ஸூனன் திர்மதீ. 60, ''நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர்'' என அனஸ் (ரலி) கூறியபோது ''நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?'' என்று கேட்டேன். ''ஒளூவை முறிக்கின்ற காரியங்கள் எங்களிடம் ஏற்படாதவரை ஒரு ஒளூவின் மூலம் பல தொழுகைகளை நாங்கள் தொழுவோம்'' என்று அனஸ் (ரலி) கூறியதாக அம்ரு இப்னு ஆமிர் அல் அன்ஸாரி அறிவிக்கிறார். இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்ததாகும். ஹூமைத் என்பவர் அனஸ் (ரலி) வாயிலாக அறிவிக்கும் (இதே) ஹதீஸ் ஹஸன் கரீப் என்ற நிலையிலுல்லதாகும் என்று அபூகூறுகிறேன். குறிப்பு:- புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. பாடம் 45, ஒரு ஒளுவில் பல தொழுகைகள் தொழுதல் 61, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர். (மக்கா) வெற்றியின் போது ஒருஒளூவின் மூலம் தங்களின் எல்லாத் தொழுகைகளையும் தொழுதார்கள். அப்போது (கால்களைக்கழுவுவதற்கு பதில்) தங்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ''இதற்குமுன் செய்திராத செயலை செய