53:53 அழித்தான், ஒழித்தான் கேள்விக்கான விடைகள் என்ன?

அழித்தான், ஒழித்தான் பொருத்தமான வார்த்தை எது?

அல் குர்ஆன் 53:53ல்  துாக்கி எறிந்தான், துாக்கி அடித்தான்,  புரட்டினான். புரட்டி அடித்தான், கீழே வீழ்த்தினான், கவிழச் செய்தான். வீழச் செய்தான், கவிழ்த்(து ழித்)தான் ழித்தான்  இவ்வாறெல்லாம் தமிழ் மொழி பெயர்ப்புகள் உள்ளன. 

 

பீ.ஜே. தர்ஜமாவை படித்த ஒரு மவுலவி பழைய பதிப்பில் ழித்தான்  என்றும் புதிய பதிப்பில் ழித்தான்  என்றும்  உள்ளதே. இரண்டும் பொருள் தருவதில் என்ன வித்தியாசம் என்று கேட்டு இருந்தார்.  

இந்தக் கேள்வியை பீ.ஜே. வாட்ஸப் கேள்வி  பதில் பகுதிக்கு அனுப்பியதுடன், பொதுவிலும்  வைத்தேன்.  இரண்டுமே ஒன்றுதான் என்று மவுலவிகளும் மவுலவி அல்லாதவர்களும் பதில்  கூறி இருந்தார்கள். விளக்கங்கள் தரவில்லை. 

இந்த மாதிரி பதிலை  நேரில் சொன்னவர்களிடமும் விளக்கம் கேட்டேன். அவர்கள் விளங்கியதை  விளக்கத் தெரியவில்லை.


[06/08, 10:58 am] ..........: ஒழித்தான், அழித்தான் இரண்டுக்கும்  பெரிய வேறுபாடு இருக்கிறது இறைவன் அழித்தான் என்று தான் வரும் ஒழித்தான் என்று வரக்கூடாது

[06/08, 11:00 am] .........: நம் மவுலவிகளை பொறுத்தவரை அரபு நன்கு அறிந்தவர்கள். தமிழ் இலக்கணம் தெரிந்த ஒருவரையும் நான் இதுவரை காணவில்லை
என்று ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். அதன் ஸ்கிரீன் ஷாட் இணைப்பில் உள்ளது.

பீ.ஜே. வாட்ஸப்  வந்த  பதில்;-

ழித்தல் ழித்தல் இரண்டும் ஒரே பொருள் கொண்டவை தான்.

இவ்விரண்டும் முற்றாக அழிந்து போவதைக் குறிக்கும் சொற்கள்.

ஆனால் நடைமுறையில் தோல்வியைக் குறிக்க ஒழித்தல் பயன்படுத்தப்படுகிறது.


பாஜக ஒழிக என்றால் வெற்றி பெறக்கூடாது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முற்றாக அழிந்தது என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.

கருணாநிதி ஒழிக எம்ஜிஆர் ஒழிக என்று சொல்பவர்கள் சாகட்டும் என்ற பொருளில் இதைப் பயன்படுத்துவதில்லை. மாறாக தோற்றுப் போகட்டும் என்ற கருத்தில் பயன்படுத்துகின்றனர்.

முற்றாக அழிக்கப்பட்டதை ஒழிந்தான் என்று சொல்வதற்கு அகராதியில் இடம் உண்டு என்றாலும் மக்கள் அவ்வாறு புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சிலர் எனக்கு சுட்டிக்காட்டினார்கள்.

எனவே அழிந்து நாசமானார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளும் வாசகம் அழிந்தான் என்பதை ஏற்று திருத்தம் செய்யப்பட்டது.

அகராதியில் இரண்டுமே சரியான சொற்கள் தான். மக்கள் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும் என்பதால் மாற்றப்பட்டது

இவ்வாறு  பீ.ஜே. அவர்கள் பதில் விளக்கம் தந்தார்கள். சுட்டிக் காட்டப்படுவதை  ஏற்று திருத்தம் செய்யும் பண்பு உள்ள பீ.ஜே. அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

-----------
53:53 அழித்தான், ஒழித்தான்  சம்பந்தமாக  இன்னொரு நண்பர் நாஸர் நம்மிடம் போனில் பேசியது.

மூலம் என்ன சொல்கிறது.  அதில் இருந்து பார்ப்பது ஒன்று. 

மொழி பெயர்க்கும்போது  எதைப் போட வேண்டும். 

மூன்றாவது தமிழ் மொழியில் இரண்டுக்கும் என்ன அர்த்தம். இதை  பார்க்க வேண்டும்.

நான் பல முறை வலியுறுத்தக் கூடிய விஷயம் என்ன என்றால்?  எந்த ஒரு மொழியில் ஒரு மனிதர் திரு குர்ஆனை மொழி பெயர்த்தாலும். அவர் நிச்சயமாக  தவறிழைப்பார்.

ஏனெனில் எனக்கு 100 வார்த்தைகளில் 98 வார்த்தை எனக்கு  தமிழ் தெரியும் என்று வைத்துக் கொள்ளுங்கள். 2ல் தப்பு செய்வேனா?

அந்த இரண்டை  5 கிளாஸ் படிக்கும்   பையன் சொல்லி விடுவான்.

தாமஸ் ஆல்வா எடிசன் பூனைக்கு ஓட்டை போட்டதாக சொல்வார்களே அது போல. இது தான் மனிதன். அதனால் தான் எல்லார் உடைய  மொழி பெயர்ப்புகளும் காலத்துக்கு ஏற்ப குறைகள் உடையது.

இந்தக் காலத்து அறிவை வைத்து நான் யோசித்து எழுதுவேன்.  எல்லாரும் சூப்பர் என்று பாராட்டுவார்கள். முப்பது வருஷம் தான் அதன் பிறகு குப்பை என்று கூறி விடுவார்கள். 

ழித்தான், ழித்தான் இரண்டுக்கும் உள்ள தமிழ் அர்த்தம் என்ன? 

ழிந்து போகுதல் ழிந்து போகுதல் என்று இரண்டு இருக்கிறது. ஒழிந்து போகுதலில் உங்களுடைய முயற்சி இருக்காது.  அல்லது இன்று நீங்கள் முயற்சி செய்து இருப்பீர்கள் பின்னால் அது ழிந்து போய் இருக்கும். 

ழிந்து போகுதல் என்பது முற்றிலும் ஒரு ஆற்றலைக் கொண்டு  அழிதல். புயலில்  ழிந்து போனான் என்று சொல்ல மாட்டோம். புயலில்  அழிந்து போய் விட்டது என்று சொல்வோம்.

ஒரு சொல்லின் வழக்கு அழிந்து போய் விட்டது என்று சொல்ல மாட்டோம். அந்த, சொல் வழக்கு ழிந்து போய் விட்டது என்று சொல்வோம். 

ஒரு சொல் வழக்கு ழிந்ததில் யாருக்காவது முயற்சி இருக்கிறதா?

முன்பு இந்த ஊருக்கு இந்த  பெயர் இருந்தது. இப்பொழுது அந்த பெயர் எங்கே என்று கேட்டால் .  இப்பொழுது அந்தப் பெயர் வழக்கு ஒழிந்து போய் விட்டது என்பார்கள்.

பேச்சு வழக்கில் இருந்து   ழிந்து போனதற்கு யாரும் காரணம் இல்லை. அது தானாக நாளடையில் ழிந்து போவதைத் தான்  ழிந்து போகுதல் என்று சொல்ல வேண்டும்.

ஒழுகுதல்  என்றால் மேலிருந்து கீழ் நோக்கி  வருதல் என்பது தமிழ் அர்த்தம்.  

வயதான பிறகு குழந்தை போல்  ஆகி விடுகிறார்கள் என்கிறோம். இது தானாக நடப்பது.  தடுக்கவும் முடியாது.  இதற்கு  யாரும் காரணம் ஆக மாட்டார்கள். 

ஆகவே அல்லாஹ் ழித்தான் என்று சொல்வது பொருந்தாது. தமிழ் மொழிப்படி அப்படி போடக் கூடாது.  

அல்லாஹ் ழித்தான் என்றால் அது அல்லாஹ்  சொன்ன நேரத்தில் ழியாது. ழிந்ததற்கு அல்லாஹ்தான் காரணியாக இருப்பான். ழிவதற்கு நாளாகும். நாள்பட நாள்பட  ழியும்.

அழித்தான் என்று சொன்னால்  


كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ‌ 

“கஅ(ன்)ல்லம் தஃக்ன பில் அம்ஸ்“  

உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கி விடுகிறோம். 10:24 என்ற வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளது போல்.

நேற்று வரை தோட்டம் இருந்திருக்கும் அதை அறுவடை செய்யலாம் என்று போவான். தோட்டம் இருந்ததற்கான அடையாளம் தெரியாமல் அழித்து இருப்பான்.  

ஆகவே அந்த 53:53 வசனத்தில்  ழித்தான் என்பது பொருத்தமான வார்த்தை அல்ல.  ழித்தான் என்பதே சரி. 

எனவே இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு பேர்தான் இருந்தாலும்  குர்ஆன் தமிழாக்கம் சம்பந்தமாக மொழி வல்லுனர்களிடம்  வெரிபி  பண்ணுதல் (சரி பார்த்து கொள்ளல்) நல்லது. அந்த தமிழ் வல்லுணர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரியே.

மேற்கண்ட விளக்கத்தை இஸ்லாமிய பிரச்சாரகர் பெரம்பலுார் நக்கசேலம் நாஸர்அலிகான் அவர்கள் போனில் சொன்னார்கள்.

----------------------

53:53 ல்  வரும் 'வல் முஃதFபிகத அஹ்வா"
وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰىۙ‏ 

அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான் என்று ஒரு பதிப்பகத்தார் மொழி பெயர்த்துள்ளது சரி இல்லை என்று ஒரு சிலர் கூறி உள்ளனர். 
-----------------

கீழே உள்ளது https://presmarymethuen.org/ta/dictionary என்பதிலிருந்து ஒரு மவுலவி அனுப்பி தந்தது. 

அழித்தல், அழித்தல், ஒழித்தல், நிர்மூலமாக்குதல் ஆகிய சொற்களுக்கு என்ன வித்தியாசம்?

மறுமொழி 1:

அழிக்கவும்- அனைத்து அல்லது ஒவ்வொரு பகுதியையும் கொல்ல. நீங்கள் ஒரு எறும்பை அழிக்க முடியாது, ஆனால் அவற்றில் ஒரு காலனியை நீங்கள் அழிக்க முடியும்.

நீக்கு- அனைத்து தடயங்களையும் நீக்க. இது மிகவும் நடைமுறைக்குரியதாக இருக்காது, ஆனால் நீங்கள் ஒரு திண்ணை மற்றும் சில சாமணம் பெறலாம் மற்றும் ஒரு காலனியிலிருந்து ஒவ்வொரு எறும்பையும் மிகவும் கவனமாக அகற்றி, அவற்றைக் கொல்லாமல் வேறு எங்காவது மெதுவாக நகர்த்தலாம், இன்னும் அவற்றை உங்கள் முன் முற்றத்தில் இருந்து அழிக்கலாம்.

ஒழித்தல்- முற்றிலும் அழிக்க. இது பொதுவாக அவசியமான முன்நிபந்தனையாக "அழிப்பதை" உள்ளடக்கியது, ஆனால் எப்போதும் இல்லை. உதாரணமாக, நீங்கள் பயத்தை ஒழிக்க முடியும், ஆனால் அதை அழிப்பது கடினம், ஏனெனில் அது கொல்லப்படுவது உயிருடன் இல்லை. ஒரு இராணுவத்தை அதன் அனைத்து உறுப்பினர்களையும் கொல்லாமல், கலைக்க கட்டாயப்படுத்துவதன் மூலம் நீங்கள் அதை அழிக்க முடியும்.

நிர்மூலமாக்கு- முற்றிலும் அழிக்கவும். இது "ஒழித்தல்" என்பதற்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது, ஆனால் இது "முற்றிலும் தோற்கடிப்பது" என்றும் பொருள்படும், உடல் அழிவு தேவையில்லை


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு