கிறிஸ்தவ கோயிலில் ஜவாஹிருல்லாஹ்

ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கிறிஸ்துவ பிரச்சாரம் செய்தார் என்பது உண்மையானால் அதற்குரிய ஆதாரத்தை வெளியிடட்டும். ஒட்டு மொத்த சமுதாயத்தையும் திரட்டி அவருக்கு எதிராக போராட தயார். பத்திரிக்கைச் செய்திகள் தெளிவாக இல்லை. 
நடந்தது என்ன ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ கோயிலில் விழா நடக்கிறது. அந்த விழாவில் ஒரு சமூக நல்லிணக்க நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் கலந்து கொள்ள அனைத்து சமூக பிரமுகர்களும் உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்திருக்கிறார்கள். 
இது இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு வழி வகுக்கும் நிகழ்ச்சியே தவிர இஸ்லாத்திற்கு எதிரான செயல் அல்ல. 
உமர் (ரலி) அவர்கள் தனது ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ கோயிலுக்குச் சென்றார்கள். பாதிரியார்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் கிளம்பினார்கள்.  பாதிரியார்கள் கிறிஸ்தவ கோயிலிலேயே தொழும்படி கூறினார்கள். பிற்காலத்தில் உமர் தொழுத இடம் என்று எனது சமுதாயத்தவர்கள் உரிமை கொண்டாடி விடக் கூடாது என்று கூறி தவிர்த்தார்கள். 
சிலைகள் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் தொழ மாட்டோம் என்று உமர் அவர்கள் கூறினார்கள். 
சிலைகள் இல்லாத கிறிஸ்துவ ஆலயத்தில் இப்னு அப்பாஸ் தொழுதார்கள்  என்றும் ஹதீஸ் நூல்களில் பார்க்கிறோம். 
நல்ல வேளை உமர் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் த.த.ஜ. போன்றவர்கள் இல்லை. இருந்திருந்தால் இரண்டாம் கலீபா உமர் அவர்கள் பற்றியும் இப்படி செய்தி வெளியிட்டிருப்பார்கள்.
வழி கெட்ட மஹ்தியாக்களின் மீலாது விழாவில் கலந்து கொண்டு விட்டு மக்களின் விமர்சனத்துக்கு அஞ்சி கேஸட்டை வெளியிடாமல் இருந்தாரே உத்தமர் அவர் பற்றி வாய் திறக்காதது ஏன்? இது தான் இஸ்லாமா? 
நன்றி TMB

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.