நிற்கதியாகி விட்டவர்களுக்கு நிரந்தர நிவாரணம் எது ?
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிடமிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அல்குர்ஆன் 4:1 பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டு, பூமி, தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில் ) எறிந்து விடும்போது, மனிதன் திடுக்கிட்டு 'இதற்கென்ன நேர்ந்தது? (ஏன் இவ்வாறு அதிர்ந்தது?) என்று கேட்பான். அல்குர்ஆன் 99:1-3 வாடிக்கையான அந்த வேடிக்கைகள். கிழக்காசிய நாடுகளை குறி வைத்தாற்போல் தாக்கியுள்ள பூகம்பமும் கடல் கொந்தளிப்பும் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்பொழுதெல்லாம் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று பார்வை இடுவதும் செல்ல இயலாதவர்கள் அறிக்கை வெளியிடுவதும் நிதி திரட்டுவதும் வாடிக்கை. அந்த வாடிக்கையான வேடிக்கைகளைத்தான் இப்பொழுதும் பல அமைப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. கிரிமினல் வழக்குகளில் சிக்கி முன் ஜாமீன் பெற்றுள்ளவர்களில் சிலர் பூகம்ப நிதி கேட்டு வீதிகளில் உலவி வருவதையும் இதன் மூலம் அரசிடம் நற்பெயர் பெற முயன்று வருவதையும் பார்க்கிறோம். தொண்டரணி என வைத்திருப்பது எதற்கு? இந்த வேடிக்கைகளுக்கு மத்தியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ்வின் அறிக்கையும் த.மு.மு.க. தொண்ட...