இமாம் கொலையில் திடீர் திருப்பம்
*பேய் ஓட்டுவதாக கூறி
பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட பண்ருட்டி
பள்ளிவாசல் இமாம் சதாம் உசேன்*
*24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அசத்திய திருநாவலூர் போலீசார்*
*பண்ருட்டி மஸ்ஜித்
இமாம் படுகொலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை பேய் ஓட்டுவதாக கூறி மானபங்கம்
செய்ய முயன்ற விவகாரத்தால் இந்த கொலை நடந்திருப்பது பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது*
*பண்ருட்டி ஆர்எஸ் மணி
நகர் பகுதியை சேர்ந்த
பள்ளிவாசல் இமாம் சதாம் உசேன் என்பவர் கடந்த 13ம் தேதி மாயமானார்*
*தொடர்ந்து போலீசார்
அவரது குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில் உருது மொழியில் பேசிய மர்ம நபர்
ஒருவர் சதாம் உசேனை போனில் தொடர்பு கொண்டு துவா ஒத வேண்டும் நேரில் வரவழைத்து மோட்டார்
சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறினார்கள்*
*இதனையடுத்து காணாமல்
போன சதாம் உசேனை போலீசார் தேடி வந்த நிலையில், உளுந்தூர்பேட்டை உட்கோட்டம்
திருநாவலூர் காவல் நிலைய எல்லை பெரியப்பட்டு கிராம ஏரியில் அடையாளம் தெரியாத ஆண்
சடலம் ஒன்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது*
*தகவலறிந்த
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுள் ஹக் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் பிடிக்க வேண்டும் என
போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.*
*இதனையடுத்து டிஎஸ்பி
விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம் பாரதி
குருபரன் ஆகியோர் அடங்கிய 6 தனிப்படை குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி
குற்றவாளிகளை தேடி வந்தனர்*
*இதற்கிடையே பள்ளிவாசல்
இமாம் சதாம் உசேனை தாடி அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கொடூர
கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனவும், இறந்தவரின்
குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள்
கோரிக்கை விடுத்திருந்தன*
*இதனால் இந்த வழக்கின்
விசாரணை வேறு கோணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.*
*ஆனால் டிஎஸ்பி
விஜயகுமார் தலைமையிலான திருநாவலூர் போலீசாரின் தொடர் முயற்சியால், வழக்கின்
விசாரணை சரியான பாதைக்கு எடுத்துச்செல்லப்பட்டது, சாதூரியமாக செயல்பட்ட போலீசார் முதற்கட்டமாக இந்த கொலை ஒரே மதத்தை
சேர்ந்த நபர்களால் நடத்தப்பட்டது கண்டுபிடித்தனர், மேலும் பெண் விவகாரத்தில்
பாதிக்கப்பட்ட கணவர் உள்பட இருவர் சேர்ந்து சதாம் உசேனை கொலை செய்ய திட்டம் தீட்டி
பண்ருட்டிக்கு சென்றதும், அங்கு அவரது வீட்டுக்கு சென்று உடல்நிலை சரியில்லாமல்
இருக்கும் தனது குடும்பத்தில் உள்ளவருக்கு ஓத வேண்டும் எனக்கூறி லாவகமாக சதாம்
உசேனை அழைத்து வந்து திருநாவலூர் அருகே வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து
சடலத்தை ஏரியில் வீசி விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது*
*இதனையடுத்து இந்த
கொலையில் தொடர்புடைய இருவரை கைது செய்த போலீசார் தற்போது அவர்களிடம் விசாரணை
நடத்துகின்றனர்*
#இமாம்_படுகொலை
கடலூர் மாவட்டம்
பண்ருட்டி ரஹ்மத் பள்ளியில் கடந்த 9ஆண்டுகளுகளாக இமாமத் செய்து வந்தவர் ஹாபிழ் முஹம்மத் சதாம் ( 30 வயது)
த/பெ முஹம்மத் பாரூக்
அவர்கள் 13:08:2020 மக்ரிப் பிறகு அடையாளம் தெரியாத இருவர் வந்து துஆ ஓத அழைத்து
சென்றதாக கூறப்படுகிறது;
ஆனால் அவர் திரும்பி
வரவில்லை சந்தேகம் அடைந்த குடும்பத்தினர்
மூலம் பண்ருட்டி காவல்
நிலையத்தில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்
14:08:2020 அன்று கொடூரமான முறையில் கொலை செய்து ஏரியில் வீசப்பட்டுள்ள நிலையில் அவருடைய ஜனாஸா
காவல்துறையால் கைப்பற்றப்பட்டு முண்டியம்பாக்கம்
அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டது; இமாம் ஒருவருடைய படுகொலை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் கொலை செய்தார்கள்;
கொலைக்கான காரணம் என்ன போன்ற விசயங்கள் இன்னும் தெரியவில்லை.
படுகொலை
செய்யப்பட்டுள்ள இமாம் முஹம்மத் சதாம் அவர்களுடைய உடன் பிறந்த சகோதரர் மவ்லவி ஜுபைர் அவர்கள் தியாகதுருகத்தில்
இமாமத் செய்து வருகிறார்.
அவர் தற்போது தம்பி
மரணத்திற்கு நீதி கேட்டு நிற்கிறார்.
படுகொலை செய்யப்பட்டுள்ள இமாம் முஹம்மத் சதாம் அவர்களுக்கு மனைவி
இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள்.
இந்த கொலைக்கு நீதி
கேட்டு SDPI கட்சி பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் ஜமாத்தார்கள்
களத்தில் இறங்கியுள்ளார்கள்.
கொலையாளிகள் கைது
செய்யப்பட வேண்டும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருநாவலூர்
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார்கள்
நீதி கிடைக்கும் வரை
ஜனாஸாவை பெற்றுக்கொள்ள
மாட்டோம் என அறிவிப்பு
செய்துள்ளார்கள்.
காவல்துறை விசாரித்து வருகிறது
இமாம் அவர்களுடைய மக்ஃபிரதிற்காக துஆ
செய்யவும்.
அல்லாஹ் அவரை இழந்து
வாடும் அவருடைய குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கு உறுதியையும்
அமைதியையும் வழங்கிடுவானாக! ஆமீன்.
நீதிக்காக உழைப்போம்
இன்ஷா அல்லாஹ்...
Moulavi A. Abirudheen Manbayee
Comments