இதுதான் அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய வெற்றி


போருக்கு முதல் காரணம் அரேபியர்களிலே குறைஷிகள் மட்டும்தான் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களுக்கு எதிராக இருந்தார்கள். அரபகத்திலே வாழ்ந்த மக்களிலே பல கோத்திரங்கள் இருந்தன. அந்த கோத்திரங்களில் மிகவும் எதிரிகளாகவும் அவர்களது எதிர்ப்பு சக்திகளை முழுமையாக பயன்படுத்தியவர்களாகவும் இருந்தவர்கள் யார்?


குறைஷி குலத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான். ஒரு கட்டத்திற்குப் பிறகு, குறிப்பாக ஹிஜ்ரத்துக்குப் பிறகு தெளிவாக இவர்கள் எதிரிகள் என்று பகிரங்கப்படுத்துகிறார்கள். அதற்கு முன்பு வரை மூடி மறைத்த மாதிரி மறைமுகமாக இருந்தது. மற்றவர்களை சித்ரவதை செய்தாலும் அபுதாலிப் உயிரோடு இருக்கும் வரை இறுதி நபியை நெருங்கவில்லை. இலைமறை காய்மறையாக இருந்தது. அந்த எதிர்ப்புத்தன்மை. இறைத்துாதர்(ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் போனதும் பகிரங்கப்படுத்தப்பட்டு விடுகின்றது.


எதிரி என்பது முடிவாக ஆகி விட்டது. இதற்குப் பிறகு எதிர்ப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் போர் மிக மிக அவசியம் என்று ஆகின்றது. இவர்களை கட்டுப்படுத்தாமல் பணிகளை தொடர முடியாது. காய்களை நகர்த்த முடியாது என்ற கட்டாய நிலை. இதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நேரத்தில் அல்லாஹ் போரை கடமையாக ஆக்குகிறான். இரண்டாவது காரணம் என்ன?


அரபிகளில் ஒரு சாரார் குறைஷிகளுக்கு உதவி செய்கிறார்கள். நம்மை எதிர்ப்பதற்கு உதவி செய்கிறவர்களையும் எதிர்த்து போரிட வேண்டும். இல்லை என்று சொன்னால் அவர்கள் நயவஞ்சகத்தனமாக முன்னால் சிரித்து விட்டு பின்னால் எதிராக செயல்பட்டு விடுவார்கள். ஆகவே குறைஷிகளை மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உதவியாக உள்ளவர்களையும் எதிர்த்து போரிடுவது மிக மிக அவசியமாக அந்த நேரத்தில் ஆகிவிடுகிறது.


இல்லை என்று சொன்னால் அங்கே இருக்கக் கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம்களையும் அவர்கள் கொன்று விடுவார்கள். அப்படி நடந்துவிட்டால். அதற்குப் பிறகு முஸ்லிம்கள் என்று சொல்வதற்கு அங்கு யாருமே இருக்க மாட்டார்கள். அதனால் அல்லாஹ் அவர்கள் மீது போரை கடமையாக்குகிறான்.


உடன்படிக்கை செய்து கொண்ட யூதர்கள் மாறு செய்தால் மட்டும். அல்லது இணை வைப்போருக்கு உதவி செய்தால் மட்டும் உடன்படிக்கையை முறித்துக் கொண்டு அவர்களோடு போரிடுங்கள். இல்லை எனில் அவர்களுடன் போரிட வேண்டாம் என்று அல்லாஹ் சொல்லி காட்டி உள்ளான். (9:12,9:13


யூத கிறிஸ்தவர்கள். அதாவது வேதம் கொடுக்கப்பட்டவர்கள். முஸ்லிம்களை பகைத்துக் கொண்டாலோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக குறைஷிகளுக்கு உதவி செய்தாலோ அவர்களை இழிவுபடுத்தும் வரை அதாவது அவர்களை கைது செய்யும் வரை போர் நீடிக்கும் என்ற பிரகடனத்தை செய்ய அல்லாஹ் அனுமதி அளிக்கிறான். இப்படிப்பட்ட அனுமதிக்கு முன்னால் யூதர்களோடு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.


இறைவனின் இறுதித் துாதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு செல்வதற்கு முன்னால். அங்கே வாழ்ந்த மக்களுக்கு முடிசூடாத மன்னராக, பட்டம் இல்லாத பதவி உடையவராக இருந்தவர் அப்துல்லாஹ் இப்னு உபை. இறுதி இறைத்துாதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து இருக்காவிட்டால். அந்த பகுதிக்கு அப்துல்லாஹ் இப்னு உபைதான் அரசர் போன்று வரக் கூடியவராக இருந்தார்.


அல்லாஹ்வின் துாதர் மதீனாவுக்கு வந்த உடன் என்ன நடந்தது? மதீனாவில் உள்ள பெரும்பாலான மக்கள்.  அவர்களுக்குள் ஏற்பட்ட  பிரச்சனைகளுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் நியாயம் கேட்டு வந்தார்கள். நீதி கேட்டு வந்தவர்கள் முஸ்லிம்களாகவும் இருந்தார்கள். யூதர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலை நாளடைவில் என்ன ஆயிற்று. சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு உள்ளேயே எல்லா மக்களும் அல்லாஹ் உடைய துாதரை அரசராக ஏற்றுக் கொள்வதற்கு உடன்பட்டு விட்டார்கள். ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.


யூதர்களோடு ஒப்பந்தம் எழுதும்போதும் முஸ்லிம்களை விட யூதர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். அல்லாஹ்வின் துாதரோடு இருந்து ஒப்பந்தம் எழுத வரவும் செய்கின்றார்கள். அதுவும் அடிப்படை கொள்கையான கடவுள் கொள்கையில் வேறுபாடும் மாறுபாடும் உடையவர்கள். இன்று ஒரே இறை ஒரே மறை ஒரே நபியின் வழி முறை என்கிறார்கள். ஒரே கொள்கையில் உடையவர்கள் என்கிறார்கள். அவர்களிடையே கூட ஒப்பந்தம் செய்ய முடிவதில்லை.


ஜெண்டில்மேன் ஒப்பந்தம் என்பார்கள். சுய லாபத்திற்காக பேசியதற்கு மாற்றமாகவும் தங்களுக்கு சாதகமாக எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுதுவார்கள். அரசியல் ஆதாயத்திற்காக அந்தர் பல்டி அடிப்பார்கள். ஒப்புதல் பெறாததையே ஒப்பந்தம் என வெளியிடுவார்கள். இப்படி சந்தி சிரித்த ஒப்பந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எது உண்மையான ஒப்பந்தம்? சிந்திக்க வேண்டிய ஒன்று


அல்லாஹ்வின் துாதரைப்பற்றிய நல் எண்ணம். 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கைப் பற்றி கேள்விப்பட்ட செய்திகள். மதீனா வந்த பிறகு அவர்கள் நேரடியாகப் பார்த்த ஒரு வருஷ வாழ்க்கை. உடன் இருந்தவர்கள். மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் சத்தியமிட்டு அளித்த நற்சான்றுகள். 14 ஆண்டுகள் ஆகியும் யாருமே பிரச்சாரம் செய்தவரை விட்டு பிரிந்து செல்லாதது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது. சொல்லக் கூடிய கொள்கையை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ மனிதர் நியாயமானவர், நேர்மையானவர் என்ற முழுமையான நம்பிக்கை யூதர்களுக்கும் வந்து விட்டது.


இன்றுள்ளவர்கள் நிலை என்ன? சொல்லக் கூடிய கொள்கை சரிதான். சொல்பவன் சரி இல்லை என்பதுதான். உடன் இருந்தவர்கள், இருப்பவர்கள். மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் இருப்பவர்கள். யாராலும் சத்தியமிட்டு நற்சான்றுகள் அளிக்க முடிவதில்லை. பிரச்சாரம் செய்தவரை விட்டு பிரிந்து சென்ற நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இல்லை. இவர்கள் அரங்கம் வேறு அந்தரங்கம் வேறு என்ற நிலை உடையவர்கள்.


அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அரங்கம் வேறு அந்தரங்கம் வேறு என்ற நிலை கிடையாது. யாருடைய வழக்கு என்று போனாலும் ஜாதி மத இன பேதம் இல்லாமல்  நேர்மையான தீர்ப்பு சொல்வதற்கு தகுதியானவர் என்று யூதர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய வெற்றி. இந்த வெற்றி மட்டும் இல்லா விட்டால் யோசியுங்கள்.


தங்கி இயங்குவதற்கு இடம் இல்லாவிட்டால் முஸ்லிம்கள் என்னதான் செய்ய முடியும். மதீனாவிலே தங்கி இயங்குவதற்கு இடம் கிடைத்தது. அதன் காரணத்தினாலேதான். சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளுக்கெல்லாம் கடிதம் எழுத முடிந்தது. அதற்கு முன்னால் கடிதம் எழுதவில்லை. எழுத முடியவில்லை. அதற்கு முன்னால் உலகியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மதீனாவில் தங்கி இயங்கிய பிறகுதான் அரசியல் அங்கீகாரம் கிடைக்கிறது. கிடைத்த அரசியல் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும். அங்கீகாரம் கொடுத்த உடன்பிறப்பு மாதிரியான அந்த மக்களோடும் எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்? அதற்கு அல்லாஹ்வின் துாதர்(ஸல்) காட்டி வழி என்ன?


மக்காவில் இருந்தபொழுது அல்லாஹ் உடைய துாதர்(ஸல்) ஸஹாபாக்களை அபீ சீனியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அதுதான் முதல் ஹிஜ்ரத். அந்த முதல் ஹிஜ்ரத் சென்றவர்களிடம் என்ன சொல்லி அனுப்பினார்கள்? அங்கு என்ன சட்டம் இருக்கிறதோ அதை ஏற்று நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். அப்படியானால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற சட்டம் இருந்தால் அதைப் பின் பற்று என்று சொன்னார்கள் என்று அர்த்தமா? என்ன அர்த்தம்? இதை எப்படி விளங்க வேண்டும்?

தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி மக்கள் உரிமை

முந்தைய தலைப்பு

இஸ்லாத்தில் மிகைத்து இருப்பது எது? தண்டிப்பா? மன்னிப்பா?

அடுத்த தலைப்பு

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.