வரட்டி எரிப்பது ஹராம். இது ஊருக்குத்தான் 'உலவி'க்கு அல்ல மறுக்க முடியுமா?

சமுதாய மானம் காக்க சமாதான முயற்சியில் ஈடுபட்டவரை மாமா வேலை பார்க்கிறாயா என்று கேட்ட பி.ஜே, 

சமாதான முயற்சியில் ஈடுபட்டவரைப் பார்த்து மாமா வேலை பார்க்கிறாயா என்று பி.ஜே. கேட்டுள்ளதை உங்களால் மறுக்க முடியுமா பரகத் அலி?

ஒற்றுமைக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்காமல் தனி மனிதனின் சதி திட்டத்தை தீர்வாக செயல்படுத்தத் துடிக்கும் பரகத் அலி அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.. 

த.மு.மு.விலிருந்து விலகிய பி.ஜே.யும் அவரது வகையறாக்களும் மீண்டும் த.மு.மு.க.வில் சேர புதிய ஒற்றுமை யோசனையை நீங்கள் கூறுவதுபோல் 22.6.04 அன்று 4 பக்க கடிதம் அனுப்பி இருந்தீர்கள். 

உங்களிடமிருந்து வந்த யோசனையை பி.ஜே. தரப்பு ஏற்றுக் கொண்டதுபோல் 22.6.04 அன்றே குறுகிய நேரத்தில் பதில் அனுப்பி இருந்தார்கள். இந்த செட்டப் கடிதங்களை அடையாளம் காட்டி 23.6.04 அன்று மாலை மெயில் அனுப்பினேன்.

உங்கள் மெயில் வரும்பொழுது ஆன் லைனில் இருந்தவர்கள் உங்கள் 4 பக்க கடிதத்தை படித்து முடிப்பதற்குள் பி.ஜே.க்கு சொந்தமான மூன் பப்ளிகேஷன் எனும் தாருன் நத்வாவிலிருந்து பதில் வந்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தேன். 

அதை உங்களுக்கு அனுப்பிவிட்டு எம்மிடமுள்ள மற்ற முகவரிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது 3 நிமிட இடைவெளியில் இப்படி பதில் தர முடியும் என்று நிரூபிப்பதுபோல் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது. 

அந்த கடிதத்தை 22.6.04 அன்று 11.12க்குப் பிறகு டைப் வைத்துள்ளீர்கள். அதை 23 தேதிய எனது பதில் வந்ததும் ஆன் லைனில் இருந்த நீங்கள் உடன் அனுப்பி உள்ளீர்கள்.

3 நிமிட இடை வெளியில் வந்த பி.ஜேயின் பதில்.

உங்களது 4 பக்க ஆலோசனை கடித ஜே.பி.ஜி. பைல்களை சவூதி நேரம் 5.41க்கு (இந்திய நேரம் 8.11க்கு) அனுப்பி உள்ளீர்கள். பி.ஜே.யின் பதில் 3 நிமிட இடை வெளியில் இந்திய நேரம் 8.14க்கு வந்து விட்டது. 

இந்த அடிப்படையில், உங்கள் வேர்டு பைல் கிடைக்கப் பெறாதவர்கள் செட்டப் என்று கூறுகிறார்கள். நான் அந்த அடிப்படையில் சொல்லவில்லை. கடிதத்தில் உங்கள் யோசனைபோல் எழுதி உள்ளது சதி செயல் செய்வதில் புத்திசாலியான பி.ஜே. ஏப்ரல் மாதமே வைத்த டிமான்ட்டுதான் அது. 

பி.ஜே.யின் சதி திட்டத்தில் உருவான அந்த நிபந்தனையை ஒற்றுமைக்கு நீங்கள் கூறும் புதிய யோசனைபோல் எழுதி உள்ளீர்கள்.

மறுக்க முடியுமா? 1

அந்தக் கடிதம் சம்பந்தமாக பி.ஜே.யிடம் கலந்து ஆலோசிக்காமல் நீங்கள் இயல்பாக எழுதி இருந்தால் பி.ஜே.யின் நிபந்தனையை உங்கள் யோசனைபோல் எழுதி இருக்க மாட்டீர்கள். அந்த கடிதம் அனுப்புவதற்கு முன் அது சம்பந்தமாக பி.ஜே.யிடம் நீங்கள் பேசி உள்ளீர்கள். பேசவில்லை என்று மறுக்க முடியுமா?

மறுக்க முடியுமா? 2

முக்கிய அறிவிப்பு வெளியான பின்னர் சவூதியிலிருந்து ஒற்றுமை பற்றி பேசிய பலரிடமும் பி.ஜே. வைத்த நிபந்தனையே இதுதான். இந்த நிபந்தனையை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல இன்னும் நெருக்கமானவர்களிடம் 8 பேரும் பொறுப்பிலிருந்து விலகிவிட வேண்டும் புதிய பொறுப்பாளர்களின் கீழ் அனைவரும் செயல்பட வேண்டும் என்று மக்களிடம் பரப்புங்கள் என்றும் பி.ஜே. ஏப்ரல் மாதமே கூறி உள்ளார். இதை உங்களால் மறுக்க முடியுமா?

மறுக்க முடியுமா? 3

தனது சதி திட்டத்தை சமுதாய மக்கள் மனதில் தோன்றிய திட்டம்போல் காட்ட ஏப்ரல் மாதத்திலிருந்து வலை விரித்து காத்திருந்த பி.ஜே.க்கு 2 மாதம் கழித்து நீங்கள் கிடைத்துள்ளீர்கள். உங்கள் ஊரைச் சார்ந்தவரும் உங்கள் பெயரை கொண்டவரும் உங்கள் நண்பருமான புரைதா பரகத் அலி அவர்களிடமும் ஏப்ரல் மாதத்திலேயே இந்த திட்டத்தை பி.ஜே. கூறி உள்ளார். இதை உங்களால் மறுக்க முடியுமா?

மறுக்க முடியுமா? 4

த.மு.மு.வின் சொத்துக்களை கைப்பற்றிய பின் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறிய பி.ஜே.க்கு, அவர் கைப்பற்றிச் சென்ற சொத்துக்களின் உரிமை சம்பந்தமாக சவூதியில் உள்ள அமைப்புகள் சார்பாகவும் சம்பந்தப்பட்ட தனி நபர்களும் பி.ஜே.க்கு கடிதங்கள் பல அனுப்பினார்கள். ஒற்றுமை சம்பந்தமாக எத்தனையோ பேர் கடிதங்கள் அனுப்பி உள்ளார்கள். நீங்களும்தான் எழுதி இருந்தீர்கள். யாருக்குமே பதில் எழுதாதவர், எதற்குமே பதில் எழுதாதவர் இப்பொழுது உங்களின் இந்த லட்டருக்கு குறுகிய நேரத்தில் பதில் அனுப்பி உள்ளதில் எந்த சூழ்ச்சியும் இல்லை என்று மறுமையை முன்னிறுத்தி உங்களால் மறுக்க முடியுமா?

மறுக்க முடியுமா? 5

எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்களைப் பார்த்து எந்த மடையனாவது கெட்ட வார்த்தை சொல்வானா? ஏப் 10 ஆம் தேதிக்குப் பிறகு செய்தி அதிகாரப் பூர்வமாக வெளியே வராத வண்ணம் சமாதான முயற்சியில் ஈடுபட்டவரைப் பார்த்து மாமா வேலை பார்க்கிறாயா என்று பி.ஜே. கேட்டுள்ளதை உங்களால் மறுக்க முடியுமா?

நடுநிலையான சமாதான முயற்சி செய்திருந்தால்?

முக்கிய அறிவிப்பு வெளியாகும் முன்னரே, சமுதாய மானம் காக்க சமாதான முயற்சியில் ஈடுபட்டவரை மாமா வேலை பார்க்கிறாயா என்று கேட்ட பி.ஜே, நீங்கள் சரியான முறையில் நடுநிலையான சமாதான முயற்சி செய்திருந்தால் உங்களைப் பார்த்து நீ டாபர் மாமா வேலை பார்க்கிறாயா? என்று கேட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

நடுநிலையாளர்போல் காட்டி உள்ள நீங்கள்.

பி.ஜே.யின் மலிவு விலை சி.டி.யில் 50 பிரதிகள் இலவசமாக வினியோகித்த என்னை ஒரு பக்கம் சார்பு உடையவர் என்று எழுதி உள்ளீர்கள். அதற்கு நீங்கள் எந்த ஆதாரமும் காட்டவில்லை. உங்களை நடுநிலையாளர்போல் காட்டி உள்ள நீங்கள் 2 தரப்பும் ஒருவரை ஒருவர் திட்டி பேசி உள்ளதாக எழுதி உள்ளீர்கள். பி.ஜே. தரப்பு பொறுக்கித்தனமான வார்த்தைகளை, சேரிப் பசங்க மாதிரி கீழ்தரமாக திட்டி பேசி சந்தி சிரிக்க வைத்துள்ளதை சுட்டிக் காட்டி எழுதி விட்டேன்.

நியாயமான நடுநிலையாளராக இருந்தால்.

த.மு.மு.க. தரப்பும் திட்டினார்கள் என்பதுபோல் எழுதி உள்ள நீங்கள் அதை நிரூபிக்க வேண்டும். த.மு.மு.க. சி.டி. என்று எண்ணிக் கொண்டு பி.ஜே. தரப்பு சி.டியை பார்த்துவிட்டு எழுதி விட்டீர்களா? நீங்கள் உண்மையாளராகவும் நியாயமான நடுநிலையாளராகவும் இருந்தால் பி.ஜே. தரப்பு போல் த.மு.மு.க. தரப்பும் திட்டி உள்ளதாக நீங்கள் எழுதியுள்ளதை நிரூபிப்பீர்களா?

வேறு யாரோ எழுதுவதுபோல் உள்ள பதில்.

பொதுக்குழு - செயற்குழு முடிவுகள்படி செயல்படும் ஜனநாயகப் பிதா போல் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் சர்வாதிகாரிதான் பி.ஜே. அதை உங்கள் கடிதத்திற்கு அனுப்பிய பதில் மூலமும் நிரூபித்துள்ளார். 

இதை நீங்கள் மறுத்தால், 3 நிமிடம் அல்ல 3 மணி நேரத்திற்கும் அதிகமான இடைவெளியில்தான் உங்கள் கடிதத்திற்கு பி.ஜே. பதில் தந்தார் என்று வைத்துக் கொண்டாலும், பொதுக்குழு - செயற்குழு வேண்டாம். குறைந்த பட்சம் த.த.ஜ. நிர்வாகக் குழுவை கூட்டித்தான் உங்களுக்கு பதில் எழுதினார் என்று நிரூபிப்பீர்களா? 

நிர்வாகத்தில் உள்ள வேறு யாரோ எழுதுவதுபோல் உள்ள பதில் வாசகத்தை அமைத்து வித்தியாசமாக கையெழுத்து போட்டுள்ளது ஏன்? விளக்குவீர்களா? ஜனநாயகவாதி? பி.ஜே தான் விளக்குவாரா?

சொத்து ஆசை பிடித்தவர்.

பி.ஜே. திட்டமிட்டு பரப்பி விட்ட இந்த யோசனையை ஏற்காவிட்டால் த.மு.மு.க.வினர் பதவி ஆசை பிடித்தவர்கள் என்பதுபோல் பதில் எழுதி உள்ளார். அப்படியானால் நீங்கள் முதலில் எழுதி உள்ள கடிதப்படி சொத்துக்களை ஒப்படைக்க முன் வராத பி.ஜே. அவரது இந்த வாதப்படி தன்னை சொத்து ஆசை பிடித்தவர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் அப்படித்தானே?

வரலாறு இல்லாதவர்கள் புரிய மாட்டார்கள்.

ஒற்றுமை சமாதானம் பற்றி வாய் கிழிய பேசும் பி.ஜே.யும் அவரது வகையறாக்ளும்; ஒற்றுமைக்கு உடன்பட மாட்டார்கள். எதைச் சொன்னால் சமாதான பேச்சுக்கு முட்டுக் கட்டை ஏற்படுமோ அதைச் சொல்லி முட்டுக் கட்டை போடுவார்கள். எதைச் சொல்லி ஏமாற்ற முடியுமோ அதைச் சொல்லி ஏமாற்றுவார்கள். 

ஒற்றுமைக்கு எந்தக் காலத்திலும் உடன்படவே மாட்டார்கள். இது அபூ அப்துல்லாஹ் மீது கூறிய பொய் குற்றச்சாட்டு முதல் இன்று வரை கூறி வரும் 20 வருட வரலாற்று ஆதாரம் உள்ள விஷயம். இதை வரலாறு இல்லாதவர்கள் புரிய மாட்டார்கள். சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்.

பி.ஜே.க்கு கை வந்த கலை.

கமாலுத்தீன் மதனிக்கு எதிராக இதே மாதிரி சதி திட்டத்தை தீட்டினார். அதற்கு என்னை கருவியாக்க 14.05.2000ல் முயன்றார் நான் சம்மதிக்கவில்லை என்பதை முக்கிய அறிவிப்பில் உள்ள முக்கிய வாசகம் என்ற விளக்க இதழிலேயே குறிப்பிட்டுள்ளேன். 

தனது சூழ்ச்சியை செயல்படுத்த ஒரு திட்டத்தைப் பரப்புவதும் பிறகு மக்களிடமிருந்து வந்ததுபோல் காட்டுவதும் பி.ஜே.க்கு கை வந்த கலை. தயங்குவது யாரோh? தயார்தானோ? என்று அபூ அப்துல்லாஹ்வை விமர்சித்து நோட்டீஸ் எழுதி ஊட்டி எம்.ஆர். கான் பெயரால் வெளியிட்டவர்தான் பி.ஜே.
தனி மனிதனின் சதி திட்டம் தீர்வாகுமா?

ஒற்றுமைக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்காமல் தனி மனிதனின் சதி திட்டத்தை தீர்வாக செயல்படுத்தத் துடிக்கும் பரகத் அலி அவர்களே! தனி மனிதனின் சதி திட்டம் தீர்வாகுமா? 

2000ல் என் மூலம் செய்ய முடியாத சதி திட்டத்தை 2002ல் பக்ரி பெயரில் அல் முபீனில் வெளியிட்டார். அப்பொழுது நான் பி.ஜே.க்கு எழுதியவை இப்பொழுதும் பொருந்தும் என்பதால் அதிலிருந்து சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

வரட்டு கவுரவத்தைக் காட்டி உள்ளீர்கள்.

ஹாமித் பக்ரி (அவர்கள்) கமாலுத்தீன் மதனி அவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம். மன்னிக்கவும், ஹாமித் பக்ரி பெயரால் ஒற்றுமை சம்பந்தமாக (பி.ஜைனுல் ஆப்தீனாகிய) நீங்கள் வெளியிட்டுள்ள கடிதத்தின் துவக்கத்திலேயே உங்களது வரட்டு கவுரவத்தைக் காட்டி உள்ளீர்கள்... ..

வழக்கமாக நீங்கள் போடும் டிராமாவா?

நீங்கள் ஒற்றுமைக்கு என்று எழுதி உள்ள கடிதம் ஒற்றுமை நோக்குடன் எழுதியதா? வழக்கமாக நீங்கள் போடும் டிராமாவா? நான் கூறி உள்ள குற்றச் சாட்டுக்கள் சம்பந்தமாக பேசுபவர்களிடம் பதில் கூற முடியாமல். வெளி நாட்டில் உள்ள என்னையே ஏன் கடிதம் எழுத வேண்டும் நேரில் வரச் சொல்லுங்கள். நேரில் வந்து பேசிக் கொள்ளட்டும் என்று கூறி வருகிறீர்கள். 

இதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால். உள் நாட்டில் உள்ள கமாலுத்தீன் மதனி இடம் நேரில் போய் பேசாமல் கடிதம் எழுதியது ஏன்? அதை ஜும்ஆ மேடை தோறும் படித்துக் காட்டியும் பத்திரிக்கையில் போட்டும் விளம்பரப்படுத்தியதும் ஏன்? உங்கள் கடிதமும் உங்கள் செயல்களும் நீங்கள் ஒற்றுமையை நாடவில்லை (விளம்பரத்தைதான் விரும்புகிறீர்கள்) என்பதை தெளிவு படுத்துகிறதா? இல்லையா? ..

உங்களிடம் வரட்டு கவுரவம் இல்லை என்றால் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய தன்மை இருந்தால், உண்மையிலேயே ஒற்றுமையை நாடக் கூடியவராக இருந்தால், நீங்கள் கமாலுத்தீன் மதனியின் வீடு தேடிப் போக வேண்டும்..  (இப்பொழுது ஜவாஹிருல்லாஹ் வீடு தேடி போக வேண்டும்) 

முன்பு எப்படி தனியாக சந்தித்து ஜாக் மஷுராவிலிருந்து விலகுவதற்கு காரணமான குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை போன்ற வேலைகளளை கூறினீர்களோ! அவற்றைக் கை விட்டு விட்டீர்கள் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.. .. இதுதான் அன்று எழுதியது.


உங்களின் இன்றைய கேள்விக்கும் பதில் அன்றைய கடிதத்தில் உள்ளது.

ஒரு பிரச்சனையை வெருமனே விமர்சித்துவிட்டு போவதற்கும், விமர்சித்து அதற்கான தீர்வை ஆலோசனையாக வைப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? என்று கேட்டுள்ள பரகத் அலி அவர்களே! உங்களின் இந்த கேள்விக்கும் 1.12.2002ல் பி.ஜேக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் பதில் உள்ளதைப் பாருங்கள்.

அவர்களின் தலைமையைத்தான் பி,ஜே. ஏற்க வேண்டும்.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தீர்வு என கூறி விட்டு. உங்கள் மனோ இச்சைகளை பட்டியலிட்டுள்ளீர்கள். ஹஸன்(ரலி) அவர்களின் ராஜினாவை - விட்டுக் கொடுத்தலை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளீர்கள். ஹஸன் (ரலி) அவர்கள் எதிர் தரப்பை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. 

இடைக் காலத் தலைமை, புதிய தலைமை என்றெல்லாம் கூறவில்லை. இருந்த தலைமையைத்தான் ஏற்றார்கள். நீங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் செயல்படுபவர்களாக இருந்தால், நீங்கள் காட்டி உள்ள அந்த ஹதீஸ் ஆதாரப்படியும் கமாலுத்தீன் மதனி அவர்களின் தலைமையைத்தான் நீங்கள் ஏற்க வேண்டும்... இதுவும் அன்று எழுதியதுதான்.

ஜவாஹிருல்லாஹ் தலைமையைத்தான் பி.ஜே. ஏற்க வேண்டும்.

இதுதான் பி.ஜே. அவர்களே ஆதாரம் காட்டி உள்ள முன்னுதாரணத்தின்படியுள்ள சரியான முடிவாகும். த.மு.மு.க.வுடன் ஒற்றுமை முயற்சி என்றால் அது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்து துஆச் செய்த ஹஸன் (ரலி) அவர்கள் சம்பந்தமான ஹதீஸ்கள்படி ஜவாஹிருல்லாஹ் தலைமையைத்தான் பி.ஜே. ஏற்க வேண்டும்.. 

ஹதீஸை ஏற்பாரா? ஹதீஸை புறக்கணிப்பாரா? ஹஸன் (ரலி) அவர்களின் வரலாற்றை சொல்வதெல்லாம், வரட்டி எரிப்பது ஹராம் என்று சொன்னது ஊருக்கு செய்யும் உபதேசம்தான்டி உனக்கில்லையடி என்கிற மாதிரி செயல்படப் போகிறாரா?

ஒற்றுமை முயற்சியை புறக்கணித்த பி.ஜே.

பிரிந்துள்ளவர்களை ஒன்றுபடுத்த முதல் கட்டமாக அனைவரையும் ஒரே மேடையில் பேச வைப்பது என்று நெல்லை ஏர்வாடியிலும் பாளையங்பேட்டையிலும் அந்த பகுதி முஸ்லிம்கள் ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்ச்சியில் அபூ அப்துல்லாஹ், ரஹ்மதுல்லா இம்தாதி, கமாலுத்தீன் மதனி, ஹாமித் பக்ரி, கோவை ஐயூப், பேராசிரியர் முஹம்மது அலி போன்றவர்கள் ஒரே மேடையில் பேசினார்கள். 

பி.ஜே.யும் அவரது வகையறாக்ளும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார்கள். அவர்கள் பி,ஜே. வகையறாக்களுக்கு கொடுத்து வந்த நன்கொடைகளை நிறுத்தியதும் காரணம் கூறி சமாளித்தார். பிறகு ஒற்றுமைக்கு வழி என்ன? என்று அக்டோபர் 2003 ஏகத்துவம் இதழில் தலையங்கம் எழுதினார் அதன் முக்கிய பகுதியை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

ஒரே தலைமையில் செயல்பட பி.ஜே. வகுத்தளித்த ஒற்றுமைக்கான வழி.

... ஒற்றுமைக்கான வழி எது என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடு உள்ளது. பிளவு பட்டு நிற்கும் பிரச்சாரகர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்று சில சகோதரர்கள் நினைக்கின்றனர். 

பிளவு பட்டு நிற்பவர்கள் பாரதூரமான குற்றச்சாட்;டுக்களை ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் சுமத்திக் கொள்ளாமல் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பிளவு பட்டார்கள் என்றால் அப்போது இந்த நடவடிக்கை பயன் அளிக்க சாத்தியம் உள்ளது. 

ஆனால் இன்று பிளவு பட்டு நிற்பவர்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பிரியவில்லை. ஒருவருக்கு எதிராக மற்றவர் பாரதூமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளனர். பொருளாதார மோசடியிலிருந்து காட்டிக் கொடுத்தது உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். 

அவை எழுத்து வடிவிலும் ஒளி நாடாக்கள் வடிவிலும் மக்களிடம் சென்றடைந்து இருக்கின்றன. இந்த நிலையில் ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறிக் கொண்டவர்கள் ஒரே மேடையில் ஏறுவதால் அது சமுதாயத்;தையும் நம்மையும் ஏமாற்றுவதாகவே அமையும்.

ஒவ்வொரு தரப்பினரும் மற்ற தரப்பினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் அல்லது ஒவ்வொரு தரப்பும் ஏற்கக் கூடிய நடுவர்கள் மத்தியல் விசாரிக்கப் படவேண்டும். 

குற்றம் சுமத்தியிருப்பவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக நடுவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் ஒரு மேடையில் மட்டுமில்லை, ஒரே தலைமையில் கூட ஒன்று பட முடியும். அவ்வாறு இல்லாமல் உள்ளம் முழுவதும் பகைமையும் கசப்பும் நிரம்பியுள்ள நிலையில் ஒரு மேடையில் காட்சி அளித்தால் தங்களுக்குத் தேவையில்லை என்றால் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். தேவை ஏற்பட்டால் ஒட்டிக் கொள்வார்கள் என்று நியாயவான்கள் நினைப்பார்கள். 

மேலும் கசப்புணர்வு நிறைந்திருக்கும் நிலையில் ஒருவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்ற தரப்பினரால் தவறாகப் பொருள் கொள்ளப்படும். எனவே, ஒற்றுமைக்கு முயல்பவர்கள் ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களைப் பற்றி விசாரிக்கும் வகையில் முயல்வார்களானால் அந்த முயற்சிக்கு தவ்ஹீது ஜமாஅத் தயாராக இருக்கின்றது.

அதை விடுத்து மேடையில் மட்டும் ஒன்றாகக் காட்சி தாருங்கள் என்று கருதுவார்களானால் அதனால் ஒரு பயனும் இல்லை, அது நேர்மையான நடவடிக்கையாகவும் இருக்காது என்று தவ்ஹீத் ஜமாஅத் கருதுகின்றது. எனவே, அர்த்தமற்ற முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்த்து அர்த்தமுள்ள முயற்சிகளைக் மேற்கொள்ளுமாறு ஒற்றுமையை விரும்பும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இன்று வரை மூச்சு பேச்சசைக் காணோம்.

இப்படி எழுதி வெற்றிகரமான 7வது மாதம் 8வது மாதம் என்று ஒவ்வொரு மாதமும் அந்நஜாத்தில் பி.ஜே. வகையறாக்களின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார் அபூ அப்துல்லாஹ். 

ஒவ்வொரு தரப்பும் ஏற்கக் கூடிய நடுவர்கள் கிடைக்கவில்லை என்று இழுத்தடிக்கக் கூடாது என்பதற்காக பி.ஜே. தரப்பே நடுவர்களை முடிவு செய்யட்டும். என்று விட்டுக் கொடுத்து எழுதியும் பதில் இல்லை. 

லுஹா, பாக்கர், கலீல் ரசூல், சுலைமான்கள் மற்றும் அன்வர் பாஷா போன்றவர்கள் மீதான குற்றச்சாட்டு பற்றிய பகிரங்க விசாரணையில் பி.ஜே. அவர்களே நடுவராக இருக்கட்டும்.

பி.ஜே. மீதான உள்ள குற்றச்சாட்டில் லுஹா, பாக்கர், சுலைமான் போன்ற பி.ஜே. அணியினரில் பி.ஜே. விரும்பும் யார் வேண்டுமானாலும் நடுவராக இருக்கட்டும் என்று விட்டுக் கொடுத்தும் இன்று வரை மூச்சு பேச்சசைக் காணோம்.

பொதுமக்களிடம் வசூலித்து நடத்தும் நிகழ்ச்சிக்கு மீடியா வேல்டு பெயரால் காப்பி ரைட் உரிமை கொண்டாடியபோதும் சி.டி. தயாரிப்பதை பி.ஜே. மகனுக்கு ஒரு தொழிலாக ஏற்பாடு செய்து கொடுத்ததாக பாக்கர் கூறியதை கூறிய போதும் முபாஹலாவுக்குத் தயாரா? என்றார்கள். 

தயார் என்றதும். முபாஹலா செய்வது கூடாது என்றார். அதை விளக்கி தப்ஸீரும் எழுதினார். அதற்குப் பிறகு, முபாஹலா பண்ணுவது கூடாது என்ற கொள்கையில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ள ஜவாஹிருல்லாஹ்வை முபாஹலாவுக்கு அழைத்தார். மார்க்க விஷயங்களில் பி.ஜே. சொல்வது பெரும்பாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நான் முபாஹலாவை ஏற்றேன். மூச்சு பேச்சு இல்லாமல் ஓடி விட்டார்.

அல்லாஹ்விடம் நன்மையை நாடிய ஒற்றுமை முயற்சியா?

ஒற்றுமை சம்பந்தமாக நீங்கள் ரொம்ப கவலை கொள்வதுபோல் காட்டி உள்ளது உண்மையானால். அல்லாஹ்விடம் நன்மையை நாடித்தான் இந்த ஒற்றுமை கடிதம் எழுதி இருப்பது உண்மையானால் ஹஸன் (ரலி) அவர்கள் சம்பந்தமான ஹதீஸ்படி செயல்படும்படி பி.ஜே.க்கு புத்தி சொல்லுங்கள். 

அல்லது அபூஅப்துல்லாஹ் முதல் எல்லார் விஷயத்தையும் எப்படி தீர்ப்பது என்று பி.ஜே. அக்டோபர் 2003 ஏகத்துவம் இதழில் தலையங்கம் எழுதி உள்ளது போல் பகிரங்கமாக மக்கள் மத்தியில் ஏற்பாடு செய்யுங்கள். 

பி.ஜே. தரப்பு சம்மதித்தால் நீங்களே நடுவராக இருங்கள். அபுஅப்துல்லாஹ் மீது பி.ஜே. கூறி உள்ள மோசடி குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்க அப்போதைய ஆதாரங்கள் என்னிடம் இல்லை. அதை அபூ அப்துல்லாஹ்தான் நிரூபிக்க வேண்டும்.

எனவே அபூ அப்துல்லாஹ்வை அழைத்து வருவதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். அதற்குப் பிறகு இன்று வரை உள்ள எல்லா பிரச்சனைகளிலும் மற்றவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அவர்கள் விஷயங்களில் பி.ஜே. பொய்யர் என்பதை நிரூபிப்பது எனது பொறுப்பு.

பி.ஜே. விடுத்த சவால்படியும் அந்த சவாலில் யாரையெல்லாம் சாட்சிகளாகவும் எதையெல்லாம் சாட்சியங்களாகவும் கொண்டு வருவேன் என்று சொன்னாரோ, அவர் சொன்ன அந்த சாட்சிகளை அழைத்துக் கொண்டு சாட்சியங்களையும் எடுத்துக் கொண்டு ஒரே மேடைக்கு வரவேண்டும். 

பி.ஜே. மீது நாம் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக என் தரப்பில் இருந்து யாரையும் அழைத்து வர மாட்டேன். பி.ஜே. அவரது கூற்றை உண்மை என்று நிரூபிக்க அவர் யாரையெல்லாம் சாட்சிகளாக அழைத்து வருவேன் என்றும் எதையெல்லாம் ஆதாரமாக கொண்டு வருவேன் என்று கூறினாரோ அந்த சாட்சிகளையும் அவரது வகையறாக்களையும் அவர் கொண்டு வரும் சாட்சியங்களையும் கொண்டே பி.ஜேயின் கூற்றுக்கள் பொய் என்று நிரூபிப்பேன் இன்ஷா அல்லாஹ்.

நிரூபிக்கத் தவறினால் அதற்காக நடுவர்கள் அளிக்கும் எந்த தண்டனையையும் ஏற்கத் தயார். 

நிரூபித்து விட்டால் பி.ஜே.யால் பாதிக்கப்பட்டவர்களில் செத்தும் சிறையிலும் வழக்குகளிலும் உள்ளவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை பி.ஜே. வகையறா கொடுக்க வேண்டும். 

பி.ஜேயின் சவாலை ஏற்று நான் எழுதியுள்ள முந்தைய கடிதங்களையும் விளக்க இதழ்களையும் மீண்டும் படித்துக் கொள்ளுங்கள். பி.ஜே. மீது ஈமான் கொண்டுள்ள ஒவ்வொருக்கும் பி.ஜேன் வகையறாக்களை உத்தமர்களாக யோக்கியர்களாக நம்பும் அனைவருக்கும் எனது இந்த அறைகூவல் உள்ளடக்கும். வஸ்ஸலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.