எண்பதுக்கும் எண்பதுகள் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர் ஸைபுத்தீன் ரஷாதி பீ.ஜே.யின் 6ஆவது உரை


(விவாத நிகழ்ச்சி என்பதால்தான் பி,ஜெ. அந்த அறிஞரின், இமாமின் பெயரைக் கூறி உள்ளார். பொதுவான நிகழ்ச்சி என்றால், இது போன்ற ஆய்வுகளை சொன்ன இமாம்களின் பெயர்களையோ அறிஞர்களின் பெயர்களையோ சொல்ல மாட்டார். தனது ஆய்வைப் போல் தான் சொல்லி மக்களை பிரமிக்க வைப்பார். அவற்றிற்கு இதுவும் ஒரு ஆதாரம்) என்பது  நமது விமர்சனமாகும்

இது எப்படி இஜ்மாஃ ஆகும்? என்று யார் கேட்கிறார்கள்? ஷாபி இமாம் கேட்கிறார்கள்...
இது எங்கே இருக்கிறது? ஹனபி மத்ஹபிலே, நான் நாற்பது வருஷம் பாடம் நடத்திய கிதாபு என்று ஸைபுத்தீன் ரஷாதி சொன்னாரே அந்த கிதாபில்தான் இருக்கிறது.

மார்க்கத்துக்கு ஸேப்டி இஜ்மாஃ ரஷாதி5ஆவது http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/5_31.html உரைக்கு பீ.ஜே.யின் பதிலரை. 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. அன்பிற்குரிய சகோதரர்களே! 

ஒரு முழு அமர்வு முடிந்த நிலையிலும் கூட இந்த காலத்தில் உள்ளவர்களெல்லாம் கூடி. நாங்கள் முடிவு செய்தால் இஜ்மாஃ. அது ஆதாரம் என்பதற்கு, எந்த ஒரு சான்றையும் எடுத்து வைக்காமல். வேற வேற விஷயங்களை, இந்த தலைப்பிற்கு பொருத்தமில்லாத விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

அதை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எப்படிப்பட்ட ஒரு தலைப்பிலே, மூல ஆதாரம் என்ற தலைப்பிலே பேசுகிறோம். அது எவ்வளவு முக்கியமான ஒரு விஷயம். அது நிறுவுவதற்குரிய எந்த ஒரு ஆதாரம் இல்லை என்பது இப்பொழுதே தெள்ளத் தெளிவாக நிரூபணமாகி விட்டது.  

அதனால்தான் என்ன செய்கிறார்கள். ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பது(1980)லே, பார்த்தீர்களா? எண்பது(80)லே சொல்லி விட்டு எண்பத்தி ஆறிலே இப்படி எழுதி இருக்கிறார் (என்று குற்றம் சாட்டுகிறார்) 

அது எண்பது(80)லே என்று இல்லை. எண்பது(80)களில் என்று இருக்கிறது. எண்பது(80)க்கும் எண்பது(80)கள் என்பதற்கும் என்ன வித்தியாசம் கூட உங்களுக்கு தெரியவில்லை.

எண்பது(80)ல் இருந்து எண்பத்தொன்பது(89) வரைக்கும் உள்ள காலங்களை எண்பதுகள் என்று சொல்வார்கள். அவர் போட்ட கிளிப்பிங்கிலே ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பது(1980)களில் (என்றுதான் உள்ளது) எழுவது(70)களில், அறுவது(60)களில் என்றால். அறுவதிலிருந்து அறுவத்தி ஒன்பது வரை பன்மையாக சொல்ல மாட்டார்கள். எண்பது(80)ல் என்று சொன்னால்தான் எண்பது.

எண்பது(80)களில் என்றால் எண்பது டூ எண்பத்தொன்பது. இது எல்லா எழுத்தாளர்களுடைய நடையிலும் உள்ள ஒரு விஷயம். அந்த எண்பது(80)களில் நான் அதை சொல்லி இருக்கிறேன். சரியா?

அதுபோக ஸஹாபா நஜாத்திலே எழுதினார் என்று சொல்கிறார்களே, அந்த வாசகமும் இந்த வாசகத்தையும் எழுதி வைத்து கம்பேர் பண்ணி பாருங்கள். ரண்டுக்கும் சம்பந்தம் இருக்காது. அதில் போட்டு நேரத்தை நான் வேஸ்ட் பண்ண விரும்பவில்லை. மக்கள் எடுத்து பார்க்கிறதற்காக சொல்லி விட்டால் போதும். தலைப்பிலே கவனமாக நாம இருக்க வேண்டி இருக்கிறது.

அடுத்து வந்து ஆதாரம் கேட்டார்கள். அஹ்மது இப்னு ஹன்பல் சொன்னதற்கு ஆதாரம் கொடுத்து விட்டோம். ஷாபி இமாம் சொன்னதற்கு இந்தா (இதோ) ஆதாரம் கொடுத்தாச்சு. 

அபுஹனீபா அவர்கள் வந்து ரண்டு இஜ்மாஃவை மீறி இருக்கிறார்கள் என்று இதுவரைக்கும் சொல்லி இருக்கிறேன். அந்த ரண்டு இஜ்மாஃ மீறியதற்குரிய ஆதாரத்தை கொடுத்த விட்டேன். 

மாலிக் இமாம் இஜ்மாஃவுக்கு அவர்கள் ஆதாரம் கேட்கவில்லை. கேட்டதற்குத்தான் கொடுக்ணும். அது ரண்டுதான் சொன்னார்கள் கொடுத்த விட்டேன். அது கேட்டால் அதையும் கொடுக்கிறேன்.

அடுத்ததாக இப்ப ஆதாரத்தையெல்லாம் எடுத்து வைக்காமல் உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்திலே மூணு தலாக் ஏற்படுத்தினாங்க என்கிறதை வைத்துக் கொண்டு. அது இஜ்மாஃ. உமர் ரலியல்லாஹு அன்ஹு காலத்திலே எல்லாருமா கூடி மூணு தலாக் விட்டா இனி மூணு தலாக்தான் என்று ஆக்கி விட்டார்கள். அது இஜ்மாஃ அப்படி என்று, அதுதான் ஆதாரம்.

இது எப்படி ஆதாரமாகும்?  இது எப்படி நீங்களெல்லாம் கூடி முடிவு செஞ்சா மார்க்க ஆதாரம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாகும். நம்ம காலத்திலே எல்லாருமா கூடி, அதுதானே இஜ்மாஃ என்கிறீர்கள். நம்ம காலத்திலே எல்லாருமா கூடி தேவைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம். அப்படிங்கிறது ஆதாரம் என்று சொல்வதற்கும் இந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை.

உமர் ரலியல்லாஹு அன்ஹு செய்தார்கள் என்றால் ஸஹாபி உடைய இஜ்மாஃ என்பதற்குத்தான் ஆதாரமாகும். (இது ஆதாரமில்லை இதை) ஆதாரம் என்று வைத்துக் கொண்டால், அதுவும் இதுவரை ஆதாரம் வைக்கவில்லை. 

அதில் என்ன கேட்கிறார்கள் என்றால். அப்ப ஸஹாபாக்களெல்லாம் வந்து எல்லாரும் தப்பான இஜ்மாஃ செய்து விட்டார்கள். பயந்து கொண்டு செய்திருப்பார்களா? அனைவரும், உமர் தப்பான கருத்தைச் சொல்லி அதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்து விட்டார்களா? என்கிற மாதிரி ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.

இதற்கு நான் பதில் சொல்வதை விட அவர்களும் மதிக்கக் கூடிய ஒரு அறிஞர் சொன்ன பதிலே இதற்கு போதுமானதாக இருக்கிறது. அவர் பதிலை நான் எடுத்துக் காட்டுகிறேன் என்றால் அவர் கரக்ட்டாக இருக்கிறதுனாலே எடுத்துக் காட்டுகிறேன். அதில் உள்ள கேள்விகளுக்கு நான் பதில் சொல்வேன்.

ஒரு ஆளுடைய அறிஞருடைய கூற்றை நான் எடுத்துக் காட்டினால் அவா் மீது தள்ளி விட மாட்டேன். அந்த அறிஞருடைய கூற்றை எடுத்துக் காட்டினால் கரக்ட்டாக இருக்கிறது அது. அதில் என்ன கேள்வி கேட்டாலும் அறிஞரிடம் கேட்க வேண்டாம் என்னிடம் கேட்கலாம். 

அதற்கெல்லாம் ஆன்ஸர் இருக்கு என்று உறுதி படுத்திக் கொண்டு தான் அந்த சொல்லை எடுத்து வைக்கிறேன். என்ன சொல்கிறார், அந்த அறிஞர் வந்து ஷாபி இமாம்.

(விவாத நிகழ்ச்சி என்பதால்தான் பி,ஜெ. அந்த அறிஞரின், இமாமின் பெயரைக் கூறி உள்ளார். பொதுவான நிகழ்ச்சி என்றால், இது போன்ற ஆய்வுகளை சொன்ன இமாம்களின் பெயர்களையோ அறிஞர்களின் பெயர்களையோ சொல்ல மாட்டார். தனது ஆய்வைப் போல் தான் சொல்லி மக்களை பிரமிக்க வைப்பார். அவற்றிற்கு இதுவும் ஒரு ஆதாரம்)

ஷாபி இமாம். என்ன சொல்கிறார்கள் என்று கேட்டால், அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சி காலத்திலே, ஸகாத்துகளை, கனீமத்தை, இதையெல்லாம் பங்கு வைப்பார்கள் இல்லையா. பங்கு வைத்து கொடுப்பார்கள். பங்கு வைத்து கொடுக்கும்பொழுது அடிமைக்கு கொஞ்சம் கம்மியாகவும், சுதந்திரமானவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவும் கொடுப்பார்கள்.

பிரித்து கொடுக்கும் போது அடிமையாக இருந்தால் கொஞ்சம் கம்மி அவர்களுடைய நஸபு, அவா்களுடைய தியாகம் அதையெல்லாம் அடிப்படையாக வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்றால் ரண்டு விதமாக ( தவறாக சொல்லி விட்டார். எனவே தனது தலை அசைவால் தவறு என உணா்த்தி பிறகு திருத்தி கூறுகிறார்)

அபுபக்கர் காலத்திலே இரண்டு பேருக்கும் சமமாக கொடுப்பார்கள். அதாவது அடிமைக்கு நுாறு ரூபாய் கொடுத்தால், அடிமை இல்லாதவருக்கும் நுாறு ரூபாய்தான். இதை அபுபக்கர் அவர்கள் முடிவு  செய்து ஆட்சி பண்ணுகிறார்கள். இது எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள். ஒருத்தரும் மறுக்கவில்லை.

ஒருத்தரும் மறுக்கவில்லை. என்றால் அங்கே இருந்தவர்கள் தான் மதீனாவில் இருந்தவர்கள் தான். நான் தான் எல்லாருக்கும் இந்த செய்தி போகாது என்கிறேனே. அடுத்து என்ன ஆகிறது என்று கேட்டால், உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சி காலம் வருது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சி காலம் வந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால், அடிமைக்கெல்லாம் ஒன்னும் கொடுக்கத் தேவை இல்லை. அப்படி என்று சொல்லி விட்டு. அந்த பாரம்பர்யம் உள்ளவர்களுக்குத் தான் கொடுப்பேன். அப்படி என்று சொல்லி என்ன செய்தார்கள். அவர்கள் அந்த சட்டத்தை மாற்றி விட்டார்கள்.

அபுபக்கர் அவர்கள் அந்த சட்டத்தை சொல்லும் போது, அதை உமர் ரலியல்லாஹு அன்ஹு எதிர்க்கவில்லை. ஆனால் எதிரான கருத்து அவா்களிடம் இருந்திருக்கிறது. அபுபக்கர் சொன்னதற்கு எதிரான கருத்து உள்ளத்தில் இருந்தாலும் கூட அபுபக்கருக்கு எதிரான கருத்தை மனதிற்கு உள்ளே வைத்துக் கொண்டார். 

அவர் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்கிறார் என்று கேட்டால். இது எப்படி அடிமையும் அடிமை இல்லாதவனும் எப்படி நாம சமமாக்கிறது. என்று சொல்லி அபுபக்கர் ஏற்படுத்திய சமத்தை இவர் குளோஸ் பண்ணி விட்டார்.

இதற்கு அப்புறம் (இதன் பிறகு) அலி ரலியல்லாஹு அன்ஹு ஆட்சிக்கு வருகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் இது சரி இல்லை. இவா் செய்தது. அப்படி என்று சொல்லி அடிமை எல்லாரும் சமம் தான் என்று கொண்டு வந்து விட்டார்கள்.

அப்ப உமர் அந்த சட்டத்தை போடும் போது அலி அங்குதான் இருக்கிறார்கள். மாற்று கருத்தில்தான் இருக்கிறார்கள். அப்ஜெக்ஷன் பண்ணவில்லை. 

அபுபக்கர் சட்டத்தை போடும் போது அந்த சபையில் உமா் இருக்கிறாரு. அவருடைய கருத்து அது இல்லை. அதிலே அவருக்கு உடன்பாடு இல்லை. ஆனால் எதிர்க்கவில்லை. அவர் கையிலே எப்ப அதிகாரம் வருகிறதோ அப்ப அந்த சட்டத்தை போடுகிறாரு. 

அப்ப (அப்பொழுது) அலிக்கு மாற்று கருத்து இருக்கிறது. ஆனால் அலி வாயை திறக்கவில்லை. அலி ரலி ஆட்சிக்கு வரும் போது அவா் என்ன செய்தாரு உமர் செய்தது தப்பு என்கிறாரு. மூணும் இஜ்மாஃதான். அபுபக்கர் காலத்திலே உங்க இஜ்மாஃ.

இஜ்மாஃ என்றால் என்ன? அந்த ஊரிலே யாரும் எதிர்க்காவிட்டால் இஜ்மாஃ என்கிறீர்களே அந்த அர்த்தத்தின்படி பார்த்தால், அபுபக்கர் சொல்லும் போது எல்லாரும் இஜ்மாஃ பண்ணுகிறார்கள். உமர் சொல்லும் போது அதை மீறி இஜ்மாஃ பண்ணுகிறார்கள். அலி காலத்திலே அதை மீறிக் கொண்டு இஜ்மாஃ பண்ணுகிறார்கள். இந்த மூன்றையும் ஷாபி இமாம் சொல்லி விட்டு, சும்ம சொல்லவில்லை அவர். 

ஷாபி இமாம் சொல்லி விட்டு  பக்தலபல் அஇம்மத்து பீஹா- இந்த விஷயத்திலே மூன்று இமாம்களும் என்ன செய்திருக்கிறார்கள். முரண்பட்டு இருக்கிறார்கள். 

வலம் யம்தனி வஅஹதுன் மின் அக்தி மாஅஃதாஹு அபுபக்ர். - அபுபக்கர் கொடுத்ததை நாங்கள் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று யாரும் மறுக்கவில்லை. அவா் கொடுத்த பங்கு சரிதான் என்று வாங்கிக் கொண்டார்கள். 

வலா உமர், - உமர் வேற மாற்றி கொடுத்தாரே. அது எப்படி நீங்கள் மாற்றி கொடுக்கிறீர்கள். என்று கேட்கவில்லை. அதையும் வாங்கிக் கொண்டார்கள். 

வலா அலிய்யுன் - அலி சொன்னதையும் யாரும் மறுக்கவே இல்லை.

அப்ப ஒட்டு மொத்த மக்களும் பங்கு வைத்து கொடுக்கும் போது அதை மூணு வகை, மாற்றமான முரண்பட்ட மூணு தீர்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. மூன்றையும் ஏற்றுக் கொண்டார்கள். 

இதை சொல்லி விட்டு ஷாபி இமாம் சொல்கிறார்கள். வபீ ஹாதா தலாலதுன். ஷாபி இமாம் சொல்வதற்காக நான் எடுத்துக் காட்டவில்லை. பாயிண்டுக்காக, அவர் சொல்கிறது கரக்ட்டாக இருக்கிறது.

வபீ ஹாதா தலாலதுன் இது ஒரு பெரிய ஆதாரமாக இருக்கிறது. அலா அன்னஹும் யுஸல்லிமூன லிஹாக்கிமிஹிம் அவர்களுடைய ஹாக்கிமுக்கு (ஆட்சியாளருக்கு) கட்டுப்பட்டார்கள். 

இது என்ன ஆதாரம்? எதுக்கு ஆதாரமாக இருக்கிறது என்று கேட்டால் அவர்களுடைய ஹாக்கிம் தலைவர் ஆட்சியாளருக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்.

வஇன் கான ரஃயுஹும் கிலாப ரஅய்ஹி அவருடைய அபிப்பிராயத்திற்கு மாற்றமாக, அவருடைய அபிப்பிராயம் இருந்தால் கூட கட்டுப்பட்டு இருக்கிறார்கள். இவர் அபிப்பிராயம் வேறு, அவர் அபிப்பிராயம் வேறு, அபுபக்கர் சொன்னால் (வாயை பீ.ஜே. தனது கையால் மூடிக் காட்டி) மூடிக் கொள்ள வேண்டும் உமர் சொன்னால் (வாயை) மூடிக் கொள்ள வேண்டும். கருத்தில் உடன்படவில்லை.

கருத்தில் மறுப்பு இருக்கிறது, ஆனால் அப்ஜெக்ஷன் பண்ணவில்லை என்பதற்கு இது ஆதாரம். வஇன் கான ஹாகிமுஹும் கத் யஹ்குமு பீ கிலாபி ஆஃராயிஹிம். அவா்களுடைய அபிப்பிராயம் இவா்களுடைய அபிப்பிராயத்திற்கு மாற்றமாக அந்த ஆட்சியாளர்கள் உடைய ஹுக்மு இருந்தால் கூட அவர்கள் கட்டுப்பட்டார்கள்.

லா அன்ன ஜமீஃ அஹ்காமிஹிம் மின் ஜிஹதில் இஜ்மாயி மின்ஹும். இஜ்மாஃ அடிப்படையில் எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள் என்று அதற்கு அர்த்தம் இல்லை. மறுப்பு இருந்தும் எதிர்க்காமல் இருந்தார்கள். மறுப்பு இருந்தது எப்ப தெரிகிறது? அவர் கைக்கு ஆட்சி வரும் போது தெரிகிறது.

அவருக்கு மறுப்பு கருத்து இருந்தது எப்ப தெரிகிறது? அலிக்கு இருந்தது? அவர் கைக்கு ஆட்சி வரும் போது தெரிகிறது. அப்ப இது எப்படி இஜ்மாஃ ஆகும்? மறுப்பு சொல்லாமல் இருந்தார்கள் என்று சொன்னால் இது எப்படி இஜ்மாஃ ஆகும்? என்று யார் கேட்கிறார்கள்? ஷாபி இமாம் (கேட்கிறார்கள்)

(நாங்க சொன்னது என்று நினைத்துக் கொண்டு) ஸஹாபாக்களை சொல்லி விட்டார்கள், பயந்து விட்டார்கள் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளலாமா? என்றவரிம் கேட்கிறோம்) இப்ப ஏற்றுக் கொள்ளலாமா? அபுபக்கர் அவர்கள் ஒரு தீர்ப்பை சொல்கிறார்கள். தப்பு என்று மனதில் படுகிறது சொல்லாமல் உட்கார்ந்து கொண்டார்கள். மறைத்து இருக்கிறார்கள்.

அப்ப மறைத்து இருக்கிறார்கள் அவர் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளலாமா? இதுவா கேள்வி? இதெல்லாம் ஒரு வாதமாக வைத்து என்ன செய்றாங்க? உணா்வு பூர்வமாக மேட்டரை அணுகி கொண்டிருக்கிறார்கள். அறிவுப்பூர்வமாக, சிந்தனைப்பூர்வமாக அணுக வேண்டிய ஒரு விஷயத்தை வந்து உணர்வுபூா்மாக, அபுபக்கர் எப்படிப்பட்டவர், உமா் எப்படிப்பட்டவர், இப்படி என்கிறதெல்லாம் (ஆதாரமாகுமா?) விவாதத்தின் போது இப்படியா பேசுவது. அதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதே மாதிரி வந்து. இப்ப நாற்பது ஆண்டுகளாக நான் வந்து அந்த தவ்லியத் தல்ஹிஹை உஸுலுல் பிக்ஹை படித்துக் கொடுக்கிற அல்லாஹ் பாக்கியத்தை தந்திருக்கிறான் என்றெல்லாம் பல இடத்தில் அவர் பேசி இருக்கிறாரு. அந்த புஸ்தகத்திலேயே இருக்கிறது.

கத்யகூனு ஸுக்கூத்துல் முஜ்தஹிதி- முஜ்தஹிது மவுனமாக, ஒரு ஆய்வாளர் மவுனமாக இருப்பது. லித் தஅம்லி யோசிக்கிறதற்காக மவுனமாக இருப்பார்கள். சொல்லுவார்கள் யோசித்து பார்த்து நாளைக்கு பேசிக் கொள்வோம். என்பதற்காக மவுனமாக இருக்கலாம். வகெய்ரிஹி வேறு காரணங்களுக்காக (மவுனமாக இருப்பார்கள்) ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம் இல்லையாம். வேறு காரணத்துக்காக மவுனமாக இருக்கலாம்.

அது என்ன காரணம். கயஃதிகாலி ஹகீகத்தி இஜ்திஹாதி குல்லி முஜ்தஹிதின் ஒவ்வொரு முஜ்தஹிதுக்கும் இஜ்திஹாது செய்கிற உரிமை இருக்கிறது. இவர் ஒரு கருத்தை சொல்கிறாரு. எனக்கு தப்பு என்று தெரிகிறது. ஆனாலும் அவர் ஆய்வை அவர் சொல்கிறாரு. சொல்லி விட்டு போறாரு. என் ஆய்வை நான் சொல்வேன் என்பதற்காக நான் மவுனமாக இருப்பேனாம். அதற்காகவும் மவுனமாக இருப்பார்கள்.

அல்லது அல் கவ்னில் காஹிலி அக்பர சின்னம் மின்ஹு தன்னை விட பெரியவா் சொல்லி விட்டாரே என்பதற்கும் மவுனமாக இருப்பார்கள். பெரிய ஹஸரத் சொல்லி விட்டார்கள் என்று சின்ன ஹஸரத் சும்மா இருப்பார். அப்ப அதனாலே ஏற்றுக் கொண்டார் என்று அா்த்தம் இல்லை. முரண்பாடு.

இது எங்கே இருக்கிறது? ஹனபி மத்ஹபிலே, நான் நாற்பது வருஷம் பாடம் நடத்திய (கிதாபு என்று ஸைபுத்தீன் ரஷாதி சொன்னாரே அந்த) கிதாபில்தான் இருக்கிறது.

அப்ப அல் கவ்னில் காஹிலி அக்பர சின்னம் மின்ஹு இவரை விட வயசிலே பெரியவராக இருக்கிறாரே, அவர் கருத்தை நாம எப்படி மறுக்கிறது? என்பதற்காகவும் மவுனமாக இருந்திருப்பார்கள்.

அவ் அஃலம கத்ரன் அல்லது மதிப்பு கூடியவராக இருப்பாரு அவரு. வயசிலே பெரிய ஆளாக இல்லா விட்டாலும் ஒரு ஜனாதிபதி, பிரதமர் என ஏதோ ஒரு அந்தஸ்த்திலே கூடியவராக இருந்திருப்பாரு.

அவ் பர இல்மன் இல்முலே கூடியவராக இருப்பாரு. அதற்காக வேண்டி இருக்கலாம்.

அவ் இஸ்திக்ராரில் கிலாபி நம்ம எதிர்க்கிறதே உலகத்துக்கே தெரியுமே தனியாக இந்த இடத்தில் ஒரு தடவை எதிர்க்கணுமா? அது கிலாபு என்பது நல்ல பளிச் என தெரிந்திருக்கும் போது நாம ஏன் எதிர்க்கணும். இந்த மாதிரியெல்லாம் ஸுக்கூத்தாக இருப்பார்கள். மவுனமாக இருப்பார்கள். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்கிறது கிடையாது என்று ஷாபி இமாம் சொன்னார்கள் என்கிற மாதிரி தான் அந்த ஷரஹ் தல்வீஹ்லே என்ன செய்து (வைத்திருக்கிறார்கள்) எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.

அப்ப இதிலே என்ன விளங்குகிறது. அவரு மவுனமாக இருந்தார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு சட்டம் போட்டார்கள் மவுனமாக இருந்தார்கள் என்றால் இஜ்மாஃ ஆகி விட்டதா? அந்த தலாக் மேட்டரை வைத்துதான் அவர்கள் என்ன செய்ய வருகிறார்கள். இஜ்மாஃவை (நிலை நாட்ட பார்க்கிறார்) அதுதான் ஆதாரம். 

அவர்கள் செய்தார்கள். ஸஹாபாக்கள் அப்படியே எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள். அப்படி என்றால் மூணு இஜ்மாஃ நடந்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள். ஷாபி இமாம் எடுத்து காட்டுகிறார்களே!

சரி அடுத்து என்ன? அந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அதுதான் அவர்களிடம் பெரிய ஆதாரம் உமர் ரலியல்லாஹு அன்ஹு செய்த முடிவு இஜ்மாஃ அடிப்படையில் செய்திருக்கிறார்களாம். நாங்கள் இஜ்மாஃவை மீறிக் கொண்டிருக்கிறோமாம். இது தானே டாபிக்கு. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்த இஜ்மாஃ மேட்டரை எடுத்துக் கொண்டீர்களேயானால். அதில் என்ன வருகிறது. அந்த ஹதீஸை பாருங்கள்.

ஹதீஸை முதலில் வாசித்து விட்டு ஏன்னா அவரு விளக்காமல் இருந்து விட்டார். ஹதீஸை வாசித்து சொல்லணும். அதாவது இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம்லே வரக் கூடிய ஹதீஸ்.

கானத் தலாக்கு அலா அஹ்தி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.-- ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்திலும்.

வ அபீபக்ரின். அபுபக்கா் ரலியல்லாஹு அன்ஹு உடைய காலத்திலும்.

வ ஸனதைனி மின் கிலாபதி உமர். உமர் ஆட்சியின் இரண்டு ஆண்டுகளிலும்

தலாக்கு தலாதி வாஹிதா. மூணு தலாக் ஒரு தலாக் என்றுதான் இருந்தது. - ஹதீஸ்.

என்னது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலே. மூணு தலாக் என்றால் ஒரு தலாக் என்று இருந்தது.

(நேரம் முடிந்து விட்டது)





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.