்தியாசப்படுத்திக் காட்டவே.
மனம் திறத்தல் என்றாலே உண்மையை சொல்வதுதான். அப்படி இருக்க உண்மையான மனம் திறந்த மடல் என்று குறிப்பிட்டுள்ளது ஏன்? என்ற கேள்வி வரலாம். இஸ்லாம் என்றாலே தூய்மையானதுதான். அப்படி இருக்க இஸ்லாத்தை அதன் தூய வடிவில் என்று குறிப்பிட்டபோது என்ன விளக்கம் கொடுத்தோமோ அதே விளக்கம் இந்த தலைப்புக்கும் பொருந்தும். மனம் திறந்த மடல் என்ற தலைப்பில் பொய்கள் கலந்த மடல்கள் ஏராளமாக வந்துவிட்டதால் அவற்றிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டவே உண்மையான மனம் திறந்த மடல் என தலைப்பு இட்டுள்ளோம்.
நீங்கள் உணர்ந்து திருந்திய மாதிரி தெரியவில்லை.
இதுவரை வெளியிட்டுள்ள இதழ்களில் உங்களையும் உங்கள் அணியினரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளேன். உங்களை விமர்சிக்க நான் பயன்படுத்திய வார்த்தைகளை பலர் சரி கண்டும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளனர். உங்களையும் உங்கள் அணியினரையும் விமர்சிக்க நான் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களிடமிருந்து கற்றவைதான். நீங்கள் பிறரை விமர்சிக்கும்போது இந்த வார்த்தைகள் அவர்கள் மனதை எந்த அளவு பாதித்து இருக்கும் என்பதை நீங்கள் அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதற்காகவே நீங்களும் உங்கள் அணியினரும் பயன்படுத்திய கடுமையான வார்ததைகளையே பதிலுக்கு நாமும் பயன்படுத்தினோம். எமது பதில் விமர்சன வார்த்தைகளை சரி கண்டவர்களும் இந்த நோக்கத்தில்தான் சரி கண்டார்கள். ஆனால் நீங்கள் உணர்ந்து திருந்திய மாதிரி தெரியவில்லை. அந்த நிலையிலேயே இருக்கிறீர்கள்.
நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மொட்டைக் கடிதங்கள் மூலம் அசிங்கமாக எழுதி வரும் நீங்கள் சமீபத்திய உணர்வு வார இதழில் ஒரு இஸ்லாமிய பத்திரிக்கை ஆசிரியரை மன நோயாளி என விமர்சித்து இருந்தீர்கள். அதற்கு ஆகஸ்டு அந்நஜாத் மாத இதழில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சரியாக பதில் எழுதி உள்ளார்கள். 2002ல் என் மீது அபாண்டங்களை சுமத்தி பிரசுரம் வெளியிட்டீர்கள். அப்போது உங்களது இந்த போக்கு தொடர்ந்தால் மிர்ஸா குலாம் மாதிரி ஆகி விடுவீர்கள் என்று சுட்டிக் காட்டி சில கேள்விகளுடன் பிரச்சாரகர் நாஸர் அலிகான் உங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். சென்னை ஹாஜா என்பவர் உங்களுக்கு நேரில் கொண்டு வந்து தந்தார். அவரிடம் பதில் எழுதுவேன் என வாக்குறுதி அளித்தீர்கள். இன்று வரை நீங்கள் பதில் அனுப்பவில்லை. அதாவது நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
நாமாக அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை.
உங்களது இந்த போக்கு தொடர்ந்தால் மிர்ஸா குலாம் மாதிரி ஆகி விடுவீர்கள் என்று உங்களுக்கு எச்சரித்து கடிதம் எழுதிய நாஸர் மக்களால் மதிக்கப்படும் தலைவர்களை இழிவான வார்த்தைகளால் விமர்சிக்கக் கூடாது என்பது நபிவழி என்று ஒரு கூட்டத்தில் பேசினார். அப்பொழுது என் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு தனிப்பட்ட முறையிலும் ஹதீஸ்களைக் கூறி மக்களால் மதிக்கப்படும் தலைவர்கள் எவ்வளவு வழி கெட்டவர்களாக இருந்தாலும் இழிவான வார்த்தைகளால் விமர்சிக்கக் கூடாது என்றார். எனவே இந்த இதழில் என்னால் இயன்ற வரை அந்த வாசகங்களை தவிர்த்துள்ளேன். முந்தைய இதழ்களில் கீழக்கரை தர்ம அறக்கட்டளையைச் சார்ந்த ஜமீல் அவர்கள் அபு அவ்ன் என்ற பெயரில் அனுப்பிய மெயிலிலும் அதிரை பாரூக் அவர்கள் அனுப்பிய மெயிலிலும் உங்கள் மொட்டைக் கடிதங்களிலும் குறிப்பிட்ட அந்த வார்த்தைகளைத்தான் பதிலாக பயன்படுத்தினோம். நாமாக அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
ஒருவரின் தலை உருளும்.
த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மாநில செயலாளர்களான ஜே.எஸ்.ரிபாஈ பாஸி ரஷhதி, எஸ். முஹம்மது ஜைனுல் ஆப்தீன், த.மு.மு.க. தலைமையக ஊழியர்களான அக்பர், அமீர், முஸ்லிம்பெண்மணி - ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா ஆகியோரில் ஒருவரின் தலை உருளும் என்ற உங்கள் திட்டம் உங்கள் ஆட்கள் மூலம் வெளியாகியுள்ளது. இதை பொய் என்று நீங்கள் மறுக்காது இருந்தாலும் சின்னத்திரை மற்றும் மேடைகளில் மட்டுமே பார்த்து உங்கள் மீது பிரியமாகி விட்டவர்கள் இதை நம்ப தயாராக இல்லை. அவர்களால் நம்ப முடியவில்லை. பாளையங்கோட்டை சம்பவம் உட்பட அனைத்திலும் நீங்கள்தான் பின்னணி என நான் நம்புகிறேன். காரணம் ஹாமித் பக்ரி தன்னிலை விளக்கத்தில் கூறினாரே அதுதான்.
நீங்கள் கொடுத்துள்ள பத்வா ஒன்றும் புதிது அல்ல.
என்ன கூறினார்? பி.ஜே.யின் ஒரு முகம்தான் மக்களுக்குத் தெரியும். அவரது இன்னொரு முகம் எல்லாருக்கும் தெரியாது. (ஹாமித் பக்ரியாகிய) எனக்கும் பழுலுல் இலாஹி போன்றவர்களுக்கும்தான் தெரியும் என்றார். அந்த இன்னொரு முகம் தெரிந்ததால்தான் நான் நம்புகிறேன். உங்களின் இந்த உத்தரவு உங்கள் பாiஷயில் சொல்வது என்றால், த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி உட்பட 6 பேர்களுக்கு நீங்கள் கொடுத்துள்ள பத்வா ஒன்றும் புதிது அல்ல. இதுதான் உங்கள் இயல்பு.
தடுத்து நிறுத்திய கமாலுத்தீன் மதனி.
1988ல் பல மவுலவிகளைக் கொண்டு வந்து உங்களை கடுமையாக விமர்சிக்க வைத்த மேலப்பாளைம் ஆர்.என். அப்துல் ஹமீது, பட்ணன் ஹாப்ஸா பாகவி, நரவன் மீரான் மன்பஈ ஆகியவர்கள் மீது முட்டை வீச முடிவு செய்தீர்கள். சிரிஞ்சி மூலம் முட்டையில் உள்ள கருவை எடுத்து விட்டு ஆசிட்டை அடைத்து அவர்கள் முகத்தில் வீச ஏற்பாடு செய்தீர்கள். இது மார்க்க அடிப்படையில் சரியான முடிவு என விளக்கம் அளித்து ஆட்களை அனுப்பி அடையாளங்களையும் காணச் செய்தீர்கள். இது பற்றிய தகவல் கமாலுத்தீன் மதனிக்கு போகவே தடுத்து நிறுத்தி, இது மாதிரி செயல்களால் கொள்கை பரவாது பாதிக்கத்தான் செய்யும் என்றார்.
தஃவா பணிக்கே லாயக்கு இல்லாதவர்கள்.
1989ல் உங்களை கடுமையாக விமர்சித்த கடையப் பள்ளி இமாம் புலவன் காஜா, வாவர் பள்ளி இமாம் எஸ்.எஸ். ஹைதர் அலி ஆகியவர்களிடம் மீலாது விழா பெயரால் தேதி வாங்கி தனிக் காரில் அழைத்துச் சென்று வள்ளியூர் தாண்டி கல்யாணம் செய்து விடவும் ஹம்ஸா தங்களுடைய இடத்திற்குப் போய் தாயத்து போடவும் ஏற்பாடு செய்தீர்கள். இதை மார்க்க ரீதியாக நியாயப்படுத்தினீர்கள். இதையும் கமாலுத்தீன் மதனிதான் தடுத்து நிறுத்தி, இது மாதிரியெல்லாம் செய்தால் நாமெல்லாம் தஃவா பணிக்கே லாயக்கு இல்லாதவர்கள் என்றார். இப்படிப்பட்ட உங்களது இன்னொரு முகத்தைத்தான் இப்பொழுது உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
திருந்திய நல்ல மனிதர்.
உங்களின் புதிய அமைப்பான த.த.ஜ. துவங்கியதும் நெல்லை மாவட்ட தலைவராக இருந்தவரை நீக்கி விட்டு பாளையங்கோட்டூர் ரபீக்கை தலைவராக நியமித்துள்ளீர்கள். கோட்டூர் ரபீக் கடந்த காலங்களில் முஸ்லிம் சமுதாயத்தில் செய்த கொலை, கொள்ளைகள். ஜிஹாத் என்ற அமைப்பு வைத்துக் கொண்டு முஸ்லிம்களையே மிரட்டி பணம் பறித்தது. அவரது அமைப்பில் இருந்தவர்களையே கொலை செய்தது. முஸ்லிம் செல்வந்தர்களையும் அவர்களது பிள்ளைகளையும் கடத்திச் சென்று ஒரு லட்சம் 2 லட்சம் என பணம் பறித்தது. இப்படி அவரது கடந்த கால செயல்களைக் கூறி இவருக்கு எப்படி தலைவர் பதவி கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். நாம் அப்படி கேட்கவில்லை. அவருக்கு தலைவர் பொறுப்பு எப்படி கொடுத்தீர்கள்? ஏன் கொடுத்தீர்கள்? என்று நான் கேட்பது இந்த அடிப்படையில் அல்ல. அவர் திருந்தி விட்டது உண்மையானல், திருந்திய நல்ல மனிதர் தவறான வழிகாட்டுதலின் தலைமையின் கீழ் உள்ள தவறான இயக்கத்தில் சேர்ந்து விட்டார். இதுதான் கோட்டூர் ரபீக் பற்றி நமது நிலை.
ஷ{ராவில் உறுப்பினராக இருப்பதற்கே தகுதி இல்லை.
கோட்டாறு, கடையநல்லூர் முனாழராக்களில் கலந்து கொண்டவர், பிர்தவ்ஸிய்யா முதல்வராகவும் கலாச்சாரப் பள்ளி கதீபாகவும் இருந்தவர் கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி. இவர் ஜாக், அதற்கு முன்னர் உங்களை அமைப்பாளராக கொண்டிருந்த ஆக், அதற்கு முன் துவங்கப்பட்ட டி.ஜே.யு. ஆகிய அமைப்புகளிலும் அந்நஜாத் ஆரம்பித்த போதும் இருந்தவர். இப்படி 25 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சாரகராக இருந்து வருபவர் இம்தாதி. இவருக்கு ஜாக்கின் மஜ்லிஜுஸ் ஷ{ராவில் இடமில்லையா என்ற பிரச்சனை வந்தபோது 1997ல் இம்தாதியைப் பார்த்து நீங்கள் சொல்கிறீர்கள். ஜாக்கின் மஜ்லிஜுஸ் ஷ{ராவில் இடம் பெற இம்தாதிக்கு என்ன தகுதி இருக்கிறது? தகுதி இல்லை. நேற்று வந்த ஆள் என்கிறீர்கள். பல்லாண்டுகளாக பிரச்சாரப் பணியிலும் அமைப்பிலும் இருந்தவருக்கு ஷ{ராவில் உறுப்பினராக இருப்பதற்கே தகுதி இல்லை என்றீர்கள். அப்படிப்பட்ட நீங்கள் கோட்டூர் ரபீக்குக்கு மாவட்ட தலைவர் பொறுப்பு எப்படி கொடுத்தீர்கள். இந்த அடிப்படையில்தான் எனது கேள்வி உள்ளது. திருந்தி விட்ட ரபீக்கின் கடந்த கால செயல்களைக் காட்டி உங்கள் தவறான செயல்களை எதிர்ப்பவர்களை மிரட்டவா? திருந்தி வந்தவரை திருப்பி அந்த வழிக்கே அனுப்பவா?
முதல்வர், டி.ஜி.பி. ஆகியவர்களை சந்திக்க.
ஹைய அலல் ஜிஹாத், மீண்டும் கர்பலா என்ற வாசகங்களுடன் கார்களில் பவனி வந்த ஜிந்தா,ரபீக் அணி 1991 ஜுலை 7 ஆம் தேதி கர்பலா தரும் படிப்பினை என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்த உங்களை அரிவாளால் வெட்டியது. ஜின்னாதான் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வெட்டச் சொன்னேன் என்றார். நேரடி சாட்சிகளான லுஹா, அலி ஆகியவர்களின் எப்.ஐ.ஆர். ஸ்டேட்மென்ட் சரி இல்லாமல் போனதால் கேஸ் வலு இழந்தது. எனவே டி.ஜி.பி. ஸ்ரீபால் அவர்களை கண்டு பேசி காவல் துறை சார்பில் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டோம். மறைந்த உங்கள் அண்ணன் அலாவுதீன் அவர்களுடன் சில மீலாது மேடைகளில் ஸ்ரீபால் பேசி இருக்கிறார். ஜெ. தலைமையில் உள்ள அ.தி.மு.க. புதிதாக ஆட்சிக்கு வந்த நேரம். முன்னாள் காங்ரஸ் தலைவரும் மனித உரிமை கழக தலைவருமான இளைய பெருமாள் அப்பொழுது ஜெ.யுடன் இருந்தார். இவற்றை பயன்படுத்தி இளைய பெருமாள் மூலம் முதல்வர், டி.ஜி.பி. ஆகியவர்களை சந்திக்க கொடிக்கால் Nஷக் அப்துல்லா, இம்தாதி ஆகியவர்களை சென்னை அனுப்ப நாகர்கோயில் முகாமிட்டு எல்லா ஏற்பாடும் செய்தேன்.
நீங்கள் எடுத்த முயற்சி தோழ்வியுற்றது.
நாகர்கோயிலிருந்து புறப்பட்ட அவர்கள் அப்பொழுது மதுரையில் தங்கி இருந்த உங்களை போகிற வழியில் நலம் விசாரிக்க வந்தார்கள். நானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று கூறி அவர்களை போக வேண்டாம் என்று திருப்பி அனுப்பி விட்டீர்கள். தாயத்து போடுதல், பத்வா கொடுத்தல் போன்ற உங்கள் பரிபாiஷகளில் கல்யாணமும் ஒன்று. ஜிந்தாவை கல்யாணம் முடிக்க உங்கள் மாப்பிள்ளைகளை அனுப்பி வைத்தீர்கள். உங்கள் மாப்பிள்ளைகள் ஜிந்தா மாதிரியான இன்னொரு தாதா வீட்டில் போய் தங்கி பெண் பார்க்க முயன்றார்கள். அந்த தாதா இந்த தாதாவுக்கு தகவல் கொடுக்க ஜிந்தா உஷhராகி விட்டார். உங்கள் மாப்பிள்ளைகள் பல்லாயிரங்களை செலவு செய்ததுதான் மிச்சம். உங்களை வெட்டியவர்களை வெட்டிக் கொன்றிட நீங்கள் எடுத்த முயற்சி தோழ்வியுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
மீண்டும் கர்பலா 1992ல் நடந்து முடிந்தது.
பிறகு அந்த ஜிஹாத் அமைப்பினருக்குள் மோதல் வந்தது. (இதில் சிலவற்றை இப்போதைக்கு மறைத்துள்ளோம்) ஜிஹாது அமைப்பின் பொருளாளர் கவுதுவை செயலாளர் ரபீக் கொலை செய்தார். கவுது ஆதரவாளர் முஹம்மது அலி அமைப்பின் தலைவர் ஜிந்தாவை கொலை செய்தார். பிறகு காரில் இருந்த முஹம்மது அலியின் தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு போனார் ரபீக். மீண்டும் கர்பலா என்ற போர்டுக்குத் தக்கவாறு முஸ்லிம்களை முஸ்லிம்களே வெட்டிடும் கர்பலா மீண்டும் 1992ல் நடந்து முடிந்தது.
ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு அழிந்தார்கள்.
எப்படிப்பட்ட ஜிஹாது அமைப்பு. ஓட்டுக் கேட்பதை ஓட்டுப் பிச்சை கேட்டல் என்று விமர்சித்த நீங்கள் கூட அரசியல்வாதிகளின் மேடை ஏறி ஓட்டு கேட்டு இருக்கிறீர்கள். இந்த ஜிஹாது அமைப்பு அரசியல்வாதிகளை தங்கள் மேடையில் ஏற்றியது கிடையாது. அரசியல்வாதிகள் மேடையிலும் ஏறியது கிடையாது. ஓட்டுப் போடும்படி கேட்டது கிடையாது. ஜிஹாத் கமிட்டித் தலைவர் ஜிந்தா ஆணை இடுகிறார். உங்கள் ஓட்டுக்களை குடை சின்னத்தில் போட ஜிஹாத் கமிட்டித் ஜிந்தா ஆணை இடுகிறார் என்றுதான் பேசுவார்கள். அந்த அளவுக்கு இளைஞர் பட்டாளத்துடன் மக்கள் செல்வாக்குடன் நெல்லையில் கொடி கட்டிப் பறந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒற்றுமையாக இருக்கும்படி அல்லாஹ் இட்ட ஆணையை மறந்து சண்டை இட்டார்கள். பிரிந்தார்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு அழிந்தார்கள். இதை படிப்பினையாக எடுத்துக் கொண்டு திருந்த வேண்டும் என்பதற்காகவே இந்த நினைவூட்டலை எழுதியுள்ளேன்.
ஒவ்வொருவர் மீதும் ஜிஹாது கடமை?
அதுமாதிரி ஒரு அழிவு மீண்டும் இந்த சமுதாயத்தில் நடக்க வேண்டுமா? மீண்டும் கர்பலாவா? இதை நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். த.த.ஜ.வினரெல்லாம் செயல்படுவது அல்லாஹ்வுக்காக என்பது உண்மையானால் அபுஅப்துல்லாஹ் துவங்கி எல்லாருடனும் ஒற்றுமையாக ஆவதற்குரிய முயற்சிகளை எடுங்கள். 91 வரை அரசாங்கம்தான் ஜிஹாது செய்ய வேண்டும் என்றீர்கள். நீங்கள் வெட்டப்பட்டதிலிருந்து ஒவ்வொருவர் மீதும் ஜிஹாது கடமை என்றீர்கள். 1998 பிப்ரவரிக்குப் பிறகு அரசாங்கத்தின் மீதுதான் ஜிஹாது கடமை என்றீர்கள். இப்பொழுது த.மு.மு.க.வினரை அழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்த பிறகு ஒவ்வொருவர் மீதும் ஜிஹாது கடமை என்கிறீர்கள். வெறி உணர்வைத் தூண்டி விட்டு பேசி வருகிறீர்கள்.
ஒற்றுமையாவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.
நீங்கள் ஜாக்கிலிருந்து வெளியே வந்தபோது 20 வயது இளைஞர்களாக உங்கள் பின்னே வந்தவர்கள், இன்று 30 வயதினராக பாளை கோவை சிறைகளில் உள்ளார்கள். பல வழக்குகளிலிருந்து காப்பாற்றப்பட்டு தப்பி விட்டீர்கள் என்ற தெம்பு உங்களுக்கு இருக்கலாம். நாட்டில் பழைய வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்படுவதும் விடுபட்டவர்கள் சேர்க்கப்படுவதும் காப்பாற்றி விட்டவர்களே அடையாளம் காட்டுவதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 1993க்குப் பிறகு உள்ள பல வழக்குகள் இன்னும் தீர்ப்பு ஆகாமல்தான் இருக்கின்றன. அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும். எனவே மீண்டும் கர்பலா களம் காண துடிக்காமல் அல்லாஹ்வை அஞ்சி அனைவருடனும் ஒற்றுமையாவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி.
06.10.2004
ABUBAKER SIDDIKI SiddikiA@KEMYA.SABIC.com அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புச்சகோ. இலாஹி அவர்களுக்கு தென்காசி ஸித்திக் எழுதிக்கொண்டது...
இன்று காலை அலுவலகம் வந்த போது உங்கள் மெயில் படித்தேன், படித்துவிட்டு மிகவும் அப்செட் ஆகிவிட்டேன் காரணம் கடந்த காலங்களில் கோட்டூர் ஜிந்தா மற்றம் ரபீக் செய்த அட்டகாசங்கள் மீண்டும் என் நினைவிற்கு வந்து விட்டன, இந்த இரு அயோக்கின்களால் தவ்ஹீத் பணிகள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் எத்தனை எத்தனை (நெல்லை மாவட்ட) முஸ்லீம் செல்வந்தர்கள் தாங்கள் நிம்மதியை இழந்து இருந்தனர்.
அதே போன்று இன்று தமிழ்நாடு தறுதலை ஜமாத்தாரின் நடவடிக்கைகள் உள்ளன என்பதனை நினைக்கும் போது மனம் வேதனையடைகின்றன, எவ்வளவு கஷ;டப்பட்டு தவ்ஹீத்-ஜமாத் உறுவாக்கப்பட்டது ஆனால் தற்போது நிலமை பார்த்தால்............., கோட்டுர் ஜிந்தாவிற்கு ஏற்பட்ட நிலைமை பிஜெ ஏற்படத்தான் போகின்றது (இன்ஷh அல்லாஹ்) அதற்காக நான் இறைவனிடத்தில் பிரார்தனை செய்கொண்டுயிருக்கின்றேன்.
கடந்த கால பிஜெ நடவடிக்களை தொகுத்து இவரை கைது செய்யமாறு புகார் ஒன்றை தயாரித்து தமிழக காவல் துறை தலைவருக்கு (ஐஜிக்கு) ஏன் ஆனுப்ப கூடாது (இதனால் ஏதாவது பின்விளைவுகள் இருக்குமா? அதாவது தமுமுக அல்லது JAQH-க்கு போன்ற அமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுமா?), காரணம் ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்து கொண்டுள்ளவர்களால் சமுதாய தலைவர்களை இழந்துவிட்டால் அந்த இழப்புகளை ஈடுசெய்ய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்.
எனவே பிஜெயின் ரவுடியித்தினை முடிவுக்கு கொண்டுவர நல்ல ஆக்கபூர்வமான பணியினை மேற்கொள்ளுங்கள், பிளீஸ்.... .... .... ... அன்புடன்
சகோ. SA Siddique
-----Original Message

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு