பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்.

'என் அடியார்களே! நீங்கள் என்னையே வணங்கி எனக்கே கீழ்ப்படிந்து கொண்டிருக்க வேண்டும். என்னை வணங்கி, எனக்குக் கீழ்ப்படிகின்ற காரணத்தால் நீங்கள் வாழுகின்ற நிலப்பகுதி (உங்கள் தாய்நாடு), உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகிவிட்டால் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். என் பூமி மிகவும் விசாலமானது. அல் குர்ஆன்.

'என் அடியார்களே! நீங்கள் என்னையே வணங்கி எனக்கே கீழ்ப்படிந்து கொண்டிருக்க வேண்டும். என்னை வணங்கி, எனக்குக் கீழ்ப்படிகின்ற காரணத்தால் நீங்கள் வாழுகின்ற நிலப்பகுதி (உங்கள் தாய்நாடு), உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகிவிட்டால் அதனைப் பொருட்படுத்தாதீர்கள். என் பூமி மிகவும் விசாலமானது. அல் குர்ஆன். 17:80-81

ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது.

ஹிஜிரி 1428 முடிந்து ஹிஜிரி 1429 துவங்கி உள்ளது. இஸ்லாமியர்களின் புத்தாண்டு பிறந்து விட்டது என்று மட்டும்தான் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. இது கூறும் முதல் செய்தி. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக பூமியான மக்காவை துறந்து வெளியேறி 1428 ஆண்டுகள் ஆகி விட்டது. வெறுத்து, துறந்து வெளியேறுதல் என்ற பொருள் தரக் கூடிய பெருமானாரின் ஹிஜ்ரத் நடந்து 1428 ஆண்டுகள் முடிந்து 1429 ஆவது ஆண்டு துவங்கி விட்டது. இந்த செய்தியைத்தான் ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது.

ஹிஜ்ரத்தை ஓட்டம், நாடு துறத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒருவர் ஒரு இடத்தை விட்டு சாதாரணமாகப் போனாலும் வேண்டாம் என வெறுத்துப் போனாலும் இயல்பாகச் சொல்வது என்றால் போய் விட்டார், சென்று விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படிச் சொல்வது இல்லை, வித்தியாசம் உள்ளது. சாதாரணமாகப் போனால் போய் விட்டார், சென்று விட்டார் என்று சொல்வதும். வெறுத்துப் போனால் ஓடி விட்டார் என்று சொல்வதும் மனிதர்களின் பழக்க வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் பெருமானாரின் ஹிஜ்ரத்தை ஓட்டம், நாடு துறத்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன.

இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில பாடங்களை - படிப்பினைகளைப் பார்ப்போம்.

முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள்.

யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள்.

இறைத்தூதரின் வீட்டில் இறைத்தூதரின் படுக்கையில் அலி(ரலி).

ஹிஜ்ரத் இரவில் இறைத்தூதர் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்று எதிரிகள் எண்ணிக் கொள்வதற்காக அறிவுப்பூர்வமான ஒரு திட்டம் வகுத்தார்கள். அன்று இரவு இறைத்தூதரின் வீட்டில் இறைத்தூதரின் படுக்கையில் அலி(ரலி) அவர்களை படுத்து உறங்க வைத்தார்கள்.

குறைஷpகள் அவர்களது வீட்டைச் சூழ்ந்திருக்கின்ற நிலையிலேயே.

அந்தக் குறிப்பிட்ட இரவில் இறைமறுப்பாளர்கள் இறைத்தூதரின் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டார்கள். நன்கு இருட்டியவுடன் அண்ணலார் அமைதியுடனும் நிம்மதியுடனும் தமது இல்லத்தைவிட்டு வெளியேறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய பயணத்தை தன்னுடைய வீட்டின் தலை வாயில் வழியாகவே, குறைஷpகள் அவர்களது வீட்டைச் சூழ்ந்திருக்கின்ற நிலையிலேயே தான் வீட்டை வெளியேறினார்கள்.

குறைஷpகளின் சதியிலிருந்து.

அப்போது இறைத்தூதர் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான சூரா யாஸீனின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொண்டே வெளியேறினார்கள். கைநிறைய மண்ணை எடுத்து ஷஷஷhஹத்துல் உஜூஹ்' (முகங்கள் சேதமடையட்டும்) என்று கூறிய வண்ணம் இறைமறுப்பாளர்களை நோக்கி வீசினார்கள். அப்போது அல்லாஹ்வின் ஆற்றலால் அந்த முற்றுகையாளர்களுக்கு மெய்மறந்தநிலை ஏற்பட்டது. அண்ணலார் (ஸல்) அவர்களிடையே புகுந்து வெளியேறியதை அவர்களால் பார்க்கக் கூட முடியவில்லை அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்த பொழுது, குறைஷஷிகளின் தலைக்கு மேலாக அவர்களது கண்ணுக்குத் தெரியாததொரு தூசிப் படலம் சுற்றிச் சூழந்திருந்திருக்கின்றது. அந்தத் தூசிப் படலத்தைக் கொண்டு இறைவன் குறைஷpகளின் சதியிலிருந்து தன்னுடைய தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாத்தான்..

யாஸீன். .ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! .நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். .நேரான பாதை மீது (இருக்கின்றீர்). (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும். எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக. இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நி;ச்சயமாக உண்மையாகி விட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள். .நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர். இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது. அல்குர்ஆன் 36:1-9.
எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடிய வசனமாக.

இறைவனுடைய மாபெரும் கருணையின் காரணமாக தன்னுடைய அடியாரான முஹம்மது (ஸல்) அவர்களை இறைவன் இந்த வசனத்தின் மூலம் அதிசயத்தக்க முறையில், அவருடைய எதிரிகளின் கண்களிலிருந்து பாதுகாத்தான். இதே போன்ற சூழ்நிலை தங்களுக்கு ஏற்படும் பொழுது, இன்றைக்கும் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கு நேர்வழி பெற்ற முஸ்லிம்கள், இந்த வசனத்தை ஓதி, எதிரிகளிடமிருந்து தங்களை இறைவனது உதவி கொண்டு பாதுகாத்துக் கொள்கின்றனர். எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடிய வசனமாக இந்த வசனத்தை நேர்வழி பெற்றவர்களான நபி வழி நடப்பவர்கள் கருதுகின்றார்கள்.

அதிகாலையில் தான் குறைஷpயர்கள் உணர்ந்தார்கள்.

இரவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்கள், தங்களிடமிருந்து தப்பி விட்டார்கள் என்பதை, அதிகாலையில் தான் குறைஷpயர்கள் உணர்ந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தப்பிக்க விட்ட குறைஷpகளுக்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை மடக்கிப் பிடித்துக் கொண்டு வருவது ஒன்றே அவர்கள் முன் இருந்த ஒரே வழியாக இருந்தது.

இரவு முதல் காலை வரை அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள்.

இரவில் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், அன்று மதிய வேளையில் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டில் நுழைகின்றார்கள். அன்று இரவு முதல் காலை வரை அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள் என்பது பற்றிய சரியான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை.

எப்பொழுதும் இதைப் போல உச்சி நேரத்தில் வந்ததில்லை.

யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செல்லவிருந்த இரவுக்கு முன் மதிய உச்சி வேளையில் எதிர்பாரா விருந்தாளியாக அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் இல்லத்திற்கு இறைத்தூதர் சென்றார்கள். வழக்கமாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அபுபக்கர்(ரலி) அவர்களது வீட்டிற்கு காலையிலோ அல்லது மாலையிலோ தான் வருவார்கள், ஆனால் அவர்கள் எப்பொழுதும் இதைப் போல உச்சி நேரத்தில் வந்ததில்லை என்று ஆயிஷh (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். வழக்கத்துக்கு மாற்றமாக மதியம் உச்சி வேளையில் சென்றதும் திட்டமிட்ட செயலாகும். அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களுடன் கலந்து (மஸுரா) ஆலோசனை செய்தார்கள்.

வழித் துணைக்கு அபூபக்ரு சித்தீக் (ரலி).

அப்போது இறைத்தூதருடன் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்வது என்று முடிவை தெரிவித்தார்கள். அதாவது தனித்து செல்லாமல் வழித் துணைக்கு அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஹிஜ்ரத் பயணத்திற்கென்றே அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் திட்டமிட்டு வளர்த்து வந்த இரு ஒட்டகங்களை தங்களின் வாகனமாக தேர்வு செய்தார்கள்.

அந்த பயண வழிகாட்டி.

அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் யத்ரிப் பயணத்திற்கு வழிகாட்டுவதற்கென்றே ஒருவரையும் தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த பயண வழிகாட்டி பல தெய்வ வணக்காரராகவும், முஸ்லிமல்லாதவராக இருந்தார். ஆனாலும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அது மட்டுமல்ல அன்றைய கால பாலைப் பயணத்திற்கு வழி காட்டுவதில் மிகவும் தேர்ந்தவராகவும் அவர் இருந்தார். அவருடைய பெயர் அப்துல்லா இப்னு அர்கத் என்பதாகும்.

இயல்பாகத்தான் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

இப்படி பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திட்டங்களையும் வகுத்து முடிந்து விட்ட நிலையில், தங்களுடைய பயணத்தை இருவரும் ஆரம்பித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டின் தலைவாசல் வழியாக வெளியேறாமல், வீட்டின் பின்புறத்து ஜன்னலைத் திறந்து, மலைக் குன்றுகளை நோக்கிச் சென்றார்கள். அது மட்டுமல்ல பொதுத் தெருக்கள் வழியாகத் தங்களது பயணத்தைத் தொடரவில்லை. மாற்றுப் பாதைகளில் சென்றார்கள். ஓடிக் கொண்டு செல்லாமல், மிகவும் அமைதியாக நடந்தும் இயல்பாகத்தான் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

ஆரம்பப் பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்தார்கள்.

குறைஷpகள் தங்களை பின் தொடர்ந்தார்கள் என்றால், அவர்களை ஏமாற்றுவதற்காக யத்ரிப்பை (மதீனாவை) நோக்கி நேரடியாகச் செல்லவில்லை. தெற்குப் பக்கமாக அதாவது யத்ரிப்பிற்கு (மதீனாவுக்கு) எதிர்ப்புறமாக தங்களது ஆரம்பப் பயணத்தை அமைத்துக் கொண்டார்கள். தன்னுடைய எதிரிகள் தன்னை வளைத்துப் பிடிப்பதற்காக யத்ரிப்புக்குச் செல்கின்ற சாலைகள் வழியாக தங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய ஆரம்பப் பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்தார்கள்.

அந்த குகையில் மூன்று நாட்கள்.


வடக்கு நோக்கிய அந்தப் பயணத்தில், ஏதாவது ஒரு குகையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். எனவே அவர்கள் திட்டப்படி மக்காவின் வெளிப்புறத்தில் தென்பக்கமாக இருந்த தவ்ர் மலையில் இருந்த ஒரு குகைளில் தங்கி இருந்தார்கள். அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
தவ்ர் குகை.



பயனுள்ளதாகவும், நல்லதொரு திட்டமாகவும் இருந்தது.

அதில் பாதுகாப்பாக தங்கியிருப்பதில் எந்தவித சிக்கலும் அவர்களுக்கு ஏற்படவில்லை. மேலும், இந்த மூன்று நாட்களும் மக்காவில் ஏற்பட்டிருக்கின்ற அமளிகள், தன்னைத் தேடிப் பிடிக்க யத்ரிப்பின் பயண வழிகளில் காத்திருக்கும் குறைஷpகளை ஏமாற்றவும், மேலும் அனைத்து வித களேபரங்களும் அடங்கி ஒடுங்குவதற்கும் இந்த மூன்று நாட்கள் என்ற அவகாசம் மிகவும் பயனுள்ளதாகவும், நல்லதொரு திட்டமாகவும் இருந்தது.

அபுபக்கர் (ரலி) அவர்களின் மொத்த குடும்பமும்.

அபுபக்கர் (ரலி) அவர்களது குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஹிஜ்ரத்திற்கு அபுபக்கர் (ரலி) மட்டும் தன்னுடைய அற்பணிப்பை வழங்கவில்லை, மாறாக அபுபக்கர் (ரலி) அவர்களின் மொத்த குடும்பமும் தன்னுடைய பங்களிப்பை வழங்கியது என்றால் நிச்சயமாக அது மிகையாகாது.

உளவுப் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது.

அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களது மகன் அப்துல்லா இப்னு அபுபக்கர் (ரலி) அவர்கள் பகல் காலங்களில் மக்காவில் என்ன நடக்கின்றது. குறைஷpகள் தற்பொழுது எது எது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களது அடுத்தடுத்த திட்டங்கள் என்னனென்ன என்பது பற்றியெல்லாம் பகல் நேரங்களில் மக்காவின் வீதிகளில் இருந்து துப்பு சேகரிக்க வேண்டும். இரவு நேரமானதும் தவ்ர் குகையில் தங்கியிருக்கின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற உளவுப் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது.

உணவுகளைக் கொண்டு வரக் கூடிய பொறுப்பு.

இந்த மூன்று நாட்களுக்கும், அந்தக் குகையில் தங்கியிருக்கின்ற வரை அவர்களுக்குத் தேவையான உணவுகளைக் கொண்டு வரக் கூடிய பொறுப்பு அபுபக்கர் (ரலி) அவர்களது மூத்த மகள் வீரமங்கை அஸ்மா (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

காலடித் தடங்களை அழிப்பதற்கு பயன்பட்ட ஆட்டு மந்தைகள்.

அபுபக்கர் (ரலி) அவர்களால் சுதந்திரமாக விடப்பட்ட அவர்களது முன்னாள் அடிமை ஆமிர் பின் ஃபுஹைரா அவர்களுக்கு, இரவு நேரங்களில் ஆட்டு மந்தையைக் குகைக்கு மிக அருகில் ஓட்டி வர வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு நாள் இரவும் சுத்தமாக பாலும், இறைச்சியும் கிடைக்க வழி செய்யப்பட்டது. மேலும், இதனை விட இரவில் தகவல் கொண்டு வரும் அப்துல்லா மற்றும் உணவு கொண்டு வரும் அஸ்மா (ரலி) ஆகியோர்களது காலடித் தடங்களை அழிப்பதற்கும் இந்த ஆட்டு மந்தைகள் மிகவும் பயன்பட்டன.

அந்தக் குகை வரைக்கும் வந்து விட்டார்கள்.

இணைவைப்பாளர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவரது தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களையும் தேடி தவ்ர் மலைக்கு வந்து விட்டார்கள். குகையில் ஒளிந்திருக்கக் கூடியவர்களின் காலடித் தடங்களை; தெளிவாகப் பின்பற்றி வர இயலாத நிலையிலும் காலடித் தடங்களைக் காணாத நிலையிலும் அந்த இணைவைப்பாளர்களில் சிலர், தவ்ர் மலையின் மீது ஏறி, அந்தக் குகைக்கு அருகில் மிக ஒட்டிய நிலைக்கு வந்து விட்டார்கள்.

அந்தக் கவலை பயமாக உருவெடுத்து அவர்களை ஆட்டு வித்தது.

குறைஷpகள் குகையைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில், அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதையும், அவர்களது பாதுகாப்பை நினைத்தும் கவலை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அந்தக் கவலை பயமாக உருவெடுத்து அவர்களை ஆட்டு வித்தது.

அவன் நம்மைப் பார்த்து விடக் கூடும்,

இணைவைப்பாளர்கள் அந்தக் குகையின் மேல் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது, நின்று கொண்டிருப்பவர்களில் எவனாவது ஒருவன் தன்னுடைய பாதத்தைக் குனிந்து பார்த்தால் அவன் நம்மைப் பார்த்து விடக் கூடும், இறைத்தூதர் (ஸல்) அவர்களே என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கின்றோம்.

ஆனால் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களோ, அபுபக்கர் அவர்களே! நம் இரண்டு பேர்களைப் பற்றி என்ன நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள், நம் இருவரில் மூன்றாவதாக ஒருவன் இருக்கிறானே அவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அந்த இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்று அவர்களுக்கு கூறி, இறைவனின் உதவியால் நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கின்றோம் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்கள்.

இருவரின் உரையாடலைப் பற்றி இறைமறை.

அந்தக் குகையில் நடந்த சம்பவம் மற்றும் அந்தக் குகையில் இருந்து கொண்டிருந்த இருவரின் உரையாடலைப் பற்றி இறைமறைக் குர்ஆனும் இவ்வாறு விவரிக்கின்றது.

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான். குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், ''கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்'' என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.(அல் குர்ஆன் 9:40)

நூறு ஒட்டகங்கள் பரிசாகக் காத்திருக்கின்றன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அபுபக்கர் (ரலி) அவர்களையும் பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு நூறு ஒட்டகங்கள் பரிசாகக் காத்திருக்கின்றன என்று அபு ஜஹ்ல் அறிவித்திருந்தான். அதனால், மக்காவில் இருந்த அனைவரும் தங்களால் முடிந்த அளவு எல்லா வழிகளிலும், அந்த இருவரையும் தேடிப் புறப்பட்டிருக்கின்றனர் என்பதை இந்தக் குகைச் சம்பவம் நமக்கு உணர்த்தி இருக்கின்றது.

அல்லாஹ்வின் பாதுகாப்பு என்பது இதுதான்.

அவர்களில், ஒரு சிலர் சரியான இடத்திற்கு வந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் ஒழிந்திருந்த அந்தக் குகையின் மேலேயே நின்று கொண்டுமிருக்கின்றார்கள். அதிலும், அந்தக் குகையின் வாசலுக்கும் கூட அவர்கள் வந்திருந்தும், அந்தக் குகையினுள் நுழையவில்லை. ஏன்? உள்ளே அவர்கள் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அல்லாஹ்வின் பாதுகாப்பு என்பது இதுதான்.

அஸ்மா(ரலி) அவர்களின் உதவியை பெற்றார்கள்.

இந்த மூன்று நாட்களும் குகையிலே கழித்த இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும், இப்பொழுது தங்களது பயணத்தை யத்ரிப்பை நோக்கிப் புறப்பட ஆரம்பித்தார்கள். இந்தப் பயணத்திற்குத் தேவையான வழித்துணைச் சாதனங்களையும் ஏற்பாடு செய்தார்கள். இதற்கு அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களின் மூத்த மகளார் (அன்னை ஆயிஷh(ரலி) அவர்களின் மூத்த சகோதரி) அஸ்மா(ரலி) அவர்களின் உதவியை பெற்றார்கள்.

இரட்டை வார்ப் பெண்மணி.

அஸ்மா பின்த் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் கொண்டு வந்த அந்த சாதனங்களை அங்கிருந்த ஒட்டகங்களில் ஒன்றில் கட்ட முயன்றார்கள். அப்பொழுது, அதனைக் கட்டுவதற்குரிய கயிறு இல்லாமல் அஸ்மா (ரலி) அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். உடனே, தன்னுடைய இடுப்புக் கச்சையை கிழித்து, ஒரு பகுதியை தன் இடுப்பிலும், இன்னொரு பகுதியை அந்தப் பயணப் பொருட்களை ஒட்டகத்தில் கட்டவும் பயன்படுத்தினார்கள். அஸ்மா (ரலி) அவர்களின் சமயோசிதம் மற்றும் புத்திக் கூர்மையைக் கண்ட, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் துணிவைப் பாராட்டி இரட்டை வார்ப் பெண்மணி என்ற பட்டத்தை அஸ்மா (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள்.

மூன்று ஒட்டகங்களை குகையின் வாசலுக்குக் கொண்டு வந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் குகையினுள் நுழைந்த மூன்றாவது நாள் இரவின் பொழுது, அபுபக்கர் (ரலி) அடிமையாக இருந்து விடுதலையானவருமான அப்துல் பின் அர்கத் அவர்கள் மூன்று ஒட்டகங்களை குகையின் வாசலுக்குக் கொண்டு வந்தார்கள். இரண்டு ஒட்டகம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும், மற்றும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும், ஒன்றைத் தனக்காகவும் அப்துல்லா இப்னு அர்கத் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனக்கென கொண்டு வரப்பட்ட ஒட்டகத்திற்குரிய பணத்தை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் வலுக்கட்டாயமாகக் கொடுத்து விட்ட பின், அந்த ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்தார்கள்.

மிகவும் பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.

அதன் பின் இவர்களுக்குப் பயண வழிகாட்டியாக வந்த ஆமிர் இப்னு ஃபுஹைரா அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மற்ற ஒட்டகத்தின் மீதமர்ந்து தங்களுடைய பயணத்தை யத்ரிப்பை நோக்கித் தொடர்ந்தார்கள். ஆள் அரவமற்ற பாதை வழியாக, வழக்கமான பாதையைத் தவிர்த்து, மாற்றுப் பாதை வழியாக யத்ரிப்பை நோக்கிப் பயணத்தை மேற்கொண்ட இவர்களுக்கு, வழிகாட்டியாக வந்திருந்த ஆமிர் இப்னு ஃபுஹைரா அவர்கள் மிகவும் பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.

வேகமாகவும், விரைவாகவும் அமைத்துக் கொண்டார்கள்.

மேலும், எந்தளவு சீக்கிரம் யத்ரிப்பை நோக்கிச் செல்ல முடியுமோ அந்த அளவு இரவு முழுவதையும், மற்றும் பகலின் அதிகமான நேரங்களையும் தங்களது பயணத்திற்காகவே செலவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் தாமதிக்கின்ற ஒவ்வொரு விநாடியும், குறைஷpகளிடம் சிக்குவதற்கு வாய்ப்பாக மாறி விடக் கூடும் என்பதிலும், அப்படி அவர்களிடம் சிக்கி விட்டால் தாங்கள் சொல்லொண்ணாத் தண்டனைகளுக்கு பழியாகி விடக் கூடும் என்பதனாலும், அவர்கள் தங்களது பயணத்தை வேகமாகவும், விரைவாகவும் அமைத்துக் கொண்டார்கள்.

செங்கடலின் கரையை நோக்கி.

மக்காவை விட்டு வெளிக் கிளம்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருடைய உற்ற தோழருமான அபூபக்கர் (ரலி) அவர்களும் மதீனாவை நோக்கிய நேரான பாதையை தேர்வு செய்யவில்லை. குறைஷpகளின் கண்களில் மண்ணைத் தூவினார்கள். ஆம் அவர்களது பயணத் திட்டத்தை அறிந்து கொள்ள முடியாமல் செய்வதற்காக மாற்றுப் பாதையை தங்களது வழியாக ஆக்கிக் கொண்டார்கள். அதாவது மதீனாவின் பாதைக்கு முற்றிலும் நேர்எதிரான பாதையாகிய கடற்கரைச் சாலையான செங்கடலின் கரையை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

ஓய்வுக்காக பல இடங்களில் சற்றுத் தங்கி.

செங்கடலின் கரையை நோக்கிய அந்தப் பாதையில் இருந்த ஊரான உஸ்ஃபான் என்ற ஊரை அடையும் வரை தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இங்கிருந்து சற்று உள்வாங்கி அமாஜ் என்ற மலையின் வழியாகத் தங்களது பயணத்தை மதீனா நோக்கித் தொடர்ந்தார்கள். இதன் பின் வழக்கமான மதீனாவின் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்ததோடு மட்டுமல்லாது, மிகவும் கவனமாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் பாதையின் வழியாக இருந்த ஊர்களான குதைதா, அல் கர்ரார், தன்னிய்யா அல் மர்ரா மற்றும் லிக்ஃபா ஆகியவற்றையும், மத்லிஜா என்ற குலத்தவர்கள் வாழக் கூடிய பகுதியையும் கடந்து தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இதற்கிடையில் பல இடங்களில் தங்களது ஓய்வுக்காக பல இடங்களில் சற்றுத் தங்கியும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

பயணப்பாதைகளில் நடந்த சம்பவங்கள் யாவும் நிறைவடைந்து விடாது.

அஸ்லம் என்ற பகுதியை வந்தடைந்த இறைத்தூதர் (ஸல்) இடைவிடாத பயணத்தின் மூலம் களைப்படைந்து விட்ட தன்னுடைய ஒட்டகத்திற்கு ஓய்வு கொடுக்க எண்ணிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்தக் கூட்டத்தவர்களிடம் ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள். கூபா நகரை அடைவதற்கு முன்னால், அல் அரஜ், தன்னிய்யா அல் கைர், மற்றும் ரிம் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளையும் கடந்தே கூபாவிற்குள் பிரவேசித்தார்கள். நாம் அவர்கள் கடந்து வந்த இந்த பாதைகளை மட்டும் நாம் கூறி விடுவதன் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணப்பாதைகளில் நடந்த சம்பவங்கள் யாவும் நிறைவடைந்து விடாது.

மக்காவிலோ மனச்சோர்வு.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு விட்டு மதீனாவிற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல் அன்றைய அரேபியா முழுவதும் பரவி, அன்றைய அரேபியா முழுவதும் பேசப்படக் கூடிய முக்கிய செய்தியாகவும் அது ஆகி விட்டிருந்தது. ஆனால் அரேபியா முழுவதும் பரவி இருந்த இந்த பயணத்தைப் பற்றி செய்திக்கும் மக்கா மற்றும் மதீனாவில் அந்தச் செய்தி ஏற்படுத்திய தாக்கமும் மிகவும் வித்தியாசப்பட்டவைகளாக இருந்தன. மக்காவிலோ மனச்சோர்வும், இயலாமையின் காரணமாக எழுந்த தவிப்பும், கோபமுமாக இருக்க, மதீனாவிலோ அலை அலையாய் எதிர்பார்ப்புகளும், அந்த எதிர்பார்ப்பில் அன்பும் பாசமும் நேசமும் கலந்திருந்தது.

அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்திற்கு தாங்கள் செய்த பங்களிப்பை நினைத்து அபுபக்கர் (ரலி) அவர்களின் குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அபுபக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா (ரலி) அவர்களும், அவரது மகன் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் இஸ்லாத்திற்கு அவர்கள் செய்த அந்தச் சேவையை நினைத்தும், உணர்ச்சிகளும், பயமும் கலந்து மக்காவின் வீதிகளில் இருந்து தௌர் குகைக்குச் சென்றதும், இந்த உலகத்தையும், இந்த உலகத்திலுள்ள பொருட்களையும் விட அவர்கள் உயர்வாக நேசித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் தன்னுடைய தந்தையார் ஆகியோர்களுடைய பயணத் தேவைகளுக்குத் தாங்கள் செய்த பங்களிப்புகளை நினைத்து நினைத்து அவர்கள் நெஞ்செல்லாம் மகிழ்ச்சி பொங்கி பூரித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

(அஸ்மா (ரலி)கன்னத்தில் அபூஜஹ்ல் ஓங்கி அறைந்தான்,

அஸ்மா (ரலி) அவர்கள் கதவைத் திறந்தார்கள்..!
அங்கே..! அபூஜஹ்ல் நின்று கொண்டிருந்தான்..!
தடித்த குரலுடன் .. ..!! எங்கே உன்னுடைய தந்தையார்? எனக் கர்ஜித்தான்..!
எனக்குத் தெரியாது..! என்றார்கள்..! அஸ்மா (ரலி) அவர்கள்.. ..!
இந்த சம்பவத்தைப் பற்றி அஸ்மா (ரலி) அவர்கள் கூறும் பொழுது, என்னுடைய தந்தையைப் பற்றித் தெரியாது என்று நான் சொன்ன உடனேயே, என்னுடைய (அஸ்மா (ரலி)கன்னத்தில் அபூஜஹ்ல் ஓங்கி அறைந்தான், என்னுடைய காதில் நான் போட்டிருந்த தோடு கழன்று தெரித்து விழும் வரைக்கும் அவன் என்னுடைய கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தான்.
அபுஜஹ்லை அடுத்து, அபுபக்கர் (ரலி) அவர்களின் குடும்பத்தவர்கள் இன்னொருவரையும் சமாளிக்க வேண்டியதிருந்தது. அவர் அபுபக்கர் (ரலி) அவர்களின் தந்தையும், பார்வைற்றவராகிய அபூ குஹஃபா. இவர் தன்னுடைய மகன் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று விட்டதை அறிந்து மிகவும் மனக் கவலையடைந்ததோடல்லாமல், தந்தை இல்லாத இந்தக் குடும்பத்தை தான் எவ்வாறு காப்பாற்றப் போகின்றோம் என்ற கவலையும் அதனுடன் சேர்ந்து கொண்டது.

பாத்திரத்திற்குள் தடவிப் பார்க்கும்படிக் கூறினார்.

அவர் தன்னுடைய பேரப் பிள்ளைகளைப் பார்த்து, அபுபக்கர் நம்முடைய செலவுகளுக்கு பணம் எதுவும் விட்டு வைத்து விட்டுப் போயிருக்கின்றாரா? எனக் கேட்டார். பணம் எதனையும் விட்டு வைத்து விட்டுப் போகவில்லை, அனைத்தையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்று கூறினால், இந்த முதியவர் அதிகமான மனக் கவலையை அடையக் கூடும் என்பதை யூகித்தறிந்த அஸ்மா (ரலி) அவர்கள், தான் செய்யப் போவது உண்மைக்கு மாற்றமாக இருந்த போதிலும், வேறு வழியின்றி, ஒரு யுக்தியைக் கடைபிடித்தார். தன்னுடைய பாட்டனாரின் கையைப் பிடித்து, ஒரு பாத்திரத்திற்குள் நுழைத்து, அந்தப் பாத்திரத்திற்குள் தடவிப் பார்க்கும்படிக் கூறினார்.

திருப்தி கொண்டவராக அபூ குஹஃபா அவர்கள் தலையை ஆட்டினார்கள்.

ஏற்கனவே அந்தப் பாத்திரத்திற்குள் அஸ்மா (ரலி) அவர்கள் சிறு சிறு கற்களைப் பொறுக்கிப் போட்டு வைத்திருந்தார். அந்தப் பாத்திரத்தில் கையை நுழைத்து தடவிப் பார்த்த அபூ குஹஃபா அவர்கள் மிகவும் மனத் திருப்தி கொண்டவரானார். அவரைப் பார்த்து, பார்த்தீர்களா..! நமக்காக என்னுடைய தந்தையார் எவ்வளவு பணத்தை விட்டு விட்டுச் சென்றிருக்கின்றார்கள், இதுவே நம்முடைய செலவினங்களுக்குப் போதுமானது தானே..!! எனக் கூறிய தன்னுடைய பேத்தியைப் பார்த்து, திருப்தி கொண்டவராக அபூ குஹஃபா அவர்கள் தலையை ஆட்டினார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் அபுபக்கர் (ரலி) அவர்களது மூத்த மகளான அஸ்மா (ரலி) அவர்கள் தன்னுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் மீது எந்தளவு உறுதியாக இருந்திருக்கின்றார்கள் என்பதையும், அந்த அளவு ஈமான் உறுதி மிக்க பிள்ளைகளாக தன்னுடைய மக்களை அபுபக்கர் (ரலி) அவர்கள் வளர்த்தெடுத்திருக்கின்றார்கள் என்பதையும் இந்தச் சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

தவ்ர்; குகையை விட்டுக் கிளம்பிய இரண்டாம் நாளன்று.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் மிக அதிக தூரம் ஒன்றும் சென்றிருக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுக்குப் பின்னால் அடிவானத்தில் ஒரு சிறு புள்ளியாய் குதிரையை மிக அதிக வேகத்தில் ஓட்டிக் கொண்டு, தங்களை நோக்கி ஒருவன் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மத்லிஜா என்ற பகுதியை விட்டு ஒன்றும் அதிக தூரம் சென்றிருக்கவில்லை. அதன் எல்லைப் பகுதிக்குள் தான் அப்பொழுது இருந்தார்கள். மேலும் மக்காவை விட்டும் அதிக தூரம் சென்றிருக்கவில்லை. அநேகமாக இந்தச் சம்பவம் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் மக்காவின் தவ்ர்; குகையை விட்டுக் கிளம்பிய இரண்டாம் நாளன்று நிகழ்ந்தது.

அவர்களுக்கு மிக அருகில் தன்னுடைய குதிரையை அதிகபட்ச வேகத்தில்.

பனூ மத்லஜ் குலத்தவர்களில் ஒருவன் பயணியாக மக்காவிற்கு வந்தவனிடம் கேட்டறிந்ததை வைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களது குழுவினரின் இருப்பிடத்தை சுரகா என்பவன் அறிந்து கொண்டான். மக்கத்துக் குறைஷpகள் அறிவித்திருந்த பரிசுப் பொருட்களை தான் அடைந்து கொள்வதற்கு விரும்பிய அவன், இந்த விஷயத்தைப் பற்றி வேறு யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அந்தப் பயணியிடம் சுரகா வேண்டிக் கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் தேடிப் புறப்பட்டவன் தான் இப்பொழுது, அவர்களுக்கு மிக அருகில் தன்னுடைய குதிரையை அதிகபட்ச வேகத்தில் அவர்களை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். மேலும், மதீனாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பவர்களைப் பற்றிய குறிப்புகளையும் கூறி, அவர்களது அங்க அடையாளங்களையும் அந்த மனிதனிடம் கூறி, அவன் கூறுவது உண்மைதான் என்பதையும் சுரகா உறுதிப்படுத்திக் கொண்டு, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான்.

நெருங்கிக் கொண்டிருந்தான்.

அவன் மக்காவை விட்டுக் கிளம்பியது முதல் அவன் பல இடர்பாடுகளைச் சந்தித்துக் கொண்டே சென்றான். இந்த இடர்பாடுகளின் உச்ச கட்டமாக, எப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவனது கண்ணில் பட்டார்களோ அப்பொழுதே, அவனது குதிரை இரண்டு தடவை கால் இடறிக் கீழே விழுந்து விழுந்து எழுந்தது. எனினும் அவனது கண் முன்னால் பரிசுப் பணம் ஊசலாடிக் கொண்டிருந்ததன் காரணமாக, அவன் விடாப்பிடாயாக இறைத்தூதர் (ஸல்) அவர்களது குழுவினரை நெருங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு தூசி மேகம் ஒன்று உருவானது.

அவன் இன்னும் மிக அருகில் நெருங்கிய பொழுது, அவனது குதிரையின் முன்னங்கால்களின் குழம்புகள் இரண்டும் மண்ணின் வெகு ஆழத்தில் பதிந்து அந்தக் குதிரையைத் தடுமாறச் செய்தது, அந்தக் குதிரை தன்னுடைய கால்களை அந்தப் புதை மணலிலிருந்து எடுக்க முயற்சித்த பொழுது, அந்தக் குதிரையைச் சுற்றி ஒரு தூசி மேகம் ஒன்று உருவானது.

மிகப் பெரிய தெய்வீக சக்தி.

தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பவைகளை அவதானித்த சுரகா, தான் புறப்பட்ட நேரம் முதல் தனக்கு நேர்ந்து கொண்டிருப்பவைகளும், இப்பொழுது தன்னைச் சுற்றி ஒரு தூசிப் பந்து ஒன்று சுழன்று கொண்டிருப்பதையும் ஒரு சேர தன் மனத்திரையில் ஓட விட்ட சுரகா, பயமும் அச்சமும் கலந்தவனாக - தான் தேடி வந்த நபர் சாதாரண நபர் அல்ல, அவர் இறைத்தூதராகத் தான் இருக்க வேண்டும். அவரை மனிதர்கள் யாரும் பாதுகாக்கவில்லை, அதையும் விட மிகப் பெரிய தெய்வீக சக்தி ஒன்று அவரைப் பாதுகாத்துக் கொண்டு செல்கின்றது என்பதை உணர்ந்த அவன், தன் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு இறைத்தூதர் முஹம ;மது (ஸல்) அவர்களை நோக்கி சப்தமிட்டான்.

அருகில் வரும் வரைக்கும் காத்திருந்தனர்.

தன்னுடைய பெயரைக் கூறி, நான் எந்தவிதக் கெடுதலும் செய்ய வரவில்லை என்றும் அந்தச் சப்தத்தின் மூலமாக வாக்கும் கொடுத்தான். அவனை விட்டு வெகுவேகமாகச் சென்று கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது குழவினரும் இப்பொழுது, சற்று நின்று அவன் அருகில் வரும் வரைக்கும் காத்திருந்தனர்.

விடை பெற்றுச் சென ;றான ;.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சைக்கினையைப் புரிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், அவனை நோக்கி உனக்கு என்ன வேண்டும்? என்பதைக் கூறு எனக் கூறினார்கள். எனக்கும் உங்களுக்குமிடையே ஒரு ஒப்பந்தமிருக்கின்றது, அந்த ஒப்பந்தத்திற்கான பத்திரம் அல்லது வாக்குறுதிச் சீட்டு ஒன்று உங்களிடமிருந்து வேண்டும், அது நமக்கிடையே சாட்சியாக இருக்கக் கூடும் அதனைப் பெற்றுக் கொள்வதற்காகவே நான் வந்திருக்கின்றேன். இதை வைத்து பிந்தைய நாட்களில் கடனாகப் பெற்றுக் கொள்வதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சுராக அபுபக்கர் (ரலி) அவர்களிடம் இந்தப் பத்திரத்தை எழுதிக் கேட்டான். அபுபக்கர் (ரலி) அவர்களும் அவன் கேட்டபடியே எழுதிக் கொடுத்ததும், அவன் இவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென ;றான ;செல்லும் போதே, தன்னுடைய மனதிற்குள் இவர்களைப் பற்றி நாம் குறைஷிகளிடம் எதனையும் கூறக் கூடாது என்று மனதிற்குள் சத்தியம் செய்தவனாக, அவர்களை விட்டு விடை பெற்றான்.

சிறந்த அணுகுமுறையை ஹிஜ்ரத்திலும் காண முடிகிறது.

பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்தாலும் எதனையும் திட்டம் இடாமல் செயல்பட மாட்டார்கள். ஒட்டகத்தை கட்டி விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பைத் தேடு என்று உபதேசித்தார்கள். இப்படி உபதேசித்த பெருமானார் முஹம்மது நபி(ஸல்) தங்கள் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் அதனை கடைபிடித்து செயல்படுத்தக் கூடியவர்களாகவே இருந்துள்ளார்கள். அந்த சிறந்த அணுகுமுறையை ஹிஜ்ரத்திலும் காண முடிகிறது. அந்த சிறந்த அணுகுமுறையை நாமும ; வாழ ;வில ; எல ;லா நிலைகளிலும ; பின ; பற ;றி வெற ;றி பெறுவோமாக. ஆமீன ;.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.