வேத வரியுடன் மோதும் மவ்லுாது வரிகள் வார்த்தைக்கு வார்த்தை

சுப்ஹான மவ்லுாதின் ஏழாவது (7) பைத்தான இன்ன பைத்தன் அன்த சாகினுஹு   என்பதில்  மவ்லிது வரிகள்  என்ன சொல்கின்றன?


(நபியே) தங்களின்பால் (தங்கள் மீது) நாங்கள் வைத்திருக்கும் நேசம் (காதல்- அன்பு) எங்களின் இதயத்திலிருக்கிறது  என்கிறது.

https://mdfazlulilahi.blogspot.com/2020/12/blog-post_8.html

இதில் மாற்றுக் கருத்து இல்லை.  எல்லா முஸ்லிம்களின்  உள்ளத்திலும் நபியின் மீது பாசம் நேசம் இருக்கிறது. அடுத்து என்ன சொல்கிறார்? மவ்லிதின் கவிஞர்.




தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக! 

அவர் இழப்பினை அடையவில்லை.

இது எங்களின் பாவம் மற்றும் கஷ்டங்களின் கண்களிலிருந்து (கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும்) உள்ளவற்றை அழித்துவிடும்.

என்றுள்ளது மவுலுாது வரிகள்.  இது ,


அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என்கிற (5:74) அல் குர்ஆன் வேத வரி  மோதுகிறதா?  இல்லையா? 


இனி குர்ஆன் மூல வசனத்துடன் வார்த்தைக்கு வார்த்தை 

 اَفَلَا يَتُوْبُوْنَ اِلَى اللّٰهِ وَيَسْتَغْفِرُوْنَهٗ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

أَفَلَا  -அFலா

இல்லை(யா)- எனவே  

يَتُوْبُوْنَ  யதுாபூன

அவர்கள் மனந்திரும்புகிறார்கள்

اَفَلَا يَتُوْبُوْنَ அFலாயதுாபூன 

திருந்தி திரும்ப மாட்டார்களா?அவர்கள் மனந்திரும்பவில்லையா? 

اِلَى - இலா

பக்கம் - 

 اِلَى اللّٰهِ -இலழ்ழாஹி 

அல்லாஹ்விடம் - அழ்ழாஹ்(வின்)  பக்கம் 

وَيَسْتَغْفِرُوْنَ -வயஸ்தஃக்Fபிரூன 

மன்னிப்பு கேளுங்கள் 

ه هُஹு

அவன்

وَيَسْتَغْفِرُوْنَهٗ‌ؕ -வயஸ்தஃக்Fபிரூனஹு 

அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? -  அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? -அவனிடம்  மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? - அவனிடத்தில் பாவமன்னிப்புக் கோரிட வேண்டாமா? - (அவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள்) 

وَاللّٰهُ -வழ்ழாஹு 

அழ்ழாஹ்

غَفُوْرٌ -கFபூருன் 

மன்னிப்பவன்

 رَّحِيْمٌ‏ -ரஹீமுன்

நிகரற்ற அன்புடையோன்

---------------------------------

அல்லாஹ்வின் சொல்லான குர்ஆன் வசனத்தை  மூலத்துடன்  வார்த்தைக்கு வார்த்தை பார்த்தவர்களே.  மனிதன்  எழுதிய மவுலிது கவிதையின் வரிகளையும் வார்த்தைக்கு வார்த்தை தருகிறோம் பாருங்கள்.

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ

صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

حُبُّ - ஹுப்பு   

காதல் - நேசம் - அன்பு 

كُمْ - கும் 

உங்கள் - தங்கள்

 فِيْ  -F பீ 

இருக்கிறது.

قَلْبِنَا -கல்பினா 

எங்களின் இதயத்தில் 

مَحْوٌ - மஹ்உன் 

அழிக்கும்

 مِنْ - மின் 

இருந்து

رَّئِيْنَ -ரயீனி 

கண்களில்

 الذَّنْبِஅ(ர்)த்தன்பி 

குற்றம் - குற்ற உணர்வு -பாவம்

 وَالْحَرَجِ -வல்ஹரஜி 

கஷ்டம் - சங்கடம் - விமர்சனம்

----

صَبُّكُمْ - ஸப்புகும்

தங்களின் நேசன்

وَاللهِ -  வழ்ழாஹி 

நான் சத்தியம் செய்கிறேன் -

 لَمْ- லம் 

 இல்லை

يَخِبِ - யகிபி

ஏமாற்றம் - இழப்பு

 لِكَمَالِ -  லிகமாலி 

முழுமை - நிறைவு - பூரணம்

 الْحُسَنِ -அல்ஹுஸ்னி 

 அழகு - நல்லது 

وَالْبَهَجِ -வல்பஹஜி 

மகிழ்ச்சி - ஒளி - வெளிச்சம் 

---------------------------------------

இவர்கள் அல்லாஹவின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான். குர்ஆனின் இந்த வசனம் (5:74) டாக்டர். முஹம்மது ஜான் அவர்களின் தமிழாக்கம் 

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(PJ)


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.