குமாரசாமி கால்குலேட்டர்களை கொடுத்து தீர்ப்பு கூறச் சொல்லுமா கூட்டணி ?

இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் ஏற்படும் சண்டை, சச்சரவுகள். இவர்கள் மத்தியிலே ஏற்படும் சிக்கல்கள். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதற்குரிய தீர்வுகளை எப்படி எடுக்க வேண்டும்? நாங்களெல்லாம் இந்த மண்ணுக்கு உரியவர்கள் எங்களுடைய பிரச்சனைகளை இந்த மண்ணுக்கேற்ற முறையில் நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்களா?


அன்சாரிகள், முஹாஜிர்கள், யூதர்கள் என்று எல்லாரும் சேர்ந்துதான் ஒப்பந்தம் எழுதுகிறார்கள். பிரச்சனைகளுக்குரிய தீர்ப்பை யார் கூற வேண்டும் என்பதற்கு 9ஆவது உடன்படிக்கையில் என்ன எழுதுகிறார்கள்? ”இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்” அதாவது அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம்தான் தீர்ப்புக்கு வரவேண்டும். இவ்வாறு ஒப்பந்தம் எழுதப்படுகிறது.



இன்றைய அன்சாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் கம்யூனிஸத்தையும் கண்டதுகளையும் உள்வாங்கி தீர்வைத் தேடலாம். மதீனா மண்ணின் மைந்தர்களான அசல் அன்சாரிகள் ஏற்றுக் கொண்டார்கள். அது மட்டுமல்ல யூதர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். அப்படியானால் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது சாதாரண நிகழ்ச்சியாஇறைத்துாதர்(ஸல்) வாழ்வில் நடந்த மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி இல்லையா? மாபெரும் மாற்றம் அல்லவா? முஸ்லிம்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கக் கூடியவர்கள். அதுவும் யூதர்கள், பிரச்சனை ஏற்பட்டால் யாருடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி எழுதிய ஒப்பந்தத்தை தான் யூதர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.


நீதி தீர்ப்பாளராக முஹம்மதுநபி(ஸல்) அவர்களை யூதர்களும் ஏற்றார்கள். ஏற்க வைத்தது எது? அல்லாஹ் உடைய துாதரின் நன்னடத்தையும் நீதியான சொல்லும் செயலும் தானே காரணம். இல்லை என்றால் அந்த யூத சமுதாய மக்கள் அப்படி எழுத அனுமதித்து இருப்பார்களா? இந்த ஒப்பந்தத்தை ஏற்று இருப்பார்களா? ஒரு சமுதாயத்துக்குள் பிரச்சனை ஏற்பட்டு விட்டால். அந்த சமுதாயத்தில் இருந்தே ஒருவரை தீர்ப்பளாராக ஆக்கினால். அந்த சமுதாயத்திலிருந்தே ஏற்க மறுத்து எதிர்ப்புகள் வருவதை காண்கிறோம். எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை பார்ப்பது மிக மிக அரிதான ஒன்றாக இருக்கிறது. இதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


பத்தாவது ஒப்பந்தம் என்ன?. ”குறைஷிகளுக்கும் குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பது கூடாதுகுறைஷிகள் யார் முஸ்லிம்களை அழிக்க திட்டமிட்டு அலைந்து கொண்டிருப்பவர்கள். எனவே குறைஷிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது. அப்படிப்பட்ட குறைஷிகளுக்கு யாராவது உதவி செய்தால் அவர்களுக்கும் மதீனாவிற்குள் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது. எவ்வளவு அருமையான ராஜதந்திர அரசியல் வழி காட்டல். இதுவெல்லாம் மக்காவில் போய் போர் செய்வதற்காக செய்த ஏற்பாடுகளா? தங்களை பாதுகாத்து கொள்வது என்பதுதான் இதில் அடங்கி உள்ளது. இதைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் உள்ள 12 அம்சங்களை எடுத்துக் கொண்டால் அதில் என்ன நோக்கம் உள்ளது.


மதீனாவில் இருக்கக் கூடிய மக்களை இனிமையாக வாழச் செய்ய வேண்டும். அங்கு இருக்கக் கூடிய மக்களை சுதந்திரமாக வாழச் செய்ய வேண்டும். மதீனாவில் இருக்கக் கூடிய மக்களுக்கு எல்லா வாழ்க்கை வசதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுக்கு மத்தியிலே பிரச்சனை ஏற்பட்டால் சுமூகமான தீர்வு கொடுக்க வேண்டும். இந்த நோக்கங்கள்தான் இந்த 12 ஒப்பந்தங்களிலும் இருக்கிறது. இது அல்லாமல் எதிரிகளைப் பற்றிய கவலையோ. அவர்களை எவ்வாறு அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ. அதற்கு என்று ஒரு திட்டமோ. போருக்கு எப்படி ஆயத்தம் ஆவது என்றோ. இப்படி எதுவுமே இல்லை.


எல்லாமே தற்காப்பு தற்காப்பு என்றுதான் இருக்கிறது. மிருகங்கள் கூட தற்காப்புகள் இன்றி இருப்பதில்லை. தற்காப்பு மூலம் மிருகங்கள் கூட தன்னை காத்துக் கொள்கிறது. மிருகங்கள் தன்னை காத்துக் கொள்ளும்பொழுது ஆறாவது அறிவு உள்ள மனிதன் தன்னை காத்துக் கொள்ள மாட்டானா? அப்படி தற்காத்து கொள்வதற்காக செய்த முயற்சிகளை போர் போர் என்று சொன்னார்கள். சொல்லவும் வைத்தார்கள். அதற்கு இஸ்லாமிய போர் என்று முத்திரையும் குத்தினார்கள். அதை நாம்  பார்த்துக் கொண்டு இருக்கிறோம். சிந்தித்துப் பாருங்கள்.


11ஆவது ஒப்பந்தம். யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கு எதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்” அதாவது மதீனாவில் யார் வந்து முற்றுகை இட்டாலும். அவர்களுக்கு எதிராக அனைவரும் போர் செய்ய வேண்டும். அவர்கள் யூதர்களை அடிக்க வந்து முற்றுகை இட்டாலும் சரி. முஸ்லிம்களை சுற்றி வளைத்து முற்றுகை இட்டாலும் சரி. அத்தனை பேரும் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவரவர் பகுதியை அவரவர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கவனிக்க வேண்டிய வாசகம்.


எவ்வளவு அழகான அருமையான அம்சம் பாருங்கள். முஸ்லிம்கள் இருக்கும் பகுதிகளிலே பாதுகாப்பு பணிக்கு ஒரு யூத தளபதியை போட்டு. யூதர்கள் இருக்கும் பகுதிகளிலே பாதுகாப்பு பணிக்கு ஒரு முஸ்லிமை தளபதியாக போட்டு. இந்த நிலையில் உண்மையிலேயே அந்த பகுதி தளபதி சிறை பிடிக்கப்பட்டு. அல்லது கொல்லப்பட்டு. அந்த யூதர்கள் பகுதி கைப்பற்றப் பட்டால். முஸ்லிம் வேண்டும் என்றே விட்டு விட்டான் என்ற பேச்சு வரும்.


அதே மாதிரி முஸ்லிம் பகுதி கைப்பற்றப் பட்டால். யூதன் வேண்டும் என்றே விட்டு விட்டான் என்ற விமர்சனங்கள் வரும். அதனால்தான் அறிவின் நாயகர், அரசியல் ஆசான் முஹம்மதுநபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். யாராவது மதீனாவை முற்றுகை இட்டால். எல்லாரும் எதிர்த்து நின்று போர் புரிய வேண்டும். ஆனால் அவரவர் பகுதியை பாதுகாக்க அவரவர்கள்தான் இருக்க வேண்டும் என்று. எவ்வளவு தெளிவான, அறிவான, ஓட்டை உடைசல்கள் இல்லாத சட்டம் ஒப்பந்தமாக உள்ளது என்பதை கவனியுங்கள். இதை விட சிறந்தது எங்கே இருக்கிறது உள் வாங்க? உள் வாங்கிகள் சிந்திக்க வேண்டும்.


பன்னிரண்டாவதாக. இந்த உடன் படிக்கை அநியாயம் செய்வோரையும் குற்றவாளிகளையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது” யார் எழுதுகிறார்கள். கூட்டணிக்கு வந்தவர்கள் எழுதுகிறார்கள். இன்று கூட்டணி ஆட்சி வந்து விட்டால், ஆளும் கட்சியுடன் கூட்டணிக்கு வந்து விட்டால். எல்லா வழக்குகளும் வாபஸ். இதுதான் இன்றைய கூட்டணிகள் நிலை. கூட்டணிக்கு வந்த பிறகும் முடிவாக என்ன சொல்கிறார்கள். ஏற்கனவே குற்றவாளியாக இருப்பான். அநியாயம் பண்ணியவனாக இருப்பான். அக்கிரமம் செய்தவனாக இருப்பான். அவன்களுக்குரிய தண்டனைகளிலிருந்து இந்த கூட்டணி இந்த உடன்படிக்கை பாதுகாப்பு தராது. தண்டனையிலிருந்து விடுதலை என்ற பேச்சுக்கோ பேச்சு வார்த்தைகளுக்கோ இடமே இல்லை.


அவன்கள் என்ன தப்பு பண்ணி இருந்தாலும் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும். அந்த வழக்குகள் நடக்க வேண்டிய முறைப்படி நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்குரிய தீர்ப்புகள் முறைப்படிதான் நீதியின்படிதான் இருக்கும். உடன்படிக்கை செய்து கொள்ளும் இந்தக் கூட்டணி நீதித்துறையில் தலையிடுமா? தலையிடாது. கூட்டணி குமாரசாமி கால்குலேட்டர்களை கொடுத்து தீர்ப்பு கூறச் சொல்லுமா? சொல்லாது.


இன்று கூட்டணி கட்சிகள் நிலை என்ன? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி உள்ள எல்லா கோர்ட்டுகளிலும் வழக்குகள் இருக்கும். ஆளும் மத்திய அரசுடன் கூட்டணி ஆகி விட்டால் குன்கா தீர்ப்புகளெல்லாம் குளோஸ் ஆகிவிடும். கூட்டணி என்றால் இப்படிப்பட்ட கூட்டணிகளைத்தான் இன்றைய உலகில் பார்க்கிறோம். அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் யூதர்களுடன் கூட்டு சேர்ந்து எழுதிய 12 ஒப்பந்தங்களை பாருங்கள். மற்றவர்களை பார்க்கச் சொல்லுங்கள்எடுத்ததற்கெல்லாம் பத்ரு பத்ரு என பயம் காட்டுவது தவறுதான் என்பதை இந்த ஒப்பந்தங்களே உணர்த்தும்.


இந்த உடன்படிக்கையும் ஒப்பந்தமும் உறுதி பெற்றது. அதனால் மதீனாவும் மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறியது. அதற்குத் தலை நகரமாக மதீனா ஆனது. அந்த நாட்டில் எல்லா சமூகத்தவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆட்சித் தலைவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆனார்கள். அந்த நாட்டில் ஆட்சி அதிகாரம் உடையவர்களாக முஸ்லிம்கள் இருந்தார்கள். இந்தக் கால பாஷையில் சொல்வதாக இருந்தால் முஸ்லிம்கள் ஆளும் கட்சியினராக ஆனார்கள்.


அமைதியும் பாதுகாப்பும் உடைய சூழலை விரிவுபடுத்துவதற்காக. தேவைக்கேற்ப மற்ற சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) உடன்படிக்கை செய்து கொண்டார்கள். யூதர்களோடு செய்த இந்த ஒப்பந்தம் இன்றைய உலகுக்கு. இந்தியா போன்ற நாட்டிற்கு ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்கு மிக மிக அவசியம். இதை முதலில் உள்வாங்கிகளுக்கு விளக்குவோம். நமக்கு ஆளும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த அரசியல் வழிகாட்டுதல்களை செயல்படுத்தக் கூடியவர்களாக நாம் ஆக வேண்டும் என்ற நிய்யத் செய்து கொள்வோம். ஆளும் வாய்ப்பு கிடைக்காத காலங்களில். அவ்வப்பொழுது ஆட்சியாளராக வரக் கூடியவர்களுக்கு இறைத்துாதரின் வழிகாட்டுதல்களை எத்தி வைக்க சட்டசபைக்கு நம்மவர்களை அணுப்ப பாடுபடுவோம்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி ; மக்கள் உரிமை
ஏப்22-28,2016
அடுத்த தலைப்பு 

முந்தைய தலைப்பு 

அன்சாரி அவர்களே! என்ன இல்லை இஸ்லாத்தில் வெளியில் இருந்து உள் வாங்க?





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.