2:88 சபித்தது ஏன் ? அவர்களை அழித்தொழிக்க இயலாதவனா?

இதற்கு முன் இடம் பெறாத குல்Fபுன்   என்ற  வார்த்தை இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு  , மூடப்பட்டுள்ளன' - திரையிடப்பட்டுள்ளன - உறை போடப்பட்டிருக்கின்றன - கவர் இடப்பட்டிருக்கின்றன. இப்படியாக ஒவ்வொருவரும்  அவரவர் அறிந்த தமிழிலில் மொழி பெயர்ப்பு தந்துள்ளார்கள். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/12/288.html




இந்த வசனத்தில் உள்ள ஃகுலுாபு - (ஃகல்ப்) என்பதற்க்கு  இதயங்கள் என்று  1.ஜான் டிரஸ்ட்  2.இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT 3.அல்-மதீனா அல்-முனவ்வரா 4.தாருஸ்ஸலாம் -ரியாத் 5. திரீயெம் 6.மலிவு பதிப்பு 7.பஷாரத்- A. முஹம்மது சிராஜுத்தீன் நுாரி, திண்டுக்கல் 8. ஸலாமத் பதிப்பகம் - A. முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி 9. அன்வாறுல் குர்ஆன்  ஆகியோர்  மொழி பெயர்த்துள்ளார்கள். 


1. ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

2.அதிரை ஜமீல்

3. றஹ்மத்

4. உமர் ஷரீப் காஸிமி

5. --- கடையநல்லுார் ஆகிய அறிஞர்கள்  P, ஜைனுல் ஆபிதீன் உலவி மாதிரி இந்த வசனத்தில்  உள்ளங்கள் என்றே  மொழி பெயர்த்துள்ளார்கள்.  

---------------

வ ஃகாலுா  - என்பதில் உள்ள  வாவுக்கு  இன்னும் என்று 1.ஜான் டிரஸ்ட்  2. அல்-மதீனா அல்-முனவ்வரா 3.தாருஸ்ஸலாம் -ரியாத் 4. ஸலாமத் பதிப்பகம் - A. முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி   ஆகியோர்  மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 


1. ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்) 2.தென்காசி  E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி 3.அதிரை ஜமீல் 4.இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT) 5. றஹ்மத் 6.  உமர் ஷரீப் காஸிமி 7.. --- கடையநல்லுார் 8. திரீயெம் 9.மலிவு பதிப்பு 10.பஷாரத்- A. முஹம்மது சிராஜுத்தீன் நுாரி, திண்டுக்கல் ஆகிய அறிஞர்கள் .P, ஜைனுல் ஆபிதீன் உலவி மாதிரி  வாவுக்கு   என்று  தனி  மொழி பெயர்ப்பு செய்யவில்லை.

---------------

இனி வார்த்தைக்கு வார்த்தை


وَقَالُوا - வ ஃகாலுா  
கூறுகின்றனர் - கூறினார்கள் - கூறுகிறார்கள்.-சொன்னார்கள்

قُلُوبُ -ஃகுலுாபு 
உள்ளங்கள்
نَا - னா 
எங்கள்

قُلُوبُنَا - ஃகுலுாபுனா  
எங்கள் உள்ளங்கள்

غُلْفٌ - குல்Fபுன் 
மூடப்பட்டுள்ளன' - திரையிடப்பட்டுள்ளன - உறை போடப்பட்டிருக்கின்றன - கவர் இடப்பட்டிருக்கின்றன

بَل -பல் 
அவ்வாறில்லை! - அவ்வாறன்று -   அவ்வாறல்ல -அப்படி அல்ல - மாறாக - ஆனால் - இல்லை - எனினும்

لعن - லஃன
சாபம் 

هُمُ- ஹுமு  
அவர்களை

لَّعَنَهُمُ - லஃன ஹுமு 
அவர்களை சபித்தான்

اللَّـهُ - அல்லாஹு 
அல்லாஹ்

بِكُفْرِ பிகுFப்ரி
மறுத்ததால் - நிராகரிப்பின் (மறுப்பின்)காரணமாக

هِمْ - ஹிம்  
அவர்கள்

بِكُفْرِهِمْ - பிகுFப்ரிஹிம்  
-அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால்


فَ -  Fப
எனவே - - ஆகவே -ஆதலால் -

فَقَلِيْلًا مَّا  - Fபஃகலீலம்மா 
 எனவே மிகக் குறைவாகவே (சொற்பமாக) 

يُؤْمِنُونَ யுஃமினுான
நம்பிக்கை கொள்கின்றனர். கொள்வார்கள் - அவர்கள் நம்புகிறார்கள்


وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ ۚ بَل لَّعَنَهُمُ اللَّـهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَّا يُؤْمِنُونَ ﴿٨٨﴾

--------------------


தமிழ் நடையில்  மொழிப்பெயர்ப்புகள் :


எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன'' என்று கூறுகின்றனர். அவ்வாறில்லை! (தன்னை) மறுத்ததால் அல்லாஹ் அவர்களைச் சபித்தான்.6 அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர். (PJதொண்டி



எங்களுடைய உள்ளங்கள் உறையிடப்பட்டுள்ளன என்று யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்களுடைய இறை மறுப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்களுள் மிகக் குறைந்தவர்கள்தாம் நம்பிக்கை கொள்வார்கள். -  (அதிரை ஜமீல்) 


எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று கூறினார்கள் மாறாக அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான் எனவே மிகக் குறைவாகவே (அவர்கள்) நம்பிக்கை கொள்வார்கள் -(கடையநல்லுார்))



இன்னும்,  அவர்கள் (யூதர்கள்)  "எங்களுடைய இதயங்கள்  திரையிடப்பட்டுள்ளன"  என்று  கூறுகிறார்கள்.  ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள். ஜான் டிரஸ்ட் 


"எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அவ்வாறன்று, அவர்களின் நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான். ஆதலால் அவர்கள் நம்பிக்கை கொள்வது வெகு சொற்பமே! -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

“எங்களுடைய இதயங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன” என்று அவர்கள் கூறுகின்றனர். இல்லை, அவர்களுடைய அவநம்பிக்கையின் காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான் (என்பதுதான் உண்மை). ஆகவே, மிகச் சொற்பமாகவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

இன்னும், “எங்கள் இதயங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன” என்று (யூதர்களான) அவர்கள் கூறுகின்றனர், அவ்வாறன்று, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். ஆகவே, அவர்கள் விசுவாசம் கொள்வது வெகு சொற்பமே. -(அல்-மதீனா அல்-முனவ்வரா)


இவ்வசனங்களை (2:15, 2:88, 2:89, 2:152, 2:158, 2:159, 2:161, 3:87, 4:46, 4:47, 4:52, 4:93, 4:118, 4:147, 5:13, 5:60, 7:44, 9:68, 9:79, 11:18, 24:7, 33:57, 33:64, 38:78, 47:23, 48:6, 64:17, 76:22) மேலோட்டமாகப் பார்க்கும் போது அல்லாஹ்வை பலவீனனாகக் காட்டுவது போல் சிலருக்குத் தோன்றலாம்.


அல்லாஹ் அனைத்து ஆற்றலும் மிக்கவன். எந்தக் காரியத்தையும் அவன் செய்வதென்றால் 'ஆகு' எனக் கூறினால் உடனே ஆகி விடும்.


ஆனால் "அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான்", "அல்லாஹ் கேலி செய்கிறான்", "அல்லாஹ் ஏமாற்றுகிறான்" என்பன போன்ற வாக்கியங்கள் இவ்வசனங்களில் காணப்படுகின்றன.


ஏமாற்றுதல், கேலிசெய்தல் போன்றவை கையாலாகாத பலவீனர்களின் செயல்களாகும். 'ஆகு' என்று கூறி ஆக்கும் வலிமை பெற்றவன், திட்டமிட்டு சூழ்ச்சி செய்யத் தேவை இல்லை எனும்போது இறைவன் ஏன் இப்படிக் கூற வேண்டும் என்று சிலர் நினைக்கலாம்


இது பற்றிய விளக்கம் அறிய கிளிக் செய்யவும் 


https://www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-explanations/6-allah_iyalathavana 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.