கள்ள உறவு தொடர்ந்து கருவானதால் உருவான பிரச்சனையை
...'தாங்கள் தலித் கலை இலக்கிய குழவினர் நடத்திய விழாவில் பங்குகொண்டதோடு பொதுப்பணத்தை தானமாக அள்ளிக்கொடுத்துள்ளீர்களே இச்செயலை என்னவென்பது?
மவுலவி ஷம்சுல் லுஹாவிற்கு, குமரி மாவட்டம் திட்டுவிளையிலிருந்து சகோதரர் அபுபக்கர்.
அன்புள்ள அறிஞர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ.
தாங்கள் ஓர் அறிஞர் என இதுவரை எண்ணி ஏமாந்த என்னைப் போன்ற தவ்ஹீதுவாதிகளுக்கு, தங்களின் உண்மை நிலையை உணர வைத்தமைக்கு நன்றி. இறையச்சம் என்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் எடுத்துச் சொல்லாதவற்றையெல்லாம் கூறி இறையச்சத்தை அளிக்கத்துணிந்த உங்களிடம் இறையச்சத்தை எதிர்பார்க்க முடியாதென்பதால், வெறும் எதார்த்தத்தின் அடிப்படையில் தங்களது கடிதத்திற்கு பதிலளிக்க விரும்புகிறேன்.
பெறுநர் என்று தங்களது கடிதத்தில் தமுமுக என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு, என்னைப் போன்ற பலருக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளதால், நான் தமுமுகவை சாராதிருந்தாலும் பதிலளிக்கும் உரிமை அளிக்கப்பட்டவனாகிறேன். அந்த அடிப்படையிலேயே தங்களுக்கு இதனை எழுதுகிறேன்.
ஒரு இயக்கத் தலைமை, அவ்வியக்கத்தின் நிர்வாகிகளாக, ஏன் சாதாரண உறுப்பினராக இருப்பவரை கூட அவரது நடவடிக்கைகளில் மாற்றத்தைக் காணும்பொழுது அவரிடமும், தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு கடிதம் எழுதத்தான் செய்யும். அதற்கு பதிலளிக்க வேண்டியது அவரது கடமையும் கூட. ஆனால் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தாங்கள், தங்களது இக்கடமையை உணர்ந்து கொள்ளவில்லை.
தவிர இயக்கத்தின் தலைமையை – தலைமை நிர்வாகிகளை – தலைவர்களாக ஒப்புக்கொண்டதாகி விடும் எனக் குறிப்பிட்டுள்ளீர்களே, அப்படியானால் தலைவர்களாக ஒப்புக்கொள்ளாமல்தான் இதுவரை செயலாற்றி வந்தீர்களா?! அல்லது வேறு யாரையேனும் நிழல் தலைவராக ஏற்றுக்கொண்டு அவரது கண் அசைவில் களம் கண்டீர்களா? அப்படியானல் தாங்கள் ஒரு முனாஃபிக் என்று இதன் மூலம் அறிவிக்கின்றீர்களா?
தமுமுக துவங்கப்பட்டபொழுது அது வெகுஜன இயக்கமாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அன்றே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம் யாதெனில் அது தவ்ஹீத்வாதிகளால் துவக்கப்பட்ட இவ்வியக்கம் பாரபட்சமில்லாத தனது பணியின் மூலம் வெகு ஜன இயக்கமாக ஆக்கப்படவேண்டும் என்பது தானே? அந்த முடிவிலிருந்து இன்று வரை விலகிச்செல்லவில்லையே. இம்முடிவிலிருந்து விலக எண்ணுபவர்கள்தானே தற்சமயம் விலகிச் செல்கின்றனர்.
இஸ்ரவேலர்களை பிர்அவ்னிடமிருந்து மூஸா(அலை) அவர்கள் மீட்ட வரலாறு மட்டும் தெரிந்தால் போதுமா? சுல்தான் ஸலாஹூத்தீன் அய்யூபி வரலாறையோ, செச்சன்யா வரலாறையோ தெரிந்து கொள்ளக்கூடாதா? அவ்வாறு தெரிந்து கொள்வதோ, எடுத்துச்சொல்வதோ இறையச்சத்திற்கு எவ்வாறு பங்கம் விளைவிக்கும்? விளக்குவீர்களா?
ஒரு நிறுவனம் அல்லது இயக்கத்தை பெறுநராக்கி தபால் எழுதினால் அந்நிறுவனத்தின் ஃ இயக்கதத்தின் பொதுவான குறைபாடுகளை விமர்சிக்கலாம். குறிப்பிட்டு ஒருவரை குற்றம் சுமத்துவதாக இருந்தால் அவரையே பெறுநராக்கித்தான் தபால் எழுத வேண்டும்.
அல்லது அவ்வியக்கத்தின் ஃ நிறுவனத்தின் தலைவருக்கோ ஃ உரிமையாளருக்கோ அவர்களுக்கேயுரிய மரியாதையோடு பெறுநராக்கி எழுத வேண்டும். சாதாரண இந்நடைமுறை கூட விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு தங்களின் சிந்தனையை குருடாக்கியது எது? தனிநபர் துதியா? தங்களின் கடிதம் முழுக்க இத்துதி வியாபித்துள்ளதை காண முடிகிறது. இதனால் மற்றவர் மேல் அளவுக்கதிகமான வெறுப்பும் குரோதமும் வெளிப்படுகின்றன.
இதுவரை தமுமுகவில் இணைந்த எவரும் தமுமுக தலைவர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜெண்ட் என்று எண்ணி இணையவில்லை. ஓரு வேளை இதில் இணைந்தால் அவர் மூலம் வெளிநாடு செல்லலாம் என எண்ணி தாங்கள் இணைந்திருப்பீர்கள் போலும். அவ்வெண்ணம் ஈடேறாததால் தான் தாங்கள் விலகினீர்களோ என எண்ணத் தோன்றுகிறது.
நேற்று வெளியேறியவர் உட்பட பலரும் வெளிநாட்டு சகோதரர்களின் உதவியால் சுகமனுபவித்தவர்கள்தானே. இதில் ஒருவரை மட்டும் குறிப்பிடுவது ஏன்? தற்சமயம் குவாலிஸை கைப்பற்ற முடியவில்லையே என்ற ஆதங்கமா?
வெளிநாட்டு (குறிப்பாக வளைகுடா) சகோதரர்களுக்கு வக்காலத்து வாங்க தங்களுக்கு எவ்வகையிலும் அருகதையில்லை. பாலை வெயிலிலும், கடும் பனியிலும் அயராது பாடுபடக்கூடிய என் போன்ற சகோதரர்களின் கண்ணியத்திற்குரிய மனைவிகளும், பெண்களும் சோரம் போவதாக கூசாமல் எழுதிய தாங்கள், அவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. அதிலும் குறிப்பாக அவர்களது கள்ளங்கபடமற்ற சேவையை, இயக்கத்திற்காக அளித்த நன்கொடைகளை அபகரித்து கொண்டு இவ்வாறு கூற தங்களுக்கு எள்ளளவும் அருகதையில்லை.
உலமாக்கள் அணியை கொச்சைப்படுத்தியிருக்க காரணம் தங்களுக்கு அதன் தலைமை பொறுப்பு தரப்படவில்லை எனும் கோபமா? தரப்படுவதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லையே எப்படி தர முடியும்?
புதிதாக வெளிவரும் ஏகத்துவம் பற்றி ஏகத்துக்கு புலம்பியுள்ளீர்கள். முதலில் இந்த ஏகத்துவத்தின் முந்தைய பெயர் என்ன? அல்முபீன் தானே? எந்த ஒரு முன்னறிவிப்புமில்லாமல் அல்முபீனை இழுத்து மூடியது யார்? அதன் சந்தாதாரர்களுக்கு என்ன அறிவிப்பு செய்தீர்கள்? கை நீட்டி சந்தா காசு வாங்கி கல்லாவில் நிறைத்த பின் அவர்களைப் பற்றி கவலைப்பட தங்களுக்கு நேரமில்லை. அதேசமயம் புதிய பத்திரிக்கைக்கு விளம்பரம் தேட முயற்சித்துள்ளீர்கள். அன்றும் இன்றும் உணர்வின் ஆசிரியராக அண்ணன் PJ தானே உள்ளார். அவரே முன்முயற்சி எடுத்து தற்சமயம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டதைப்போல் விளம்பரம் வெளியிட்ருக்கலாமே? ஏன் செய்ய முயற்ச்சிக்கவில்லை?
ஏகத்துவ கொள்கைகள் மக்களைச் சென்றடைய இருக்கும் ஓரே வாய்ப்பு 'ஏகத்துவம்' இதழ் மட்டுமே என்பதுபோல் குறிப்பிட்டு அதனை விளம்பரப்படுத்தாததால் ஏகத்துவ கொள்கைகையையே எதிர்ப்பதாக புலம்பியுள்ளீர்கள். அப்படியானால் ஏகத்துவம் இதழை வாசிக்காதவர் எவரும் ஏகத்துவவாதி இல்லையா?
ஏகத்துவம் இதழ் குறித்த விளம்பரத்துக்காக இவ்வளவு வருத்தப்படக்கூடிய தாங்கள் ஏகத்துவத்தின் அழைப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்தோடு துவக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்படும் காயல்பட்டிணம் அயிஷh சித்தீக்கா பெண்கள் மதரஸாவின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியின் விளம்பரத்தை உணர்வு பத்திரிக்கையில் வெளியிட தடை விதித்த உங்களின் சக்தி, அன்றும் இன்றுமான உணர்வின் ஆசிரியர், முஸ்லிம் மீடியா டிரஸ்டின் சேர்மன் PJ அவர்களை என்றாவது கடித்து கொண்டது உண்டா? இது குறித்து தங்களின் வருத்தத்தை, கரிசனத்தை வெளியிட்டது உண்டா? தனிமனித துதியில் தன்னிகரட்டு விளங்கும் தங்களால் எப்படி எதிர்த்து பேச முடியும்?
இருவேறு கொள்கையுடையவர்களின் பெயர்கள் ஒன்றாக அச்சடிக்கப்பட்டால் இறையச்சம் இல்லாமல் போய்விடும் என்று கூறி இறையச்சத்திற்கு புதிய வரைவிலக்கணம் கொடுத்துள்ளீர்கள். இவ்வாறு இஷ;டம்போல் விளக்கமளிப்பது தான் இறையச்சத்தின் அளவுகோலா?
மேலப்பாளையம் தமுமுக நகர நிர்வாகிகளின் நிலையை வருத்தத்தோடு விமரிசிக்கும் தாங்கள், அந்நிர்வாகிகள் அவ்வாறு பதிலளிக்க என்ன காரணம் என்று யோசித்தீர்களா? அவர்கள் மீது பழி சுமத்த எண்ணி தாங்கள் வெளியிட்ட இச்செய்தி தங்களையே பலியாக்கி உள்ளதுதான் உண்மை. தாங்கள் அவர்களிடம் தமுமுகவிற்கு என்ன தனி குர்ஆனா என்று குப்ரான வார்த்தைகளை கேள்வியாக்கியதால் அவர்களும் பதிலுக்கு ஆமாம் என்று சொல்லியுள்ளார்கள். நாகரீகமில்லாமல் பேசியதும், குப்ரான வார்த்தைகளை உதிர்த்ததும் தாங்கள்தான். பின்னர் எப்படி பிறரை பழிக்கலாம்.
மேலப்பாளையம் அப்துல் அக்பர், ஞானியார், பொட்டல்புதூர் அப்துல்காதர் நீக்கப்பட்டது சம்பந்தமாக தமுமுக தலைமைக்கு உரிய மரியாதையுடன் தபால் எழுதி விளக்கம் பெற்றுக்கொள்ளுங்கள்.
அதே சமயம் தாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் குறித்து நாம் நமது விமரிசனங்களை எழுதாமல் இருக்க முடியாது. நகர நிர்வாகி ஒருவர் ஃபோட்டோ எடுத்துக்கொண்ட விஷயத்தில் இவ்வளவு கொதித்துப்போகும் தாங்கள், திருமணமான ஒருவர் தங்களுக்கும், PJ வுக்கும் நெருக்கமாக அன்றும் இன்றும் இருக்கும் நிலையிலேயே வேறு ஒரு பெண்ணோடு தகாத தொடர்பு வைத்திருந்து, அப்பெண்ணின் திருமணத்திற்கு பிறகும் கள்ள உறவு தொடர்ந்து கருவானதால் உருவான பிரச்சனையை சமாளிக்க விவாக பிரிவு பெற்று பின்னர் அப்பெண்ணை இரண்டாம் தாரமாக்கினாரே அன்று இதுபோல் ஏன் கொதித்தெழவில்லை. அவர் யார் என்பது தங்களுக்குத் தெரியும். எனக்கும்; தெரியும். நாகரீகம் கருதி அவரது பெயரை வெளியிடவில்லை. தேவைப்பட்டால் வெளியிடத் தயங்கமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.
20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் புழு அரித்து குப்பையில் கொட்டப்பட்டதாக புளுகிக் கொட்டியிருக்கும் தாங்கள் புழு அரிப்பதற்கு முன் வாங்கிக் கொண்டிருக்கலாமே அல்லது அதனை வேறு இடங்களுக்கு மாற்ற உதவியிருக்கலாமே. எந்த ஒரு உதவியோ முன் முயற்சியோ செய்யாமல் வாளாயிருந்து விட்டு இன்று புலம்புவது தங்களுக்கென அணி சேர்க்கும் உத்தியா?
தேர்தல் பிரச்சாரத்திற்காக வேட்பாளருடன் பொதுச்செயலாளர் பயணித்தததை விமரிசித்துள்ள தாங்கள் தலித் கலை இலக்கிய குழவினர் நடத்திய விழாவில் பங்குகொண்டதோடு பொதுப்பணத்தை தானமாக அள்ளிக்கொடுத்துள்ளீர்களே இச்செயலை என்னவென்பது? அல்லது இதுதான் தாங்கள் குறிப்பிடும் இறையச்சத்தின் வெளிபாடா?
தமுமுக மாநில நிர்வாகி J.S. ரிஃபாயி அவர்கள் தொழுவதில்லை என்றும், தனி கட்டிடத்தில் தொழுகை நடத்துகிறார் என்றும் முரண்பட்டு கூறியுள்ளீர்கள். மஸ்ஜிதுல் ரஹ்மானில் தொழாதவர் எவரும் தொழவில்லை. அதாவது ஒருவர் அதைத்தவிர வேறு எங்கு தொழுதாலும் அவரது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்று அர்த்தமா. தயவு செய்து அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடாதீர்கள்.
விரும்பியோ விரும்பாமலோ உலகிலுள்ள அனைத்தும் (மனிதனைத் தவிர) அல்லாஹ்விற்கே கட்டுப்படுகின்றன. அவன் விதித்ததின் படியே செயலாற்றுகின்றன என்ற வசனத்தின் அடிப்படையில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குதிரைகளும் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டே நடக்கின்றன என்ற அடிப்படையில் அது முஸ்லிம் குதிரைதான்.
தாங்கள் சிறைபட்டிருந்த போது தங்களுக்காக போரடியவர்களை, தங்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களை தரம் கெட்ட தலைவர் என தரம் தாழ்த்தி விமர்சிக்கும் தங்களுடைய தரம் தெளிவாக புரிகிறது. நன்றி மறப்பதுதான் தங்களுடைய பார்வையில் தவ்ஹீத் மற்றும் இறையச்சம் போலும். தமுமுக தலைவர்களின் தரம் குறித்த விமர்சிக்கும் முன் தங்களுடைய தரத்தையும், தங்களை சுற்றி கும்மி அடிப்பவர்களின் தரத்தையும், தாங்கள் அன்று நிழல் தலைவராகவும், இன்று நிஜ தலைவராகவும் ஏற்றுள்ளவரின் தரத்தையும் சற்றே உற்றுப் பாருங்கள். அப்படியும் புரியவில்லையானால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். விரிவாக, விளக்கமாக எடுத்துரைப்போம். இன்ஷh அல்லாஹ்.
இறுதியாகவும், வெளிநாட்டு வாழ் தவ்ஹீத்வாதிகளை குறித்து நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாமென்றும், அவர்களது நிதி ஆதரவுகளை மடைமாற்றும் எண்ணத்தோடு முயற்ச்சிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை அனுபவித்த அபகரித்த அவர்களின் செல்வங்களை, அவர்கள் வழங்கியவற்றிற்காக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
ஆபூபக்கர் K.S. திட்டுவிளை, குமரி மாவட்டம்.
Comments