உணர்வில் வந்த பி.ஜெ.யின் உளறலுக்கு கோட்டை தங்கப்பாவின் பதில்.
சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொருளாளர் கோட்டை தங்கப்பா அவர்களுக்கு துபையில் பணி புரியும் கொடுங்கையூர் மனிதநேய இல்லம், 1.ஏ. 157, 24வது தெரு சென்னை 118 என்ற முகவரியைச் சார்ந்த மைதீன் உடைய அஸ்ஸலாமு அலைக்கும்.
நவம்பர் 05-11, 2004 உரிமை 09, குரல் 09 உணர்வு பக்கம் 14 பதில்கள் பகுதியில் எஸ். செய்யது அப்துல்லாஹ் துபை எனும் பெயரால் கோவை சிறைவாசிகளுக்கு உதவுவது சம்பந்தமாக ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது.
அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் கோவை சிறைவாசிகளுக்கு உதவுவதாக இருந்தால் உணர்வு அலுவகத்திற்கு அனுப்புமாறு எழுதி உள்ளார்கள். கோவை சிறைவாசிகளுக்கு உதவுவதற்காக சிறுபான்மை உதவி அறக்கட்டளை (சி.டி.எம். டிரஸ்ட்) அமைத்து உதவி வருகிறீர்கள்.
சிறைவாசிகள் குடும்பப் பெண்களின் வேலை வேலை வாய்ப்பிற்காக டிரஸ்ட் சார்பில் மகளிர் சுய தொழில் உதவி மையம் நடத்தி வருகிறீர்கள். அதில் தயாரிக்கப்படும் பெண்கள் உள்ளாடையான ஷைனி பிரா ஏற்றுமதி சம்பந்தமாக துபை வந்துள்ள உங்களின் பதில் என்ன?
வஅலைக்குமுஸ்ஸலாம். குணங்குடி ஹனீபா அவர்களின் மகனார் மைதீன் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள்ள பத்திரிக்கையில் பதில் அளித்துள்ள அந்த மனிதர் எந்த தரத்தில் உள்ளவர், எவ்வளவு நாணயமானவர் என்பதற்கு அந்த பத்திரிக்கையும் அதன் முஸ்லிம் மீடியா டிரஸ்டும் முஸ்லிம் டிரஸ்டும் சாட்சிகளாக உள்ளன.
தன்னைப்போல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று எண்ணுவது அவரது உரிமை. அந்த அடிப்படையில் அவரது செயலையே அவர் எழுதி உள்ளார். சிறைவாசிகள் பெயரால் பல முறை வசூலித்து கணக்குக் காட்டாத பி.ஜே. மீண்டும் சிறைவாசிகள் பெயரால் வசூலிக்க திட்டமிட்டுள்ளதை அவரது பதில் மூலம் அறிகிறோம்.
பலர் நிதி திரட்டினார்கள். ஆனால் அந்த நிதிகள் சிறைவாசிகளைச் சென்றடைந்ததாக நமக்குத் தெரியவில்லை என்று அவரது பதில் துவங்குகிறது. அதில் பயன்படுத்தியுள்ள நமக்குத் தெரியவில்லை என்ற வார்த்தை ஜாலத்தைக் கவனிக்க வேண்டும்.
சரியான முறையில் சட்டப்படி உதவியவர்கள் போய் கேட்டால் நமக்குத் தெரியவில்லை என்றுதானே எழுதி உள்ளேன். நீங்கள் உதவியது எனக்குத் தெரியாதே. யாருமே உதவவில்லை என்று உறுதிப்படுத்தி எழுதவில்லையே எனக்குத் தெரியாது என்பதைத்தானே எழுதி உள்ளேன் என்று சமாளித்து விடுவார்.
கோவை அல்உம்மா சிறைவாசிகளுக்கு அரசாங்கம் இரண்டு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது என்று எழுதி உள்ளார். இதுவே அந்த கேள்வி பதிலில் உள்ள அவசரத் தன்மையையும் அரைவேக்காட்டுத் தன்மையையும் காட்டுகிறது.
கோவை சிறைவாசிகளுக்காக அரசாங்கம் 26 வக்கீல்களை நியமித்துள்ளது. அவரோ இரண்டு என எழுதி உள்ளார். ஒரு பத்திரிக்கை ஆசிரியராக இருக்கும் அவருக்கு இந்த உண்மை கூடத் தெரியவில்லை பாவம். இதன் மூலம் அவர் என்ன வாதம் வைக்கிறார்? சிறைவாசிகளின் பெயரால் வசூலிக்கப்பட்ட நிதி அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை இதன் மூலம் அறிகிறோம் என்கிறார். அவரது இந்த வாதம் அவர் மீதான நம்பகமின்மையைத்தான் உறுதிபடுத்துகிறது.
தமிழகத்தில் சமுதாய பிரச்சனையை ஒட்டி 365 முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் கோவை கே.கே. நகரைச் சார்ந் 40 பேருக்கு மட்டும் உதவுவதற்காக ஒரு டிரஸ்ட் உருவானது. அது இவரது ஆலோசனைப்படிதான் துவங்கப்பட்டது. அதற்கு உதவுமாறு இவரது பெயரால் வேண்டுகோள் விடுத்து உணர்வில் விளம்பரம் போட்டார்கள்.
அந்த டிரஸ்ட்டின் விளம்பரம் இவர் உணர்வை கைப்பற்றிய பிறகும் இடம் பெற்றது. இவர் உதவி கேட்டு விளம்பரம் செய்த 40 பேர்களும் தங்களுக்கு வழக்கறிஞர்களை நியமிக்க இயலவில்லை என்று தெரிவித்ததால் அரசாங்கம் அவர்களுக்காகவும் வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. 40 பேர்கள் பெயரால் வந்த நிதிகளை இவர் ஒழுங்காக ஒப்படைக்காததால்தான் அரசு வக்கீல் வைத்துள்ளார்கள் போலும். இந்த அனுபவத்தைத்தான் அவர் எழுதி உள்ளார் என்றுதான் அவரது பதிலிலிருந்து உணர முடிகிறது.
சிறைவாசிகளுக்கு உதவ விரும்புவோர் நிதியை உணர்வுக்கு அனுப்பினால் யாரிடம் ஒப்படைக்கச் சொல்கிறார்களோ அவர்களிடம் ஒப்படைப்போம் என்று எழுதி உள்ளார்.
கோவை முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உதவ மாட்டோம் என்று பல முறை உணர்வில் எழுதியவர். கோவை முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உதவுவது கேடுதான் விளைவிக்கும் என்றும் எழுதியவர் இப்பொழுது உணர்வுக்கு அனுப்பம்படி எழுதி உள்ளதில் திட்டமிட்ட சூழ்ச்சி உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
கோவை வழக்கு சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு எதிராக போலீஸில் போய் 62 பக்கங்களுக்கு வாக்கு மூலம் கொடுத்தவர். கோவை முஸ்லிம் கைதிகளுக்கு எதிரான வழக்கில் போலீஸ் தரப்ப சாட்சியாக தன்னை இணைத்துக் கொண்டவர். போலீஸ் சார்பில் கோர்ட்டுக்கு வந்து கோவை முஸ்லிம் கைதிகளுக்கு எதிராக சாட்சி சொன்னவர். கோவை முஸ்லிம் கைதிகளுக்கு உதவ முன் வந்துள்ளதுபோல் காட்டி உள்ளதில் சதி திட்டம் இல்லாமல் இருக்குமா?
சிறைவாசிகளுக்கு உதவ வேண்டிய நிதியை உணர்வுக்கு அனுப்பினால் ஆதாரத்தை உதவி செய்தவருக்கு அனுப்புவோம் என்றும் எழுதி உள்ளார். இதுவே அவரது வாதப்படி மோசடி செயலுக்குரிய ஆதாரமாகவும் ஏற்கனவே அவர் கூறியுள்ள கூற்றுகளுக்கு முரணானதாகவும் உள்ளது.
வசூலிக்கப்படும் நிதி யாரிடமிருந்து வந்தது. யாரிடம் கொடுக்கப்பட்டது என்று பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இதல்லாமல் கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் ரகசியம் என்றால் அது மோசடியே. இப்படி பேசிய பி.ஜே. அவர்களே அந்த திட்டத்தை எழுதி உள்ளார் என்றால் அவரை புரிந்து கொள்ளுங்கள்.
பல்வேறு நலப்பணிகளில் பயன்படுத்தவதற்காக துபையில் நிதி திரட்டும் பொறுப்பு ஷாகுல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணிகளைப் பற்றி ஷாகுல் விளக்கிக் கூறுவார். நம்பகமான ஐவர் குழுவின் மேற்பார்வையில் நிதி வசூல், செலவு ஆகியவை நடை பெறுகின்றன.
நம்பிக்கையுள்ளவர்கள் தாராளமாக அவரிடம் உதவி வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். எந்த அமைப்பின் பெயர் இல்லாமலும் என்ன பணி என்று குறிப்பிடாமலும் பொறுப்புதாரிகளான ஐவர் குழுவினர் யார் யார் என்ற பெயர் போடாமலும் இப்படி மொட்டையாக யாராவது வசூல் செய்வார்களா? இப்படி ஒருவர் வசூல் செய்தால் அவரைப் பற்றி என்ன சொல்வீர்கள்?
இதுமாதிரி கைப்பட கடிதம் எழுதி வெளிநாடுகளுக்கு அனுப்பி வசூல் செய்த ஒரே நபர் யார் தெரியுமா? பி.ஜே. என்ற இந்த நபர்தான். இது மாதிரி வசூல் செய்த பணத்திற்கு இதுவரை அவர் கணக்கு காட்டவில்லை.
இதை அவர் மறுத்தால் மேலப்பாளையம் சகோதரர் பழுலுல் இலாஹிக்கு பி.ஜே. விடுத்துள்ள சவால்படி ஒரே மேடைக்கு வந்தால் அந்த மேடையில் நானும் பி.ஜே. கைப்பட கடிதம் எழுதி வசூல் செய்த கடித ஆதராத்தை http://mdfazlulilahi.blogspot.com/1996/01/blog-post.html கொண்டு வந்து பி.ஜே. யார் என்பதை நிரூபிப்பேன் இன்ஷா அல்லாஹ்.
இதேபோல் சீனி நைனா முஹம்மதுவுக்கு உதவுகிறேன் என்று கூறி கைப்பட கடிதம் எழுதி பல வெளி நாடுகளுக்கு அனுப்பி வசூல் செய்தவர்தான் பி.ஜே. http://mdfazlulilahi.blogspot.com/1994/11/blog-post.html அதற்கும் இன்றுவரை அவர் கணக்கு காட்டவில்லை.
இப்படி பல வசூல் செய்து கணக்கு காட்டாத பி.ஜே. துபை வருகிறார் என்று 6 மாதங்களுக்கு முன்பாகவே துபையில் வசூல் வேட்டை நடந்து வருவதை நீங்கள்தான் என்னிடம் சொன்னீர்கள்.
எதன் பெயரிலாவது வசூல் செய்வதும் கணக்கு காட்டாமல் தனது சுக வாழ்வுக்கு பயன்படுத்திக் கொள்வதுமான போக்கை உடைய பி.ஜே.யும் அவரது ஆதரவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் துஆவுக்கு அஞ்சி திருந்தட்டும். புனிதமிக்க ரமழானில் மனம் நொந்து சிறைக் கொட்டடியில் கிடந்து கேட்கும் அவர்களது துஆவை அல்லாஹ் கபூல் செய்து விட்டால் இவர்களது கதி என்னவாகும்?
இன்று தமிழக சிறைகளில் வாடும் பெரம்பாலான முஸ்லிம்கள் சிறையில் வாட மூல காரணமாக இருந்தவர் இவர்தான் என்பதை என்னைவிட நீங்களும் உங்கள் தந்தையும் நன்கு அறிவீர்கள். வஸ்ஸலாம்.
முஹம்மது ஸபயர் என்ற கோட்டை தங்கப்பா,
C./ O பழுலுல் இலாஹி, கேம்ப், துபை.
பொருளாளர்: சிறுபான்மை உதவி அறக்கட்டளை , றஹீம் பிளாஸ்டிக் ஹவுஸ், ஞானியார் நகர், சாரமேடு, கரும்பும்கடை, கோயம்புத்தூர்-8,
போன்: 0422-3092021
Comments