அவர்கள் உண்மையாளர்கள் என்றால்...

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். துபையில் பி.ஜே. நிகழ்ச்சி தடையாகிவிட்டதை அனைவரும் அறிவீர்கள். இது சம்பந்தமாக பலரும் கேள்விகள் கேட்பதால் இந்த விளக்க மடல். 

முதலில் மழையின் காரணமாக ரத்து என்றார்கள். அஸருக்குப்பின் துவக்கம் என அறிவித்து இருந்தீர்கள். 3.40க்கு அஸர் ஜமாஅத் முடிந்து விட்டது 4 மணிக்கு மேல்தான் மிக மிக லேசாக விழுந்த தூரலை மழை என காரணம் காட்டுகிறீர்களே என்று அவர்களை நம்பி உள்ளவர்கள் யாரும் கேட்கவில்லை.

சின்ன கூட்டத்திற்குத்தான் அனுமதி வாங்கினீர்கள். பெரிய கூட்டமாக அல்லவா தெரிகிறது என நாற்காலிகளை பார்த்துவிட்டு போலீஸ் ரத்து செய்து விட்டது என்றார்கள். 

ஆரம்பத்திலிருந்தே மாநாடு என்றுதான் அறிவிப்பு செய்து நோட்டீஸ்கள் வெளியிட்டிருந்தீர்கள். துபை முழுவதும் போஸ்டர்களும் ஒட்டி இருந்தீர்கள். துபையிலிருந்து வெளியாகும் பத்திரிக்கைகளிலும் புகழை விரும்பாத? பி.ஜே.யின் போட்டோவுடன் விளம்பரம் செய்தீர்கள் பிறகு எப்படி சின்ன கூட்டம் பெரிய கூட்டம் என காரணம் கூறுகிறீர்கள் என்று அவர்களை நம்பி உள்ளவர்கள் யாரும் கேட்கவில்லை.

மறைந்த மன்னர் ஷேக் செய்யத் அவர்களுக்கு 40 முடியவில்லை எனவே ரத்தாகிவிட்டது. துபை போலீஸ் அனுமதி தந்தது அபுதாபி போலீஸ் 40 என கூறிவிட்டது என்று கூறி யு.ஏ.இ. அரசை போலீஸை இழிவுபடுத்தி வருகிறார்கள். 

துபை போலீஸை அபுதாபி போலீஸ் கட்டுப்படுத்த முடியாதே, யூசுப் இஸ்லாம் நிகழ்ச்சி 40க்குள்தான் நடந்தது. ஒண்ணரை லட்சம் மக்கள் கூடினார்கள் என்று மக்களால் கூறப்படும் அப்துஸ்ஸமது ஸமதானி கூட்டமும் 40க்குள்தான் நடந்தது. 

பிலிம் சிட்டி நிகழ்ச்சி கூட இப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்க இஸ்லாமிய மாநாடு என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை மட்டும் எப்படி 40 ஐ காரணம் காட்டி ரத்து செய்தார்கள் என்று அவர்களை நம்பி உள்ளவர்கள் யாரும் கேட்கவில்லை.

இப்படி அறிவுப்பூர்மான கேள்விகளை கேட்கக் கூடியவர்களாக இருந்தால் அந்த அணியில் எப்படி இருப்பார்கள்.

இப்பொழுது தினமும் துபையில் கூட்டம் நடந்து வருவதாகவும் 15 லட்சம் வசூல் ஆகிவிட்டது என்றும் செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதில் அவர்கள் உண்மையாளர்கள் என்றால் துபையில் கூட்டம் எங்கு நடந்தது. எப்பொழுது நடந்தது யார் தலைமை, யார் யார் முன்னிலை, எந்த எந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். யார் யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்ற விபரத்தை உணர்வில் வெளியிடட்டும். 

கூட்டம் ரத்து ஆனதற்கான காரணத்தையும் உணர்வில் வெளியிடட்டும். இதை அவர்கள் செய்தியாக உணர்வில் வெளியிடவில்லை என்று சொன்னால் அவர்கள் உண்மையாளர்களா? அல்லது ---களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு