பொய் வழக்கு போடும் போலீஸாரை விமர்சிக்கும் பொதுமக்கள் நிலை என்ன?

யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாக ஆவார்கள். அது போலவே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாக ஆவார்கள்இறைவனின் இறுதித் துாதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யூதர்களுடன் செய்து கொண்ட 2ஆவது ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தத்தில். இன்றைய  அரசியல்வாதிகளுக்கு அரிய பல வழிகாட்டுதல்கள் உள்ளன.



முஸ்லிம்களும் சரி, யூதர்களும் சரி அவரவர்களின் தனிப்பட்ட செலவுகளுக்கு அவரவர்களே பொறுப்பாளிகளாக ஆவார்கள் என்றால் என்ன அர்த்தம்? மதீனாவிலே ஆட்சி இருக்கும். ஆட்சியாளரிடம் பொதுப் பணம் நிறைய இருக்கும். நிறைய பொருளாதாரம் இருக்கின்றது என்ற காரணத்தினால். அரசாங்க செலவில் நான் பள்ளிவாசல்கள் கட்ட மாட்டேன்” என்பதுதான் இதன் அர்த்தம்

இதை நீதியாளர் முஹம்மது நபி (ஸல்) எப்படி சொல்லி உள்ளார்கள் பார்த்தீர்களா? அவரவர்கள் சமுதாய சொந்த செலவுகளை அவரவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுஎல்லா மத மக்களின் பொருளாதாரங்களைக் கொண்ட அரசாங்க செலவில் பள்ளிவாசல்கள் கட்ட மாட்டேன் என்றார் நேர்மையான ஆட்சியாளர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்

இன்றுள்ள ஆட்சியாளர்களின் நிலை என்ன? அரசு செலவில் அவரவர்கள் சார்ந்த மத ஆலயங்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு அதிகமான சலுகைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களாக, அதிகாரிகளாக இருக்கக் கூடியவர்கள். அரசாங்க செலவில் போய் ஆலயங்களை சுற்றிப் பார்க்கிறார்கள். மகாமகம் போன்றவற்றில் கலந்து கொள்கிறார்கள். சங்கராச்சாரியார் போன்ற சாமியார்களை, புத்த பிக்குகளை சந்திக்கிறார்கள்.


இதையெல்லாம் அவர்கள் சொந்த செலவில் செய்யட்டும். சொந்த காரில் போகட்டும். எல்லா மதத்தவரும் சேர்ந்து செலுத்திய  வரிப்பணத்தில் வாங்கியதுதான் அரசு வாகனங்கள். அதில் பயணித்துப் பொதுப் பணத்தை எப்படி நாசமாக்கலாம்? வீண் விரயம் செய்யலாம்? அவர்களுடைய மத அடிப்படையில் அவர்கள் கோயில் குளங்களுக்கு போகட்டும். போக வேண்டாம் என்று சொல்லவில்லை

அமைச்சராக ஆகி விட்டதால் சாமியார்கள், பிக்குகள் ஆசி வேண்டும் என்று எண்ணினால் போகட்டும். அது அவர்கள் நம்பிக்கை. போகக் கூடாது என்று நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் சொந்த வண்டியில் போக வேண்டியதுதானே. நாம் எல்லாரும் கட்டக் கூடிய வரிப் பணத்தில் உள்ள விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும். போக அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.? 


அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள். உங்கள் சொந்த செலவுகளுக்கு நீங்கள் பொறுப்பு. எங்கள் சொந்த செலவுகளுக்கு நாங்கள் பொறுப்பு. சாலை என்பது பொதுவாகத்தான் இருக்க முடியும். அதில் இந்து சாலை, முஸ்லிம் சாலை, கிறிஸ்தவ சாலை, புத்த சாலை என்று போட முடியாது. இது பொதுவானது. எனவே இது போன்ற பொதுப்பணிகளைத்தான் அரசாங்கம் செய்யும். சொந்த செலவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஆகாது. ஆகக் கூடாது என்ற வழிகாட்டுதல்தான் இரண்டாவது ஒப்பந்தத்தில் உள்ளது. இதை இன்றைய  அரசியல்வாதிகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைப்பது முஸ்லிம்களாகிய நமது கடமை.


ஒப்பந்தம் 3. இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து கொள்ள வேண்டும்” அதாவது இவ்வாறு உடன்படிக்கை செய்து கொண்ட யாராக இருந்தாலும். போரில் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து கொள்ள வேண்டும்


யூதர்களை தாக்க வந்து விட்டார்கள் என்றால் யூதர்கள்தானே தாக்கப்படட்டும் என்று முஸ்லிம்கள் இருந்து விடக் கூடாது. முஸ்லிம்களை தாக்க வந்து விட்டார்கள் என்றால். நமக்கு என்ன? இவர்கள் வந்த பின்தானே தொல்லையே. தாக்கப்படட்டும் என்று யூதர்கள் இருக்கக் கூடாது. யாருக்கு இந்த நிலை ஏற்பட்டாலும் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து கொள்ள வேண்டும். என்று மூன்றாவதாக எழுதுகிறார்கள்.


ஒப்பந்தம் 4. ”யூதர்கள் முஸ்லிம்கள் தொடர்பு என்பது ஒருவருக்கு ஒருவர் நலம் நாடுதல். நல்லுபதேசம் செய்து கொள்ளுதல். உதவி உபகாரம் செய்து கொள்ளுதல் என்ற அளவில்தான் இருக்க வேண்டும்இவைகளுக்கு அப்பால் ஒன்று இருக்கிறது. அது என்ன

கெடுதீ. கேடு விளைவிப்பது. குற்றம் புரிவது. அநியாயம் செய்வது. இதில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் கூடாது. இதில்தான் பிரச்சனைகள் வெடிக்கும். ஒரு யூதர் தவறு செய்து விட்டார் என்றால். மற்ற யூதர்கள் அதற்கு துணை போகக் கூடாது. இதில் ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்து கொள்ளக் கூடாது.


5. ”தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக ஆக மாட்டார்” அதாவது தவறு என்று ஒருவர் செய்தால். தவறு செய்தவர்தான் பிடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு அழகான அருமையான சட்டத்தை ஒப்பந்தமாக எழுதி உள்ளார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இன்றுள்ளவர்களுக்கு எவ்வளவு அழகான வழிகாட்டுதல்கள் இருக்கின்றது. இன்றுள்ள என்ன நிலை? ஒருவர் செய்த குற்றத்திற்கு மற்றவர்கள் பொறுப்பாளியாக, குற்றவாளியாக ஆக மாட்டார்கள் இப்படித்தானே இன்றும் உலகில் சட்டங்கள் உள்ளது என்கிறீர்களா?


ஒருவன் தப்பு செய்தால் அவனை பிடிக்க முடியாத போலீஸார் என்ன செய்கிறார்கள்? குற்றவாளிகளின் அண்ணன் தம்பிகளை, பெற்றோரை, நண்பர்களைபிடித்துச் செல்கிறார்கள். வழக்கும் போட்டு விடுகிறார்கள். இவை பொய் வழக்குகள்தான். இந்த பொய் வழக்குகளால் ஏற்பட்ட விளைவு? தந்தையும் சிறையில் உள்ளார். கணவனும் சிறையில் உள்ளார். பிள்ளைகளும் சிறையில் உள்ளனர். ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு, கவர்னருக்கு முதல்வருக்கு சிறைவாசிகள் வீட்டுப் பெண்களின் கண்ணீர்க் கடிதம். உலக மீடியாக்களில் இது மாதிரி செய்திகள் வராத நாட்களும் இல்லை நாடுகளும் இல்லைபோலீஸாரின் இந்த அநியாயங்களை விமர்சிக்கும் பொது மக்கள் நிலை என்ன


இந்திரா காந்தி சுடப்பட்டதும் கோவையில் இருந்த சீக்கிய குடும்பத்தினர் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். தமிழகத்தில் மட்டுமா நடந்தது? இந்திய அளவிலா? இல்லை. உலக அளவில் அரபு நாடுகளைத் தவிர. அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளிலும். சீக்கியர்கள் தாக்கப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள், உதைக்கப்பட்டார்கள், விரட்டப்பட்டார்கள், மான பங்கப்படுத்தப்பட்டார்கள். இந்திரா காந்தியை சுட்டது யார்? சீக்கிய இனத்தைச் சார்ந்த ஒருவன். இதற்கு மற்ற சீக்கிய சகோதரர்கள் எப்படி பொறுப்பு ஆவார்கள். ஒரு இனத்தைச் சார்ந்த ஒருவன் தப்பு செய்தான் என்பதற்கு அந்த இனமே பொறுப்பாகுமா? சிந்திக்கக் கூடிய ஆற்றல் எங்கு போனது?

1991இல் நடந்த தேர்தலில் மு.லீக் லத்தீப் அணி சார்பில் (.மு.மு.. முன்னால் துணைத் தலைவர்) கோவை பிலால் ஹாஜியார் வாணியம்பாடியில் போட்டியிட்டார். அப்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். உடனே பிலால் ஹாஜியார் தேர்தல் அலுவலகத்தை புல்டோசர் வைத்து இடித்தார்கள். ராஜீவ் கொலைக்கும் பிலால் ஹாஜியாருக்கும் என்ன சம்பந்தம். இது போன்றவற்றை எழுதுவதாக இருந்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம். இதில் பொய் வழக்கு போடும் போலீஸார் நிலையும் பொதுமக்கள் நிலையும் ஒன்றாகத்தான் உள்ளது. இது மாதிரியான நிலைகளை யார் எடுத்தாலும் தவறுதான், அநியாயம்தான், அக்கிரமம்தான், அநீதிதான்.


இந்த மாதிரி அநீதிகள் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் நீதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் அன்றே ஒப்பந்தத்தில் சேர்க்கிறார்கள். அதே மாதிரி நல்லுபதேசம் செய்வதிலும் நலம் நாடுவதிலும் உதவி உபகாரங்கள் செய்து கொள்வதிலும்தான் பரஸ்பரம் நீங்கள் உதவி செய்து கொள்ள வேண்டும். இது அல்லாமல் குற்றம் செய்வதிலும் அநியாயம் செய்வதிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது கூடாது என்றும் ஒப்பந்தத்தில் சொல்லி உள்ளார்கள்

இந்த மாதிரியான ஒரு ஒப்பந்தம் இருக்குமேயானால் அங்கே அநியாயம் நடக்காது. அநீதி இழைக்கப்படாது. அவர்கள் வேறு நாம் வேறு என்ற எண்ணமே ஏற்படாது. எல்லாரும் ஒன்று என்ற ஒருமைப்பாடு ஏற்படும். ஒருமைப்பாடு என்றால் என்ன? ஒருமைப்பாட்டின் நோக்கம் என்ன? இந்திய ஒருமைப்பாடு எப்படி உள்ளது?

தொடரும் இன்ஷாஅல்லாஹ்

நன்றி; மக்கள் உரிமை
ஏப்1-7, 2016

அடுத்த தலைப்பு

பிற கட்சிகளோடு கூட்டணி சேர மார்க்கத்தில் அணுமதி இருக்கிறதா?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.