2:60 ஆய்வுடன் படியுங்கள்
https://mdfazlulilahi.blogspot.com/2020/08/260.html
இப்க் என்ற வார்த்தையிலிருந்து வேர்ச் சொல்லில் இருந்து வந்தது தான் மூதபிக் என்று அண்ணன் முடித்து விட்டார். இப்க் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று அவர் சொல்லவில்லை. இப்க் என்ற மூலச் சொல்லுக்கு இட்டுக்கட்டுதல் என்று படித்து இருக்கிறோம். இப்க் என்ற மூலச் சொல்லுக்கு இட்டுக் கட்டுதல் என்று வரும்போது அதில் இருந்து பெயர்ந்து வந்த இன்னொரு சொல்லுக்கு அழிக்கப்பட்டது தலைகீழாக புரட்டப்பட்டது என்று எப்படி வந்தது? எவ்வாறு பொருள் கொள்ள முடிகிறது? எங்கிருந்து வருகிறது?
இவ்வாறு ஒரு மவுலவி போனில் கேட்டு இருந்தார்.
உமது தடியால்
வஇதிஸ்தஸ்ஃகா மூஸா லிஃகவ்மிஹி Fபஃகுல்னாழ்ரிப்
பிஃஅஸாகல் ஹஜர் Fபன்Fபஜரத் மின்ஹுதுனதா ஃஅஷ்ரத ஃஅய்னா ஃகத்ஃஅலிம குல்லு உனாஸின் மஷ்ரபஹும்
குலுா வஷ்ரபூ மின் ரிZஸ்ஃகில்லாஹி வலா தஃஸவ் பில் அர்ழி முFஸிதீ(ன)ன்.
மேலும், மூஸா தம் கூட்டத்தினருக்காக
நம்மிடம் தண்ணீர் வேண்டி இரந்து நின்றதையும் நினைத்துப் பாருங்கள். "உமது
கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!" என நாம் கூறினோம். (அவர் அடித்தார்;) அதிலிருந்து பன்னிரண்டு
நீருற்றுகள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு குழுவினரும் அவரவர் குடிநீர்த்துறையை
அறிந்து (தேர்ந்தெடுத்துக்) கொண்டனர். "அல்லாஹ் அருளியவற்றை உண்ணுங்கள்; பருகுங்கள்; உலகில் குழப்பஞ் செய்து
திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்). - (அதிரை ஜமீல்)
மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டியபோது "உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!" என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன.269 ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். "அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!'' (என்று கூறினோம்) - (PJதொண்டி)
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது,
"உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!" என நாம் கூறினோம்; அதிலிருந்து
பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை
நன்கு அறிந்து கொண்டனர்; "அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்;
பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்) என்பதையும்
நினைவு கூறுங்கள். - ஜான்
டிரஸ்ட்
மூஸா தன் இனத்தாரு(டன் "தீஹ்" என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)கு தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய தடியால் இக்கல்லை அடியுங்கள்" எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி "உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த ("மன்னு மற்றும் ஸல்வா" என்னும் உணவு பதார்தத்) திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்" (என்று கூறினோம்.) -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
இன்னும், மூஸா தம் சமுதாயத்தினருக்காக தண்ணீர் கோரிப் பிரார்த்தித்ததையும் நினைவுகூருங்கள். அப்போது “உம்முடைய கைத்தடியைக் கொண்டு இந்தக் கல்லின் மீது அடிப்பீராக!” என்று நாம் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தாரும் (அவ்வூற்றுகளிலிருந்து) தாம் தண்ணீர் அருந்த வேண்டிய பகுதியை அறிந்து கொண்டனர். (அப்பொழுது நாம் அறிவுறுத்தினோம்:) “அல்லாஹ் அருளிய உணவை உண்ணுங்கள்; பருகுங்கள். ஆனால் பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்!” - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
மூஸா
தம் கூட்டத்தவருக்குத் தண்ணீர் புகட்டத் தேடியபோது நாம் (அவரிடம்,) “நீர் உம்முடைய
(கைத்தடியால்) இக்கல்லை அடிப்பீராக!” எனக் கூறினோம். (அவர் அடித்தார்) உடனே அதிலிருந்து
பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பீறிட்டோடின; ஒவ்வொரு கூட்டத்தினரும் தாங்கள் அருந்தும்
தண்ணீர்த் துறையை திட்டமாக அறிந்துக் கொண்டார்கள். (அப்பொழுது) “அல்லாஹ்வின் உணவிலிருந்து
உண்ணுங்கள் இன்னும் பருகுங்கள்; மேலும், பூமியில் குழப்பம் செய்கிறவர்களாக வரம்பு மீறி
அலையாதீர்கள்” (என்று நாம் கூறினோம் என்பதையும் நினைவு கூறுங்கள்.) -
Comments