தாருன் நத்வாவின் இந்த சதி வலையில்.

சமுதாய உணர்வு உள்ளவர்களே தாருன் நத்வாவின் இந்த சதி வலையில் சிக்கி சமுதாயத்தை சீரழித்து விடாதீர்கள்.
கண்ணியத்திற்குரிய அண்ணன் முத்துப் பேட்டை ஏ.ஆர். பரகத் அலி அவர்களே! புதிதாக இரண்டு விதமான பைல்களாக 4 பக்க ஆலோசனை கடிதம் அனுப்பி உள்ளீர்கள். உங்கள் மெயில் வரும்பொழுது ஆன் லைனில் இருந்தவர்கள் உங்கள் கடிதத்தை படித்து முடிப்பதற்குள் தாருன் நத்வாவிலிருந்து (பி.ஜே.க்கு சொந்தமான மூன் பப்ளிகேஷன் முகவரியிலிருந்து) பதில் வருகிறது. இதை அறிந்த நான் உங்களுக்கு போன் போட்டேன். நீங்கள் என் போனை எடுக்கவே இல்லை, எனவே இந்த மெயில்.

நீங்கள் இப்படி கடிதம் அனுப்புங்கள் நான் இப்படி பதில் அனுப்புவேன் என்று செட்டப் செய்வது பி.ஜே.யின் கடந்த கால வரலாறு. இதை தெரியாதவர்கள் பி.ஜே.யின் ரெடிமேடு பதிலைக் கண்டு ஏமாறலாம். பி.ஜே.யின் பதிலில் ஜைனுல் ஆபிதீன் என்று அரபியில் உள்ள வித்தியாசமான கையெழுத்தும் ரெடிமேடு நிபந்தனைகளும் த.த.ஜ. என்ற புதிய அமைப்பிலும் பி.ஜே.தான் சர்வாதிகாரி என்று நிரூபிக்கிறது.

த.மு.மு.க.வை அழிக்க அபுஜஹ்லைவிட மோசமாக இருப்பேன் என்று கூறிய பி.ஜே. அனுபவமில்லாதவர்களை பொறுப்பாளர்களாக கொண்டு வந்து த.மு.மு.க.வை அழித்துவிட சதி திட்டம் தீட்டியுள்ளார் என்பதையும் அந்த ரெடிமேடு பதில் தெளிவுபடுத்துகிறது.

டாக்குமெண்ட் கிளீரென்ஸ் டைப் ரைட்டிங் கடை வைத்திருப்பவன் கூட தன்னிடம் வேலை செய்ய 10 வருடம் 20 வருடம் சர்வீஸ் உள்ளவர்கள் வேண்டும் என்று கேட்கிறான். அவன் கூட தன் கடையில் சர்வீஸ் உள்ளவர்களெல்லாம் லேபராக மாறுங்கள். லேபரெல்லாம் இன்றிலிருந்து டாக்குமெண்ட் கிளீரென்ஸ் டைப்ரைட்டராக ஆகுங்கள் என்று சொல்ல மாட்டான். அப்படி சொன்னால் அவனுக்கு தலையில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்று அவனிடம் லேபராக உள்ளவரே கீழ்பாக்கம் கொண்டு போய் சேர்த்து விடுவார்.

புத்தி இல்லா பொறியாளரின் இந்த புத்தி கெட்ட யோசனையை சரி காணும் அறிவு ஜீவிகள்? தங்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் முதலில் இது மாதிரி செயல்படுத்துவார்களா? மற்றவர்களின் நிறுவனங்களில் மேனேஜர்களாக உள்ளவர்கள் லேபர்களாகவும் தங்களின் கீழ் லேபர்களாக இருந்த மேனேஜ்மெனட் பணியில் அனுபவமில்லாதவர்களை மேனேஜர்களாக ஆக்குவார்களா?

சமுதாய உணர்வு உள்ளவர்களே தாருன் நத்வாவின் இந்த சதி வலையில் சிக்கி சமுதாயத்தை சீரழித்து விடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.