17-12-2004 அன்று துபையில் நடந்த பி.ஜே. நிகழ்ச்சிகள்.

( நேற்றைய வெளியீட்டில் பெயர் போட மறந்து விட்டேன் எனவே கூடுதல் தகவல்களுடன் மறுபதிப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும். துபையில் தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் ஒன்றான அல்கோஸில் உள்ள ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ உரையாற்ற பி.ஜே. சென்று கொண்டிருந்தார். 11-50க்கு பி.ஜே. ஜும்ஆ உரை ஆற்ற தடை என்ற உத்தரவு வெளியானது. வந்த வழியிலேயே திரும்ப அனுப்பப்பட்டார்.

4 மணிக்கு துவங்க இருந்த சோனாப்பூர் ஹெச்.ஆர். கேம்ப் நிகச்சியும் தடை செய்யப்பட்டது.

6 மணிக்கு கல்ப் ஏர் பில்டிங்கில் நிகழ்ச்சி என்றார்கள். 5-20க்கு தடை செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

அடுத்து அதற்குப் பக்கத்தில் உள்ள சல்மானுல் பார்ஸி பள்ளியில் மஃரிபுக்குப் பிறகு பேசிக் கொண்டிருந்த அலாவுதீன் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பிறகு பர்துபையில் பாக்கிஸ்தான் கவுன்ஸிலேட் அருகில் உள்ள பள்ளியில் இஷh முடிந்து 7.30 க்கு துவக்கம் என்றார்கள். இஷhவுக்குப் பின் இமாம் மம்னூ (கூடாது) என கூறி விட்டு போய் விட்டார். 9 மணிக்கு மேல் அங்கு திருட்டுத்தனமாக கூடி உள்ளனர். இவை யாவும் பகிரங்க அறிவிப்பு இன்றி ரகசியமாக ஏற்பாடு செய்து போன் மூலம் மட்டும் அறிவிக்கப்பட்ட நிகிழ்ச்சிகளாகும். திருட்டுத் தனமாக கூடிய கூட்டத்தில் அனைவருக்கும் பி.ஜே. ஆறுதல் கூறி உள்ளார்.

பிறகு தனிமையில் நிர்வாகிகளை கடுமையாக சாடி உள்ளார். என்ன அமைப்பு நடத்துகிறீர்கள்? துபை நிகழ்ச்சி தடையானது. அணுமதி தந்த லோகல் போலீஸுக்கே தெரியாமல் அந்த தடை போடப்பட்டுள்ளது என்கிறீர்கள். அலைனில் Nஷக் செய்யது லைப்ரரி யாரும் தடை செய்ய முடியாது என்றீர்கள். அங்கும் தடையானது. அடுத்து அபுதாபியும் தடையாகி விட்டது.

அல்கோஸ் ஜும்ஆ பள்ளி, ஹெச்.ஆர். கேம்ப் ஆகியவை ஜே.டி. துணைத்தலைவர் கீழக்கரை ஜமீல் பொறுப்பில் உள்ளது ஜமீலை மீறி யாராலும் தடுக்க முடியாது என்றீர்கள். அதுவும் தடையாகிவிட்டது. தஞ்சை மாவட்ட ஜமாஅத் கூட்டம் எனும் பெயரில் கூடினால் தடை வராது என கல்ப் ஏர் பில்டிங் கார் பார்கிங்கில் அதுவும் அண்டர் கிரவுண்ட் கார் பார்கிங். ராசல் கைமா Nஷக் ஸுவூத் உடைய இடம். Nஷக் உடைய பில்டில் எனவே தடையாகாது என்றீர்கள். அது தடையாகி விட்டது. எங்கிருந்து வருகிறது இந்த தடை? அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாகவா எதிர் தரப்பினர் உள்ளார்கள்? நான் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாப்பிடவா இங்கு வந்துள்ளேன். தங்க இடமின்றி தங்க வந்துள்ளேனா? ஒரு கூட்டம் பேசினேன் என்ற திருப்தியுடன் போக முடியாது போல் உள்ளதே. ஏன மனம் நொந்து நிர்வாகிகளை வாரி உள்ளார்.

தடைக்கு காரணம் யார்? என்பது பற்றிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இக்பால் மதனி இல்லை என்பதை உறுதி செய்து விட்டனர். இலாஹியா, ஈமானா?, ஜமாஅத்துல் உலமாவா? வேறு யாருமா? என்பதை கண்டு பிடித்து 2ல் ஒன்று பார்க்கணும் என முடிவு செய்து உள்ளனர். 13-12-2004 செய்வாய் அன்று அண்ணன் பி.ஜே. அருளியுள்ளார்கள், சமையல்காரன் ஊர் வந்தால் அவன் காலையோ கையையோ இல்லாமல் ஆக்கி விடுவோம் என்று. 17-12-2004 அன்று அலாவுதீன் இட்ட கட்டளை 10 பேர் போய் சமையல்காரனை அடியுங்கள் என்பதாகும். தெம்பு இருந்தால் திராணி இருந்தால் வரட்டும் என எதிர் பார்த்து காத்து இருக்கிறார் இவர்களால் சமையல்காரன் என கூறப்படுபவர்.

படு தோழ்வி அடைந்த பி.ஜே.யின் முயற்சிகள்.

கோவையில் உள்ள கோயாஸ் உரிமையாளருக்கு போன் போட்டு நீங்கள் ஏற்றமதி செய்யும் கம்பெனி ஸ்பான்சரான அரபி மூலம் துபையில் கூட்டம் போட ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டுள்ளார். அரபி விசாரித்து விட்டு முடியாது என்று கூறி விட்டார். பிறகு கேரளா அமைப்பான இஸ்லாஹி சென்டரில் அனுமதி வாங்கித் தாருங்கள் என்று கோயா அவர்களை கேட்டுள்ளார். இஸ்லாஹி சென்டர்காரர்களும் முடியாது என மறுத்து விட்டனர். இறுதியாக ஆத்தூர் அப்துஸ்ஸமது மதனி அவர்களை ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருக்கிறார். அந்த மதனி மூலம் நிகழ்சிகளை ஏற்பாடு செய்து விடலாம் என எண்ணி தலை மறைவாக இருந்து வருகிறார்.

எனது வேலை போனாலும் பரவாயில்லை.

சவூதி அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் உலமாக்களையும் இழிவாகப் பேசிய பி.ஜே.க்கு சவூதி அரசின் ஊழியரான அப்துஸ்ஸமது மதனி ஏற்பாடு செய்து கொடுப்பாரா? எனது வேலை போனாலும் பரவாயில்லை அல்கோஸ் ஜும்ஆ பள்ளியிலும் ஹெச்.ஆர். கேம்ப்பிலும் கூட்டம் நடத்தியே தீருவேன் என்ற ஜே.டி. துணைத்தலைவர் கீழக்கரை ஜமீல் அவர்கள் கூட அந்த கூட்டத்தை நடத்தவில்லை. தனது வேலைவே முக்கியம் என இருந்து விட்டார். அப்படி இருக்க தனது வேலை போனாலும் பரவாயில்லை என அப்துஸ்ஸமது மதனி பி.ஜே. கூட்டத்தை ஏற்பாடு செய்வாரா? ஏன்பது கேள்விக் குறியாகவே உள்ளது. பகிரங்கமாக அறிவித்து முதன் முதலில் தடையான துபை கிரசன்ட் ஸ்கூலில் 31-12-2004 அன்று பி.ஜே. பேசிவிட்டுத்தான் தாயகம் வருவார். அப்படி அந்த இடத்தில் பி.ஜே. பேசாவிட்டால் தமிழ்நாடு த.--- ஜமாஅத்தை கலைத்து விடுவோம் என டி.என்.டி.ஜேக்கள் சவாலாக பேசி வருகின்றனர்.

அனைத்து டி.என்.டி.ஜே.யினருக்கு விடுக்கும் சவால்.

பி.ஜே. புறப்படும்போது ஒரு காரிலும் சிறிது தூரம் போய் வேறு ஒரு காரிலும் செல்கிறார். குறிப்பாக ஷhர்ஜா, அலைன் செல்லும்போதும் வண்டி மாறினார். இன்று அபுதாபிக்கும் சிறிது தூரம் ஒரு வண்டியிலும் பிறகு ஒரு வண்டியிலும் சென்றுள்ளார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்பது மர்மமாகவே உள்ளது. அவர் துபையில் தலைமறைவு வாழ்க்கை வாழவில்லை என்பது உண்மையானால் எங்கு தங்கி உள்ளார். பில்டிங் பெயர் என்ன? யாருடன் தங்கி உள்ளார் போன் நம்பர் என்ன? எந்த வண்டியில் போகிறார்? பாஸ் போர்ட் நம்பர் என்ன? யாருடைய விஸாவில் வந்துள்ளார்? விபரம் வெளியிடட்டும். இது உலகில் வாழும் அனைத்து டி.என்.டி.ஜே.வினருக்கு விடுக்கும் சவால்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு